செவ்வாய், 20 செப்டம்பர், 2011

தினம் ஒரு பாடல்

தேன் - நான் அவன் இல்லை
இப்பாடல் மிகவும் அற்புதமான பின்னணி இசையினைக் கொண்டுள்ளது, இதனைக் கேட்கும்பொழுது நகைச்சுவை உணர்வும் ஏற்படுகின்றது.

கேள்விப்பட்ட செய்திகள்

பாப்பா ஜயரினைப் பிடித்த கிறீஸ் மனிதர்கள்.....
இன்று இப்பொழுது இதனை எழுதும் சற்று முன்னர் எனது தாயார், அம்மம்மாவிடம் பாப்பா ஜயரினைப் பற்றி ஊரில் நடந்த கதையினை எழுதிக்கொண்டிருந்தார். நானும் ஆவலுடன் கேட்ட போதுதான் தெரிந்தது என்ன நடந்தது என்று. பாப்பா ஜயர் என்ற ஜயர் கெருடாவிலிலிருந்து கல்லுவம் என்ற இடத்திற்குச் சென்றுகொண்டிருந்த வேளை அம்மணமாக கறுத்த உருவம் அவர் பக்கம் வந்த போது, அவர் கிட்டச் சென்று பார்த்திருக்கின்றார். அவர் அவ்வுருவத்திந் கிட்டே சென்று பார்த்தபோது அது கிறீஸ் மனிதர் எனத் தெரிந்துகொண்டார், அவர்கள் அவரை மறித்து கழுத்தைப் பிடித்தும் தலை முடிதனைப் பிடித்தும் சித்திரவதை செய்து பின்னர் அவருக்குப் பொம்பிளைப் பிள்ளை இருக்கின்றதோ எனக் கேட்டனர் என அம்மா கூறினார், மேலும் பாப்பா ஜயர் பயத்தில் ஓம் என்று பொய் சொன்ன காரணத்தினால் தப்பித்துக்கொண்டார் என்பதுவும் பின்னர் கெருடாவில் பகுதிக்குச் சென்று கிறீஸ் மனிதர்கள் பற்றிச் சொன்னார் என்பதனை அம்மா சொன்னார். மேலும் அம்மா தெரிவிக்கையில் கிறீஸ் மனிதர்கள் தமிழ் இராணுவக் குழுவினரே என்பதனையும் தெரிவித்தார். முந்தி வெள்ளை வான் இப்பொழுது கிறீஸ் மனிதன் என தமிழீழப் பிரதேச மக்கள் இவ்வாறு பல பேப்புண்டைகளால் சீரழிக்கப்படுவது வேடிக்கை.

பதிலளியுங்களேன் !