செவ்வாய், 24 மே, 2011

கேள்விப்பட்ட செய்திகள்


நிமலன் கொலை..

நான் அம்மம்மாவுடன் உரையாடிக்கொண்டிருக்கையில் அம்மம்மா லயந்தன் என்ற எமக்குச் சொந்தக்காரரான பெடியனின் குடும்பத்தினைப் பற்றிப் உரையாடத்தொடங்கினார். நானும் ஆவலுடன் கேட்டேன், இவ்வுரையாடல் மே, 24, 2011 செய்வ்வாய்க்கிழமை மதிய வேளை அளவில் இடம்பெற்றது. அம்மம்மா கூறினார் "லயந்தனின் தமயனான நிமலன் இயக்கத்தில் இருந்தவர், அவரை இயக்கத்திலிருந்து தெரியாமல் அவரது தாயார் கூட்டி வர, வீடு தேடி வந்த இயக்கம் நிமலன் மற்றும் அவரது தாயார் ஆகிய இருவரையும் துவக்கால் சுட்டது, சுடப்பட்ட இருவரும் மருத்துவமனைக்குச் சென்ற பின்னர் இறந்தனர் என அம்மம்மா தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் அம்மம்மா கூறிகையில் " தனது தமக்கையார் பிரபாகரனுக்கு உணவுப் பொருட்கள் பலவனவற்றினைக் கொடுத்தது. இருப்பினும் பிரபாகரன் இவ்வாறு தெரிந்தவர்களை ஏன் சுட்டது எனக் கேட்ட போது, பிரபாகரன் தனக்குத் தெரியாமல் போச்சு எனத் தெரிவித்தது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இச்சம்ப்பவம் என்று நடந்தது என நான் எனது அம்மம்மாவிடன் ஆராய்ந்துகேட்டபோது அவர் சரியாகத் தனக்குத் தெரியாது எனக் கூறினார், எவ்வாறு இயக்கம் தான் சுட்டது என உங்களுக்குத் தெரியும் எனக் கேட்டபோது அவர் சொன்னார், ஆமிக்காரர்களின் சீருடையினை அணிந்து கொண்டு வந்த இயக்கத்தினை நிமலன் அடையாளம் கண்டதாகவும் ஆனாலும் சுட்டவுடன் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்கையில் நிமலன் இறந்ததாகவும் தெரிவித்தார். இருப்பினும் நிமலன் சுட்டவுடன் இறந்தது உண்மை இது இவ்வாறிருக்க எவ்வாறு நிமலன் இயக்கம்தான் சுட்டது என பிறருக்குத் தெரிவித்தார் எனக் கேட்க அம்மம்மா சற்றுக் கோபித்துக் கொண்டார். நானும் பதில் தெரியாமலேயே இருந்துவிட்டேன். 

வெள்ளி, 20 மே, 2011

கனவுகள்

வால் நட்சத்திரங்களின் படையெடுப்பு.....
இன்று காலை அம்மா வேலைக்குச் செல்லும் போது எழுந்து பின்னர் சற்று சிறிய நித்திரை ஒன்றினை அடித்தேன், அப்போது நான் ஒரு பள்ளி வளாகத்தில் இருந்துகொண்டிருப்பது போன்ற தோற்றம் அங்கு நான் யாருடனோ உரையாடிக்கொண்டிருக்கையில் திடீரென ஒரு வால் நட்சத்திரம் வந்து எமக்கு அருகில் வீழ்ந்து வெடித்துச் சிதறியது, நாம் அனைவரும் ஓட்டம் எடுத்தோம். நானும் ஓடி ஓடிச் சென்று உடைந்த பாலம் ஒன்றினைத் தாண்டிச் சென்றேன், பாலத்தைத் தாண்டிச் சென்றவுடன் ஒரு சிறிய கிராமம் போன்ற தோற்றம் கொண்ட இடத்தினை அடைந்தேன். 

திங்கள், 2 மே, 2011

கனவுகள்

பவாக்காவுடனான சண்டை...
நானும் அம்மாவும் பவாக்காவால் பேசப்பட்டு ஒரு தனி அறையினில் விடப்படுகின்றோம், அங்கிருந்து நான் அருகில் அமைந்திருந்து லாட்ஜ் போன்ற அறைக்குள் சென்று பார்க்க ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. அங்கு ஒரு பாட்டியும் அமர்ந்திருந்தார். நானும் அங்கு சென்ற பின் எனது அறையினுள் வந்து வானொலிப்பெட்டியினைப் போட்டுப் பார்த்தேன்.

ஞாயிறு, 1 மே, 2011

கனவுகள்

கணணி அறையினுளும் இனத்துவேசம்....
நான் இன்று காலை ஒரு கனவு கண்டேன் அக்கனவினில் நான் ஒரு கணணி அறையினில் அமர்ந்து கொண்டு ஏதோ பாட சம்பந்தமான விடயங்களினைச் செய்துகொண்டிருந்தேன். எனக்கு அருகினில் ஒரு கறுப்பினத்தவன் போன்றவன் எந்னை வேலை செய்யவிடாது எனது கணணியினில் வந்து தான் அமர்ந்து சேட்டை செய்வது போல ஏதோ செய்துகொண்டிருந்தான். நானும் அவனைப் பார்த்துச் சற்றுப் பயந்து தள்ளி வந்துவிட்டேன்.

பதிலளியுங்களேன் !