புதன், 15 அக்டோபர், 2008

தினக்கருத்து

இன்றைய தமிழ்த் திரைப்படங்களும் வெளிநாடுவாழ் ஈழத்துத் தமிழ் இளைஞர்களும்.......

இன்றைய கால கட்டங்களில் வெளிவரும் தமிழ்த் திரைப்படங்கள் படிப்பறிவில்லாத உலகத் திரைப்படங்கள் எடுக்கப்படும் விதங்கள் போன்றனவற்றை அறியாதவர்களாலும் சாதி சமயங்களில் ஊறிப்போனவர்களாலும் பண்பாடுகளில் வேரூன்றிப் போனவர்களாலும் எடுக்கப்படுகின்றது. சிலர் வியாபார நோக்கத்திற்காகவே திரைப்படம் எடுக்க வருகின்றனர் சிலர் மசாலாவை அரைக்க வருகின்றனர். சில படித்த இளைஞர்கள் நல்ல திரைப்படங்களைக் கொடுக்க முடிகின்றது. பலர் இந்திய உணர்வு மிக்கவர்களாகவும் தமிழ்ப்பற்று அல்லாமலும் வட இந்திய ஆரியர்களின் புராணமயப்படுத்த பாடல்கள் கொண்ட மசாலாவையே இன்றும் இந்தியன் என்ற ஒரு காரணத்திற்காக அரைக்கிறனர். ஆனாலும் இன்றைய தமிழ்த் திரைப்படங்கள் ஒரு மனிதனை மிருகமாக மாற்றிக்கொண்டிருப்பது மிகப் பொருந்திய உண்மை. திரைப்படப் பாடல்கள் சிறந்தனவே ஆனாலும் இயக்குனர்கள் தமிழர்களாக இருப்பதனால் மானப்பிரச்சனைக்காக அடிதடித் திரைப்படங்களையே பெருதும் கொடுப்பது தமிழர்களின் உண்மையான பண்பாட்டுக்களினை அழிப்பதாகவும், தமிழர்களுக்குள்ளேயே அடி தடிகளை உருவாக்குவதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வகைத் காதற் திரைப்படங்களினால் பல வெளிநாடுவாழ் ஈழத்துத் தமிழ் இளைஞர்கள் மிருகங்களாக வீதிகளில் சண்டையிடும் அளவிற்குக் கேவலமான நிலைக்க்குத் தள்ளுகின்றது இன்றைய தமிழ்த் திரைப்படங்கள். இலண்டன், கனடா போன்ற பல இடங்களில் இவ்வாறு நிகழ்வுகள் ஏற்படுவதற்குத் தமிழ்த் திரைப்படங்களும் அதன் இயக்குனர்களும் காரணம் என்பது முற்ற்றிலும் உண்மை. இவை எனது தனிப்பட்டக்கருத்தே!

வெள்ளி, 10 அக்டோபர், 2008

கேட்ட கடிகள்

குண்டிப்பக்கத்தை முறுக்குங்கோ....

இரு தமிழர்கள் நல்ல நண்பர்கள் அவர்களுள் ஒருவருக்குத் தென்னை மரத்தில் ஏறத்தெரியும் ஆனால் இளனி பிடுங்கத் தெரியாது. ஒருவருக்கு இளனி பிடுங்கத் தெரியும் தென்னை மரத்தில் ஏறத் தெரியாது. ஆகையால் தென்னை மரத்தில் ஏறத் தெரிந்தவரிடம் இளனி பிடுங்கத் தெரிந்தவர் கூறினார் நீ தென்னை மரத்தில் ஏறு நான் இளனி பிடுங்கும் விதத்தை உனக்குக் கூறுகின்றேன் என்று அவ்வாறே தென்னை மரத்தில் ஏறத் தெரிந்தவர் தென்னையில் ஏறினார். அப்பொழுது இளனி பிடுங்கத் தெரிந்தவர் கீழே இருந்து இளனியைத் திருப்பிவிட்டு குண்டிப்பக்கத்தை முறுக்கிவிடு என்று இதனைக் கேட்ட தென்னை ஏறத்தெரிந்தவரும் இளனியைப் பிடித்து திருப்பிவிட்டு தன் குண்டியைப் பிடித்து முறுக்கிவிட்டார். இதனால் கீழே விழுந்து நொறுங்கினார் என்பது நான் கேட்ட கடி.

வியாழன், 9 அக்டோபர், 2008

கேட்ட கடிகள்

கோமத அவுறுது........

சிங்களவர் ஒருவரும் தமிழர் ஒருவரும் நல்ல நண்பர்கள் தமிழர் புத்தாண்டுத் தினத்தினை கொண்டாடிவிட்டு தென்னை மரத்தில் கோவணம் கட்டிக்கொண்டு இளனி பிடிங்கிக் கொண்டிருந்தார். அப்பகுதியாக வந்த சிங்கள நண்பர் நேற்றைய தினம் புத்தாண்டு எப்படி என்பதனை அதாவது கோமத அவுறுது என சிங்களத்தில் புத்தாண்டு எப்படி என உரக்கக் கத்தினார். இளனி பிடிங்கிக் கொண்டிருந்த தமிழர் தனது கோவணம் அவுழுது என அவர் கூறுகின்றார் என்று தனது இரண்டு கைகளால் கோவணத்தினைப் பிடிக்க எத்தனிக்கும் வேளை தென்னையிலிருந்து கீழே விழுந்து நொறுங்குகின்றார்.

புதன், 8 அக்டோபர், 2008

கேள்விப்பட்ட செய்திகள்

ஈழத்து விடுதலைப் புலிகளில் உள்ளே நடைபெறும் உட்கொலைகள்....................

குலோபல் வூட் தொழிற்சாலையின் தமிழ் நண்பர் கூறியதாவது விடுதலைப் புலிகள் அமைப்பினர்களுக்குள்ளேயே பல சிக்கல்கள் உள்ளன என்றும் போர்ச்சூழலில் வேவு பார்க்கும் பலர் இலங்கை இராணுவத்தினருடன் சேர்ந்து துரோகம் செய்தவர்கள் என்றும் அவர்கள் பிடிபட்ட இடத்திலேயே சுடப்பட்டனர் எனவும் என்னிடம் தெரிவித்தார் உதாரணங்களாக இயக்கத் திரைப்படம் ஒன்றில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்த ஒரு நடிகர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினருடன் நீண்ட நாட்கள் நட்புடன் இருந்தவர் மாவீரர் தினத்தன்று தனது செலவில் பலவன செய்தார் என்பதும் பின்னர் இலங்கை இராணுவத்தினருக்குத் துப்புக் கொடுத்த காரணத்தினால் சுடப்பட்டார் என்பது வரலாறு. இரண்டாவது உதாரணமாக தான் ஒரு முறை இயக்கத்தில் இருந்த வேளை தனது சொந்தக்காரர் ஒருவர் துரோகம் செய்த காரணத்தினனல் சுட்டுக் கொல்லப்பட்டார் எனவும் தனது ஊர்தியில் ஏற்றிவரும் வேளையில் என்னிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 7 அக்டோபர், 2008

கனவுகள்

மலைக்கோட்டைக் கோவில்தானோ !

நான் ஒரு விடுதியி்ல் தங்கித் தொலைக்காட்சி பாரத்தவாறு இருந்தேன் அவ்விடுதியில் மேல் ஒரு வங்கியோ பணி அலுவலகமோ இருப்பதனை உணர்ந்தேன். பின்னர் ஊர்தியில் பயணம் செய்யும் பொழுது மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் சுவர் போன்ற தோற்றம் கொண்ட கோவிலைப் பார்த்தவாறே செல்கின்றேன். மலை இருக்கவில்லை ஆனால் அச்சுவர் அமைந்த கோவிலை மட்டும் கண்களால் கண்டது உண்மை. இக்கனவு இன்று காலை என்னால் காணப்பட்டது.

ஞாயிறு, 5 அக்டோபர், 2008

தினம் ஒரு பாடல்



கொலம்பஸ் கொலம்பஸ் - ஜீன்ஸ்

இப்பாடலைக் கேட்டால் கொலம்பஸ் துள்ளவும் செய்வார் அத்தகு பாடல்.

தினக்கருத்து

இலங்கை இனப் பிரச்சனையும் வெளிநாடுவாழ் ஈழத்துத் தமிழர்களும்..................


இலங்கையின் இனப்பிரச்சனை என்பது முட்டாள்தனமான வகையில் தோற்றுவிக்கப்பட்டதொன்று அதாவது ஆரியர் மற்றும் திராவிடக் கலப்புக்களான சிங்களவர்கள் மீது அதே ஆரியர் மற்றும் திராவிடர் கலப்புக்களான தமிழர்கள் போரிடுவதென்பது இரு இனத்தவர்களிடையே சற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பாண்மை இல்லாத காரணத்தினால் ஏற்பட்டதொன்றாகும். பெரும்பாலான ஈழத்துத் தமிழர்களே தமிழ் மீது அளப்பரிய பற்றுக்கொண்டுள்ளவர் என்பது நான் அறிந்த உண்மை நானும் ஒரு ஈழத்துத் தமிழன் தான் என்பதும் உண்மையே இதனை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் நான் ஈழத்தின் தமிழ் பேச்சு வழக்கு எழுத்து வழக்கு தமிழகத் தமிழின் பேச்சு வழக்குகளினையும் அதனை எழுதும் முறைகளினையும் நன்கு அறிவேன் இவ்விரு பிரதேசங்களிலும் ஈழத்துத் தமிழர்கள் சிறப்பான உச்சரிப்பை உடைய தமிழில் உரையாடுவது மிகவும் சிறந்தது. மேலும் தமிழகப் பிள்ளைகளும் வெளிநாடுவாழ் ஈழத்துத் தமிழ்ப்பிள்ளைகளில் பலரும் தாய் மொழியினைக் கல்லாத காரணங்களினால் சீரழிந்து போவது கண்களால் காணும் உண்மைகள்.
பெரும்பாலான கனேடியத் தமிழர்கள் ஈழத்தினை தமது பூர்வீகப் பிரதேசம் எனவும் அது தமக்குக் கிடைக்கும் எனவும் நம்புகின்றனர். சிலர் இதனைப் பற்றி அவ்வளவாக அலட்டிக்கொள்வதில்லை காரணம் கனடாவில் வசதி உண்டு , சுதந்திரம் உண்டு இவ்வாறு பலதரப்பட்ட காரணங்களினால் சிலர் ஈழத்தினைப் பற்றியும் தமிழ் மொழியினைப் பற்றியும் பண்பாடுகளினைப் பற்றியும் மறந்து தமது விருப்பங்களிற்கேற்றாற் போல் வாழ்க்கையினை வாழ்கின்றனர் ஆனாலும் இன்றளவும் பல தமிழர்கள் ஈழத்திற்கு ஆதரவளித்து வருவதும் இதழ்களில் வரும் செய்திகள் பொங்கு தமிழ் உலகமெங்கும் பலத்த மக்கள் சக்திகளுடன் நடைபெற்றது உண்மை கனடாவில் டொறொன்ரோவில் பல ஆயிரம் பொது மக்கள் வரையில் பங்கேற்ற்னர் என்பதனை அறிகின்றேன் இம்மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனை தம் தலைவராகவும் அவருடைய வழியில் நடந்து உயிரைக் கூடக் கொடுக்கத் தயங்கமாட்டோம் என்று ஈழத்தில் இருக்கும் அப்பாவி ஏழ்மை நிலைத் தமிழர்களை போராட்டத்திற்கு வலுக்கட்டாயமாகச் சேர்க்க உரிமை கேட்பது வேடிக்கை.
எனது வேலைத் தளமான குலோபல் வூட் தொழிற்சாலையில் என்னுடன் பணிபுரியும் தமிழ் நண்பர் கூறினார் தமிழீழப் பிரதேசமான விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வலுக்கட்டாயமாக ஆட்களைச் சேர்ப்பது என்று சேர்ப்பவர்களில் புதியவர்கள் போராட்ட முன்னரங்குகளிற்கு அனுப்பப்படுகின்றனர் என்று. அவ்வாறே தனது மனைவின் சொந்தக்காரர் ஒருவர் அனுப்பப்பட்டு இறந்தவர் என்பதும் வரலாறு இவ்வாறு தெய்வமாகப் போற்றப்படும் தேசியத் தலைவர் தனது கொள்கை ஒன்றிற்காக அப்பாவித் தமிழ் இனத்தினையே அழிப்பதற்கு முயற்சி செய்வது படு முட்டாள்தனம். அவரை வெளிநாடுவாழ் தமிழர்கள் பாராட்டித் தலையில் வைத்து ஆடுவது படு வேடிக்கை. எண்பத்து மூன்றாம் ஆண்டு தலைவர் என இலங்கைத் தமிழர்களால் அதாவது ஈழத்துத் தமிழர்களால் கருதப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரனால் நடத்தப்பட்ட தாக்குதல் நடைபெறாவிட்டால் தமிழர்களின் பாரிய இன அழிப்பு தென்னிலங்கையில் ஏற்படாமல் இருந்திருக்க வாய்ப்புண்டு. சிறு துளியினைப் பெரு வெள்ளமாக மாற்றி ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தினையே சிங்கள சமுதாயம் எதிரிகளாகவும் அவர்களை அழிப்பதற்காகவும் எத்தனிப்பது வேலுப்பிள்ளை பிரபாகரன் என்னும் தெய்வத் தலைவரால் என்பதும் இங்கு சுட்டிக் காட்டத் தக்கது. ஈழம் என்ற ஒரே கொள்கைக்காக பல தமிழர்களை இவர் தன் பின்னே அழைப்பது வேடிக்கை. உலகில் குற்றங்கள் பல இல்லாத பிரதேசமாகவும், தூய தமிழ் மொழி உள்ள பிரதேசமாகவும் , நற்குணங்கள் கொண்ட பல மனிதர்கள் வாழும் பிரதேசமாகவும் தமிழீழப் பகுதி உள்ளதும் வரவேற்கத்தக்கது ஆனால் அப்பிரதேசத்தை அடைவது என்ற குறிக்கோளுடன் பலர் வீணே மடிவதென்பது வியப்பை அளிக்கின்றது. பிரபாகரன் என்பவர் தமிழர் என்ற தனது தனிமதினக் கொள்கையினை விட்டெறிவது குறிப்பிடத்தக்கது காரணம் அவரது கொள்கைகளின் காரணமாக பல இலட்சம் பொது மக்கள் மற்றும் போராளிகள் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுவாழ் மக்கள் பலர் போராட்டம் தீர்ந்து அனைத்து மக்களும் சமாதானமாக இருக்க ஒரு தீர்வை எட்ட வழி சமைக்க வேண்டும் என்பதும் அதை விடுத்து விடுதலைப் புலிகளின் போராட்ட வழியினை ஆதரிப்பதென்பதும் சற்றுக் கேள்விக்குறியாகவே உள்ளது. போரினால் ஈழத்தினை இன்று பெற்றால் நாளை வேறொருவன் வந்து கைப்பற்றமாட்டான் என்பதில் எவ்வளவு உண்மை உள்ளதோ அதேபோல் உலகில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் போராட்டத்திற்கும் பொது மக்களின் மரணத்திற்கும் ஆதரவளிக்காமல் அமைதியான முறையில் செல்வதே நன்று. இவை அனைத்தும் எனது தனிப்பட்டக் கருத்தே!

சனி, 4 அக்டோபர், 2008

தினக்கருத்து

வெளிநாடுவாழ் இந்தியர்களின் பண்பாட்டழிப்புகளும் அப்பண்பாட்டினைக் காக்கும் இந்தியத் திரைப்படத்துறையும்..................................

இந்திய வம்சாவளியினர் பலர் சுய முன்னேற்றத்திற்காக மதம் விட்டு மதம் மாறுதல் சொந்த விருப்பு வெறுப்புக்களினாலும், சொகுசு வாழ்வினை வாழ்வதற்காகவும் பண்பாட்டு விழுமியங்கள் தமது மூதாதையர் வாழ்ந்த பண்பாட்டுணர்வுகளை மறக்கப் பலதரப்பட்ட வகையில் வாய்ப்புண்டு. பணத்திற்காகவே இவ்வுலகம் என மாறி வரும் இக்காலத்தில் மதம் மாறுதல் பண்பாடுகளைப் பேணாதிருத்தல் போன்றனவைகள் சர்வசாதாரணம். ஆனனலும் இவ்வாறான மாற்றங்களினால் மேற்கத்தேயப் பண்பாட்டினனப் பின்பற்ற வேண்டிய சூழலிற்கு இந்திய வம்சாவளியினர் நிர்ப்பந்தப் படுத்தப்படுகின்றனர் என்பது யாமறிந்த உண்மை. எடுத்துக்காட்டாக பின்வரும் உதாரணங்களினனப் பார்ப்போம்:

இந்தியப் பெண்களைப் பற்றிப் பார்ப்போம்:

* இந்தியப் பெண்கள் அரைக்காற்சட்டை அணிவதனை மேற்கத்தேயவர்களிடமிருந்து கற்றனர்.

* பெரும்பாலான வெளிநாடுவாழ் , வட இந்திய நகரத்துவாழ் பெண்களைப் பார்த்தோமேயானால் புகைபிடிப்பதனன வழமையாகக் கொண்டுள்ளனர்.

* பல பெண்கள் பெரியோர்களால் நடத்தப்படும் திருமண முறையினை வெறுக்கின்றனர் டேட்டிங் போன்ற தெரிவுகளளச் செய்து சிக்கலில் சிக்கித் தவிக்கின்றர்.

*சில பெண்கள் காதல் செய்கின்றனர் அவ்வாறு காதல் செய்யும் பெண்கள் பலர் மோசம் செய்யப்பட்டு விபச்சாரிகளாக விற்கப்படுவதும் உண்மை.

* இந்நிகழ்வுகள் இந்திய வம்சாவளியினருக்கு மட்டும் அல்லாது இலங்கையில் வாழும் பெண்களுக்கும் ஏற்படுவது வேதனனக்குரியது.

* பெரும்பாலான பெண்கள் மது, போதை போன்ற பொருட்களிற்கு பிற இனத்தவர்களால் அடிமையாக்கப்பட்டு பின் அவர்களுடனேயே வாழவும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்பது உண்மை. கனடாவில் இவ்வாறு நடப்பது அதிகம். உதாரணத்திற்கு என்னுடம் தொழிற்சாலையில் பணிபுரியும் தமிழ் நண்பர் கூறுவார் இந்தியப் பெண் போன்ற தோற்றம் கொண்டவர் டொரொன்றோ கீழ்நகர்ப் பகுதியில் பிச்சை எடுக்கின்றார் என்று பெரும்பாலும் இவ்வாறன பெண்கள் பிற இனத்தவர்களுடன் கூடுவதனால் அவர்கள் இவர்களைப் போதைக்கு அடிமை செய்து பிச்சைக்காரர்களாக மாற்றுவதென்பது உண்மை. இது எனது கருத்து.

* தமது தாய் மொழியின் மீது சற்றும் பற்றுக்கொண்டிராதவர்களாகவும் மேற்கத்தேய அதாவது ஆங்கிலத்தினனயே உரையாடுவதற்கும் எழுதுவதற்கும் பயன்படுத்தும் இவ்வெளிநாடுவாழ் இந்திய வம்சாவளிப் பெண்கள் இறுதியில் வெள்ளையர்களாக்கப்படுவதும் உண்மையே!. பின் அவர்களே இந்தியப் பண்பாட்டிற்கு எதிரிகள் ஆக்கப்படுவதும் உண்மையே!.

* பிற இனத்தவர்களை மணம் முடித்து விளையாடிய பின்னர் வெறுத்துப் பல பெண்கள் இந்தியப் பண்பாட்டினைக் காக்க முற்படுவதும் உண்மை.

* இவ்வாறானவர்களினது வரலாறுகள் இந்தியத் திரைப்படங்களில் பொறிக்கப்படமாட்டாது. ஆனாலும் சில வெளிநாடுவாழ் இந்தியப் பெண்கள் தங்கள் பண்பாட்டினனயும் இணைத்து மேற்கத்தேயப் பண்பாட்டினையும் இணணத்து ஒரு புதிய பண்பாட்டினன உருவாக்கி இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் வாழ்வது வேடிக்கை.

இந்திய வம்சாவளி ஆண்களைப் பார்ப்போம்:

* ஆண்களில் பெரும்பாலானவர்கள் பரவவயில்லை என்றே கூறவேண்டும் இதில் குறிப்பாக இலங்கைத் தமிழர்களைப் பார்ப்போமேயானால் மிகுந்த சிரமத்துடன் வேலை செய்துவிட்டு மது அருந்துவர், புகை பிடிப்பர் சிலர் போதைக்கு தம்மை அடிமையாக்கிக் கொண்டு வாழ்வது என் கண்களூடாகக் கண்ட உண்மை கனடாவில் இப்படிப் பல தமிழ் இளைஞர்களைப் போதைக்கு அடிமையாக்கித் தம் கைகளுக்குள் போட்டுக் கொள்பவர்கள் பலர். இது தெரியாது வாழ்பவர் சிலர் தம் வாழ்வின் பெரும்பகுதியினை வாழ இழந்து பண்பாடுகளை இழந்து குப்பைகளாகத் தூக்கி எறியப்படுவது உண்மை.

* ஆண்கள் கெட்டால் பரவாயில்லைதான் ஆனால் பிற்காலத்தில் மிகவும் மனம் வருந்துவர்.

* சில ஆண்கள் காமத்திற்கு அடிமையாகி பிற இனத்தவரைத்திருமணம் செய்தும் கொள்கின்றனர். இதனனல் பிரச்சனைகள் ஆரம்பத்தில் ஏற்படாது ஆனாலும் பிற்காலங்களில் பிற இனத்தவள் விட்டு விட்டு ஓட நடுத்தெருவில் நிற்பதுவும் உண்மை.


இவ்வாறு பண்பாட்டழிப்பினுள் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்திய வம்சாவளியினரை தமது பாரம்பரியத்தினூடே எடுத்துச் செல்வதும் தம் இனத்தவரிடையே காதல் கொள்ளச் செய்வதூஉம் சிறப்பு. மேலும் இந்தியத் திரைப்படங்களில் பெரும்பாலானவைகள் தீய குணம் படைத்தவர்களை இனம் காட்டித் தண்டனை வழங்குவது அத்திரைப்படத்தினை நேரில் பார்க்கும் பல தீய மனம் படைத்தவர்களுக்கு விழும் சாட்டை அடி என்றே கூறலாம். இந்தியத் திரைப்படத்துறை என்பது உலகின் அதிக திரைப்படங்களை வெளியிடும் திரைப்படத்துறை பல மொழியினரும் தமது பண்பாடுகள் மொழிகள் அழியாதிருக்கப் பெரிதும் நம்புவது இத்திரைப்படங்களினையே ஆனனலும் இன்றைய இந்தியத் திரைப்படங்கள் பல மேறகத்தேயப் பண்பாடுகளிலிருந்து வேறுபடாமல் அங்கு எடுக்கப்படும் திரைப்படங்களையே இங்கும் மொழி மாற்றி எடுக்கப்படுவது வேடிக்கை!. இந்தியாவிற்கு பெரிய வரலாறு உண்டு அதன் பழமையினை நோக்கிப் போவேமேயானால் உலகின் பண்பபட்டுத் தோற்றம் இந்தியா எனக் கொள்ளலாம். இவ்வாறான ஒரு சிறந்த பண்பாட்டினை உடைய இந்தியப் பண்பாடு மேற்கத்தேயப் பண்பாடுகளுடன் சேர்ந்துவிடுவது தவிர்க்கப்படல் வேண்டும். தவிர்க்கப்பட்டால் நன்று.

இவை அனைத்தும் எனது தனிப்பட்டக்கருத்துக்களே நம்புவதும் நம்பாமல் விடுவதும் உங்கள் கைகளிலேயே!

தினம் ஒரு பாடல்



அக்கம் பக்கம் - கிரீடம்

இப்பாடல் மிகவும் மெல்லிய நடையில் இருப்பதனால் கேட்பதற்கு இனிது இசை அதனினும் புதிது.

கேள்விப்பட்ட செய்திகள்

அமெரிக்கக் கறுப்பினக் காடையர்களால் கொலை செய்யப்பட்ட கனேடியத் தமிழ் இளைஞன்....................

குலோபல் வூட் தொழிற்சாலையில் பணிபுரிபவர் என்னை வழமைபோல் தனது ஊர்தியில் என்னை அழைத்துவரும் வழியில் கூறினார் டொறொன்ரோவின் கீழ்நகர் (டவுண்டவுன்) பகுதியிலோ வொண்டெர்லாண்ட் பகுதியிலேயோ அமரிக்காவில் வந்த கறுப்பினத்தவர்கள் வந்திருந்தனராகவும் அவர்கள் செல்லும்பொழுது அவர்களை முந்துவதற்குச் சென்ற தமிழ் இளைஞர் பட்டாளத்தில் ஒருவர் சுடப்பட்டு இறந்ததாகவும் அவர் கூறினார். பின்னர் ஒரு மாதமோ இரு மாதமோ கழித்து சுட்டவரைத் தேடிப் போய் சுட்டனர் தமிழ் இளைஞர்கள் என்பதனையும் கூறினார். இப்படிக் கறுப்பினத்தவர்கள் தமிழரைக் கொல்வதும் தமிழர்கள் அடக்கி வைத்தனர் என்பதாகவும் கூறினார். இச்சம்பவம் நடந்தது ஒரு வருடமோ சில வருடங்கள் முன்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

பதிலளியுங்களேன் !