சனி, 23 மே, 2009

அனுபவம் புதிது

புகையிரத வண்டி வாசலில் மயங்கி விழுந்த வயது போன கறுப்பினத்தவர்......

நேற்றைய தினம் எனது வேலத்தளத்திலிருந்து 11:30 அளவில் வீடு திரும்பினேன். கீலில் இருந்து பேருந்திலும் டான்போர்த் (Danforth) வழியாக புகையிரதத்திலும் வழமைபோல் வந்து கொண்டிருந்தேன் நான். கென்னடி (Kennedy) புகையிரத நிலையத்தில் இறங்கி ஆர். டி (R. T) புகையிரதப் பாதையில் மாறுவது வழக்கம், அதே போல கென்னடி நிலையத்திலிருந்து இறங்கிய சற்று நேரத்தில் ஒரு வயோதிபத் தோற்றம் கொண்ட கறுப்பினத்தவர் நான் வந்த புகையிரதப் பாதையில் வழுக்கியோ மயங்கியோ விழுந்தார். இதனைப் பார்த்துத் திகைத்து நின்ற நான் செய்வதறியாது நின்று வேடிக்கை பார்த்தேன். அச்சமயம் வெள்ளை இன வயது போன ஒருவர் அவரின் அருகில் சென்று என்னவென்று வினவினார். வெள்ளை இனப் பெண்மணி ஒருவரும் சென்று அவரைத் தொட்டு என்ன நடந்தது"Are you ok" என வினவினார்கள். சிலர் அவர் குடித்துவிட்டு வந்துள்ளார் என்பதாக முணுமுணுத்தனர். புகையிரம் இச்சம்பவத்தினால் நிறுத்தப்பட்டது. நான் சற்று நேரம் இதனைப் பார்த்துப் பின் என் வழியே எனது வீடு நோக்கிய பயணத்தினை ஆரம்பித்தேன். ஒருவர் பொது மக்கள் நடமாடும் இடத்தில் மயங்கி விழுந்ததனை என் கண்ணால் பார்த்ததனால் எனக்கு இவ்வனுபவம் புதிது.

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !