புதன், 1 அக்டோபர், 2008

கேள்விப்பட்ட செய்திகள்

ஜரோப்பிய நாடுகளிடையே மாறுவதற்கு எத்தனித்த ஈழத்துத் தமிழர்கள்.....................................

கனடாவில் நானும் எனது தாயார் மற்றும் எனது அண்ணன் ஆகியோர் ஒரு அறை கொண்ட வாடகை விடுதியில் தங்கிவந்தவேளை என்னால் சீராகப் பாடசாலைக்குச் செல்ல இயலவில்லை, சீராக வேலைகள் செய்ய இயலவில்லை ஒரே படுத்த படுக்கை. இதனனப் பார்த்துப் பயந்துபோன எனது தாயார் ஒரு ஜயரை அழைத்து எனக்கு ஏற்பட்டவைகளை எடுத்துரைத்தார். எனது தாயாருடன் வேலை செய்து வந்த பெண்ணின் கண்வனே எனக்கு பூஜை செய்த ஜயர் ஆவார். அவர் பூஜை செய்த பின் அவர் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெறச் சொன்னார். தேசிக்காய் மற்றும் திருநீறுகள் போன்றனவற்றால் இப்பூசை நடைபெற்றது. பூஜையின் பின்னர் ஜயர் என்னுடன் உரையாடுகையில் கூறினார் ஈழத்துத் தமிழ் மக்கள் சிலர் ஜேர்மனியில் இருந்து சுவிட்சர்லாந்திற்கோ சுவிட்சர்லாந்தில் இருந்து ஜேர்மனிக்கோ என்பது உறிதியாகச் சொல்ல இயலாது. ஆனால் களவாகச் செல்ல எத்தனித்து மண் அரைக்கும் இயந்திர ஊர்தியில் சென்றதாகவும் கூறினார்.அவர்கள் செல்லும் பொழுது இடையில் வழி மறித்த காவற்துறையினரால் அவ்வியந்திரம் போட்டுப் பார்க்கப்பட்டதாகவும் அதற்குள் பயணித்த ஏறத்தாழ இருபது முதல் முப்பது வரையிலான ஈழத்துத் தமிழர்கள் கொல்லப்பட்டனர் எனவும் கூறினார் ஜயர். இச்செய்தியினை அந்தணர் ஜயா என் வீட்டிற்கு சன் தொலைக்காட்சியினைப் போட வந்த சமயம் கூறினார் அதாவது டிசம்பர் 10 முதல் டிசம்பர் 25 வரை இருக்கும் . அவர் கூறக்கேட்ட இச்செய்தி உண்மை என்பதனை என்னால் கூற இயலாது.

பதிலளியுங்களேன் !