சனி, 23 மே, 2009

கேள்விப்பட்ட செய்திகள்

மகளைக் காரினால் ஏற்றிக் கொலை செய்ய முயன்ற தந்தை..........

நான் கனடாவில் காரினால் தனது மகளையும் அவள் காதலனையும் ஏற்றிக் கொலை செய்ய முயன்ற தந்தை என்ற செய்தியினை இணையத்தின் மூலம் படித்தேன். அச்செய்தியில் என்ன நடந்தது என்பதனை விரிவாக அச்செய்தியில் குறிப்பிடப்படவில்லை என்பது உண்மை. அச்செய்தியில் காரினால் ஏற்றிக் கொல்ல வந்த தந்தையின்மகள் சக மாணவன் ஒருவனை காதலித்ததாகவும் இருவரது காதலிற்கும் தந்தை எதிர்ப்புத் தெரிவித்ததுமாக செய்தி இருந்தது. மேலும் ஒரு நாள் மகள் காதலனுடன் சென்று மூன்று நாட்களோ நான்கு நாட்களோ வீடு திரும்பவில்லை என்பதும் அச்செய்தியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் தொடர்புள்ள காதலன் எனது அண்ணனது பள்ளியான Stephen Leacock CI ல் படித்த மாணவன் என்பதும் அங்கு பெரிய ரௌடித்தனம் செய்துகொண்டிருந்தவர் என்பதுமாக எனது அண்ணன் வாயிலாகத் தெரிந்து கொண்டேன். மேலும் நான் Smurfit Image Pac தொழிற்சாலையில் வேலை செய்த சமயம் அங்கு ஒரு இளைஞர் கூறினார் "காதலித்த பெண்ணின் வயது பயங்கரக் குறைய அதனால் தானே அவளுந்த அப்பா இப்படிச் செய்தவர்" என்று கூறினார். இச்சம்பவத்தினால் தந்தை ஆறு மாதமோ அதற்குக் கூடக் குறையவோ சிறையில் அடைக்கப்பட்டதும் உண்மையே. கனேடியச் சட்டத்தின் படி இளைஞர், இளைஞிகளை துன்புறுத்துத்துவது குற்றம். இச்சம்பவத்தில் நான் கேள்விப்பட்ட செய்திகளையும் வைத்துப் பார்க்கும் சமயம் உண்மை என்னவென்று எனக்குப் புரிந்தது.

அனுபவம் புதிது

புகையிரத வண்டி வாசலில் மயங்கி விழுந்த வயது போன கறுப்பினத்தவர்......

நேற்றைய தினம் எனது வேலத்தளத்திலிருந்து 11:30 அளவில் வீடு திரும்பினேன். கீலில் இருந்து பேருந்திலும் டான்போர்த் (Danforth) வழியாக புகையிரதத்திலும் வழமைபோல் வந்து கொண்டிருந்தேன் நான். கென்னடி (Kennedy) புகையிரத நிலையத்தில் இறங்கி ஆர். டி (R. T) புகையிரதப் பாதையில் மாறுவது வழக்கம், அதே போல கென்னடி நிலையத்திலிருந்து இறங்கிய சற்று நேரத்தில் ஒரு வயோதிபத் தோற்றம் கொண்ட கறுப்பினத்தவர் நான் வந்த புகையிரதப் பாதையில் வழுக்கியோ மயங்கியோ விழுந்தார். இதனைப் பார்த்துத் திகைத்து நின்ற நான் செய்வதறியாது நின்று வேடிக்கை பார்த்தேன். அச்சமயம் வெள்ளை இன வயது போன ஒருவர் அவரின் அருகில் சென்று என்னவென்று வினவினார். வெள்ளை இனப் பெண்மணி ஒருவரும் சென்று அவரைத் தொட்டு என்ன நடந்தது"Are you ok" என வினவினார்கள். சிலர் அவர் குடித்துவிட்டு வந்துள்ளார் என்பதாக முணுமுணுத்தனர். புகையிரம் இச்சம்பவத்தினால் நிறுத்தப்பட்டது. நான் சற்று நேரம் இதனைப் பார்த்துப் பின் என் வழியே எனது வீடு நோக்கிய பயணத்தினை ஆரம்பித்தேன். ஒருவர் பொது மக்கள் நடமாடும் இடத்தில் மயங்கி விழுந்ததனை என் கண்ணால் பார்த்ததனால் எனக்கு இவ்வனுபவம் புதிது.

என் கடி

வேளாளரின் தேய்ச்ச குண்டியும் கரையாரின் கழுவின குண்டியும்.........

Global Wood Custom தொழிற்சாலையில் நான் காலை நேர வேலைக்கு மாற்றம் செய்யப்பட்ட பின்னர் பலரது நட்பும் கிடைத்தது. அவர்களில் மிக முக்கியமானவர்யோகதாஸ் என்பவர் ஆவார். அவரும் நானும் பல நகைச்சுவையான கடிகளை மாற்றிக்கொள்வோம். அவரைத் தாஸ் என அழைக்கும் நான் "தாஸ், நீங்கள் என்ன சாதி ?" என வினவினேன். அதற்கு அவர் தான் கோவியர் எனும் சாதியெனவும் கூறினார். இவர் இவ்வாறு இதைச் சொல்ல தன்னை original வேளாளர் என்று புகழ்ந்து கொள்ளும் புஷ்பராஜா என்பவர் தாஸ் ஒரு வேளாளர் என்பதனையும் கூறினார். எது எவ்வாறு இருப்பினும் இவ்வாறு சாதிகளைப் பற்றி நானும் தாஸும் மாற்றி மாற்றி கடித்துக் கொண்டிருக்கும் வேளை ஒரு நாள் நான் "தாஸ் உங்களை வேளாளர் என புஷ்பராஜா கூறுகின்றார் ஆகையால் உங்கள் மகளை எனக்குக் கல்யாணம் கட்டித் தாங்கோவன்" என்றேன் அதற்குத் தாஸ் " உங்கள் தந்தை வேளாளரான உங்கட அம்மாவினைக் கடத்திய மாதிரி கரையார்களுக்கு வேளாளர்கள் தான் தேவையே" என கடித்தார். இதன் பிறகு பல கடிக் கலந்துரையாடல்களுக்குப் பின்னர் நான் மறு நாள் நான் கூறினேன் "தாஸ் எனது அம்மா ஒரு வேளாள இனத்தினைச் சேர்ந்தவர் எனது தந்தை கரையார் இனத்தினைச் சேர்ந்தவர் இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர்" எனவும் "அம்மா சொல்லுவார் வேளாளர்கள் தமது தோட்டத்திற்குள் கக்கூஸ் (மலசலம்) இருந்து விட்டு குண்டி கழுவுவதற்குப் பஞ்சியில் தோட்டத்தில் உள்ள புற்களால் துடைத்துத் தேய்ச்சுக் கொள்ளுவர் மேலும் என்னதான் கரையார் சாதி குறைந்தவர்களானாலும் கடற்கரையில் கக்கூஸ் (மலசலம்) இருந்துவிட்டு கடற்தண்ணியில் குண்டி கழுவி நல்ல decent ஆக வாழ்க்கை நடத்துவர்" என்று. தாஸின் வயிறு என் கடியினால் சற்று நேரம் குழுங்கியது.

பதிலளியுங்களேன் !