வெள்ளி, 29 ஆகஸ்ட், 2008

தினம் ஒரு பாடல்

எங்கு பிறந்தது - விஷ்வதுளசி

ஒரு மெல்லிசைப்பாடல் கேட்பவரை மயக்க வைக்கும் பாடல்.

தினக்கருத்து

மூவுலகும் தமிழரும்

இராமாயணம் எழுதப்பட்டது கி. மு. 750 முதல் 500 வரையிலான காலப்பகுதியில் வாய் வழியே பரப்பப்பட்டது. இப்புராணக்கதையில் வரும் முக்கிய கதாபாத்திரமான இராவணன் ஒரு இலங்கைத் தமிழனாக இருக்கக்கூடும் . இதன்மூலம் அன்றைய காலகட்டங்களில் இலங்கையில் மாய தந்திரம் வாய்ந்த மக்கள் இருந்திருக்க வாய்புண்டு. இராவணன் மூவலகினையும் ஆண்டவன் என்றொரு கருத்துண்டு. அதே போலவே தமிழனான வீரப்பன் மூன்று மாநிலங்களான கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளின் மக்களைப் பயமுறுத்தியிருக்கின்றான். அசுரர்களாகக் கருதப்படும் இவர்கள் உண்மையில் நல்ல காரணங்களிற்காகவே இவ்வாறு தோன்றியுள்ளனர். இவர்களிடத்து ஒரு சக்தி குறிப்பிட்ட காலப்பகுதியில் காப்பாற்றுகின்றது. வேலுப்பிள்ளை பிரபாகரனை எடுத்துக் கொண்டேமேயானால் அவரை இன்றுவரை எவராலும் அழிக்கமுடியவில்லை இராவணனைப் போலவும் வீரப்பனைப் போலவும் இலங்கை அரசாங்கம், இந்திய அமைதி காக்கும் படை, ஈழத்தின் பிற துரோகக் குழுக்கள் எனக் கருதப்படும் பலக் குழுக்களை எதிர்த்து நிற்கின்றார். இவையனைத்தும் வரலாற்றில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இவ்வுண்மைச் சம்பவங்கள் நன்கு ஆராயப்படவேண்டும் ஏதோ ஒரு சக்தி இத்தமிழர்களுக்குள் உள்ளது ஆட்டிப் படைக்கின்றது. இது எனது தனிப்பட்டக் கருத்தே !

பதிலளியுங்களேன் !