புதன், 19 ஜனவரி, 2011

அனுபவம் புதிது

 முதல் வாகன விபத்து.......

நேற்று செவ்வாய்க்கிழமை, ஜனவரி 18, மாலை 6 மணியளவில் தமிழ் என்னை 'ஆடுகளம்' படம் பார்க்கப் போறோம் வாறியா ? எனக் கேட்டான். நானும் "சரி, வாறேன்" என்றேன். நானும் குளித்து வெளிக்கிட்டு 6 மணிக்கெல்லாம் கீழே இறங்கிப் போய்ப் பார்க்க தமிழைக் காணவில்லை, பின்னர் மேலே வந்து நிரூபனைத் தொலைபேசியில் அழைத்து "ஏண்டா தமிழ் இன்னும் வரேல்ல ?" எனக் கேட்டேன். அதற்கு அவன் " நீ கீழ இறங்கிப் போ, அவன் வந்து கொண்டிருக்கின்றான் !" என்றான். நானும் திரும்பக் கேழே இறங்கிப் போக தமிழும் தமிழின் மாமாவும் நிரூபனின் சிவத்தக் காரில் வந்திருந்தனர், நிரூபன் வந்திருக்கவில்லை. சரி எனக் கூறி நான் காரினில் பின் பக்கம் அமர்ந்துகொண்டேன், தமிழ் வாகனத்திநை எடுக்கும்போதே ஏதோ சத்தம் கேட்டது. நான் ஆரம்பித்திலேயே பயந்துவிட்டேன். ஆனாலும் தமிழ் வாகனத்தினை ஓட்டிக்கொண்டு லாரென்சு அவனியூ மற்றும் ஓர்ட்டன் பார்க் வீதியினூடே காரினைத் திருப்பி ஓர்ட்டன் பார்க் வீதியில் சென்று கொண்டிருந்த வேளை இரண்டு பெண்கள் சில்வர் நிற ஃபோர்ட் காரில் வந்து நாம் செல்லும் வழியின் குறுக்கே நின்றார்கள், அமது காரும் அவர்களது காரில் மோதி எமது காரிற்குப் பலத்த அடி. சற்று நேரம் தமிழ் மற்றும் தமிழின் மாமாவிடமிருந்து மூச்சைக் கூடக் கேட்கமுடியவில்லை, நானும் பயந்து போய் கார் புகைக்கின்றது எல்லாரும் வெளியில் வாங்கோ! எனக் கூறி வெளியில் இருந்தோம். காவல்துறையினருக்கு தொலைபேசியில் இரண்டு பெண்களும் அடித்துவிட்டநர், காவல்துறை அதிகாரி ஒருவர் வந்து பார்த்து report எழுதிப் பின்னர் சற்று நேரம் கேள்விகள் கேட்டு, தமிழ் கண்ணாடி போடாது வாகனத்திநை ஓட்டியதற்கு 110 டாலர்களிற்கு டிக்கட் கொடுத்த இரண்டு பெண்களுக்கு மூன்று டிக்கட்டுக்களினைக் கொடுத்தும் மாமா எம்மை அனுப்பி வைத்தார். இதுவே எனது வாழ்நாளில் நான் பார்த்த அனுபவித்த முதல் விபத்து ஆகும்.

பதிலளியுங்களேன் !