செவ்வாய், 9 ஜூன், 2009
கனவுகள்
நான் ஒரு தோட்டம் போன்ற தோற்றம் கொண்ட வீட்டின் வெளியே தினம் நடந்து வந்து கொண்டிருக்கின்றேன். அச்சமயம் அப்பகுதியில் அமைந்திருந்த ஒற்றையடிப் பாதையினால் ஒரு பெண்ணும் நடந்து சென்றார். இவர் எங்கிருந்து வருகின்றார் என்பதனை அறிய நான் அவர் வந்த பாதை நோக்கிச் செல்லும் பொழுது அவர் ஒரு கல்லூரியில் இருந்து வந்தது தெரிந்தது. இக்கனவினை இன்று காலை நான் கண்டேன், மேலும் இக்கனவினை ஆராய்ந்து பார்க்கும்பொழுது தினம் நடக்கும் சம்பவம் என் நினைவிற்கு வருகின்றது, அச்சம்பவமானது நான் காலை நேர வேலையின் பின் எனது முதல் பேருந்தினை எடுக்க எத்தனிக்கும் வேளை ஒரு அழகிய வட இந்தியப் பெண்ணைக் காண்பேன், அவர் மூக்குத்தி ஒன்றும் குத்தியிருப்பார். அப்பெண்மணி வழமையாக நான் ஏறும் பேருந்துத் தரிப்பிடத்திலிருந்து அடுத்த பேருந்துத் தரிப்பிடத்தில் ஏறுவார். சில வேளைகளில் நான் ஏறும் இடத்தில் வந்தேறுவார். அவர் கீல் மற்றும் செப்பர்ட் பகுதியில் இறங்குவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை நான் மாலை நேர வேலைக்கு மாறியதன் காரணத்தினால் இவ்வாறு அப்பெண்ணைக் காணாததன் பொருட்டு இக்கனவினைக் கண்டேனோ தெரியவில்லை !.
ஞாயிறு, 7 ஜூன், 2009
கேட்ட கடிகள்
தீயணைப்புப் படையினைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் உடலுறவு செய்யச் செல்லும் வேளை மூன்று விசில் முறையினைக் கடைபிடித்தனர். அதாவது தீயணைப்பு வேலை விசில் சத்தம் கேட்டவுடன் ஆரம்பமாகும் அஃதுபோலவே தாங்களும் தாம்பத்யம் செய்யச் செல்லும் முன்னர் மூன்று விசில் அடிப்பதனைக் கடைபிடித்தனர். அதாவது முதல் விசில் அடிக்கும் போது மனைவி ஆடைகளைக் கழற்ற வேண்டும் என்றும், இரண்டாவது விசில் அடிக்கும் வேளை கணவன் ஆடைகளைக் கழற்ற வேண்டும் என்றும், அதேபோல மூன்றாம் விசிலுக்கு உடலுறவு செய்ய ஆயத்தமாகவேண்டுமென்பதுமாக கணவன் மனைவி இருவரும் கடைபிடித்துவந்தனர். ஆனால் திடீரென ஒரு நாள் கணவன் நான்காம் விசிலை அடித்துவிட்டார். இதனைப் பார்த்த மனைவி "ஏங்க நாலாம் விசில்" என வினவ, தீயணைப்புத்தொழிலைக் கனவில் கண்டுகொண்டிருந்த கணவனும் தீயணைப்பு வண்டியில் இருக்கும் குழாய்ப் பைப்பின் நீளம் போதாது அதனை நீட்டச் சொல்ல விசில் ஒன்றை அடிக்கச் சொன்னவர், ஆனால் நிஜத்தினில் "பைப்பு (குஞ்சாமணி) நீளவில்லை அதுதான் இந்த நாலாவது விசில்" என்றாரே பார்க்கலாம் அவர் மனைவியின் வயிறும் குலுங்கியது, கனவினில் இருந்து விழித்துக்கொண்ட அவரும் எள்ளி நகையாடினார்.இக்கடியினை Global Wood Custom இல் என்னுடன் வேலைசெய்யும் தன்னை செட்டி வேளாளர் எனத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் புஸ்பராஜா கூறினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கேட்ட கடிகள்
ஒரு ஊரில் ஒரு குண்டப்பாவும் ஒரு குண்டம்மாவும் வாழ்ந்து வந்தனராம். இருவருக்கும் பனங்காப்பணியாரம் சாப்பிடோணும் என்று ஒரே ஆசையாம். அப்ப ஒரு நாள் குண்டப்பா பனங்காய் பிடிங்குவதற்கு பனங்காய்த் தோட்டத்திற்குச் சென்றார்.அங்கு திடீரென வந்த ஒரு பேய் குண்டப்பாவினைப் பார்த்துக் கூறியதாம் "குண்டப்பா நான் உன்னைப் பிடித்துத் தின்னப் போறேன்" என்று. இதனைக் கேட்ட குண்டப்பா பயந்து நடுங்கவே பேய் கூறியது "சரி இப்ப நான் உன்னை விடுறன் ஆனால் நீ சமைத்து வைக்கும் பனங்காய்ப் பணியாரத்தில் நான்கினை எனக்கு வைக்க வேண்டும், நான் வந்து சாப்பிடுவன் என்ன" என்று கூறிச் சென்றது. குண்டப்பாவும் சரி எனத் தலையினை ஆட்டி விட்டு தேவையான பனம்பழத்தினைப் பறித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார். வீட்டில் குண்டம்மா பனங்காய்ப் பணியாரத்தினைச் சுட்டு வைக்க குண்டப்பாவும், குண்டம்மாவும் உண்டனர். இறுதியாகப் பேயுக்கு வைக்க வேண்டிய நான்கு பனங்காய்ப் பணியாரங்களினை பானை ஒன்றினுள் ஒழித்து வைத்தார் குண்டப்பா. இவர் ஒழித்து வைப்பதனைப் பார்த்த குண்டம்மா, குண்டப்பாவிற்குத் தெரியாமல் அந்நான்கு பனங்காய்ப் பணியாரங்களினையும் எடுத்துத் தின்றுவிட்டார். அவ்வேளை பேயும் கதவை வந்து தட்டி "குண்டப்பா கதவைத் திற" என அலறியது. பேயின் அலறைக் கேட்ட குண்டப்பா பேயுக்கு வைத்த பனங்காய்ப் பணியாரங்களினைத் தேடினார் அவற்றைக் காணவில்லை, குண்டம்மாவும் தான் பனங்காய்ப் பணியாரத்தினை உண்டதனைக் குண்டப்பாவிடம் கூறினார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குண்டப்பா, குண்டம்மாவுடன் சேர்ந்துகொண்டு பணியாரத்தினை ஒழித்து வைத்த பெரிய பானையின் உள்ளே ஒழிந்துகொண்டார். பேய் திரும்பத்திரும்ப அலறியபடியே கதவை உடைக்க எத்தனித்தது. பேயின் செய்கைகளினால் அதிர்ச்சியுற்ற குண்டப்பா படாரென ஒரு குசுவை விட்டார். குசு விட்ட அதிர்வினால் அவர் இருந்த பானை உடைந்து வெடித்தது. பானை வெடித்த சத்தத்தினைக் கேட்ட பேய் "ஆஹா என்னை விட ஒரு பெரிய சக்தி இருக்கே" என்று சொல்லிவிட்டு ஓட்டம் எடுத்ததாம். இக்கடியினை யார் வாயிலாகக் கேட்டேன் என்பது எனக்குத் தெரியாது.
முடிந்தால் பதிலளியுங்கள் !
சனி, 6 ஜூன், 2009
என் கடி
ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தார், அச்சமயம் அங்கு வந்த ஒரு காகம் ஒரு வடையினைத் துஉக்கிக்கொண்டு ஓடியது. ஓடிய காகம் வடையினை வைத்துக்கொண்டு ஒரு மர உச்சியின் மீது அமர்ந்துகொண்டது. இவ்வாறு அமர்ந்துகொண்டு காகம் தான் திருடிய வடையினைத் தின்பதற்கு ஆயத்தமான வேளை அங்கு ஒரு நரி வந்தது. நரி காகத்திடம் இருந்து எப்படியாவது வடையினைப் பறிக்க வேணும் எனத திட்டம் தீட்டியது. தனது திட்டத்தின்படியே காகத்தினைப் பார்த்து ஒரு நடனம் ஆடியது. தனது வாயினில் வடையினை வைத்திருந்த காகம் நரிகளின் யுக்திகளினால் தனது தலைமுறையினர் பலமுறை ஏமாந்த கதைகளினை நினைத்துப் பார்க்கின்றது. ஆகையால் வடையினை தான் இருந்த மரக்கிளையில் வைத்து விட்டு நரி ஆடியது போன்று நடனத்தினை ஆடியது. இதனால் ஏமாற்றம் அடைந்த நரி அழாகாக ஒரு பாட்டுப் பாடியது. காகம் தனது மூதாதையர் ஏமாந்ததை நினைவுகூர்ந்து வாயில் வைக்க வேண்டிய வடையினை மரக்கிளையில் வைத்துவிட்டு உல்லாசமாக நரியினைப் போன்று பாட்டுப் பாடியது. இதனைப் பார்த்து வெறுப்படைந்த நரியும் இறுதியாக ஒரு குசுவினை விட்டது. இதைப் பார்த்த காகம் "ஆஹா இப்படி எனது முன்னோரிடம் நரிகள் செய்ததாகக் கேள்விப்படவில்லையே!" எனக் கூறிக்கொண்டே வடையினைத் தனது வாயில் வைத்துக் கொண்டு தானே ஒரு குசுவினை விட்டது. தனது குசு நாத்தத்தினால் மயங்கி மரத்திலிருந்து வீழ்ந்தது, காகம் தன் வாயினில் வைத்திருந்த வடையும் விழுந்தது கீழே!. நரி இதுதான் சந்தர்ப்பம் என்று கூறிக்கொண்டே வடையினை எடுத்துக்கொண்டு ஓடோடி விட்டது.
ஞாயிறு, 31 மே, 2009
கேட்ட கடிகள்
ஒரு தகப்பனாருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள், அப்பிள்ளைகள் இருவரும் பிறந்ததிலிருந்தே முட்டாள்கள் ஆகையால் மனம்வருந்திய தந்தை அவர்கள் பெயர்களாவது புத்திசாலித்தனமாக இருக்கவேண்டும் என்று விரும்பி ஒரு மகனுக்கு 'அறிவாளி' என்றும் இன்னொரு மகனுக்கு ' இந்தியா' என்றும் வைத்தார். தனது மகன்கள் இருவரையும் பள்ளியில் சேர்த்துப் படிக்க அனுப்பினார். பள்ளியில் இவ்விரு பிள்ளைகளின் முட்டாள்தனங்களை நினைத்துப் பெரிதும் வருந்தினார் ஆசிரியர். ஒரு முறை அவர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் வேளை அவ்விரு முட்டாள் மாணவர்களையும் அழைத்து "டே பசங்களா இண்ணைக்கு இவ்வகுப்பினை பரிசோதிக்க ஒருவர்
வரப்போகின்றார் ஆகையினால நீங்கள் இருவரும் நான் தரும் இருபது ரூபா நோட்டினை வைத்துக்கொண்டு இன்று வகுப்பினுள் வராது வெளியில் சென்று விடுங்கள்" என்றார் ஆசிரியர். இதனைக்கேட்ட 'இந்தியா' பாடசாலையில் உள்ள கக்கூஸில் ஒழிந்துகொண்டான். 'அறிவாளி' தன்னால் எங்கும் போக இயலாது எனக்கூறி வகுப்பினுள்ளேயே இருந்துகொண்டான். வகுப்பினைப் பரிசோதனை செய்பவரும் அங்கு வந்து "மாணவர்களே இங்கு யார் அறிவாளி?" என வினவினார். அப்பொழுது 'அறிவாளி' என்ற பெயரைக்கொண்ட முட்டாள் சகோதரர்களில் ஒருவன் 'நான் தான் அறிவாளி" என்ற பதிலை அளித்தான். இதனைக் கேட்ட பரிசோதகரும் " நீ தான் அறிவாளியா! சரி இந்தியா எங்கே உள்ளது என்று கூறு பார்க்கலாம்" என்றார் அவர். அவனும் அவர் தனது சகோதரன் எங்குள்ளான் என்பதனை வினவுகின்றார் என எண்ணி "கக்கூஸில்" என்றானே பார்க்கலாம். வகுப்பே சிரிப்பில் உலுங்கியது. இக்கடியினை தற்சமயம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கும் டி. ராஜேந்தர் வழங்கும் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் கேட்டுக்கொண்டிருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.
சனி, 30 மே, 2009
அனுபவம் புதிது
அம்மாஜி கோவில்.....................
நான் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரம் அம்மாஜி கோயில் என்னும் இக்கோவிலுக்குச் செல்வதுண்ட்டு. கிருஷ்ணரை வழிபடும் இக்கோவிலினுள் சாத்திரம் பார்க்கும் ஒரு அம்மா இருப்பார். அவர் இலங்கையினைப் பிறப்பிடமாகக்கொண்ட ஒரு பிராமணச் சாதியினைச் சேர்ந்தவராவார். பின்ச் மற்றும் டாப்ஸ்கோட் வழியினூடாகச் செல்லும் வழியில் அமைந்துள்ள இச்சிறிய கோவிலை அம்மாஜியின் தங்கையும் இணைந்து நடத்துவது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலிற்கு அருகாமையிலேயே Smurfit Image Pac தொழிற்சாலையும் Welfare Assistance அலுவலகமும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலிற்கு முதன் முதலில் நான் எனது தாயார் மற்றும் எனது அம்மம்மா ஆகியோருடன் சென்றேன். பெரும்பனி கொட்டிய அன்று Taxi ஒன்றினைப் பிடித்துச் சென்றோம் வரும் போது அம்மாஜியின் தங்கையார் எம்மை எம் வீடு வரை அழைத்து வந்தார். இக்கோவிலின் சிறப்பம்சம் யாதெனில் எனது சாதகக்குறிப்பினை எடுத்துப் பார்த்த அம்மாஜி எனது பிறப்பினால் என் தந்தைக்கு தோஷம் உள்ளதாக என் தந்தை இறந்ததை செய்தியைத் தெரியாது முன் கூட்டியே தெரிவித்தது எனக்கு வியப்பு அதுவே அம்மாஜி கோவிலின் சிறப்பம்சம் என்பதனை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. மேலும் அம்மாஜி கூறுகையில் "பலர் பல ஏமாற்றுவித்தை தெரிந்தவர்களிடம் சாதகம் பார்க்கின்றனர், ஆனால் நான் அப்படியல்ல சாதகம்தான் பார்க்கின்றேன் பணத்தைக் கூட சாதகம் பார்க்கவந்தவர்களின் விருப்பத்திற்கேற்றவாறே வாங்குகின்றேன்" என்றும் கூறினார். நான் பிற ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கு தொடர்ந்து செல்வதனை வழக்கமாகக்கொண்டேன். இவ்வாறு செல்லும் நான் தினம் பல விடயங்களை அங்கு கற்றுக்கொண்டேன். பகவத் கீதை வகுப்பு மற்றும் தியான வகுப்பு போன்றனவைகள் அங்கு நடைபெறுவது என் மனதிற்கு ஆறுதலைத் தந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு செல்லும் நான் அம்மாஜி கூறிய பின்வரும் தகவல்களை இங்கு பகிர்ந்து அம்மாஜி கூறினார் "என்னை ஒருமுறை ஒரு உணவகத்தில் வேலை செய்துவரும் தமிழ் இளைஞர் என்னை வந்து சந்தித்தார், தான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தில் 2000ற்கும் அதிகமான பணத்தினை அவர் ஒரு சாத்திரக்ககரரிடம் பறிகொடுத்துவிட்டார். தன்னை யாரோ செய்வினை செய்ததாகக்கருதி பின்னர் அச்சாத்திரக்காரரின் பொய்யினை நம்பி ஏமாந்ததாக என்னிடம் கூறி, எனது சாத்திரக்கணிப்பினால் பயன் பெற்றார்" என அம்மாஜி பக்தர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
ஜனவரி் 18, 2009, 2 : 28 : 24 PM அன்று எடுக்கப்பட்ட அம்மாஜி கோவிலின் உள்தோற்றம்.
ஜனவரி 18, 2009, 2 : 34 : 28 PM அன்று எடுக்கப்பெற்ற அம்மாஜி கோவிலின் உள்தோற்றம்.
ஜனவரி 18, 2009, 2 : 14 : 46 PM அன்று அம்மாஜி கோவிலுக்கு Tapscott வழியினூடாகச் செல்லும்போது எடுத்த நிகழ்படம்.
அம்மாஜி கோவில் எனது வாழ்நாளில் ஒரு திடீர்த் திருப்பமாக ஏற்பட்ட அனுபவம் என்றால் மிகையாகாது. முக்கியமான ஒரு விடயம் என்னவென்றால் நான் இச்சாத்திரம் பார்க்கும் இடம் போன்ற ஒரு கனவினை இக்கோவிலுக்குச் செல்லும் முன்னரே கண்டிருந்தேன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஞாயிறு, 24 மே, 2009
கேள்விப்பட்ட செய்திகள்
நான் Smurfit Image Pac தொழிற்சாலையில் வேலை பார்த்த சமயம் என்னுடன் பேருந்தில் ஒரு இஸ்லாமிய வாலிபரும் வேலைத்தளத்திற்கு வருவார். அவர் பெயர் அலி ஆகும். பிற்பகல் 3:30 மணியளவில் தொடங்கும் வேலைக்காக நான் 2 மணிக்கே செல்வது வழக்கம். இரண்டு பேருந்துகள் எடுத்து இவ்வேலைத்தளத்திற்கு செல்லும் நான் மார்க்கம் (Markham) வழியே வேலைத்தளம் அமைந்துள்ள பாஸ்மோர் (Passmore) தெருவிற்குச் செல்லும் வழியில் இவ்விஸ்லாமிய வாலிபர் தலையில் தொப்பி அணிந்து வருவார். ஒருநாள் அவரை எனது வேலைத்தளத்தில் கடமையாற்றிய Supervisor's இல் ஒருவரானவும் தமிழரானவும் சீலன் அவரை வேலைத் தளத்திலிருந்து பணிநீக்கம் செய்திருந்தார். இதற்கு என்ன காரணம் என பலரும் உரையாடிக்கொண்டிருக்கையில் பின்வரும் தகவலினைப் பெற்றேன். அத்தகவலானது: வேலைத்தளத்தில் தொழிலாளர்கள் அமர்ந்து உண்ணும் பெரிய அறையொன்றின் முன் ஆண்களுக்கும் அருகிலேயே பெண்களுக்குமான கழிவறைகள் இருந்தன, அக்கழிவறைகளின் கதவுகளின் கீழ்ப்பகுதியில் பெரிய இடைவெளிகள் அமைந்திருந்தன. பெண்களின் கழிவறைக்கதவுகளினூடாக அவ்விஸ்லாமிய வாலிபர் எட்டிப்பார்த்ததாகவும் அவரைச் சீலன் கையும் களவுமாகப் பிடித்ததுமே அத்தகவல் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அவர் பணிநீக்கம் செய்யப்பட்டு பல நாட்கள் கழித்து மீண்டும் வேலைத்தளத்திற்கு வந்தார் பின்னர் அவரை சிங் என்ற Supervisor "Ali move your ass" எனவும் கூறியதை அவதானித்தேன் நான். இவ்வாறு இஸ்லாமிய மதத்தினைக் கடைபிடிப்பதாக வெளியில் காட்டிக் கொண்டு உள் மனதில் காமத்துடன் இருந்தவரை முதன் முதலில் அறிந்த காரணத்தினால் இவ்வனுபவம் என் வாழ்நாளில் ஏற்பட்ட புதிய திருப்பம். இச்சம்பவத்தினைப் பற்றி என்னுடன் பணியாற்றிய சக தொழிலாளர்களும் உரையாடிதைக் கேட்டதன் பயனாகவே அறிந்து கோண்டேன், தவிர இவையனைத்தும் உண்மையா என்பது எனக்குத் தெரியாது. இச்சம்பவத்தின்பின் அலியினை அவ்வேலைத்தளத்தில் என்னால் அவதானிக்கமுடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சனி, 23 மே, 2009
கேள்விப்பட்ட செய்திகள்
நான் கனடாவில் காரினால் தனது மகளையும் அவள் காதலனையும் ஏற்றிக் கொலை செய்ய முயன்ற தந்தை என்ற செய்தியினை இணையத்தின் மூலம் படித்தேன். அச்செய்தியில் என்ன நடந்தது என்பதனை விரிவாக அச்செய்தியில் குறிப்பிடப்படவில்லை என்பது உண்மை. அச்செய்தியில் காரினால் ஏற்றிக் கொல்ல வந்த தந்தையின்மகள் சக மாணவன் ஒருவனை காதலித்ததாகவும் இருவரது காதலிற்கும் தந்தை எதிர்ப்புத் தெரிவித்ததுமாக செய்தி இருந்தது. மேலும் ஒரு நாள் மகள் காதலனுடன் சென்று மூன்று நாட்களோ நான்கு நாட்களோ வீடு திரும்பவில்லை என்பதும் அச்செய்தியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் தொடர்புள்ள காதலன் எனது அண்ணனது பள்ளியான Stephen Leacock CI ல் படித்த மாணவன் என்பதும் அங்கு பெரிய ரௌடித்தனம் செய்துகொண்டிருந்தவர் என்பதுமாக எனது அண்ணன் வாயிலாகத் தெரிந்து கொண்டேன். மேலும் நான் Smurfit Image Pac தொழிற்சாலையில் வேலை செய்த சமயம் அங்கு ஒரு இளைஞர் கூறினார் "காதலித்த பெண்ணின் வயது பயங்கரக் குறைய அதனால் தானே அவளுந்த அப்பா இப்படிச் செய்தவர்" என்று கூறினார். இச்சம்பவத்தினால் தந்தை ஆறு மாதமோ அதற்குக் கூடக் குறையவோ சிறையில் அடைக்கப்பட்டதும் உண்மையே. கனேடியச் சட்டத்தின் படி இளைஞர், இளைஞிகளை துன்புறுத்துத்துவது குற்றம். இச்சம்பவத்தில் நான் கேள்விப்பட்ட செய்திகளையும் வைத்துப் பார்க்கும் சமயம் உண்மை என்னவென்று எனக்குப் புரிந்தது.
அனுபவம் புதிது
நேற்றைய தினம் எனது வேலத்தளத்திலிருந்து 11:30 அளவில் வீடு திரும்பினேன். கீலில் இருந்து பேருந்திலும் டான்போர்த் (Danforth) வழியாக புகையிரதத்திலும் வழமைபோல் வந்து கொண்டிருந்தேன் நான். கென்னடி (Kennedy) புகையிரத நிலையத்தில் இறங்கி ஆர். டி (R. T) புகையிரதப் பாதையில் மாறுவது வழக்கம், அதே போல கென்னடி நிலையத்திலிருந்து இறங்கிய சற்று நேரத்தில் ஒரு வயோதிபத் தோற்றம் கொண்ட கறுப்பினத்தவர் நான் வந்த புகையிரதப் பாதையில் வழுக்கியோ மயங்கியோ விழுந்தார். இதனைப் பார்த்துத் திகைத்து நின்ற நான் செய்வதறியாது நின்று வேடிக்கை பார்த்தேன். அச்சமயம் வெள்ளை இன வயது போன ஒருவர் அவரின் அருகில் சென்று என்னவென்று வினவினார். வெள்ளை இனப் பெண்மணி ஒருவரும் சென்று அவரைத் தொட்டு என்ன நடந்தது"Are you ok" என வினவினார்கள். சிலர் அவர் குடித்துவிட்டு வந்துள்ளார் என்பதாக முணுமுணுத்தனர். புகையிரம் இச்சம்பவத்தினால் நிறுத்தப்பட்டது. நான் சற்று நேரம் இதனைப் பார்த்துப் பின் என் வழியே எனது வீடு நோக்கிய பயணத்தினை ஆரம்பித்தேன். ஒருவர் பொது மக்கள் நடமாடும் இடத்தில் மயங்கி விழுந்ததனை என் கண்ணால் பார்த்ததனால் எனக்கு இவ்வனுபவம் புதிது.