ஞாயிறு, 13 நவம்பர், 2011

அனுபவம் புதிது



சம்பள உயர்வினை வேண்டிய போராட்டம்..
நான் கால்கில் படிக்கச் சென்றதொரு காலம், பள்ளியினை விட்டு வந்தேனே அல்லது பள்ளியில் சேரச் சென்ற காலமோ சரியாகத் தெரியவில்லை, ஆனாலும் அது ஒரு கோடை காலமென்பதுமட்டும் எனக்குச் சரியாகத் தெரிந்த உண்மை, அப்பொழுது நான் புரோட்வியூ நிலையத்தில் ஏறாது நடந்து சென்று எனது பள்ளிக்கருகாமையில் அமைந்திருந்த பள்ளிவாசலினைத் தாண்டிய தெருக்களினூடே நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது கறுப்பினத்தினைச் சேர்ந்த பெண்ணொருவரும் மற்றும் சிலரும் சம்பள உயர்வினை வேண்டிப் போராட்டம் நடத்தினர். நானும் என்ன ஏது என விசாரித்தபின்னர் தெரிந்துகொண்டேன் அவர்கள் வேலை செய்வது சைள்ட்கேர் செண்டர்  என, மேலும் அவர்களுக்குச் சம்பள உயர்வு பல காலங்களாக இல்லாதது வேடிக்கை அளிக்கின்றது. சம்பளத்தினை வெள்ளையர் அதிகமாக எடுக்கின்றனர் என நான் எண்ணுகின்றேன். கனடாவில் வெள்ளையர் அதிகமாகச் சம்பளம் எடுப்பது மிகவும் சுட்டிக்காட்டத்தக்க விடயம். இதனைப் பலர் கூறியும் பல செய்திகளில் படித்தும் தெரிந்து கொண்ட உண்மை. நான் கண்ட போரட்டத்தில் போஸ்டர்கள் வைத்துக்கொண்டு நின்றவர்களில் பெரும்பான்மையினர் கறுப்பினத்தவரும், இந்தியப் பெண்மணிகள் போன்ற தோற்றத்தினைக் கொண்டவருமே என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இவ்வாறு பொதுமக்கள் அமைதியாகப் போஸ்டர் வைத்துப் போரட்டம் நடத்தியதினை முதன்முறையாக என் கண் முன்னே பார்த்தது இச்சம்பவத்தினையே.

தினம் ஒரு பாடல்

வாடி வாடி - சச்சின்
இப்பாடல் எவ்வயதினரையும் துள்ள வைக்கும் பாடல்.

பதிலளியுங்களேன் !