வெள்ளி, 9 செப்டம்பர், 2011

கேள்விப்பட்ட செய்திகள்


வேலுப்பிள்ளை அண்ணையின் மரணம்..
அம்மம்மாவின் கடையினை நடத்தியவரும் எனக்கு சிறுவயதிலே பார்த்த முகமுமான வேலுப்பிள்ளை அண்ணை இறந்த செய்தியினை அம்மம்மா கூறக் கேட்டதும் மனதிற்குச் சற்று வருத்தமாக இருந்தது. அவர் எனக்குப் பலமுறை தொலைபேசியில் இங்கு கனடாவிற்கு எடுத்து என்னுடன் உரையாடினார் என்பது இங்கு சொல்லத்தகும். நானும் எவ்வாறு அவர் மரணமெய்தினார் என்பதனை அறிந்த போது மிகவும் வேதனைக்குரிய ஒரு வடுவாக எனக்கு ஏற்பட்டது உண்மைச்செய்தியினை அம்மம்மா வாயின்மூலமாகக் கேட்டபின்பு. அம்மம்மா கூறினார் வன்னியில் 2009 ஆம் ஆண்டு போர் நடைபெற்ற சமயம் அதாவது ஈழத்தின் இறுதிப்போரும் தமிழின அழிப்பின் உச்சகட்ட நிலையுமான போரின் போது சிங்கள இன வெறி இராணுவத்தினரால் வேலுப்பிள்ளை அண்ணையும் அவரின் மகனும் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு வேலுப்பிள்ளை அண்ணை படுகொலை செய்யப்பட்டதனைப் பார்த்ததாகச் சொல்லும் அம்மம்மா அதனைப்பார்த்த அவர் மனைவி பைத்தியம் போன்று ஆனார் என்பதனையும் தெரிவித்தது இங்கு படு வேதனை கொடுக்கும் செயலாக உள்ளது. அவர்தம் இன்னொரு பிள்ளையுடன் இருப்பதாக அம்மம்மா வேதனியுடன் தெரிவித்தார். 

பதிலளியுங்களேன் !