சனி, 6 ஜூன், 2009

என் கடி

பாட்டி வடை சுட்டு காகம் ஏமாந்த கதை..............

ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தார், அச்சமயம் அங்கு வந்த ஒரு காகம் ஒரு வடையினைத் துஉக்கிக்கொண்டு ஓடியது. ஓடிய காகம் வடையினை வைத்துக்கொண்டு ஒரு மர உச்சியின் மீது அமர்ந்துகொண்டது. இவ்வாறு அமர்ந்துகொண்டு காகம் தான் திருடிய வடையினைத் தின்பதற்கு ஆயத்தமான வேளை அங்கு ஒரு நரி வந்தது. நரி காகத்திடம் இருந்து எப்படியாவது வடையினைப் பறிக்க வேணும் எனத திட்டம் தீட்டியது. தனது திட்டத்தின்படியே காகத்தினைப் பார்த்து ஒரு நடனம் ஆடியது. தனது வாயினில் வடையினை வைத்திருந்த காகம் நரிகளின் யுக்திகளினால் தனது தலைமுறையினர் பலமுறை ஏமாந்த கதைகளினை நினைத்துப் பார்க்கின்றது. ஆகையால் வடையினை தான் இருந்த மரக்கிளையில் வைத்து விட்டு நரி ஆடியது போன்று நடனத்தினை ஆடியது. இதனால் ஏமாற்றம் அடைந்த நரி அழாகாக ஒரு பாட்டுப் பாடியது. காகம் தனது மூதாதையர் ஏமாந்ததை நினைவுகூர்ந்து வாயில் வைக்க வேண்டிய வடையினை மரக்கிளையில் வைத்துவிட்டு உல்லாசமாக நரியினைப் போன்று பாட்டுப் பாடியது. இதனைப் பார்த்து வெறுப்படைந்த நரியும் இறுதியாக ஒரு குசுவினை விட்டது. இதைப் பார்த்த காகம் "ஆஹா இப்படி எனது முன்னோரிடம் நரிகள் செய்ததாகக் கேள்விப்படவில்லையே!" எனக் கூறிக்கொண்டே வடையினைத் தனது வாயில் வைத்துக் கொண்டு தானே ஒரு குசுவினை விட்டது. தனது குசு நாத்தத்தினால் மயங்கி மரத்திலிருந்து வீழ்ந்தது, காகம் தன் வாயினில் வைத்திருந்த வடையும் விழுந்தது கீழே!. நரி இதுதான் சந்தர்ப்பம் என்று கூறிக்கொண்டே வடையினை எடுத்துக்கொண்டு ஓடோடி விட்டது.

பதிலளியுங்களேன் !