திங்கள், 31 மே, 2010

அனுபவம் புதிது

சவுதி அரேபியப் பெண்ணுடனான காதல்...........

2010 ஆம் ஆண்டு, பெப்ரவரி 25 ஆம் திகதியன்று வியாழக்கிழமை நான் எனது Biology வகுப்பினை City Adult Learning Centre இல் எடுத்துக்கொண்டிருந்த வேளை எனதருகில் சைகாம் (Siham) என்னும் இஸ்லாமியப் பெண் முகத்தினை மறைத்து ஆடை அணிந்து வந்து உட்கார்ந்திருந்தாள், அப்பொழுது நான் சைகாமினைப் பார்த்துக் கேட்டேன் " என்ன பெயர், எங்கிருந்து வருகிறாய், என்னைக் கல்யாணம் செய்கின்றாய என ஆங்கிலத்தில் கேட்டேன். அதற்கு அவள் தன் பெயரை 'சும்மா ஹபிப்' எனவும் தான் 'Eriteria' என்னும் பகுதியிலிருந்து வருவதாகவும் தன்னுடைய அப்பெயரால் அமைந்த Facebook முகவரியினையும் கொடுத்தாள். நானும் அவள் கொடுத்த Facebook முகவரியினைக் கொண்டு சென்று பார்த்த பொழுது George Bush இனை Shoe வினால் எறிந்த நபரப்பற்றிய Link குடனான Facebook முகவரியினைக் கொடுத்திருந்தாள் சைகாம். இவளுடன் பின்னர் பெப்ரவரி 29 முதல் உரையாட விரும்பி பலமுறை அவளருகில் சென்று உரையாட முடியாதவாறு ஏமாந்துபோனேன். இறுதியில் கொஞ்ச நாட்கள் அவளுடன் உரையாட முடிந்தது. அவள் தனக்கு கல்யாணம் பேசியிருப்பதாகவும் தனக்கு என் மீது எந்தவொரு Feeling கும் இல்லை எனவும் கூறியதும் குறிப்பிடத்தக்கது. இவள் இவ்வாறு பலமுறை கூறியும் நான் அவளை வம்புக்கு இழுத்தேன் என்பதே பொருந்தும். ஒருநாள் அவளை எனக்கு முத்தம் கொடு எனக் கேட்டு பீனர் அவளது முகத்தினை எனது கண்ணாடியினால் பார்த்து அவள் அகத்தின் அழகினை என் கைகளினால் வரைந்து காட்டி அவளிடமே தந்தேன். பல நாட்கள் கழித்து அப்படத்தினைதிரும்பத் தருமாறும் அவளது Boyfriend உடன் கதைக்குமாறும் நான் அவளைக் கேட்டு ஒரு கடிதத்தினை ஆசிரியர் பாடம் நடத்தும் பொழுது கொடுத்தேன். ஆனால் எவ்வளவு கேட்டும் கடிதத்தினை கொடுக்க மறுத்துவிட்டாள். இறுதியில் என் பெயரை அவள் அக்கடிதத்தில் பார்த்துத் தெரிந்துகொண்டிருப்பாள் என நினைக்கின்றேன். இவ்வாறு நான் வரைந்த அவளது ஓவியத்தினை அவள் கொண்டாளோ என்னவோ நான் அறியேன் ஆயினும் அவள் என்னை வாழ்நாளில் மறக்கமாட்டாள் எனவும் நம்ம்புகின்றேன். அவளைச் சந்தித்த ஒவ்வொரு நிமிடங்களினையும் அடியேனும் மறக்க மாட்டேன் என்பது உண்மை.

அனுபவம் புதிது

பறப்புண்டையாண்டி, கொட்டையாண்டி, வேசைமன்..........

நான் குலோபல் வூட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த சமயம் தாஸன் (கறுத்த, குட்டையான, குண்டன்) என்ற வேளாளப் பெடியன் என்னைப் பார்த்து சுண்ணி என சுரேஸ் என்ற என்னுடன் வேலை செய்து வந்த பெடியனிடம் கூறினான். இதனை நான் மெதுவாக என் கடைக்கண்களால் அவதானித்ததனை தாஸன் கண்டுகொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.இவர் இப்படியிருக்க நான் குலோபல் வூட் தொழிற்சாலையில் சேர்ந்த முதற் தொடக்க காலகட்டங்களில் மைக்கேல் (Jewish Manager) நான் வைத்திருந்த நீள முடியினைப் பார்த்து Tarzan ஜப் போல நான் உள்ளதாக Mohammed (Supervisor) இடம் கூறி எள்ளி நகைத்தார். அச்செய்தின்யினை முகமுது என்னிடம் கூறி என்னை Tarzan எனவும் பின்னர் தகாத வார்த்தைகளான பறப்புண்டைமோனே என நான் கற்றுக்கொடுத்த வார்த்தைகளையே உபயோகித்த என்னைக் கிண்டல் செய்து வந்தான். இவர்கள் மூவருக்கும் பாடம் கற்பிக்கவேண்டுமென்று சம்பளத்தினை கூட்டச் சொல்லி இவர்கள் மூவரிடம் வாதாடிய நாள் கழிந்து ஒருநாள் தொழிற்சாலையின் இயந்திரத்தில் மைக்கேல் கொட்டையாண்டி, முகமது பறப்புண்டையாண்டி, தாஸன் வேசைமன் என எழுது வைத்துவிட்டுச் சென்றேன். மறுநாள் காலை மைக்கேலிடம் இதனைத் தாஸன் படம்பிடித்துச்சென்று Complain குடுத்துவிட்டான், என்னை மூன்று நாட்கள் பணிநீக்கமும் செய்தார்கள். மைக்கேல் என்னை வேலையை விட்டு நீக்காமல் மூன்று நாட்கள் மட்டும் பணிநீக்கம் செய்யுமாறு சொன்னதாக யூத முதலாளி கூறினான். நானும் மனம் நொந்து என் வீடு வந்து சேர்ந்தேன் பின்னர் மூன்று நாட்கள் கழித்து தொழிற்சாலைக்குச் சென்றபொழுது சக வேலைத் தொழிலாளர்கள் என் கையைக் குழுக்கியும் "டே கொட்டையாண்டி" என தாஸ் என்னும் வேலை செய்யும் தமிழ்த் தொழிலாளரும் என்னைக் கூவி அழைத்தும் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தினக்கருத்து

தமிழகத் திரைப்பட இயக்குநர்களுக்கோர் வேண்டுகோள்.................
தமிழகத் திரைப்பட இயக்குநர்கள் அனைவரும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தம்மை அர்ப்பணித்து பல சுவையானவும், கசப்பானவுமான திரைப்படங்களினையும் எடுத்து வருவது பாராட்டுக்குரியது. மேலும் தமிழ் மொழி உலக அளவில் பிரசித்திபெறவும் அம்மொழியினை உலகில் உள்ள அனைவரும் உரையாட உபயோகிக்கும் மொழியாகவும் பரப்புதல் செய்ய உலகத்தரம் வாய்ந்த தமிழ்த் திரைப்படங்களினை இயக்குதல் அவசியம். தமிழ் மொழி ஒரு செம்மொழி, அம்மொழி பல புதிய மொழிகளைக் காட்டிலும் உயர் நிலையில் இருக்க வேண்டிய ஒரு மந்திர மொழி, ஆயினும் இத்தமிழ்மொழி உலக அளவில் இன்றும் பலராலும் அறியப்படாத மொழியாகவே உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழரின் பண்டைக்காலச் சிறப்புக்கள், Hollywood திரைப்படங்களில் வரும் வரலாறுகளிலும் சிறப்பானவை. இச்சிறப்புக்களின் தரம் குறையாமல் தமிழ்த் திரைப்படங்கள் கட்டிக் காத்தல் வேண்டும். இவ்வாறு தமிழ் மொழியினை உலகளவில் பரப்பும்வகை செய்யும் ஊடகங்களில் இலகுவாக உலக மக்களினைச் சென்றடையும் ஊடகம் திரைப்படங்கள், ஆகவே தமிழ்த் திரைப்படங்கள் ஜந்து பாடல்கள், ஒரு குத்துச்சண்டை, நகைச்சுவைக் காட்சிகள் என மசாலாவாகவே இல்லாது உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்குச் சிறப்புற எடுக்கப்படல் வேண்டும். உலகத் திரைப்படங்களுடன் போட்டி போடவேண்டும் அதுவே தமிழருக்கும், தமிழ்மொழியின் உலகளவிலான வளர்ச்சிக்கும் பெரும் உதவியாகவிருக்கும். தமிழ்த் திரைப்படங்களில் வித்தியாசமான வகைகள் வேண்டும் விஞ்ஞானத் திரைப்படங்கள், கலைத் திரைப்படங்கள், வரலாற்றுத் திரைப்படங்கள் எனப் பல பிரிவுகள், வகைகள் அவசியம். மலையாளக் கலைத் திரைப்படங்களைப் போலவும், சத்யஜித் ரே போன்றவர்களின் உன்னத படைப்புக்களைப் போலவும் பல கலைநயமுள்ள திரைப்படங்கள் எடுக்கப்படவேண்டும். சும்மாக ஒரு அழகிய ஆரியக் காதலனின் திராவிடப்பெண்ணின் மீது கொள்ளும் காதல்கதை போலவும், இல்லை ஒரு திராவிடக் காதலன் அழகிய ஆரியப் பெண்ணுடன் காதல் கொள்வதும் போலான காதல் கதைகளினை  திரும்பத் திரும்ப அரைத்துக் கொண்டிருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை. இதற்காகத் தமிழ்த் திரைப்பட உலகம் முயற்சிகளினை எடுக்கவில்லை என ஒட்டுமொத்தமாகக் கூறிவிட இயலாது. பல புதிய நோக்குகள் தமிழ்த் திரைபபடங்களில் வருவது குறிப்பிடத்தக்கது. அவை இன்னும் பிற மொழி இனத்தாரும் பிற திரைப்படக் கலைஞர்களும் பாராட்டும் வகையில் இருத்தல் மிக மிக அவசியம்.

பதிலளியுங்களேன் !