திங்கள், 22 டிசம்பர், 2008

கனவுகள்

நடனமாடும் பெண்கள்...........

நான் ஒரு வீட்டின் கூரையினால் சென்று பார்த்த பொழுது அங்கு உள்ளே தமிழ்ப் பெண்கள் இருப்பதனை அவதானித்தேன். பின்னர் அங்கு சென்று பல பொருட்களை எடுத்தேன் பின்னர் ஒரு கறுப்பின இளைஞனிடம் வினவினேன் இங்கு தமிழ்ப் பெண்கள் மற்றும் பிற இளைஞர்கள் என்ன செய்கின்றனர் என்று அவர் கூறினார் இங்கு அவர்கள் தங்குகின்றவர்கள் என்று. மேலும் நான் அக்கூரையின் வழியே நடந்து செல்ல நடன வகுப்புக்கள் நடைபெறும் சத்தம் கேட்கின்றன. ஆனாலும் கூரையில் உச்சியில் இருந்து செல்லப் பயந்து பின்னே வருகின்றேன். இதன்பின்னர் ஒரு மடம் போல் ஓலைக் கூரையினால் வேயப்பட்ட குடிசைப் பகுதிக்குச் சென்று தங்குகின்றேன். அங்கு தங்குவது மிகவும் விருப்பமாக எனக்குப் பட்டது.

வியாழன், 4 டிசம்பர், 2008

கேள்விப்பட்ட செய்திகள்

வெள்ளைக்காரியினைக் காதலித்த கனேடியத் தமிழ் இளைஞர்..........

உணவகம் ஒன்றில் தமிழர் துப்பரவு செய்யும் பணியில் ஈடிபட்டிருந்தார் அவர் இரசிய நாட்டினைச் சேர்ந்த வெள்ளைக்காரி  ஒருவருடன் சேர்ந்துதான் வேலை செய்வது வழக்கம். ஒரு சமயம் அவர் அப்பெண் தன்னிடம் தாராளமாகப் பழகுவதைப் பார்த்துப் பின் தன்னைக் காதல் செய்வதாக எண்ணி அவளைக் கட்டியணைத்திருக்கின்றார். கோபம் கொண்ட அவள் அவரைத் தள்ளிவிட்டு காவல்துறை அதிகாரிகளை அழைக்க எத்தனிப்பதாகக் கூறினார். பின்னர் இவ்வாறு நட்பைக் காதலாகத் தவறாக எண்ண வேண்டாம் எனவும் கூறினார். இச்செய்தியினை குலோபல் வூட் நண்பரான குபேந்திரன் எனக்குக் கூறினார்.

புதன், 3 டிசம்பர், 2008

அனுபவம் புதிது

குருவி ஒன்று என் கையில் இறந்தது.........



நான் குலோபல் வூட் கஸ்டம் தொழிற்சாலையில் நேற்று வேலைக்குச் சென்றதும் ஒரு குருவி அத்தொழிற்சாலையின் உள்ளே பறக்கத் தெரியாது தத்தளித்துக் கொண்டிருந்தது. அதனைப் பார்த்த அங்கு வழமையாக என்னுடன் இரவு நேரங்களில் வேலை செய்து பின் காலையில் வேலை செய்யத் தொடங்கிய இளைஞன் பயந்தான். யூத மதத் தந்தை மற்றும் இஸ்லாமியத் தாயினால் உருவான பத்தொன்பது வயது இளைஞனான அவன் எனது சூப்பர்வைசர் ஆன முகமதுவிடம் சென்று சொன்னான் குருவி ஒன்று அங்கு உள்ளது என. அக்குருவியினைக் கையினால் நெரித்தும் உணவினை வாயினுள் ஓட்டியும் முகமது தீத்தினார். சிறிது வேளையின் பின்னர் கரப்பான் பூச்சியினைக் கொல்வதற்காக வைத்திருந்த மருந்தின் அருகில் அது சென்றதாகக் கூறினான். அவன் சென்ற சிறிது நேரத்தில் பின்னர் குருவியினைப் பார்க்க நான் சென்றேன். குருவி துடித்தது, பின் என் கையில் இறந்தது. என் கையில் வந்து இறப்பதற்கு அக்குருவி என்ன பாவம் செய்ததோ ஒருவேளை என் கை பட்டதனால் அக்குருவி இறந்ததோ. இது என் வாழ் நாளில் ஏற்பட்ட புதிய அனுபவம்.

ஞாயிறு, 30 நவம்பர், 2008

அனுபவம் புதிது

கணவனை விடுத்து தர்சனுடன் ஓடிய கனேடியத் தமிழ்ப் பெண்.........................

நான் Smurfit - Image pac நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்த வேளை அங்கு ஒவ்வொரு Line ற்கும் ஒரு Leader இருப்பார் அவ்வாறு இருந்த தர்சனுடன் இலங்கையில் இருந்து அண்மையில் வந்த பெண்மணி தன் கணவனை விடுத்து ஓடினார் இவை எனது வாழ்க்கையில் உண்மையில் முதன்முறையில் ஏற்பட்ட அனுபவம். ஏனெனில் இவ்வாறு தமிழ்ப் பெண்கள் கணவனை விடுத்து வேறொருவருடன் ஓடிய செய்திகள் திரைப்படங்களில் பார்த்ததுண்டு ஆனால் நேரடியாகக் காணவில்லை ஆகையால் இச்சம்பவம் எனது வாழ்க்கையில் ஏற்பட்ட புதிய அனுபவம் என நான் நினைக்கின்றேன்.

சனி, 29 நவம்பர், 2008

கேள்விப்பட்ட செய்திகள்

சுவிட்சர்லாந்தில் பாலியல் திரைப்படத்தில் நடிக்கவிருந்த தமிழீழத்தினைச் சேர்ந்த பெண்..................................

என்னுடைய குலோபல் வூட் நண்பர் கூறினார் "சுவிட்சர்லாந்தில் தமிழீழத்தினை அதாவது இலங்கையினைச் சேர்ந்த இளம் தமிழ்ப்பெண் ஒருவர் இணையத்தளம் மூலம் ஒரு வயது போன வெள்ளை இனத்தவருடன் அன்றாடம் உரையாடியுள்ளார் என்று. அது மட்டுமல்லாமல் அவ்வெள்ளையன் பெண்களை வைத்துப் பாலியற் திரைப்படங்கள் எடுப்பவன் என்றும் தமிழ்ப்பெண் இணையம் மூலம் அவனைப் பற்றித் தெரிந்துகொண்டு திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு சென்றுவிட்டார் என்றும் எனது நண்பர் கூறினார். மேலும் அவர் தெரிவித்ததாவது அப்பெண்ணின் வீட்டார் எவ்வளவு தேடியும் அவளைக் காணவில்லை என்று காவல்துறை அதிகாரிகளிடம் முறையிடவே அவர்கள் அவள் உபயோகம் செய்த கணணியில் அவர் Chat பண்ணியதை வைத்து எங்கு சென்றிருக்க முடியும் என்று யூகித்து அவ்வெள்ளைக்கார வயோதிபனிடமிருந்து அவளை அழைத்து வந்தனர். பின்னர் அவர் சீர்திருத்தப்பள்ளியில் அனுப்பப்பட்டு கல்வி கற்றார் என்பது அனைத்தும் எனது Global Wood Custom நிறுவன நண்பரால் சொல்லக் கேள்விப்பட்ட செய்திகளே! உண்மையா என்பது எனக்குத் தெரியாது.

செவ்வாய், 25 நவம்பர், 2008

அனுபவம் புதிது

யேசுநாதர் காப்பாற்றிய தகவல்..........
இன்று அதிகாலை நான் வேலைத்தளத்திலிருந்து பேருந்தில் செப்பர்ட் அவெனியூவால் (Sheppard Avenue) வரும் வேளை பேருந்தில் இருந்த கறுப்பின இளைஞன் ஒருவன் என்னிடம் வந்து கை காட்டி தான் நான்கு வருடங்களுக்கு முன்னரோ பின்ச் (Finch) மற்றும் நெல்சன் (Neilson)சாலையோரத்தில் சுடப்பட்டதாகவும் யேசு நாதர் தன்னைக் காப்பாற்றியதாகவும் கூறிச் சென்றார்.

தினம் ஒரு பாடல்

கட்டிக்கொள்ளவா - வாழ்க்கை

கவர்ச்சிகரமான உல்லாசப் பாடல்.

சனி, 22 நவம்பர், 2008

தினக்கருத்து

தமிழ்த் திரைப்படத்துறையும் தமிழ் இதழ்களும்..........

இன்று தமிழ் இதழ்களில் வரும் செய்திகளானது வெறுமனே செய்திகள் அன்று தமிழர்களது வரலாற்று விழுமியங்களையும் அவர்கள் பழக்க வழக்கங்கள் எனப்பல உண்மைகளினனயும் உள்ளடக்கியதாக வருகின்றது. இவ்வாறு தமிழ் மொழிப் பற்றாளர்களினால் வெளிவரும் இவ்விதழ்களினால் தமிழ் மொழி வளர்க்கப்படுகின்றது, பண்பாடுகள் பேணப்படுகின்றன. இத்தகு இதழ்களின் மூலம் வருங்கால சந்ததியினர் தமது மூதாதையர் எவ்வாறான வாழ்வியல் விழுமியங்களைக் கொண்டிருந்தனர் என்பதனை அறிய இயலும். தமிழ்த் திரைத்துறையினரால் தமிழர்களின் வரலாறுகள் பதியப்படும்போது அதாவது பண்டைக்காலத்தமிழகத்தில் கல்வெட்டுக்கள் எழுதப்பட்டவாறு திரையில் வரலாறுகள் எழுதப்படும்பொழுது தமிழ் இதழ்களிலிருந்தும் வரலாறுகள் பெறப்படும். எனவே இதழ்கள் நாளைய வரலாற்றுத் திரைப்படங்களிற்கு ஒரு சாட்சி. எனவே இன்றைய தமிழ் இதழ்களினைப் படிப்பது என்பது தமிழ்த் திரைப்பட இயக்குனர்களுக்கு ஒரு வரலாற்று உண்மையினை விளங்கிக்கொள்ள முடியுமான ஒரு சிறந்த முயற்சி. எனவே இன்றைய தமிழ் இதழ்களினை நடாத்துபவர்கள் தமிழர்களது பண்பாடுகளினைப் பேணிக்காக்க வேண்டுமே தவிர அழிப்பதற்கல்ல. இன்றைய இதழ்கள் பல மேற்கத்தேய மோகங்களினை கொண்டு உருவாகுவது பண்பாட்டுச் சீரழிப்பிற்கு இட்டுச் செல்கின்றது குறிப்பிடத்தக்கது. எனவே உலகின் பல பாகங்களிலும் இயங்கும் தமிழ் இதழ்கள் அனனத்தும் தமிழர்களது பண்பாடுகளினைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவவ எனது தனிப்பட்டக்கருத்தே!.

தினம் ஒரு பாடல்


கடவுள் பாதி மிருகம் பாதி - ஆளவந்தான்

இப்பாடல் வரிகளால் தினம் புத்துயிர் பெறலாம் சோம்பேறிகள் கூட.

ஞாயிறு, 16 நவம்பர், 2008

தினம் ஒரு பாடல்



ஆலப்போல் - எஜமான்

இப்பாடலைக் கேட்கும்பொழுது வரும் மெட்டானது காற்றில் இருந்து வரும் சத்தம்போலே உள்ளது குறிப்பிடத்தக்கது.

சனி, 15 நவம்பர், 2008

தினக்கருத்து

காமத்தில் மூழ்கியவர் பிறர் அழகை நோக்குவர்...........

என்னுடன் குலோபன் வூட் கஸ்டம் (Global Wood Custom) நிறுவனத்தில் பணிபுரிவர்களில் பத்தொன்பது வயதுமிக்க ஒருவன் வேலி செய்கின்றான். அவனது தாயார் இஸ்லாம் மதத்தினைச் சேர்ந்தவர் என்பதும் தந்தையார் யூதர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தன்னுடன் ஏழு குழந்தைகள் தனது பெற்றோருக்கு என்பதும் அவர் வாயினால் நான் சொல்லக்கேட்டதாகும். மேலும் காமமா காதலா சிறந்தது என்றொரு வாதத்தினை அவருடன் உரையாடினேன் அவர் கூறினார் மக்கள் அழகுள்ளவராக இருப்பதே நன்று என்று நான் கூறினேன் காமத்தில் மூழ்கியவர்கள் தான் பிறர் உடலழகினையும் அகத்தின் அழகினையும் பார்ப்பர் என்று. அதற்கு அவர் தனது கருத்தான காமமும் காதலும் ஒன்று என்பதனை நிரூபிக்க முற்பட்டார் அவ்வேளை நான் கூறினேன் ''உமது தாய் சிறிதளவு உடற்பருமனாக இருந்தால் நீர் உமது தாயின் மீது வெறுப்புச் செலுத்தப்போகின்றீரா'' அவர் மேலும் தெரிவித்தார் தாயிடம் செலுத்துவது அன்பு என்றும், காதலும் காமமும் ஒன்று எனவும் தெரிவிக்க முற்பட்டார். அவரிடம் கேட்டேன் ''நீர் ஒரு மருத்துவரானால் நோயாளிகளிடம் அழகைப்பார்த்தா அல்லது அவர்களது நிறத்தைப் பார்த்தா மருந்து கொடுப்பீர் அல்லது அவர்களைப் பரிசோதிப்பீர் ?'' , அதற்கு அவர் பதில் எதுவும் கூறவில்லை. பின்னர் தமிழ் நண்பரின் சீருந்தில் பயணம் செய்த வேளை அவரிடம் கேட்டேன் ''உமக்கு ஒரு காதலி இருக்கின்றார் என்று வைப்போம் அவர் விபத்தில் சிக்கி அவர் முகம் கோணலாகினால் அவரது முகத்தின் அழகினை வைத்து வெறுப்பீரா இல்லை அன்பு செலுத்திக் காதல் செய்வீரா! '' , அவரிடம் இருந்து எந்தவொரு பதிலையும் நான் கேட்கவில்லை. இதனால் எனது தனிப்பட்டக்கருத்து என்னவென்றால் காமத்தில் மூழ்கியவரே பிறரிடத்தில் அழகை நோக்குவர். அழகை நோக்காமல் பிறர் மனத்தின் அழகினை நோக்குபவரே சிறந்த மனிதர். இவை அனைத்தும் எனது தனிப்பட்டக்கருத்துக்களே .

சனி, 25 அக்டோபர், 2008

கேள்விப்பட்ட செய்திகள்

மதுபானம் அருந்திவிட்டு ஆட்டம் போடும் தமிழீழத்தினைச் சேர்ந்த கனேடியத் தமிழ்ப் பெண்கள்.................

என்னுடன் குலோபல் வூட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தமிழ் நண்பர் கூறினார் தான் ஒரு திருமண நிகழ்விற்குச் சென்றதாகவும் செல்லும்பொழுது அங்கே இளவயதுத் தமிழ்ப்பெண்களும் ஆண்களும் மதுபானம் அருந்திவிட்டு ஆட்டம் போடுகின்றனர் என்று. இது அவர் வாயால் சொன்னக்கேட்ட செய்தியே தவிர எனது கண்களால் நான் பார்க்கவில்லை.

தினம் ஒரு பாடல்



கனவெல்லாம் - கிரீடம்

இப்பாடலின் மூலம் எனக்குக் கிடைக்க முடியாத தந்தையினை நினைந்து வருந்துகின்றேன்.

தினக்கருத்து

வடிவேல் உண்மையில் பரிசுத்தமானவரே.........

தமிழ்த் திரையுலகம் நகைச்சுவை நடிகர்களாக குள்ளமான தோற்றம் கொண்டவர், கருமை நிறம் கொண்ட மெல்லிய உடலைக் கொண்டவர்கள் போன்றவர்களைத் தேர்ந்தெடுப்பதென்பது வேடிக்கையிலும் வேடிக்கை இந்தோ ஜரோப்பியர்களான ஆரியர்கள் அதாவது ஜயர் முதல் வடக்கு இந்தியர்கள் அனைவரும் அழகிற்கும் காமத்திற்கும் மயங்கியவர்கள். இவ்வாறான மனிதர்களால் கருமை நிறம் கொண்டவர்களாகவும் அழகில் சற்று ஆரியர்களில் குறைந்தவர்களாகத் திகழும் திராவிடர்கள் பல ஆண்டுகாலமாக கோவில் என்ற பெயரிலும் இறைவன் என்ற மூட நம்பிக்கையினாலும் அடிமைப் படுத்தப்பட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பாதிப்புக்கள் பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்களிலும் தொடர்வது வேடிக்கையிலும் வேடிக்கை. தலித்தின மக்கள் பலர் ஆரியர் கலப்பினால் உருவானவர்களால் கொலை செய்யப்படுவது சாதிக் கட்டமைப்பினால் அவர்களை முன்னேறவிடாமல் தடுப்பது போன்றவை ஆரியர்கள் பூச்சுத்தும் வேலையில் இன்னுமொரு வடிவமே! அவ்வகையில் கருமை நிறம் கொண்ட மெல்லிய தோற்றம் கொண்ட வடிவேல் கமல்ஹாசன் போன்ற ஆரிய நடிகரைக்காட்டிலும் குணத்தில் சிறந்தவரே பண்பில் உயர்ந்தவரே ஏனெனில் கமல் போன்ற நடிகர்கள் திரைப்படங்களில் நல்ல கருத்தைக் கூறிவிட்டுத் தனது வாழ்க்கையில் பல பெண்களை மணம் செய்து பலானக் காட்சிகளினைத் தமிழ்த் திரைப்படங்களிற்குள் உட்புகுத்தி ஆரியப் பண்பாடுகளான ஓக்கும் பண்பாடுகளைத் தமிழர் பண்பாடென உலகிற்கு எடுத்துரைக்க முனைவது வேடிக்கையிலும் வேடிக்கை. இவ்வாறானவர்களினால் தமிழர் என்ற உணர்வே அற்று ஆரியரின் வேசைத் தனமே எங்களுக்கும் புகுவது அதாவது புகுத்த நினைப்பது படு முட்டாள்தனம். கமல் ஹாசன் போன்ற ஆரியர்களின் அழகிய பெண்கள் தம் அழகால் திராவிடர்களது பண்பாட்டிற்கு அல்வா கொடுத்துப் பின் தமிழ் இனத்தையே அழிக்க நினைப்பது குறிப்பாக இலங்கையில் நடைபெறும் யுத்தத்தினைப் போன்று படு புத்திசாலித்தனமாக ஆரியர்களின் வேசைத்தனம் தமிழ்த் திரைப்படங்கள் வாயிலாகவும் தொடர்வது வேடிக்கையிலும் வேடிக்கை. ஆரியர்களின் வேசைத்தனம் மிகுந்த குணங்கள் கொண்ட கமல்ஹாசன் போன்ற நடிகர்களைக் காட்டிலும் வடிவேல் போன்ற நடிகர்கள் பண்பில் சிறந்தவரே! இவை அனைத்தும் எனது தனிப்பட்டக் கருத்தே!

வியாழன், 16 அக்டோபர், 2008

கனவுகள்

உடைந்த கட்டடங்களும் இறைப் படங்களுடன் கூடிய அலுவலகமும்........

என்னுடன் குலோபல் வூட் தொழிற்சாலையில் வேலை செய்பவரின் வீட்டிற்குச் சென்றேன் மிக எளிமையான விடுதியில் அவர் தங்கியிருக்கின்றார் அவர் மனைவியும் என்னை அன்போடு உபசரிக்கின்றார். பின்னர் அவர் வீட்டிற்கு அருகாமையிலேயே புத்தகங்களை ஆராய்ச்சி செய்யும் தமிழர் ஒருவர் இருந்துவந்தார். அவரை நான் உள்ளே சென்று சந்திக்கும் சமயம் அவரிடமிருந்து சிலவற்றை காண்பித்ததாக ஞாபகம் அவர் அலவலகம் முழுவதும் இறைவனின் படங்கள் முழுவதும் நிரம்பியதாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதன், 15 அக்டோபர், 2008

தினக்கருத்து

இன்றைய தமிழ்த் திரைப்படங்களும் வெளிநாடுவாழ் ஈழத்துத் தமிழ் இளைஞர்களும்.......

இன்றைய கால கட்டங்களில் வெளிவரும் தமிழ்த் திரைப்படங்கள் படிப்பறிவில்லாத உலகத் திரைப்படங்கள் எடுக்கப்படும் விதங்கள் போன்றனவற்றை அறியாதவர்களாலும் சாதி சமயங்களில் ஊறிப்போனவர்களாலும் பண்பாடுகளில் வேரூன்றிப் போனவர்களாலும் எடுக்கப்படுகின்றது. சிலர் வியாபார நோக்கத்திற்காகவே திரைப்படம் எடுக்க வருகின்றனர் சிலர் மசாலாவை அரைக்க வருகின்றனர். சில படித்த இளைஞர்கள் நல்ல திரைப்படங்களைக் கொடுக்க முடிகின்றது. பலர் இந்திய உணர்வு மிக்கவர்களாகவும் தமிழ்ப்பற்று அல்லாமலும் வட இந்திய ஆரியர்களின் புராணமயப்படுத்த பாடல்கள் கொண்ட மசாலாவையே இன்றும் இந்தியன் என்ற ஒரு காரணத்திற்காக அரைக்கிறனர். ஆனாலும் இன்றைய தமிழ்த் திரைப்படங்கள் ஒரு மனிதனை மிருகமாக மாற்றிக்கொண்டிருப்பது மிகப் பொருந்திய உண்மை. திரைப்படப் பாடல்கள் சிறந்தனவே ஆனாலும் இயக்குனர்கள் தமிழர்களாக இருப்பதனால் மானப்பிரச்சனைக்காக அடிதடித் திரைப்படங்களையே பெருதும் கொடுப்பது தமிழர்களின் உண்மையான பண்பாட்டுக்களினை அழிப்பதாகவும், தமிழர்களுக்குள்ளேயே அடி தடிகளை உருவாக்குவதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வகைத் காதற் திரைப்படங்களினால் பல வெளிநாடுவாழ் ஈழத்துத் தமிழ் இளைஞர்கள் மிருகங்களாக வீதிகளில் சண்டையிடும் அளவிற்குக் கேவலமான நிலைக்க்குத் தள்ளுகின்றது இன்றைய தமிழ்த் திரைப்படங்கள். இலண்டன், கனடா போன்ற பல இடங்களில் இவ்வாறு நிகழ்வுகள் ஏற்படுவதற்குத் தமிழ்த் திரைப்படங்களும் அதன் இயக்குனர்களும் காரணம் என்பது முற்ற்றிலும் உண்மை. இவை எனது தனிப்பட்டக்கருத்தே!

வெள்ளி, 10 அக்டோபர், 2008

கேட்ட கடிகள்

குண்டிப்பக்கத்தை முறுக்குங்கோ....

இரு தமிழர்கள் நல்ல நண்பர்கள் அவர்களுள் ஒருவருக்குத் தென்னை மரத்தில் ஏறத்தெரியும் ஆனால் இளனி பிடுங்கத் தெரியாது. ஒருவருக்கு இளனி பிடுங்கத் தெரியும் தென்னை மரத்தில் ஏறத் தெரியாது. ஆகையால் தென்னை மரத்தில் ஏறத் தெரிந்தவரிடம் இளனி பிடுங்கத் தெரிந்தவர் கூறினார் நீ தென்னை மரத்தில் ஏறு நான் இளனி பிடுங்கும் விதத்தை உனக்குக் கூறுகின்றேன் என்று அவ்வாறே தென்னை மரத்தில் ஏறத் தெரிந்தவர் தென்னையில் ஏறினார். அப்பொழுது இளனி பிடுங்கத் தெரிந்தவர் கீழே இருந்து இளனியைத் திருப்பிவிட்டு குண்டிப்பக்கத்தை முறுக்கிவிடு என்று இதனைக் கேட்ட தென்னை ஏறத்தெரிந்தவரும் இளனியைப் பிடித்து திருப்பிவிட்டு தன் குண்டியைப் பிடித்து முறுக்கிவிட்டார். இதனால் கீழே விழுந்து நொறுங்கினார் என்பது நான் கேட்ட கடி.

வியாழன், 9 அக்டோபர், 2008

கேட்ட கடிகள்

கோமத அவுறுது........

சிங்களவர் ஒருவரும் தமிழர் ஒருவரும் நல்ல நண்பர்கள் தமிழர் புத்தாண்டுத் தினத்தினை கொண்டாடிவிட்டு தென்னை மரத்தில் கோவணம் கட்டிக்கொண்டு இளனி பிடிங்கிக் கொண்டிருந்தார். அப்பகுதியாக வந்த சிங்கள நண்பர் நேற்றைய தினம் புத்தாண்டு எப்படி என்பதனை அதாவது கோமத அவுறுது என சிங்களத்தில் புத்தாண்டு எப்படி என உரக்கக் கத்தினார். இளனி பிடிங்கிக் கொண்டிருந்த தமிழர் தனது கோவணம் அவுழுது என அவர் கூறுகின்றார் என்று தனது இரண்டு கைகளால் கோவணத்தினைப் பிடிக்க எத்தனிக்கும் வேளை தென்னையிலிருந்து கீழே விழுந்து நொறுங்குகின்றார்.

புதன், 8 அக்டோபர், 2008

கேள்விப்பட்ட செய்திகள்

ஈழத்து விடுதலைப் புலிகளில் உள்ளே நடைபெறும் உட்கொலைகள்....................

குலோபல் வூட் தொழிற்சாலையின் தமிழ் நண்பர் கூறியதாவது விடுதலைப் புலிகள் அமைப்பினர்களுக்குள்ளேயே பல சிக்கல்கள் உள்ளன என்றும் போர்ச்சூழலில் வேவு பார்க்கும் பலர் இலங்கை இராணுவத்தினருடன் சேர்ந்து துரோகம் செய்தவர்கள் என்றும் அவர்கள் பிடிபட்ட இடத்திலேயே சுடப்பட்டனர் எனவும் என்னிடம் தெரிவித்தார் உதாரணங்களாக இயக்கத் திரைப்படம் ஒன்றில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்த ஒரு நடிகர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினருடன் நீண்ட நாட்கள் நட்புடன் இருந்தவர் மாவீரர் தினத்தன்று தனது செலவில் பலவன செய்தார் என்பதும் பின்னர் இலங்கை இராணுவத்தினருக்குத் துப்புக் கொடுத்த காரணத்தினால் சுடப்பட்டார் என்பது வரலாறு. இரண்டாவது உதாரணமாக தான் ஒரு முறை இயக்கத்தில் இருந்த வேளை தனது சொந்தக்காரர் ஒருவர் துரோகம் செய்த காரணத்தினனல் சுட்டுக் கொல்லப்பட்டார் எனவும் தனது ஊர்தியில் ஏற்றிவரும் வேளையில் என்னிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 7 அக்டோபர், 2008

கனவுகள்

மலைக்கோட்டைக் கோவில்தானோ !

நான் ஒரு விடுதியி்ல் தங்கித் தொலைக்காட்சி பாரத்தவாறு இருந்தேன் அவ்விடுதியில் மேல் ஒரு வங்கியோ பணி அலுவலகமோ இருப்பதனை உணர்ந்தேன். பின்னர் ஊர்தியில் பயணம் செய்யும் பொழுது மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் சுவர் போன்ற தோற்றம் கொண்ட கோவிலைப் பார்த்தவாறே செல்கின்றேன். மலை இருக்கவில்லை ஆனால் அச்சுவர் அமைந்த கோவிலை மட்டும் கண்களால் கண்டது உண்மை. இக்கனவு இன்று காலை என்னால் காணப்பட்டது.

ஞாயிறு, 5 அக்டோபர், 2008

தினம் ஒரு பாடல்



கொலம்பஸ் கொலம்பஸ் - ஜீன்ஸ்

இப்பாடலைக் கேட்டால் கொலம்பஸ் துள்ளவும் செய்வார் அத்தகு பாடல்.

தினக்கருத்து

இலங்கை இனப் பிரச்சனையும் வெளிநாடுவாழ் ஈழத்துத் தமிழர்களும்..................


இலங்கையின் இனப்பிரச்சனை என்பது முட்டாள்தனமான வகையில் தோற்றுவிக்கப்பட்டதொன்று அதாவது ஆரியர் மற்றும் திராவிடக் கலப்புக்களான சிங்களவர்கள் மீது அதே ஆரியர் மற்றும் திராவிடர் கலப்புக்களான தமிழர்கள் போரிடுவதென்பது இரு இனத்தவர்களிடையே சற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பாண்மை இல்லாத காரணத்தினால் ஏற்பட்டதொன்றாகும். பெரும்பாலான ஈழத்துத் தமிழர்களே தமிழ் மீது அளப்பரிய பற்றுக்கொண்டுள்ளவர் என்பது நான் அறிந்த உண்மை நானும் ஒரு ஈழத்துத் தமிழன் தான் என்பதும் உண்மையே இதனை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் நான் ஈழத்தின் தமிழ் பேச்சு வழக்கு எழுத்து வழக்கு தமிழகத் தமிழின் பேச்சு வழக்குகளினையும் அதனை எழுதும் முறைகளினையும் நன்கு அறிவேன் இவ்விரு பிரதேசங்களிலும் ஈழத்துத் தமிழர்கள் சிறப்பான உச்சரிப்பை உடைய தமிழில் உரையாடுவது மிகவும் சிறந்தது. மேலும் தமிழகப் பிள்ளைகளும் வெளிநாடுவாழ் ஈழத்துத் தமிழ்ப்பிள்ளைகளில் பலரும் தாய் மொழியினைக் கல்லாத காரணங்களினால் சீரழிந்து போவது கண்களால் காணும் உண்மைகள்.
பெரும்பாலான கனேடியத் தமிழர்கள் ஈழத்தினை தமது பூர்வீகப் பிரதேசம் எனவும் அது தமக்குக் கிடைக்கும் எனவும் நம்புகின்றனர். சிலர் இதனைப் பற்றி அவ்வளவாக அலட்டிக்கொள்வதில்லை காரணம் கனடாவில் வசதி உண்டு , சுதந்திரம் உண்டு இவ்வாறு பலதரப்பட்ட காரணங்களினால் சிலர் ஈழத்தினைப் பற்றியும் தமிழ் மொழியினைப் பற்றியும் பண்பாடுகளினைப் பற்றியும் மறந்து தமது விருப்பங்களிற்கேற்றாற் போல் வாழ்க்கையினை வாழ்கின்றனர் ஆனாலும் இன்றளவும் பல தமிழர்கள் ஈழத்திற்கு ஆதரவளித்து வருவதும் இதழ்களில் வரும் செய்திகள் பொங்கு தமிழ் உலகமெங்கும் பலத்த மக்கள் சக்திகளுடன் நடைபெற்றது உண்மை கனடாவில் டொறொன்ரோவில் பல ஆயிரம் பொது மக்கள் வரையில் பங்கேற்ற்னர் என்பதனை அறிகின்றேன் இம்மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனை தம் தலைவராகவும் அவருடைய வழியில் நடந்து உயிரைக் கூடக் கொடுக்கத் தயங்கமாட்டோம் என்று ஈழத்தில் இருக்கும் அப்பாவி ஏழ்மை நிலைத் தமிழர்களை போராட்டத்திற்கு வலுக்கட்டாயமாகச் சேர்க்க உரிமை கேட்பது வேடிக்கை.
எனது வேலைத் தளமான குலோபல் வூட் தொழிற்சாலையில் என்னுடன் பணிபுரியும் தமிழ் நண்பர் கூறினார் தமிழீழப் பிரதேசமான விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வலுக்கட்டாயமாக ஆட்களைச் சேர்ப்பது என்று சேர்ப்பவர்களில் புதியவர்கள் போராட்ட முன்னரங்குகளிற்கு அனுப்பப்படுகின்றனர் என்று. அவ்வாறே தனது மனைவின் சொந்தக்காரர் ஒருவர் அனுப்பப்பட்டு இறந்தவர் என்பதும் வரலாறு இவ்வாறு தெய்வமாகப் போற்றப்படும் தேசியத் தலைவர் தனது கொள்கை ஒன்றிற்காக அப்பாவித் தமிழ் இனத்தினையே அழிப்பதற்கு முயற்சி செய்வது படு முட்டாள்தனம். அவரை வெளிநாடுவாழ் தமிழர்கள் பாராட்டித் தலையில் வைத்து ஆடுவது படு வேடிக்கை. எண்பத்து மூன்றாம் ஆண்டு தலைவர் என இலங்கைத் தமிழர்களால் அதாவது ஈழத்துத் தமிழர்களால் கருதப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரனால் நடத்தப்பட்ட தாக்குதல் நடைபெறாவிட்டால் தமிழர்களின் பாரிய இன அழிப்பு தென்னிலங்கையில் ஏற்படாமல் இருந்திருக்க வாய்ப்புண்டு. சிறு துளியினைப் பெரு வெள்ளமாக மாற்றி ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தினையே சிங்கள சமுதாயம் எதிரிகளாகவும் அவர்களை அழிப்பதற்காகவும் எத்தனிப்பது வேலுப்பிள்ளை பிரபாகரன் என்னும் தெய்வத் தலைவரால் என்பதும் இங்கு சுட்டிக் காட்டத் தக்கது. ஈழம் என்ற ஒரே கொள்கைக்காக பல தமிழர்களை இவர் தன் பின்னே அழைப்பது வேடிக்கை. உலகில் குற்றங்கள் பல இல்லாத பிரதேசமாகவும், தூய தமிழ் மொழி உள்ள பிரதேசமாகவும் , நற்குணங்கள் கொண்ட பல மனிதர்கள் வாழும் பிரதேசமாகவும் தமிழீழப் பகுதி உள்ளதும் வரவேற்கத்தக்கது ஆனால் அப்பிரதேசத்தை அடைவது என்ற குறிக்கோளுடன் பலர் வீணே மடிவதென்பது வியப்பை அளிக்கின்றது. பிரபாகரன் என்பவர் தமிழர் என்ற தனது தனிமதினக் கொள்கையினை விட்டெறிவது குறிப்பிடத்தக்கது காரணம் அவரது கொள்கைகளின் காரணமாக பல இலட்சம் பொது மக்கள் மற்றும் போராளிகள் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுவாழ் மக்கள் பலர் போராட்டம் தீர்ந்து அனைத்து மக்களும் சமாதானமாக இருக்க ஒரு தீர்வை எட்ட வழி சமைக்க வேண்டும் என்பதும் அதை விடுத்து விடுதலைப் புலிகளின் போராட்ட வழியினை ஆதரிப்பதென்பதும் சற்றுக் கேள்விக்குறியாகவே உள்ளது. போரினால் ஈழத்தினை இன்று பெற்றால் நாளை வேறொருவன் வந்து கைப்பற்றமாட்டான் என்பதில் எவ்வளவு உண்மை உள்ளதோ அதேபோல் உலகில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் போராட்டத்திற்கும் பொது மக்களின் மரணத்திற்கும் ஆதரவளிக்காமல் அமைதியான முறையில் செல்வதே நன்று. இவை அனைத்தும் எனது தனிப்பட்டக் கருத்தே!

சனி, 4 அக்டோபர், 2008

தினக்கருத்து

வெளிநாடுவாழ் இந்தியர்களின் பண்பாட்டழிப்புகளும் அப்பண்பாட்டினைக் காக்கும் இந்தியத் திரைப்படத்துறையும்..................................

இந்திய வம்சாவளியினர் பலர் சுய முன்னேற்றத்திற்காக மதம் விட்டு மதம் மாறுதல் சொந்த விருப்பு வெறுப்புக்களினாலும், சொகுசு வாழ்வினை வாழ்வதற்காகவும் பண்பாட்டு விழுமியங்கள் தமது மூதாதையர் வாழ்ந்த பண்பாட்டுணர்வுகளை மறக்கப் பலதரப்பட்ட வகையில் வாய்ப்புண்டு. பணத்திற்காகவே இவ்வுலகம் என மாறி வரும் இக்காலத்தில் மதம் மாறுதல் பண்பாடுகளைப் பேணாதிருத்தல் போன்றனவைகள் சர்வசாதாரணம். ஆனனலும் இவ்வாறான மாற்றங்களினால் மேற்கத்தேயப் பண்பாட்டினனப் பின்பற்ற வேண்டிய சூழலிற்கு இந்திய வம்சாவளியினர் நிர்ப்பந்தப் படுத்தப்படுகின்றனர் என்பது யாமறிந்த உண்மை. எடுத்துக்காட்டாக பின்வரும் உதாரணங்களினனப் பார்ப்போம்:

இந்தியப் பெண்களைப் பற்றிப் பார்ப்போம்:

* இந்தியப் பெண்கள் அரைக்காற்சட்டை அணிவதனை மேற்கத்தேயவர்களிடமிருந்து கற்றனர்.

* பெரும்பாலான வெளிநாடுவாழ் , வட இந்திய நகரத்துவாழ் பெண்களைப் பார்த்தோமேயானால் புகைபிடிப்பதனன வழமையாகக் கொண்டுள்ளனர்.

* பல பெண்கள் பெரியோர்களால் நடத்தப்படும் திருமண முறையினை வெறுக்கின்றனர் டேட்டிங் போன்ற தெரிவுகளளச் செய்து சிக்கலில் சிக்கித் தவிக்கின்றர்.

*சில பெண்கள் காதல் செய்கின்றனர் அவ்வாறு காதல் செய்யும் பெண்கள் பலர் மோசம் செய்யப்பட்டு விபச்சாரிகளாக விற்கப்படுவதும் உண்மை.

* இந்நிகழ்வுகள் இந்திய வம்சாவளியினருக்கு மட்டும் அல்லாது இலங்கையில் வாழும் பெண்களுக்கும் ஏற்படுவது வேதனனக்குரியது.

* பெரும்பாலான பெண்கள் மது, போதை போன்ற பொருட்களிற்கு பிற இனத்தவர்களால் அடிமையாக்கப்பட்டு பின் அவர்களுடனேயே வாழவும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்பது உண்மை. கனடாவில் இவ்வாறு நடப்பது அதிகம். உதாரணத்திற்கு என்னுடம் தொழிற்சாலையில் பணிபுரியும் தமிழ் நண்பர் கூறுவார் இந்தியப் பெண் போன்ற தோற்றம் கொண்டவர் டொரொன்றோ கீழ்நகர்ப் பகுதியில் பிச்சை எடுக்கின்றார் என்று பெரும்பாலும் இவ்வாறன பெண்கள் பிற இனத்தவர்களுடன் கூடுவதனால் அவர்கள் இவர்களைப் போதைக்கு அடிமை செய்து பிச்சைக்காரர்களாக மாற்றுவதென்பது உண்மை. இது எனது கருத்து.

* தமது தாய் மொழியின் மீது சற்றும் பற்றுக்கொண்டிராதவர்களாகவும் மேற்கத்தேய அதாவது ஆங்கிலத்தினனயே உரையாடுவதற்கும் எழுதுவதற்கும் பயன்படுத்தும் இவ்வெளிநாடுவாழ் இந்திய வம்சாவளிப் பெண்கள் இறுதியில் வெள்ளையர்களாக்கப்படுவதும் உண்மையே!. பின் அவர்களே இந்தியப் பண்பாட்டிற்கு எதிரிகள் ஆக்கப்படுவதும் உண்மையே!.

* பிற இனத்தவர்களை மணம் முடித்து விளையாடிய பின்னர் வெறுத்துப் பல பெண்கள் இந்தியப் பண்பாட்டினைக் காக்க முற்படுவதும் உண்மை.

* இவ்வாறானவர்களினது வரலாறுகள் இந்தியத் திரைப்படங்களில் பொறிக்கப்படமாட்டாது. ஆனாலும் சில வெளிநாடுவாழ் இந்தியப் பெண்கள் தங்கள் பண்பாட்டினனயும் இணைத்து மேற்கத்தேயப் பண்பாட்டினையும் இணணத்து ஒரு புதிய பண்பாட்டினன உருவாக்கி இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் வாழ்வது வேடிக்கை.

இந்திய வம்சாவளி ஆண்களைப் பார்ப்போம்:

* ஆண்களில் பெரும்பாலானவர்கள் பரவவயில்லை என்றே கூறவேண்டும் இதில் குறிப்பாக இலங்கைத் தமிழர்களைப் பார்ப்போமேயானால் மிகுந்த சிரமத்துடன் வேலை செய்துவிட்டு மது அருந்துவர், புகை பிடிப்பர் சிலர் போதைக்கு தம்மை அடிமையாக்கிக் கொண்டு வாழ்வது என் கண்களூடாகக் கண்ட உண்மை கனடாவில் இப்படிப் பல தமிழ் இளைஞர்களைப் போதைக்கு அடிமையாக்கித் தம் கைகளுக்குள் போட்டுக் கொள்பவர்கள் பலர். இது தெரியாது வாழ்பவர் சிலர் தம் வாழ்வின் பெரும்பகுதியினை வாழ இழந்து பண்பாடுகளை இழந்து குப்பைகளாகத் தூக்கி எறியப்படுவது உண்மை.

* ஆண்கள் கெட்டால் பரவாயில்லைதான் ஆனால் பிற்காலத்தில் மிகவும் மனம் வருந்துவர்.

* சில ஆண்கள் காமத்திற்கு அடிமையாகி பிற இனத்தவரைத்திருமணம் செய்தும் கொள்கின்றனர். இதனனல் பிரச்சனைகள் ஆரம்பத்தில் ஏற்படாது ஆனாலும் பிற்காலங்களில் பிற இனத்தவள் விட்டு விட்டு ஓட நடுத்தெருவில் நிற்பதுவும் உண்மை.


இவ்வாறு பண்பாட்டழிப்பினுள் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்திய வம்சாவளியினரை தமது பாரம்பரியத்தினூடே எடுத்துச் செல்வதும் தம் இனத்தவரிடையே காதல் கொள்ளச் செய்வதூஉம் சிறப்பு. மேலும் இந்தியத் திரைப்படங்களில் பெரும்பாலானவைகள் தீய குணம் படைத்தவர்களை இனம் காட்டித் தண்டனை வழங்குவது அத்திரைப்படத்தினை நேரில் பார்க்கும் பல தீய மனம் படைத்தவர்களுக்கு விழும் சாட்டை அடி என்றே கூறலாம். இந்தியத் திரைப்படத்துறை என்பது உலகின் அதிக திரைப்படங்களை வெளியிடும் திரைப்படத்துறை பல மொழியினரும் தமது பண்பாடுகள் மொழிகள் அழியாதிருக்கப் பெரிதும் நம்புவது இத்திரைப்படங்களினையே ஆனனலும் இன்றைய இந்தியத் திரைப்படங்கள் பல மேறகத்தேயப் பண்பாடுகளிலிருந்து வேறுபடாமல் அங்கு எடுக்கப்படும் திரைப்படங்களையே இங்கும் மொழி மாற்றி எடுக்கப்படுவது வேடிக்கை!. இந்தியாவிற்கு பெரிய வரலாறு உண்டு அதன் பழமையினை நோக்கிப் போவேமேயானால் உலகின் பண்பபட்டுத் தோற்றம் இந்தியா எனக் கொள்ளலாம். இவ்வாறான ஒரு சிறந்த பண்பாட்டினை உடைய இந்தியப் பண்பாடு மேற்கத்தேயப் பண்பாடுகளுடன் சேர்ந்துவிடுவது தவிர்க்கப்படல் வேண்டும். தவிர்க்கப்பட்டால் நன்று.

இவை அனைத்தும் எனது தனிப்பட்டக்கருத்துக்களே நம்புவதும் நம்பாமல் விடுவதும் உங்கள் கைகளிலேயே!

தினம் ஒரு பாடல்



அக்கம் பக்கம் - கிரீடம்

இப்பாடல் மிகவும் மெல்லிய நடையில் இருப்பதனால் கேட்பதற்கு இனிது இசை அதனினும் புதிது.

கேள்விப்பட்ட செய்திகள்

அமெரிக்கக் கறுப்பினக் காடையர்களால் கொலை செய்யப்பட்ட கனேடியத் தமிழ் இளைஞன்....................

குலோபல் வூட் தொழிற்சாலையில் பணிபுரிபவர் என்னை வழமைபோல் தனது ஊர்தியில் என்னை அழைத்துவரும் வழியில் கூறினார் டொறொன்ரோவின் கீழ்நகர் (டவுண்டவுன்) பகுதியிலோ வொண்டெர்லாண்ட் பகுதியிலேயோ அமரிக்காவில் வந்த கறுப்பினத்தவர்கள் வந்திருந்தனராகவும் அவர்கள் செல்லும்பொழுது அவர்களை முந்துவதற்குச் சென்ற தமிழ் இளைஞர் பட்டாளத்தில் ஒருவர் சுடப்பட்டு இறந்ததாகவும் அவர் கூறினார். பின்னர் ஒரு மாதமோ இரு மாதமோ கழித்து சுட்டவரைத் தேடிப் போய் சுட்டனர் தமிழ் இளைஞர்கள் என்பதனையும் கூறினார். இப்படிக் கறுப்பினத்தவர்கள் தமிழரைக் கொல்வதும் தமிழர்கள் அடக்கி வைத்தனர் என்பதாகவும் கூறினார். இச்சம்பவம் நடந்தது ஒரு வருடமோ சில வருடங்கள் முன்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

வியாழன், 2 அக்டோபர், 2008

கேள்விப்பட்ட செய்திகள்

கனடாவில் கறுப்பின இளைஞனை மணம் முடித்த அழகிய இலங்கைத் தமிழ்ப் பெண்.......

என்னுடன் தொழிற்சாலையில் பணிபுரியும் தமிழர் கூறினார் கறுப்பின வைத்தியர் ஒருவரை அழகிய தோற்றம் கொண்ட இலங்கைத் தமிழ்ப் பென் ஒருவர் மணம் முடித்ததாக. அவர் மேலும் தெரிவிக்கையில் படிக்கும் பொழுது இருவரும் விளையாடி (உடலுறவு) இருந்திருப்பர் என்று என்னைப் பொறுத்த வரையில் அப்பெண் தமிழர் பண்பாட்டில் வளர்க்கப்பட்டிருக்கவில்லை என்பதும். தமிழ்த் தெரியாத பெண் என்பதும் கணிப்பு. இப்படியான வளர்ப்புச் சரியில்லாத பெண்களால் ஒரு மொழி, ஒரு பண்பாடு சீரழிக்கப்படுவது என்பது மட்டும் உண்மையே! உலகில் எவருக்கும் அடிபணியாத தமிழன் வரலாறு இப்படியான அடிமைப் பெண்களினால் சீர்கெடுகின்றதென்பது உண்மை. மேலும் என்னுடன் பணிபுரிபவர் கூறினார் இலங்கையில் இருந்து வரும் சொந்தங்கள் இத்திருமணத்தினை எவ்வாறு எதிர்நோக்குவர் என்று. என்னைப் பொறுத்தவரை கேள்விக்குறியே. எனது கணிப்பின்படி இப்பெண் சாதிகளினைப் பற்றி அறியாதவராகவும் அறிந்தும் அதனை ஏற்காதவராகவும் இருக்கலாம். இதனை நான் தெரிவிப்பதன் காரணம் யாதெனில் பெரும்பாலான வெளிநாடுவாழ் இலங்கைத் தமிழர்களின் திருமணங்கள் சாதி அடிப்படையில் நடைபெறுவதும், சொந்தங்கள் உள்ளே நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றைய காலகட்டங்களில் கனேடிய வாழ் தமிழ் இளைஞர்கள் மீது பெரும்பாலான பெற்றோர்கள் வெறுப்புடன் காணப்படுவதும் இத்தகு இனக்கலப்புத் திருமணங்களிற்கு வழி சமைத்திருக்கலாம். மனதிற்குப் பிடித்ததனால் மணம் முடித்திருந்தால் பரவாயில்லை ஆனால் தமிழர் பண்பாடுகள் அழியாது காத்தால் இத்தம்பதிகள் பாராட்டப்படுவார்கள் தமிழர் வரலாற்றில் பொறிக்கப்படுவார்கள்.

புதன், 1 அக்டோபர், 2008

கேள்விப்பட்ட செய்திகள்

ஜரோப்பிய நாடுகளிடையே மாறுவதற்கு எத்தனித்த ஈழத்துத் தமிழர்கள்.....................................

கனடாவில் நானும் எனது தாயார் மற்றும் எனது அண்ணன் ஆகியோர் ஒரு அறை கொண்ட வாடகை விடுதியில் தங்கிவந்தவேளை என்னால் சீராகப் பாடசாலைக்குச் செல்ல இயலவில்லை, சீராக வேலைகள் செய்ய இயலவில்லை ஒரே படுத்த படுக்கை. இதனனப் பார்த்துப் பயந்துபோன எனது தாயார் ஒரு ஜயரை அழைத்து எனக்கு ஏற்பட்டவைகளை எடுத்துரைத்தார். எனது தாயாருடன் வேலை செய்து வந்த பெண்ணின் கண்வனே எனக்கு பூஜை செய்த ஜயர் ஆவார். அவர் பூஜை செய்த பின் அவர் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெறச் சொன்னார். தேசிக்காய் மற்றும் திருநீறுகள் போன்றனவற்றால் இப்பூசை நடைபெற்றது. பூஜையின் பின்னர் ஜயர் என்னுடன் உரையாடுகையில் கூறினார் ஈழத்துத் தமிழ் மக்கள் சிலர் ஜேர்மனியில் இருந்து சுவிட்சர்லாந்திற்கோ சுவிட்சர்லாந்தில் இருந்து ஜேர்மனிக்கோ என்பது உறிதியாகச் சொல்ல இயலாது. ஆனால் களவாகச் செல்ல எத்தனித்து மண் அரைக்கும் இயந்திர ஊர்தியில் சென்றதாகவும் கூறினார்.அவர்கள் செல்லும் பொழுது இடையில் வழி மறித்த காவற்துறையினரால் அவ்வியந்திரம் போட்டுப் பார்க்கப்பட்டதாகவும் அதற்குள் பயணித்த ஏறத்தாழ இருபது முதல் முப்பது வரையிலான ஈழத்துத் தமிழர்கள் கொல்லப்பட்டனர் எனவும் கூறினார் ஜயர். இச்செய்தியினை அந்தணர் ஜயா என் வீட்டிற்கு சன் தொலைக்காட்சியினைப் போட வந்த சமயம் கூறினார் அதாவது டிசம்பர் 10 முதல் டிசம்பர் 25 வரை இருக்கும் . அவர் கூறக்கேட்ட இச்செய்தி உண்மை என்பதனை என்னால் கூற இயலாது.

திங்கள், 29 செப்டம்பர், 2008

தினம் ஒரு பாடல்

ஓ வந்தது பெண்ணா - அவள் வருவாளா

நல்ல பாடல் இதன் காட்சியமைப்புக்கள் மிக எளியதாகவும் காதலர்களுக்கு இனியதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கேள்விப்பட்ட செய்திகள்


கனடாவில் ஷோபிகா கடத்தப்பட்டார்.....

எனது அம்மம்மா வழியில் சொந்தக்காரரான குஞ்சுபபா என அழைக்கப்படும் ரஞ்சினி கனடாவில் வசிக்கின்றார் அவர் தனது தாயான பெரியக்கா என அழைக்கப்படும் பரமேஸ்வரியுடனும் கணவர் யோகேந்திரனுடன் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு மூன்று புதல்வியர் மூத்தவர் நிரோஜிகா, இளையவர் பெயர் ஆத்மி. ஆத்மிக்கும் வயதில் மூத்தவர் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு ஆசிரியருக்குப் படித்துக்கொண்டிருந்தார் அவர் பெயர் ஷோபிகா. இவரை சுமனா என்பவரின் கணவரின் தம்பியான தமிழ் இளைஞர் ஒருவர் காதலித்து வந்தார். கடந்த வியாழக்கிழமை அதாவது செப்டம்பர் இருபத்தைந்தாம் திகதி வீட்டில் வந்து கடத்தப்பட்டார்.இதனைக்கேள்விப்பட்ட குஞ்சுபபாக்காவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தியினன எனது அம்மம்மாவான இரத்தினேஸ்வரி கூறினார்.

ஞாயிறு, 28 செப்டம்பர், 2008

மூளைக் கிறுக்கல்கள்

அழகென்ன மயிலிறகென்ன காமத்தின் மயக்கம் வரைக்கும் தானேயென்பேன்!
மனதென்ன மொழியழகென்ன வாழ்வின் இறுதி வரைக்கும் தானேயென்பேன்!

விழியென்ன விண்ணோக்கும் பார்வையென்ன அரசகுல மனிதனென்பேன்!
கவியென்ன மெய்ப்பொருள் விளங்கும் ஞானமென்ன அவன் தெய்வமென்பேன்!

வாழ்வென்ன மனதின் மோகமென்ன இறுதி இறப்பென்பேன்!
வாழ்ந்தவன் அவன் வாழ்வு கவியினால் மூழ்கியவன் வாழ்பவன் என்பேன்!


கேள்விப்பட்ட செய்திகள்

கனடாவில் இந்தியத் தமிழ்ப் பெண்ணொருவர்.................................

நான் தற்சமயம் குலோபல் வூட் தொழிற்சாலையில் பணிபுரிகின்றேன். பணிபுரியும் தொழிற்சாலையில் பல தமிழர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுள் ஒருவர் வழமையாக நான் பணிமுடிந்து செல்லும் பொழுது தனது ஊர்தியில் என்னை அழத்து வருவார் அவர் ஒரு இலங்கைத் தமிழரே என்னைப் போல அவர் கூறினார் தனது நண்பன் ஒருவன் கனடாவின் தலைநகரான டொறொன்ரோவின் டவுண்டவுன் பகுதியினுள் சென்ற போது இந்தியத் தமிழில் உரையாடும் பெண்ணொருவர் தன்னை அணுகியதாகவும் பின்னர் தனக்குப் பிடித்த போதைப்பொருளைக் கொண்டுவந்து சேர்த்தால் அவருடன் உடலுறவு வைத்துக் கொள்வதற்கு அனுமதிப்பதாகவும் கூறியதாக தனது நண்பர் கூறினார் என என்னை அழைத்து செல்லும் நபர் என்னிடம் கூறினார். மேலும் அப்பெண் மிகவும் அழகிய தோற்றம் கொண்டவர் என்பதனையும், தலையினில் பொட்டு வைத்திருந்தார் எனவும் என்னிடம் கூறினார். நான் நினைக்கின்றேன் அழகிய தோற்றம் கொண்ட பெரும்பாலான தமிழ்ப் பெண்கள் உயர்சாதியினைச் சேர்ந்தவர்களாகவும் ஆரியத்தமிழ்க் கலப்பினால் உருவாகியிருக்கலாம் எனவும் நினைக்கின்றேன். இது நான் கேள்விப்பட்ட செய்தியே உண்மையா என்பதை நான் கண்கூடாகக் காணவில்லை. பெரும்பாலான இலங்கைத் தமிழில் உரையாடும் தமிழ்ப் பெண்கள் கனடாவில் உளனர். அவர்கள் உரையாடுவது பெரும்பாலும் இந்தியத் தமிழ்தான் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

தினக்கருத்து

இந்தியத் திரைப்படத்துறையும் வெளிநாடுகளின் திரைப்படத்துறையும்.

இந்தியத் திரைப்பட இயக்குனர்கள் மிகப்பெரும் புத்திசாலிகள் ஏனெனில் வரலாற்றினை எவருக்கும் தெரியாதவாறு மசாலாக் கலவைகளுடன் அதாவது பாட்டு, நடனம், நகைச்சுவை எனக் கலந்து இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலே உள்ள திரைப்படத்தினுள் புகுத்துவது அவர்களின் சாமர்த்தியம். வெளிநாட்டு இயக்குநர்கள் பெரும்பாலும் தமது கற்பனைகளைப் பல கோடிகள் செலவு செய்து திரைப்படத்தினை ஆகக்குறைந்த மணிநேரங்களில் எடுப்பது சிறிது வேடிக்கை.

வெளிநாட்டினர் பெரும்பாலான திரைப்படங்கள் ஒரே இனத்தவரைக் கவராமல் சிறுவர்களுக்கெனத் தனியே திரைப்படங்களையும் பெரியவர்களுக்கெனத் தனியே திரைப்படங்களையும் எடுப்பது சிறந்த முறையே ஆனால் இவற்றால் ஒரு குடும்பமாக வெளிநாட்டினரின் அனைத்துத் திரைப்படங்களினையும் பார்க்க முடியாது. குறிப்பாக ஓரினைச்சேர்க்கைத் திரைப்படங்கள் இந்திய மசாலாக் கலவைத் திரைப்படங்களில் பார்க்க இயலாது அதாவது மசாலாக்கலவைகளான பாடல்கள், அதிரடிக்காட்சிகள் என நிறந்த திரைப்படங்களையே குடும்பமாக அமர்ந்து பார்க்கின்றனர் பெரும்பாலான இந்தியர்கள். இதனால் குடும்பத்தினுள் ஏற்படும் பிரிவினைகள் தடுக்கப்படுகின்றன.


இந்தியத் திரைப்படத்துறையில் பல நல்ல திரைப்படங்கள் உளன எடுத்துக்காட்டாக கலைத் திரைப்படங்களான பதேர் பாஞ்சாலி, அபுர் சன்சார், அபரஜிதோ ஆகிய திரைப்படங்கள் சிறப்பானவை மனிதருள் மாற்றத்தினை ஏற்படுத்தும் ஆனால் இன்றைய இந்தியத் திரைப்படங்கள் கலைநயமே இல்லாது மனிதர்களை மிருகமாக மாற்றும் நோக்கில் இந்தியப் பண்பாட்டினைச் சீரழிக்கும் வகையில் மேற்கத்தேயப் பண்பாடுகளினைப் பின்பற்றுகின்ற திரைப்படங்களாக வெளிவருவது மிக வேதனை அழிப்பதாகவுள்ளது வரலாறுகளே இவையாவின் இவற்றைப் பார்த்து அதன்படி வரலாற்றினுள் வாழ நினைப்பவர் பலர். அதனால் சமூகத்தில் ஏற்படும் இழப்பு பாரியது. பல கொலைகாரர்கள் உருவாக்கப்படுகின்றனர். இந்தியத் திரைப்படத்துறையினரும் பணம் புரட்டும் நோக்குடன் இங்கு வருவது மனதிற்கு மிகவும் வேதனை அளிப்பதாகவும் ஒரு குத்துப்பாட்டு ஒரு சண்டைக்காட்சி என்ற அரத்த மசாலாவையே அரைப்பதும் மேற்கத்தேயத் திரைப்படங்களினை நகல் எடுப்பதும் எமது பண்பாடுகள் பாரம்பரியங்கள் என்பனவற்றை சீரழிக்கும் நோக்குடனே என்பது பொருந்தும்.

இவைகள் அனைத்தும் எனது தனிப்பட்டக் கருத்தே.

சனி, 6 செப்டம்பர், 2008

தினக்கருத்து

சாதி ஒழிப்பின் நன்மைகளும் தீமைகளும்

ஒழிப்பின் நன்மைகள்
இந்தியாவின் பெரும்பாலான பிரச்சனைகள் சாதி அமைப்பினால் ஏற்படுகின்றன. தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கருதப்படுபவர்கள் பெரும்பாலானோர் திராவிடர்களாகவும், தலித்துக்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறானவர்களிற்குப் பெரும்பாலான தொல்லைகள் வந்து போவதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் ஆரியர்கள் தங்கள் இந்து சமயக் கோட்பாட்டினை விட்டுக் கொடுப்பதாகத் தெரியவில்லை வெளிநாடுவாழ் தமிழர்கள் முதல் பல இந்தியர்கள் வரை சாதி இன்றளவும் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தோ ஈரானியர்கள் மிகவும் சுத்தமாக இருப்பதை விரும்புவர்களாவர். அவர்களுக்கு எப்பொழுதும் தெய்வ நம்பிக்கை உண்டு. தமது தவறுகளை மறைப்பதற்கு தெய்வம் என்ற சாந்தமான கோட்பாடுகளை உருவாக்கி அதனை பிற கல்வியறிவு அற்ற மனிதர்களிடத்தே பரப்பவிட்டு பணம் சம்பாதித்து பணக்காரர்கள் ஆகிவிடுகின்றனர். பின்னர் தாம் தெய்வம் என்ற பெயரில் பிச்சை எடுத்த மக்களையே பிச்சைக்காரர்கள் என்று கூறி அவ்வினைத்தையே அழிக்கப்பெரிதும் முயல்வர். இதுவே இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களெனக் கருதப்படும் உண்மையான இந்தியர்கள் அடக்கி ஒடுக்கப்படுவதும் இலங்கையில் ஆரியர் வம்சாவளியில் வந்த சிங்களவர்களும் , தமிழ் மொழி பேசும் உயர்ந்த சாதியினர் எனத் தம்மை வெளிக்காட்டும் ஆரியத் தமிழ்க் கலப்பினர்களால் உண்மையான கருமை நிறத் தோல் கொண்ட தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டதும் வரலாறு. இச்சாதிகள் ஒழிப்பினால் பல நன்மைகள்
அனைவருக்கும் சம உரிமைகள் கிட்டும் வாய்ப்பு, பிரச்சனைகள், சண்டைகள் உருவாகாமல் தடுக்கலாம்.

ஒழிப்பின் தீமைகள்
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தமது பண்பாட்டு விழுமியங்களை கட்டிக்காக்க முயல்வது குறிப்பிடத்தக்கது. அத்தகு பிரிவினரால் சாதி என்பது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்வகைக் சாதிக் கடைப்பிடிப்பினால் தமது மொழி, பண்பாடு போன்றனவைகளைப் பாதுகாக்கின்றனர். இது சிறந்த முறையே ஆனாலும் இதனால் காதலர்களைப் பிரிப்பது தமது சாதியினரையே கட்டாயத் திருமணம் செய்து வைப்பது போன்றனவைகள் சற்றுத் தவிர்க்கப்படலாம். சாதி ஒழிப்பினால் மொழி, மதம் , பண்பாடு ஆகியனவைகள் அழிக்கப்படுகின்றது என்பது சற்று கூர்ந்து கவனிக்கத்தக்கது. இவை அனைத்தும் எனது தனிப்பட்டக்கருத்தே!

தினம் ஒரு பாடல்

கன்ணுக்குள் நூறு நிலவா - வேதம் புதிது

மனதைப் பரவசப்படுத்தும் இசை, இதன் காட்சி அமைப்பும் மெட்டு அமைப்பும் மிகச் சிறப்பானது.

வெள்ளி, 5 செப்டம்பர், 2008

தினக்கருத்து

தமிழ்த் திரையும் ஆரியர்களின் வேசைத் தனமும்.

தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் அழகான தோற்றம் கொண்டவர்கள் சிறந்தவர்களாகவும், மற்றவர்கள் அவர்களின் கூட்டுப் போன்ற கதைகளே அதிகம் வருகின்றது மனதிற்கு வேதனை அளிப்பதாக உள்ளது. எடுத்துக்காட்டாக வடிவேல், கவுண்டமணி போன்ற தோற்றம் கொண்டவர்களிற்கு மனதே இல்லை என்றளவிற்கு வெள்ளை நிறத்தோலுடைய இந்தோ - ஜரோப்பிய (ஆரியர்) இவர்களால் ஏற்படுத்தப்பெற்ற இவ்வகை பிரிப்பு கறுமை நிறமாகவும் பார்ப்பதற்கு அழகில் சற்றுக் குறைந்தவர்களாகவும் விளங்கும் உண்மையான தமிழர்கள், நற்குணம் கொண்ட இவர்களை தீயவர்களாகவும் , வில்லன்களாகவும் சித்தரிப்பது தமிழ்த் திரையில் ஆரியர்கள் செய்த மிக மோசச் செயல். தமிழ்த் திரைப்படங்கள் உண்மையான தமிழர்களின் வாழ்வியல் நடைமுறையினை யதார்த்தமான முறையில் சொல்ல வேண்டுமே அல்லாமல் அழகிய காதலர்களின் கதைபோல் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ரஜினிகாந்த் போன்ற நடிகர்களை 'சூப்பர்ஸ்டார்' எனச் சொல்வது அவர் சந்திரனில் காலை வைத்தவரென்பதற்காகவா அல்லது உலகத்தினை அவர் கையில் வைத்து ஆளுகின்றார் என்பதற்காகவா. தமிழர்களது சிறந்த பண்பாட்டு விழுமியங்களை சீரழிக்கும் இன்றைய தமிழ்ததிரைப்ப்டங்களினால் அதனை விரும்பிப் பார்க்கும் இளம் சமுதாயம் பைத்தியக்காரர்களாக மாற்றப்படுகின்றார். தமிழ்த் திரைப்படங்களினைப் பார்த்த வெளிநாடுவாழ் ஈழத்துத் தமிழ் இளையோர் தங்களுக்குள் மோதி தமிழர்களது நற்பெயர்களைக் கெடுக்கின்றனர். தமிழ்த் திரைப்படங்களில் பண்டைய தமிழர் வரலாற்று விழுமியங்களைத் தாங்கி வரும் திரைக்கதைகள் வரவேண்டும், இன்றைய யாதார்த்த நிலைகளை தமிழ்த் திரைப்படம் மூலம் உலகினிற்குச் சொல்ல வேண்டும். ஆரிய மயப்படுத்தப்பட்ட பாடல்கள் அறவே தவிர்க்கப்பட வேண்டும். வெள்ளை நிறத் தோற்றம் கொண்ட ஆரியர்கள் அல்லாதோர் நடிகர்களாக நடிக்க வேண்டும். இந்தியத் திரைப்படங்களிலிருந்து பிரித்து தமிழர்களுக்கென்று ஒரு தனித் திரைப்பட யுக்தியினைப் பாடல்கள் அற்ற மசாலாக் கலவைகளற்ற (நகைச்சுவை, சண்டைக்காட்சி) ஒரு சிறப்பான திரைப்படத் துறையினை ஆரம்பித்து வைக்க வேண்டும். தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலான கதாநாயகிகள் அழகிய தோற்றம் கொண்டவர்களாக உள்ளனர். இதனால் அழகில்லாத கருமை நிறப் பெண்களிற்கு மனதில்லை என்பது போல் இந்த இந்திய- ஜரோப்பியர்களின் வழித்தோன்றல்கள் உருவாக்கியுள்ளது மனதிற்கு மிகவும் வேதனை அளிப்பதாகவுள்ளது.

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2008

தினம் ஒரு பாடல்


காதல் என்ன - அவள் வருவாளா

இப்பாடலினைப் பார்க்கும் பொழுது எனக்கு சொர்க்கத்திற்குச் செல்வது போலவும் எனது கனவுகள் நினைவாகி நேரில் பார்ப்பது போலவும் உள்ளது.

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2008

தினம் ஒரு பாடல்

எங்கு பிறந்தது - விஷ்வதுளசி

ஒரு மெல்லிசைப்பாடல் கேட்பவரை மயக்க வைக்கும் பாடல்.

தினக்கருத்து

மூவுலகும் தமிழரும்

இராமாயணம் எழுதப்பட்டது கி. மு. 750 முதல் 500 வரையிலான காலப்பகுதியில் வாய் வழியே பரப்பப்பட்டது. இப்புராணக்கதையில் வரும் முக்கிய கதாபாத்திரமான இராவணன் ஒரு இலங்கைத் தமிழனாக இருக்கக்கூடும் . இதன்மூலம் அன்றைய காலகட்டங்களில் இலங்கையில் மாய தந்திரம் வாய்ந்த மக்கள் இருந்திருக்க வாய்புண்டு. இராவணன் மூவலகினையும் ஆண்டவன் என்றொரு கருத்துண்டு. அதே போலவே தமிழனான வீரப்பன் மூன்று மாநிலங்களான கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளின் மக்களைப் பயமுறுத்தியிருக்கின்றான். அசுரர்களாகக் கருதப்படும் இவர்கள் உண்மையில் நல்ல காரணங்களிற்காகவே இவ்வாறு தோன்றியுள்ளனர். இவர்களிடத்து ஒரு சக்தி குறிப்பிட்ட காலப்பகுதியில் காப்பாற்றுகின்றது. வேலுப்பிள்ளை பிரபாகரனை எடுத்துக் கொண்டேமேயானால் அவரை இன்றுவரை எவராலும் அழிக்கமுடியவில்லை இராவணனைப் போலவும் வீரப்பனைப் போலவும் இலங்கை அரசாங்கம், இந்திய அமைதி காக்கும் படை, ஈழத்தின் பிற துரோகக் குழுக்கள் எனக் கருதப்படும் பலக் குழுக்களை எதிர்த்து நிற்கின்றார். இவையனைத்தும் வரலாற்றில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இவ்வுண்மைச் சம்பவங்கள் நன்கு ஆராயப்படவேண்டும் ஏதோ ஒரு சக்தி இத்தமிழர்களுக்குள் உள்ளது ஆட்டிப் படைக்கின்றது. இது எனது தனிப்பட்டக் கருத்தே !

வியாழன், 28 ஆகஸ்ட், 2008

மூளைக் கிறுக்கல்கள்

பார்வைதானோ அதனால் வந்த மோகம் தேனோ
விளைந்தது காதல் கலந்த காமப் பாலோ !





விழிகள்தானோ அதனால் வந்த கண்ணீர்த் துளியேனோ
விளைந்தது சோகம் கலந்த பாவச் செயலோ !





வார்த்தைதானோ அதனால் வந்த பேச்சுக் கனலேனோ
விளைந்தது போர் கலந்த இரத்தச் சொல்லோ !

அனைவருக்கும் வணக்கம்

உலகத்து வாழ் அனைத்து உள்ளங்களுக்கும் வணக்கம். எனது வலைப்பதிவினூடாக உங்கள் அனைவரையும் என்னுள்ளத்தினுள்ளே அழைத்துச் செல்கின்றேன். இவ்வலைப்பதிவு பல புதிய மெருகூட்டல்களுடன் உங்களை மகிழ்விக்கும், சிந்திக்கவைக்கும். இது வெறும் வலைப்பதிவு மட்டுமல்லாது எனது உலகத்தின் உண்மைப்பதிவு.

பதிலளியுங்களேன் !