ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

என் கடி

வெள்ளையரின் கழுவாத குண்டியும் தென்னிந்தியர்களின் கழுவின குண்டியும்……………
தென்னிந்தியாவில் நான் இருந்த வேளை பெரும்பாலும் காலையில் மலசலம் கழித்த பிறகு குண்டியினை தண்ணீரினால் கழுவுவது வழக்கம், ஆனால் நான் வெளிநாடு வந்திறங்கிய தொடக்கம் குண்டியினைத் துடைத்துவிட்டு கையோடு குளிப்பது வழக்கமாகியும் விட்டது. இப்பாரியப் பண்பாட்டு அழிப்பில் ஏன் நான் வீழ்ந்துவிட்டேன் என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை ஆனாலும் வெள்ளைகளும் பிற இனங்களும் வாசனைத் திரவியங்களினைப் பலவாறாக உபயோகிப்பது எதற்காக என்பதன் பதில் எனக்குக் கிடைத்தது என்றால் மிகையாகது. வெளிநாடுகளில் உள்ள அனைவரும் ஏன் வாசனைத் திரவியங்களை போட்டுக் கொள்வது வழக்கம் தெரியுமா, அதற்குக் காரணம் வெளிநாடுகளில் கக்கூஸ் இருந்துவிட்டு குண்டி கழுவதற்குப் பஞ்சியில் கடதாசியினால் துடைக்கின்றனர். துடைப்பதனால் நாத்தம் வெளியில் அடிப்பதனை மறைப்பதற்காகவும் தாம் சுத்தமானவர்கள் என வெளியுலகினர்க்குத் தெரிவிப்பதற்காகவும் திரவியங்களைப் பெரும்பாலும் பூசிக்கொள்கின்றனர். இவர்களின் இந்த வெளியுலக நடிப்பினைக் காட்டிலும் திரவியங்கள் பூசாத நடிப்பற்ற தென்னிந்தியக் கலாச்சாரம் பெரிதும் சிறந்தது என்பது எனது கருத்து. இதில் குறிப்பிடத்தக்க என்னுமொறு விடயம் யாதெனில் வெளிநாட்டவர்கள் போலே வாழ நினைக்கும் பல தென்னிந்தியரும் தமது கழுவும் பாரம்பரியப் பண்பாட்டுக்களை விடுத்து துடைக்கும் பாணிக்கு மாறிக்கொண்டு வருகின்றனர் என்பதே ஆகும். பெரும்பாலான ஆசிய நாடுகளில் இவ்வாறு கழுவும் பழக்கம் இருப்பதும் அவை நாடுகள் வளர்ச்சி அடையவும், உலகமயமாக்கம் தலைதூக்கும் இக்காலகட்டத்திலும் துடைக்கும் பாணிக்குமாற நினைப்பது எள்ளி நகைக்கக் கூடிய செயல்.

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !