ஞாயிறு, 5 மார்ச், 2017

கேள்விப்பட்ட செய்திகள்

மயக்க ஊசி ஏற்றப்படட பிரபாகரன்.....
5/14/2015 அன்று வான் கூல் மாஸ்டர் தொழிற்சாலைக்கு வேலை நிமிர்த்தம் சென்றிருந்தேன். அங்கு தமிழர்களே பெரும்பாலும் வேலை செய்துகொண்டிருந்தனர். அதனை நடத்துபவரும் ஒரு தமிழரே !. 1.30 மதிய வேளை இருக்கும். ஒரு சற்று வயது முதிர்ந்தவர், பிரபாகரனுக்கு மயக்கு ஊசி போட்டு வேறொரு இடத்திற்கு அனுப்பப்பட்டதென கூறி உரையாடினார். நான் கூறினேன் செய்தியில் படித்தேன் அவர் இறந்து விட்டாரெனவும் மேலும் டி. என். ஏ பரிசோதனை செய்து அவரது உடலை உறுதி செய்துகொண்டனரெனவும் சொன்னேன். ஒரு வாலிபர் ஷாருக் கொதித்து. "இல்லை அவர் சாவேலை"  எனகே கூறினார். இவையனைத்திலும் எது உண்மை என்பதனை என்னால் உறுதியாகக் கூறமுடியாது. இவையனைத்தும் பிறர் உரையாடக் கேள்விப்படட செய்திகளே அன்று நூறுவீதம் உண்மையில்லை.

தினக்கருத்து


பிற இனத்தோர்....

இன்று உலக மக்களில் பலராலும் புரிந்து கொள்ள முடியாமலும், போதிய  அளவு அறிவின்மையினாலும்  சமபால் உறவுக்காரரும் (), திருநங்கையினத்தவரும் பலதரப்படட இல்லல்களிற்கும்  ஆளாகின்றனர். இவர்களின் இவ்வாறான பிறப்பிர்க்குக்  காரணம் நிரோஜனின் அமைக்கப்பெற்ற விதியே () காரணம் அன்று வேறெதுவுமில்லை. ஒவ்வொரு மனிதரும் தாம் இப்பூமியில் அவதரிக்கும்பொழுதே உங்கள் பிறப்புக்கள், இறப்புக்கள்  அனைத்தும் எழுதப்பட்டுவிட்டது.  இவற்றிற்குக் சான்று பயிற்றுவிக்கும் ஆளாக அகத்திய மாமுனிவரின் நாடி ஜோதிடம் இருக்கின்றது. அது உண்மையாகயில்லாவிடினும் அதனோடு ஒப்பிட்டு உலக மக்களின் இவ்வாறான பிரிவினைகளை நோக்கினால் எல்லாம் உண்மையெனப் படும். இதன்மூலம் எந்தவொரு மனிதரும் பிற இனத்தவரை தாழ்த்திக்கூறியோ, பழிகூறியோ வாழாதீர்..அவ்வாறு செயவீராயின் நீர்  ஒரு வடிகட்டின முடடாள். இவை எனது தனிப்பட்டகருத்தே !... 

சனி, 4 மார்ச், 2017

தினக்கருத்து

பூமியினை விட்டு பல பூமி.....
இன்று பூமி ஒரு சிறிய கிராமமாக கணனி மூலம் வந்துள்ளது சந்தோஷம் இருப்பினும் இதனையும் தாண்டி வேறொரு எங்கோ பிரபஞ்சத்தில் இருக்கும் என்னப்போல் ஒருவர் இவ்வாறு தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்து ஒரு தாய் மொழி அழியாதிருக்க இவ்வாறு பிளாகரில் எழுதி வரலாறுகளை சேமித்து வருங்காலச்சந்ததியினர் வந்து அறிந்து கொள்வதற்கு அழகிய தமிழில் எழுதிக்கொண்டிருப்பார் என நினைக்க முடியாது ஆனாலும் வேறொரு மொழியில் கணனி போன்று வேறொரு கருவியினை வைத்து ஆராய்ச்சி செய்துகொண்டிருக்க வாய்ப்புக்கள்  அதிகமே. பில்லியன்கணக்கில் இப்பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள், பூமிகள் , கோள்கள் இருக்கும் வேளையில் அனைத்தும் சாத்தியமே. ஆனாலும் வேறொரு பூமி எம்பூமி போன்றிருந்தால் அது மிகவும் நன்றே. இன்னும் 20,000 வருடங்களிற்குப் பிறகு இதனை வந்து வாசிக்கும் வேற்றுக்கிரகவாசியும் இதனைப் படித்து எம்பூமியில் 20,000 ஆயிரம் வருடத்திற்கு முன்னர் என்னைப் போல் ஒருத்தன் பூமியில் உள்ள அனைவராலும் கிறுக்கனாக் கருதப்பட்ட நிரோஜன் என்பவர் எழுதியிதாக அறிந்து உண்மையினைத் தெரிந்து கொண்டால் அதுவும் எனக்கும், தமிழ் மொழிக்கும் பெருமையே ஏனெனில் 20,000 ஆயிரம் வருடத்திற்குப் பிறகும் தமிழ் மொழி இருந்திருந்தால் எனது பிளாகர் இருந்திருந்தால் எவ்வளவு நன்று. இவை அனைத்தும் எனது கருத்துக்களே !.

வெள்ளி, 3 மார்ச், 2017

தினக்கருத்து

ஈழத்தின் இந்நிலைமையும் அதன் காரணங்களும்.....

ஈழத்தினை நோக்கியும் அதன் பிரச்சனைகளினை நோக்கியும் பலரும் பலவாறு கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். ஈழத்தின் பிரச்சனைக்களுக்கும் இலங்கைத் தமிழர்களினை சிங்களவர்கள் கொடுமைப்படுத்தியதே முக்கிய காரணமெனவும் , பெரும்பான்மையாக வாழும் சிங்களவர்கள் அதாவது நான் வாழும் கனடா நாட்டினில் பெரும்பான்மையாக வெள்ளையினம் வாழுகின்றது அவ்வினம் சிறுபான்மையான பிற இனங்களினையும் அடக்கி ஒடுக்கி பிற இனப் பெண்களினை உயர்பதிவில் கொடுத்து அவர்களினை வப்பாட்டியாக்கிக்கொண்டு வாழ்ந்து பிற ஆண்களை அழித்துக் கொன்று குவித்து வாழுவது போன்று .(செவ்விந்திய இனமுதல் உலகின் பல இனங்களும் இவ்வாறு அழிக்கப்பெற்று சான்றுகளும் அழிக்கப்பெற்று. இன்று ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இஸ்லாமியர்கள் சர்வ சாதாரணமாக அழிக்கப்படுவதுவும் போன்று) சிங்களவர்கள் தமிழர்களை அடக்கி ஒடுக்கி வாழுவதே முக்கிய காரணமெனவும் பலரும் கூறுவர், சிலர் இவற்றிற்கு பிரபாகரன் 1983 இல் சில இலங்கை இராவணுவத்தினை கொன்றதன் பின்னரே மிகப்பெரிதாக ஆனதெனவும் ஜூலைக் கலவரமும் இதனாலேயே ஆரம்பித்ததெனவும் கருதுவர், பலர் பண்டைக்காலந்தொட்டே இருந்துவந்த தமிழர் சிங்களவர் பிரச்சனைதான் தொடர்ந்தும் இருந்து இன்று இனக்கலவரமாக வெடித்து 2009 ஆமாண்டில் இறுதிப் போரும் நடந்து பல அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களும் கொன்று குவிக்கப்பட்டதும் இவர்களிடையே இருந்துவந்த பண்டைய கால வேறுபாடுகளாகுமென  கூறுவர். என்னைப்பொறுத்தமட்டில்  இலங்கையில் ஏற்படும் அனைத்து சண்டைகள், போர்கள் யாவும் நிரோஜனின் "அமைக்கப்பெற்ற பாதை" யே (N.A.P.(t)) காரணமென அடித்து உறுதியாகக் கூற முடிகின்றது. இவ்வுலகில் நிகழும் ஒவ்வொரு மாற்றங்களிற்கும் இத்தகு விதியே காரணமென்பது எனது தனிப்பட்ட கருத்தே... 

பலகலை வல்லவன் ! பச்சோந்தி போன்று நிறம் மாறும் உன் வடிவம்
மந்தி என்று பாரம் தூக்கும் படத்தின் கதாபாத்திரம்
காந்தி அன்று கூறும் இந்தியனும் தான் நீயாம்
பாத்தி நின்று கட்டும் விருமாண்டியும் ஏன் பொய்யாகும்
சாதி ஒன்று வேண்டாம் என்றும் கூறியவுன் வாக்கும் செல்லுபடியாகும்...

யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}

புதன், 1 மார்ச், 2017

வரலாற்றிக்கு அப்பாற்படடவன் !

இவன் ஒரு மனிதனல்ல, மிருகமுமல்ல
தான் பெரு முனிவரல்ல, அப்பெருமையுமல்ல
தெருவின் மோரு ருசிக்கவல்ல, திருடமெல்ல
பெண்களின் ஜோரு இவனாளல்ல, இவனது குழலூதுவதனால்மெல்ல
வானத்தின் பேரு உனக்கல்ல, உன்னுள் ஒருத்தனுக்கென்று சொல்ல
பாரதத்தின் உட்கரு நீயல்ல, உன்னாலே பாரதம் என்றுசொல்ல

யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}

தினக்கருத்து

உலகில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் யாருமில்லை...
இன்று நாம் வாழ்கின்ற பூமியில் சமுதாயம் மனிதர்களினைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்துள்ளது, தாழ்ந்த சாதி , உயர்ந்த சாதி என இந்தியாவில் இன்றும் பழக்கத்திலுள்ளது. பெரும்பாலான பெற்றோர் இவர் டாக்டர், இவர் எஞ்ஞீனியர் என தமது பிள்ளைகளை விடுத்துப் பிற பிள்ளைகளைப் புகழ்வதுவும் நீயும் ஏன் ஒரு டாக்டராக உயர்ந்த பதவியில் இல்லை எனவும் அலட்டுவதனையும் பார்த்துள்ளோம். இவ்வாறு பலரும் பல பிரிவுகளினைப் பிரித்து மனித சமுதாயத்தினைப் பிரித்துக் குட்டிச் சுவராக ஆக்கியுள்ளது நடைமுறையிலுள்ள ஒன்றே, இதற்குக் காரணம் மனிதர்கள் தமக்கென்று அமைக்கப்பெற்ற பாதையினை (Nirojan's Assigned path theory(N.A.P (t))) அறியாததன் காரணமே ஆகும். அமைக்கப்பெற்றபாதையின் படி சிலர் ஓரினச்சேர்க்கையாளர்களாகவும், சிலர் பிச்சைக்காரர்களாகவும், சில பெண்கள் விபச்சாரிகளாகவும், சிலர் பெரிய செல்வந்தர்களாகவும், சிலர் சண்டைபிடித்து மடிபவர்களாகவும் பிறக்கும்போதே தலையில் எழுதப்பட்டு விடப்படுகின்றனர்.  ஒவ்வொரு பாதையிலும் அமைக்கப்பெற்று விடப்படுவதன் காரணமே இத்தகு பிரச்சனைக்கு விடை. இவையனைத்தும் எனது கருத்தே!.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

ஆரியக் கலப்பினவன் !

சிங்கம் போன்ற கூரிய வாளை உபயோகிப்பவன்,
 தானும் மற்ற ஆரிய மக்களை போன்றேயெனயுரைத்தவன்,
மேன்மையும் பெற்ற பாரிய வடுக்களை ஏற்படுத்துவான்,
 பலரதும் குற்ற மனத்தினையுடைய  முற்களை உருவாக்கியவன்,
தெலுங்கையும் ஒற்ற வார்த்தையுடைய வேர்களை கொண்டமொழியுடையவன்..


யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}

தினக்கருத்து


தமிழ்த் திரைப்படத்துறையினை எவ்வாறு உலகமயப்படுத்துதல்....

இன்று உலகின் பல பாகங்களிலும் இருந்து தமிழில் திரைப்படங்கள் வந்தவண்ணம் உள்ளது அனைவரும் அறிந்த உண்மையே, மலேசியா, தமிழ்நாடு, இலங்கை, கனடா, எனப் பல இடங்களிலும் வாழும் தமிழ் மக்களாலும் தமிழ்த் தெரிந்த மக்களாலும் இவ்வாறு வெளிவருகின்றது. வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் தமிழகத்திலிருந்து வெளிவரும் திரைப்படப்பாணிகளுடன் ஒத்து 4, 5 பாடல்களும் ஒரு காதல் கதையினை வைத்து வருவதும் பெரிது. இவ்வாறு

- இந்தியத்திரைப்படங்கள் பெரிதும் வரும் பாடல்களுடன் நான்கைந்து சண்டை பிறகு காதலன் காதலியினைக் கைப்பிடித்தல் போன்ற அரைத்த மாவினை அரைக்காமல்
திரைப்படங்கள் வந்தால் நன்று.

- ஒவ்வொரு வருடமும் மிகப்பிரமாண்ட செலவில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கே சவால் விடும் அளவிற்கு 4,5 திரைப்படங்கள் வெளிவ்ந்தால் அது தமிழ்மக்கள் தவிர உலக மக்கள் அனைவரது இரசனையினைத் தமிழ்த் திரைப்படத்துறைக்குக் கொண்டுவரும். இதனால் அதிகளவில் இரசிகர்கள் கூடி தமிழ்த் திரைப்பட வியாபாரம் பெருகும்.

- ஒரே காதல் காதல் என அரைக்காது வித்தியாசமான வகைகளில் திரைப்படங்கள் வெளிவருவது நன்று, விஞ்ஞானம் சம்பந்தமாக, வரலாறு சம்பந்தமாக, சங்கத் தமிழ் வரலாறுகள் எனப் பல ஆராய்ச்சியின் பின் எடுக்கப்படும் திரைப்படங்கள் வரவேண்டும் மேலும் பிற பிற விடயங்களினையும் ஆராய்ந்து வெளிவந்தால் இன்னும் பல இரசிகர்களினை தமிழ்த் திரைப்படத்துறை தன் வசம் பெறும்.

- தமிழரல்லாத பிறரும் தமிழ்த் திரைப்படத்தினை விரும்பிப்பார்க்கும்வைகையில் உலகமுழுதும் விளம்பரப்படுத்துதல் வேண்டும் , உலகத் தொலைக்காட்சிகள் அனைத்திலும் விளம்பரப்படுத்தல் வேண்டும். பிற பிற இந்திய மாநிலங்கள் பிற உலக நாட்டு மக்களின் பண்பாட்டு விழுமியங்களினையும் உள்ளடக்கி வெளிவருவதும் பலரது மத்தியிலும் ஒவ்வொரு திரைப்படங்களினையும் சந்தைப்படுத்த முடியும். இக்காலகட்டத்தில் யூடியூப் இவ்வேலையினைச் செய்கின்றது உலக மக்கள் ப்லருக்கும் தமிழ் மொழியென்றால் என்ன தமிழ்த்திரைப்படங்களென்றால் என்ன என்பதனையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொண்டிருக்கின்றனர்.

- ஒவ்வொரு திரைப்படங்களிலும் புது வைகை டெக்னோலோஜியினை அறிமுகப்படுத்தி உலகில் எவரும் எடுக்காத யுக்திகளினைக் கையாளுதல் மிகவும் நன்று. ஆங்கிலத்திரைப்பட இயக்குனருக்கே சவால்விடும் அளவிற்கு திரைக்கதை இருப்பது மென்மேலும் நன்று.

- மிகப்பெரும் இயக்குனர்கள் பலர் ஒன்றிணைந்து பல சூப்பர்ஸ்டார்ஸ்களைச் சேர்த்து ஒரு மாபெரும் படைப்பினை அளித்தால் அது ஒரு மிகப்பெரும் வெற்றியினை ஈட்டித்தரும்.

- உலகின் பல பாகங்களிலும் பிரசித்த பெற்ற பெரிய சூப்பர் ஸ்டார்களினையும் அறிமுகப்படுத்தினால் மென்மேலும் தமிழ்த் திரைப்படங்கள் உலகமயமாகும் இதனால் வியாபாரம் பெருகும்.

- உலகத் தமிழ்த்  திரைப்பட விருது என ஒரு விருதினை அறிமுகம் செய்து ஆஸ்கார் விருது வழங்கும் விருது போன்று விருதுகளினை வழங்கிச்  சிறப்பித்தால் நன்றாகவிருக்கும். 


திங்கள், 27 பிப்ரவரி, 2017

to Advertise on this blogger !

Important announcement for advertisers..i am informing that this blogger does encourage ads from around the planet earth..does have more than 13,000 page views and it is still growing. I will be putting your ads in a professional manner with my new AdWords stuffs...please kindly send an email or contact me through my cellphone to place your ads..and the deals will be talked over phone directly by myself...


contact info:
Phone - 647 784 6707
E-Mail address - nirojansakthivel66@gmail.com......

பதிலளியுங்களேன் !