புதன், 15 அக்டோபர், 2008

தினக்கருத்து

இன்றைய தமிழ்த் திரைப்படங்களும் வெளிநாடுவாழ் ஈழத்துத் தமிழ் இளைஞர்களும்.......

இன்றைய கால கட்டங்களில் வெளிவரும் தமிழ்த் திரைப்படங்கள் படிப்பறிவில்லாத உலகத் திரைப்படங்கள் எடுக்கப்படும் விதங்கள் போன்றனவற்றை அறியாதவர்களாலும் சாதி சமயங்களில் ஊறிப்போனவர்களாலும் பண்பாடுகளில் வேரூன்றிப் போனவர்களாலும் எடுக்கப்படுகின்றது. சிலர் வியாபார நோக்கத்திற்காகவே திரைப்படம் எடுக்க வருகின்றனர் சிலர் மசாலாவை அரைக்க வருகின்றனர். சில படித்த இளைஞர்கள் நல்ல திரைப்படங்களைக் கொடுக்க முடிகின்றது. பலர் இந்திய உணர்வு மிக்கவர்களாகவும் தமிழ்ப்பற்று அல்லாமலும் வட இந்திய ஆரியர்களின் புராணமயப்படுத்த பாடல்கள் கொண்ட மசாலாவையே இன்றும் இந்தியன் என்ற ஒரு காரணத்திற்காக அரைக்கிறனர். ஆனாலும் இன்றைய தமிழ்த் திரைப்படங்கள் ஒரு மனிதனை மிருகமாக மாற்றிக்கொண்டிருப்பது மிகப் பொருந்திய உண்மை. திரைப்படப் பாடல்கள் சிறந்தனவே ஆனாலும் இயக்குனர்கள் தமிழர்களாக இருப்பதனால் மானப்பிரச்சனைக்காக அடிதடித் திரைப்படங்களையே பெருதும் கொடுப்பது தமிழர்களின் உண்மையான பண்பாட்டுக்களினை அழிப்பதாகவும், தமிழர்களுக்குள்ளேயே அடி தடிகளை உருவாக்குவதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வகைத் காதற் திரைப்படங்களினால் பல வெளிநாடுவாழ் ஈழத்துத் தமிழ் இளைஞர்கள் மிருகங்களாக வீதிகளில் சண்டையிடும் அளவிற்குக் கேவலமான நிலைக்க்குத் தள்ளுகின்றது இன்றைய தமிழ்த் திரைப்படங்கள். இலண்டன், கனடா போன்ற பல இடங்களில் இவ்வாறு நிகழ்வுகள் ஏற்படுவதற்குத் தமிழ்த் திரைப்படங்களும் அதன் இயக்குனர்களும் காரணம் என்பது முற்ற்றிலும் உண்மை. இவை எனது தனிப்பட்டக்கருத்தே!

பதிலளியுங்களேன் !