இப்பாடலின் அமைப்பானதும் அதன் மெல்லிசையும் என் மனதினை பல சோகங்கள் தனை உருவாக்கியது.
சனி, 17 செப்டம்பர், 2011
தினம் ஒரு பாடல்
இப்பாடலின் அமைப்பானதும் அதன் மெல்லிசையும் என் மனதினை பல சோகங்கள் தனை உருவாக்கியது.
வெள்ளி, 16 செப்டம்பர், 2011
தினம் ஒரு பாடல்
இப்பாடலினை எப்பொழுது கேட்டாலும் என் மனதிற்குள் புத்துணர்ச்சி பிறக்கும்.
வியாழன், 15 செப்டம்பர், 2011
வெள்ளி, 9 செப்டம்பர், 2011
கேள்விப்பட்ட செய்திகள்
வேலுப்பிள்ளை அண்ணையின் மரணம்…..
அம்மம்மாவின் கடையினை நடத்தியவரும் எனக்கு சிறுவயதிலே பார்த்த முகமுமான வேலுப்பிள்ளை அண்ணை இறந்த செய்தியினை அம்மம்மா கூறக் கேட்டதும் மனதிற்குச் சற்று வருத்தமாக இருந்தது. அவர் எனக்குப் பலமுறை தொலைபேசியில் இங்கு கனடாவிற்கு எடுத்து என்னுடன் உரையாடினார் என்பது இங்கு சொல்லத்தகும். நானும் எவ்வாறு அவர் மரணமெய்தினார் என்பதனை அறிந்த போது மிகவும் வேதனைக்குரிய ஒரு வடுவாக எனக்கு ஏற்பட்டது உண்மைச்செய்தியினை அம்மம்மா வாயின்மூலமாகக் கேட்டபின்பு. அம்மம்மா கூறினார் வன்னியில் 2009 ஆம் ஆண்டு போர் நடைபெற்ற சமயம் அதாவது ஈழத்தின் இறுதிப்போரும் தமிழின அழிப்பின் உச்சகட்ட நிலையுமான போரின் போது சிங்கள இன வெறி இராணுவத்தினரால் வேலுப்பிள்ளை அண்ணையும் அவரின் மகனும் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு வேலுப்பிள்ளை அண்ணை படுகொலை செய்யப்பட்டதனைப் பார்த்ததாகச் சொல்லும் அம்மம்மா அதனைப்பார்த்த அவர் மனைவி பைத்தியம் போன்று ஆனார் என்பதனையும் தெரிவித்தது இங்கு படு வேதனை கொடுக்கும் செயலாக உள்ளது. அவர்தம் இன்னொரு பிள்ளையுடன் இருப்பதாக அம்மம்மா வேதனியுடன் தெரிவித்தார்.
செவ்வாய், 6 செப்டம்பர், 2011
கேள்விப்பட்ட செய்திகள்
இன்றைய ஈழத்தில் விபச்சாரம்…….
ஈழத்தில் இறுதிப் போர் முடிவடைந்த இக்காலகட்டத்தில் தமிழ்ப் பெண்கள் பலவந்தமாகவும், சில பெண்கள் தாமாகவே போயும் இலங்கை இரானுவத்தினருடன் விபச்சாரம் நடத்துவதாக டிலக்ஸன் என்பவர் எனக்குத் தெரிவித்தார். இவர் அண்மையில் இலங்கையிலிருந்து கனடாவிற்கு வந்தவரென்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. அவர் உண்மையைச் சொன்னாரா அல்லது பொய்யினை உரைத்தாரா என்பது எனக்குத் தெரியாது ஆனால் அவரிடம் நான் மென்மேலும் துருவி விசாரித்த பொழுது கூறினார் "நாங்கள் ஒருக்கா சிநேகிதங்கள் எல்லாம் சேர்ந்து போகும்போது ஒரு தமிழ்ப்பொம்பிளையோடு வாக்குவாதம் ஏற்பட்டு பிறகு அவா பக்கத்திலிருந்த துணை இராணுவக் குழுவினருக்குச் சென்று காட்டிக்கொடுத்து எங்களுக்கு அடி விழுந்தது" என்று தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்தார். தலைவர் ஆண்ட காலத்தில் இவ்வாறு விபச்சாரம் நடக்கவில்லை இப்பொழுது இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் தமிழீழம் வந்தபின்னரே இவ்வாறு தமிழ்ப்பெண்களின் வாழ்க்கை சீரழக்கப்படுகின்றது என்று. அவர் கூறிய விடயங்களை வைத்து ஆராய்ந்துபார்த்தால் தமிழீழ வரலாற்றில் கலங்கம் விளைவிக்கம் பொருட்டோடு இவ்வாறு சில பெண்களின் நடத்தைகள் உள்ளது என்பது இங்கு அறியலாம், ஆனாலும் எது உண்மை என தெரிந்துகொண்டபின்னர் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
திங்கள், 5 செப்டம்பர், 2011
தினக்கருத்து
கனடாவில் சம்பளம் குறைய வாங்கும் ஆசிரியர்கள்……
நான் கால்கில் படித்த சமயம் டிஸைன் யூவர் பியூச்சர் என்ற வகுப்பினை எடுத்திருந்தேன். அவ்வகுப்பில் எமது வருங்காலத்தில் எவ்வகை தொழிலை நாம் புரிவோம் என்பதனை தெரிந்து கொண்டேன், நானும் வரலாற்று ஆசிரியராக வரவிரும்பி அதற்காக ஒரு நேர்காணலை நடத்தவும் தயாரானேன். நான் நேர்காணலை நடத்திய ஆசிரியர் ரெனீ சேவியர் (இலங்கையர் என நினைக்கின்றேன்) ஆவார். அவரிடம் எவ்வாறு உங்கள் தொழில் போகின்றது என்ன சம்பளம் எனக் கேட்டபோது சம்பளம் குறையக் கிடைக்கின்றது சாதாரணமாக மேல்நிலைப்பள்ளிகளில் சம்பளம் அதிகமாகக் கிடைக்கும் ஆனால் இப்பொழுது நான் கல்வி கற்பிக்கும் முதியோர் கல்வி நிலையத்தில் சம்பளம் கொஞ்சமாகவே கிடைக்கின்றது எனத் தெரிவித்தார். நான் பின்னர் இதனை எனது வகுப்பினில் தெரிவித்தேன். அவ்வகுப்பினை நடத்திய ஆசிரியர்தான் ஆங்கில வகுப்புக்களினை தலைமை தாங்கும் ஆசிரியர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தகும் அவர் பெயர் மாரீகன் மோலனார் (டச்சுக்காரர்). நான் பன்னிரண்டாம் ஆண்டு பல்கலைக்கழக வகுப்பினை ரீதா பியாஸா என்னும் (இத்தாலிய நாட்டுக்காரர்) இட்ம் கற்றேன். அவரிடம் நான் கேட்டேன் "Rita how much money you are making, per an hour ?" அதற்கு அவர் சொன்னார் தான் முன்பெல்லாம் நிறைய எடுத்தனான் இப்பொழுது குறைவாகத் தான் சம்பளம் கிடைக்கின்றது என்று. இவர் சொன்னது மிகவும் வேதனைப்பட்டேன் நான் இவ்வாறு கல்வி கற்றவர்கள் ஏமாற்றப்படுவது கனேடிய அரசாங்கமோ அதன் சட்ட திட்டமோ எங்கோ பிழை செய்கின்றது என்பது மட்டும் புலப்படுகின்றது. இத்தகைய காரணங்கள் ஒரு வேளை வெள்ளை இனக் கனேடியர்கள் சம்பளத்தைக் கூட எடுத்துக்கொண்டு பிற இனங்களிற்கு குறைத்துச் சம்பளம் கொடுப்பதநை மென்மேலும் விளக்குகின்றது. கல்வி கற்றவர்களிடையே இனத்துவேசம் இவ்வளவு அதிகமாக இருக்குது என்றால் கனடா எவ்வளவு வெள்ளைக் கக்கூஸினால் மூழ்கடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பது வெட்டவெளிச்சமான உண்மை.
ஞாயிறு, 4 செப்டம்பர், 2011
தினக்கருத்து
கனேடியப் பள்ளிகளில் பால்வினைத் திரைப்படங்கள் மற்றும் விக்கிப்பீடியா மீதான கொள்கைகள்………..
நான் கல்வி கற்ற கால்கில் பால்வினைத் திரைப்படங்கள் பார்ப்பது தடைசெய்யப்பட்டிருப்பதுவும் அது பார்த்தால் சட்டப்படி குற்றம் என்பதுவும் அனைவரும் அறிந்ததே. அதே போல விக்கிபீடியாவினை நாம் உபயோகிப்பது எல்லா ஆசிரியர்களாலும் தடை செய்யப்படாவிடிலும் சில ஆசிரியர்கள் அதனை உபயோகிப்பதனை கூடாதெனத் தெரிவித்தனர். அதற்கு முக்கிய காரணமாக விக்கிபீடியாவினைப் பலரும் எழுதுவதனால் அதில் இருக்கும் கட்டுரைகளின் நம்பகத்தன்மை 100% உண்மையானதல்ல என்பதனையும் விளக்கினர். நானும் இவர்களின் இக்கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவித்து எனது கருத்தை உங்கள் முன்னிலையில் தெரிவிக்க முனைகின்றேன். பால்வினைத் திரைப்படங்களினைப் பார்க்கத் தடை இருக்கும் காரணம் ஒன்றுக்கும் உதவாத தடை காரணம் நான் உலகத்தின் உண்மை வரலாறுகளை அறிய விரும்பும் ஒரு நல்லவன், ஆகையினால் பால்வினைத் திரைப்படங்களில் பல உண்மைகள் உள்ளன அவற்றை பார்த்தால் தான் எங்கு எங்கு விபச்சாரம் நடைபெறுகின்றது ஏன் இவ்வாறு நடைபெறுகின்றது மேலும் அவற்றின் காரணம் என்ன என்பதனை அலசி ஆராய முடியும். நானும் ஹாலிவுட் திரைப்படங்களில் வெள்ளையர்கள் பெரியவர்களாகவும் வல்லவர்களாகவும் சித்தரிக்கப்படுவதனை அவதானித்து ஏமாந்து போனேன் பெரும்பாலும் இவ்வாறான பொய்யான கருத்துக்களை உடைத்தெறிந்து வெள்ளையர்கள் எவ்வளவு பேர் பால்வினைத் தொழிலில் ஈடுபடுகின்றார்கள் என்பதனையும் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்த பிற பல இனங்களும் எவ்வாறு பால்வினைத் தொழிலில் ஈடிபடுகின்றார்கள் என்பதனையும் அனைவராலும் அதாவது உண்மையைத் தெரியாதவர்களால் அறிய முடியாது. ஆனால் அவற்றை ஆராய்ந்து பார்க்கும் என் போன்ற புத்திஜீவிகளால் உணமையான உலகத்தினை அறிந்து கொள்ள முடியும். பள்ளிகளில் இவற்றைத் தடை செய்வதன் காரணம் கனேடியப் பள்ளிகள் முழுவதனியும் வெள்ளைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றது அவர்களில் பலரே பால்வினைத் திரைப்படங்களிலும் கதாநாயகர்களாக நடிப்பது நான் என் கண்களால் கண்ட உண்மை அவற்றின் உண்மைதனை வெளியில் தெரிந்தால் மானம் போய்விடும் என்ற காரணத்தினால்தானோ பள்ளிகளில் பால்வினைத் திரைப்படங்கள்தனைப் பார்ப்பதனைத் தடைசெய்துள்ளனர். இதேபோன்று விக்கிபீடியாவில் விக்கிலீக்ஸ் என்ற ஒரு பகுதியால் உலகமே அதாவது பெரும்பாலும் மேற்குலம் அதிர்ந்தது உண்மையின் வெற்றி, இத்தகு விக்கிபீடியாவில் அமெரிக்காவிற்கு எதிரான கொள்கைகளும் பல மேற்கத்தேயேப் பிரச்சாரங்களுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருப்பதன் காரணத்திற்காக விக்கிபீடியாவினைப் பல ஆசிரியர்கள் வெறுப்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. பெரும்பாலான கனேடிய ஆசிரியர்கள் அமெரிக்க ஆதரவாளர்களாகவும் வெள்லை இனத்தவர்களாகவும் இருப்பது இங்கு சுட்டிக்காட்டவும் தகும், இவையனைத்தும் எனது தனிப்பட்ட கருத்துக்களே.
வியாழன், 1 செப்டம்பர், 2011
கேள்விப்பட்ட செய்திகள்
மார்பகம் அறுக்கப்படும் பெண்கள்....
இன்று தற்பொழுது இதனை எழுதும் சற்று முன்னர் நான், எனது அம்மம்மா மற்றும் எனது தாயார் ஆகியோர் உரையாடிக்கொண்டிருக்கையில் எனது அம்மம்மா சொன்னார் தான் கேள்விப்பட்டதாக "இலங்கையில் அதுவும் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் பெண்கள் நடமாடும் பொழுது அவர்களைச் சூழும் குழுக்கள் மரத்தில் இருந்து தாவி இறங்கி அப்பெண்களின் மார்பகங்களை அறுப்பதாகக் கேள்விப்பட்டேன் என." நானும் யார் இவ்வாறான கேடுகெட்ட செயல்களில் ஈடுபடுவதெனக் கேட்க யாரோ கிரீஸ் மனிதனோ யாரோ ஒரு மனித இனக்குழுக்களோ என அம்மா பதில் தந்தார். போர் ஓய்ந்தும் தமிழ் மக்கள் இவ்வாறு அல்லல்படுவது எனக்கு மன வேதனையைத் தருகின்றது.
இன்று தற்பொழுது இதனை எழுதும் சற்று முன்னர் நான், எனது அம்மம்மா மற்றும் எனது தாயார் ஆகியோர் உரையாடிக்கொண்டிருக்கையில் எனது அம்மம்மா சொன்னார் தான் கேள்விப்பட்டதாக "இலங்கையில் அதுவும் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் பெண்கள் நடமாடும் பொழுது அவர்களைச் சூழும் குழுக்கள் மரத்தில் இருந்து தாவி இறங்கி அப்பெண்களின் மார்பகங்களை அறுப்பதாகக் கேள்விப்பட்டேன் என." நானும் யார் இவ்வாறான கேடுகெட்ட செயல்களில் ஈடுபடுவதெனக் கேட்க யாரோ கிரீஸ் மனிதனோ யாரோ ஒரு மனித இனக்குழுக்களோ என அம்மா பதில் தந்தார். போர் ஓய்ந்தும் தமிழ் மக்கள் இவ்வாறு அல்லல்படுவது எனக்கு மன வேதனையைத் தருகின்றது.
புதன், 31 ஆகஸ்ட், 2011
கனவுகள்
மூன்று கனவுகள் ஒரு வேளையிலே.......
இன்று காலை நான் ஒரு கனவு கண்டேன் அதில் நான் புகையிரத நிலையமொன்றினூடாகா நடந்து சென்றுகொண்டிருக்கையில் ஆங்காங்கே இரண்டு டாலர் நானயம் மற்றும் ஒரு டாலர் நாணயம் போன்றனவைகளைப் பார்த்துப் பார்த்துப் பொறுக்கினேன். நானும் அவ்வாறு பொறுக்கிக்கொன்டிருக்கையில் அருகாமையிலேயே ஒரு புகையிரத வண்டி சென்றது. நல்லவேலை அது என்னை இடிக்காமல் சென்றது. நானும் மெது மெதுவாக இங்கால்பல்லம் நடந்து வந்தேன், திடீரென ஒரு கணணிகள் சூழ்ந்த அறைக்குள் சென்று சேர்ந்தேன். அது வட்ட வடிவமான தோற்றத்தினைக் கொண்டிருந்தது. நானும் அவ்விடத்தில் உள்ள படியினில் ஏறி மேலே செல்ல எத்தனித்த போது ஒரு அறைக்குள் மட்டும் என்னால் செல்ல இயலவில்லை. நானும் ஏன் அவ்வாறு செல்ல முடியவில்லை என நினைத்துக்கொண்டிருக்கையில் நான் திடீரென ஒரு பேருந்தில் இருந்து வெளியில் பார்க்கின்றேன், அப்பொழுது அங்கே ஒரு அழகிய ஆரியப்பெண்னொருவர் நான் அவளைப் பார்த்துக்கொண்டிருக வெட்கத்தில் ஓடினாள். நானும் கனவினில் இருந்து விழித்துக்கொண்டேன்.
திங்கள், 22 ஆகஸ்ட், 2011
கனவுகள்
அழகின்மையால் ஏற்படும் இழிவு…….
இன்று காலை நான் ஒரு கனவினைக் கண்டேன் அதாவது என்னைப் பார்த்து தம்பிநாதன் அண்ணையின் மகளான பபிதா பழித்து நீ வடிவில்லை கறுப்பா இருக்கின்றாய் எனக் கூறுவதாகக் கண்டேன். எனது மனதில் சோகம் பெருக்கெடுத்துக்கொண்டது. நான் ஒரு விடுதியில் தங்கியிருக்கும்பொழுதே இவ்வாறு இச்சம்பவம் ஏற்பட்டது. இக்கனவினை நான் ஏன் கண்டேன் என எனக்குத் தெரியவில்லை ஏன் பபிதாவினை எனது கனவினில் கண்டேன் என்பதுவும் எனக்குப் புலப்படவில்லை. ஒரே புதிராகவுள்ளது ஒருவேளை அப்பெண் பபிதாவாக இல்லாது வேறு பெண்ணோ யாருக்குத் தெரியும், இக்கனவின் உண்மையினை அது என்னுள் தோன்றிய காரணத்தினை என்னால் உணர முடியவில்லை இறுதிவரை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)