ஞாயிறு, 28 செப்டம்பர், 2008

மூளைக் கிறுக்கல்கள்

அழகென்ன மயிலிறகென்ன காமத்தின் மயக்கம் வரைக்கும் தானேயென்பேன்!
மனதென்ன மொழியழகென்ன வாழ்வின் இறுதி வரைக்கும் தானேயென்பேன்!

விழியென்ன விண்ணோக்கும் பார்வையென்ன அரசகுல மனிதனென்பேன்!
கவியென்ன மெய்ப்பொருள் விளங்கும் ஞானமென்ன அவன் தெய்வமென்பேன்!

வாழ்வென்ன மனதின் மோகமென்ன இறுதி இறப்பென்பேன்!
வாழ்ந்தவன் அவன் வாழ்வு கவியினால் மூழ்கியவன் வாழ்பவன் என்பேன்!


கேள்விப்பட்ட செய்திகள்

கனடாவில் இந்தியத் தமிழ்ப் பெண்ணொருவர்.................................

நான் தற்சமயம் குலோபல் வூட் தொழிற்சாலையில் பணிபுரிகின்றேன். பணிபுரியும் தொழிற்சாலையில் பல தமிழர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுள் ஒருவர் வழமையாக நான் பணிமுடிந்து செல்லும் பொழுது தனது ஊர்தியில் என்னை அழத்து வருவார் அவர் ஒரு இலங்கைத் தமிழரே என்னைப் போல அவர் கூறினார் தனது நண்பன் ஒருவன் கனடாவின் தலைநகரான டொறொன்ரோவின் டவுண்டவுன் பகுதியினுள் சென்ற போது இந்தியத் தமிழில் உரையாடும் பெண்ணொருவர் தன்னை அணுகியதாகவும் பின்னர் தனக்குப் பிடித்த போதைப்பொருளைக் கொண்டுவந்து சேர்த்தால் அவருடன் உடலுறவு வைத்துக் கொள்வதற்கு அனுமதிப்பதாகவும் கூறியதாக தனது நண்பர் கூறினார் என என்னை அழைத்து செல்லும் நபர் என்னிடம் கூறினார். மேலும் அப்பெண் மிகவும் அழகிய தோற்றம் கொண்டவர் என்பதனையும், தலையினில் பொட்டு வைத்திருந்தார் எனவும் என்னிடம் கூறினார். நான் நினைக்கின்றேன் அழகிய தோற்றம் கொண்ட பெரும்பாலான தமிழ்ப் பெண்கள் உயர்சாதியினைச் சேர்ந்தவர்களாகவும் ஆரியத்தமிழ்க் கலப்பினால் உருவாகியிருக்கலாம் எனவும் நினைக்கின்றேன். இது நான் கேள்விப்பட்ட செய்தியே உண்மையா என்பதை நான் கண்கூடாகக் காணவில்லை. பெரும்பாலான இலங்கைத் தமிழில் உரையாடும் தமிழ்ப் பெண்கள் கனடாவில் உளனர். அவர்கள் உரையாடுவது பெரும்பாலும் இந்தியத் தமிழ்தான் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

தினக்கருத்து

இந்தியத் திரைப்படத்துறையும் வெளிநாடுகளின் திரைப்படத்துறையும்.

இந்தியத் திரைப்பட இயக்குனர்கள் மிகப்பெரும் புத்திசாலிகள் ஏனெனில் வரலாற்றினை எவருக்கும் தெரியாதவாறு மசாலாக் கலவைகளுடன் அதாவது பாட்டு, நடனம், நகைச்சுவை எனக் கலந்து இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலே உள்ள திரைப்படத்தினுள் புகுத்துவது அவர்களின் சாமர்த்தியம். வெளிநாட்டு இயக்குநர்கள் பெரும்பாலும் தமது கற்பனைகளைப் பல கோடிகள் செலவு செய்து திரைப்படத்தினை ஆகக்குறைந்த மணிநேரங்களில் எடுப்பது சிறிது வேடிக்கை.

வெளிநாட்டினர் பெரும்பாலான திரைப்படங்கள் ஒரே இனத்தவரைக் கவராமல் சிறுவர்களுக்கெனத் தனியே திரைப்படங்களையும் பெரியவர்களுக்கெனத் தனியே திரைப்படங்களையும் எடுப்பது சிறந்த முறையே ஆனால் இவற்றால் ஒரு குடும்பமாக வெளிநாட்டினரின் அனைத்துத் திரைப்படங்களினையும் பார்க்க முடியாது. குறிப்பாக ஓரினைச்சேர்க்கைத் திரைப்படங்கள் இந்திய மசாலாக் கலவைத் திரைப்படங்களில் பார்க்க இயலாது அதாவது மசாலாக்கலவைகளான பாடல்கள், அதிரடிக்காட்சிகள் என நிறந்த திரைப்படங்களையே குடும்பமாக அமர்ந்து பார்க்கின்றனர் பெரும்பாலான இந்தியர்கள். இதனால் குடும்பத்தினுள் ஏற்படும் பிரிவினைகள் தடுக்கப்படுகின்றன.


இந்தியத் திரைப்படத்துறையில் பல நல்ல திரைப்படங்கள் உளன எடுத்துக்காட்டாக கலைத் திரைப்படங்களான பதேர் பாஞ்சாலி, அபுர் சன்சார், அபரஜிதோ ஆகிய திரைப்படங்கள் சிறப்பானவை மனிதருள் மாற்றத்தினை ஏற்படுத்தும் ஆனால் இன்றைய இந்தியத் திரைப்படங்கள் கலைநயமே இல்லாது மனிதர்களை மிருகமாக மாற்றும் நோக்கில் இந்தியப் பண்பாட்டினைச் சீரழிக்கும் வகையில் மேற்கத்தேயப் பண்பாடுகளினைப் பின்பற்றுகின்ற திரைப்படங்களாக வெளிவருவது மிக வேதனை அழிப்பதாகவுள்ளது வரலாறுகளே இவையாவின் இவற்றைப் பார்த்து அதன்படி வரலாற்றினுள் வாழ நினைப்பவர் பலர். அதனால் சமூகத்தில் ஏற்படும் இழப்பு பாரியது. பல கொலைகாரர்கள் உருவாக்கப்படுகின்றனர். இந்தியத் திரைப்படத்துறையினரும் பணம் புரட்டும் நோக்குடன் இங்கு வருவது மனதிற்கு மிகவும் வேதனை அளிப்பதாகவும் ஒரு குத்துப்பாட்டு ஒரு சண்டைக்காட்சி என்ற அரத்த மசாலாவையே அரைப்பதும் மேற்கத்தேயத் திரைப்படங்களினை நகல் எடுப்பதும் எமது பண்பாடுகள் பாரம்பரியங்கள் என்பனவற்றை சீரழிக்கும் நோக்குடனே என்பது பொருந்தும்.

இவைகள் அனைத்தும் எனது தனிப்பட்டக் கருத்தே.

பதிலளியுங்களேன் !