புதன், 23 பிப்ரவரி, 2011

கனவுகள்


மதன் கொல்லப்படுதல்…….
புதன்கிழமை, பெப்ரவரி 23, 2011 அன்று மாலை 6:27 அன்று இதனை எழுதுகின்றேன். இன்று காலை நான் ஒரு கனவு கண்டேன், அக்கனவினில் மதனை யாரோ அடித்துக் கொல்லுவது போன்று இருந்தது. அக்கனவினில் மேலும் யாரோ குள்ள மனிதர்களோ, பேய் மனிதர்களோ போன்ற தோற்றத்தினை உடையவர்கள் மதனி இழுத்துச் சென்றனர், நானும் அவனைக் காப்பாற்றத் துடித்துக் கொண்டிருந்தேன் இக்கனவினில் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.


செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

அனுபவம் புதிது


 பெண்களுக்காக கெஞ்சும் அண்ணன்.......
இதனை எழுதும்போது நேரம் காலை 6:14 மணி, பெப்ரவரி 22, செவ்வாய்க்கிழமை, 2011 ஆகும். எமது வீட்டிற்கு நேற்று பபா அக்காக்கள் வந்து சென்றனர், அவர்கள் சென்றபிறகு நிரூபன் யாரோ ஒரு பொம்பளையுடன் தொலைபேசியில் உரையாடுவதனை அவதானிக்கக்கூடியதாகவிருந்தது. யாருடன் என நான் சந்தேகிக்கின்றேனென்றால் சஜிதா என்ற ஸ்கைப் முகவரியுடன் இவருடன் ஒரே கதைக்கும் பெண்தான் என நினைக்கின்றேன். அவளிடம் நிரூபன் "ஏன்க என்னை லவ் பண்ணல, ஏன்க இப்படியிருக்கீங்க ?" எனக் கெஞ்சிக் கூத்தாட எனக்கு அருவருப்பாக இருந்தது. நான் அவனிடம் எவ்வளவோ முறைகள் சொல்லியிருந்தேன் கனடாவில் பெண்களை நம்பாத, கடைசியில் உன்னையே உன்னை சூப்ப வைச்சுவிட்டுத்தான் போய்விடுவாள்கள் என்று, கேட்காமல் ஒரு பெண்ணிற்காக இப்படிக் கெஞ்சிக் கூத்தாடுகின்றான், இவனுக்குத் தம்பியாக இருப்பது வெட்கக்கேடாகவிருக்கின்றது. எனது வாழ்நாளில் எனது அண்ணன் ஒரு பெண்ணிடம் கெஞ்சிக் கூத்தாடுவது எனக்கு ஏற்பட்ட புதிய அனுபவம் ஆகையினால் இவ்வனுபவம் புதிது.

புதன், 16 பிப்ரவரி, 2011

கனவுகள்

 பிணக்குவியல்கள்........

புதன்கிழமை, பெப்ரவரி 16, 2011, 6:48 காலை நேரப்படி இதனை எழுதுகின்றேன். நான் இன்று காலை ஒரு கோரக் கனவினைக் கண்டேன், அதாவது நானும் எனது நண்பர்களும் மருத்துவமனைக்குச் சென்று ஒரு தமிழ் வைத்தியரைச் சந்திக்கின்றோம், அவரைச் சந்தித்தபின்பு வீடு வரும்பொழுது ஒரு பெரிய மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்தேன், உள்ளே நடந்து போகும் பாதையெங்கும் பிணங்கள் உடல் சிதறி காயங்கள் பட்டு கிடந்தன, நான் பயந்து பயந்து சத்தி எடுக்கும் கட்டத்திற்குச் சென்றும் உள்ளே நடந்து சென்று கொண்டிருக்கின்றேன். உள்ளே பல உடல்களின் பாகங்கள் தனித்தனியே கிடப்பதனை அவதானிக்க முடிந்தது. பிறகு யாரோ வந்து பிணங்களைக் குப்பைகளில் போட்டு எம்மை அவற்றைத் தூக்குமாறு கேட்பதனை யூகிக்கமுடிந்தது. பிணங்களில் கண்கள், முக்கிய பாகங்களினை எடுத்து பாதுகாக்கும் மருத்துவமனைதான் அந்த மருத்துவமனை என்பதனை இறுதியாக தெரிந்துகொண்டேன். இக்கனவு என் மனதினைப் பெரிதும் பாதித்தது.

புதன், 9 பிப்ரவரி, 2011

கனவுகள்

கோவிலும் நிர்வாண நடன மன்றமும்......

புதன்கிழமை, பெப்ரவரி 09, 2011, காலை 6:31 மணிபோலே இதனை எழுதத் தொடங்குகின்றேன். நான் இன்று காலை ஒரு கனவினைக் கண்டேன் அதாவது நான் ஒரு இணையம் இருக்கும் அழகிய கணணி அறைக்குள் சென்றேன், அங்கு பலரும் இருந்த காரணத்தினால் சற்று நேரத்திற்குப் பிறகே அங்கு சென்று உபயோகிக்க முடிந்தது. இதற்கு முன்னர் யாரோ சொந்தக்காரருடனான சந்திப்பு ஏற்பட்டது. பெரும்பாலும் ஜீவாக்காவாகத்தான் இருக்கவேண்டும் என நினைக்கின்றேன். பின்னர் நான் ஒரு தமிழ் உணவுக்கடைக்கு சென்று பார்த்த பொழுது செக்ஸ் படங்களிந் விளம்பரம் போட்ட திரைப்படங்கள் விற்கப்பட்டுக்கொண்டிருந்தன. நான் அப்படியே நடந்து சென்று அக்கடைக்கு மறு முனையில் அமிந்திருந்த நிர்வாண நடன மன்றத்திற்கும் செலின்றேந், அங்கு பல பெண்கள் குடித்துவிட்டு ஆட்டம்போட்டுக்கொண்டி நிர்வாணமாக இல்லாது சற்று சிறிய ஆடைகளுடன் ஆடிக்கொண்டிருந்தனர். என்னை அத்தமிழ்க் கடைக்காரரே அங்கு அழைத்தும் செல்வதனை உணர்ந்தேன். பின்னர் பெரிய நீண்ட பாலத்திற்கு மேலே வெள்ளை நிறத்தாலான பெரிய கோவில் ஒன்றினை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். அக்கோவிலிந் கீழே அருகாமையில் ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்ததனைக் காணமுடிந்தது. ஆற்றினில் ஏதோ மக்கள் அங்குமிங்கும் சுற்றித்திரிவதற்கு தண்ணீரில் ஓடும் படகு மாதிரியான ஏதோ ஒன்றும் ஓடுக்கொண்டிருந்தது.




ஞாயிறு, 30 ஜனவரி, 2011

கேள்விப்பட்ட செய்திகள்

தமிழின் மாமாவினை ஏமாற்றிய இலங்கைத் தமிழர்……
நான் காசினோவிற்குப் பலமுறை செல்லும் பொழுது தமிழின் மாமாவும் வருவதுண்டு அவர் குடித்துவிட்டு வெறித்தனத்துடந்தஅன் கதைக்கின்றார் என நான் அவரிடமே கூறுவதுமுண்டு !. ஒரு முறை அவர் கூறினார் தனக்கு கனடாவில் தெரிந்த ஒரு இலங்கைத் தமிழர் இருந்தார், அவர் தான் கனடாவிற்குப் புதிதாக வந்ததில் கஷ்டப்பட்ட பொழுது அந்த இலங்கைத் தமிழர் தான் தனக்கு வேலை எடுத்துத் தந்ததாகவும் ஆனாலும் வேலையின் பழுவிற்கு ஏற்றாற்போல சம்பளம் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் ஒரு முறை அந்த இலங்கைத் தமிழர் இந்தியாவில் சென்று மாட்டுப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுப் பின்னர் தான் தான் வட இந்தியாவிற்குச் சென்று அவரை விடுவித்து, அவரது மனைவிக்கு தங்கும் வசதிகள் செய்து கொடுத்து உதவியதாகத் தெரிவித்தார். மேலும் இலங்கைத் தமிழர் கனடாவிற்கு வந்த பிறகு தான் செய்த உதவிக்கு ஏற்றாற்போல பணம் கொடுக்கவில்லை எனவும் அவன் உண்மையிலேயே தன்னை ஏமாற்றியுள்ளான் எனவும் எம்மிடம் தமிழின் மாமா தெரிவித்தார். தன்னுடன் electrical engineering வேலையினைச் சேர்ந்து செய்தவர் அந்த இலங்கைத் தமிழரெனவும் மேலும் அவருடன் தான் இப்பொழுது எந்தத் தொடர்புகளும் அற்று இருப்பதாகத் தமிழின் மாமா வருத்தத்துடன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சனி, 29 ஜனவரி, 2011

தினக்கருத்து

நான் ஏன் எழுதுகின்றேன் !

இவ்வுலகில் பலரும் பலவிதமான முறையில் தமது எழுத்துக்களை வெளிப்படுத்துவர், அவர்கள் தாம் எழுதுவதற்கான காரணங்களினை வித்தியாசமான முறையில் கூறுவர். அத்தகு காரணங்களில் சிலவனவற்றினை கீழே கொடுக்கின்றேன்:

  •  சிலர் தாம் வயிற்றுப்பிழைப்புக்காக எழுதுவதாகக் கூறுவர்.
  • சிலர் தமக்கு எழுதிக்கொண்டிருக்க ஆசை, அதனால் எழுதுகின்றேன் என்பர்.
  • சிலர் தமது கருத்துக்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ள தாம் எழுதுவதாகப் பதிலளிப்பர்.

நான் ஏன் எழுதுகின்றேன் என்றால், கனடாவில் எனது கருத்துக்களினைப் பகிர்ந்துகொள்ள யாரும் இலர், பலரும் அவர்தம் வேலைகளினைச் செய்ய விரும்பும் இந்நாட்டில் அனைவரும் தத்தம் வேலைகளிலேயே கவனத்தினைச் செலுத்துவர். இத்தகைய நாட்டினில் சற்று இனத்துவேசம், போட்டி ஆகியனவைகள் காணப்படும் ஒரு நாட்டில் எமது கருத்துக்கள், ஆராய்ச்சிகள் எம்மைப் போன்ற குணம் கொண்ட பிற நெஞ்சங்களும் படித்து மகிழவே நான் எழுதுகின்றேன். எனக்கு கவலை வரும்போதும், சந்தோஷம் வரும்போதும் எழுத ஆசை, எழுத்தில் எமது கவலைகளினையும், சந்தோஷங்களினையும் பிறரிடம் கொட்டித்தீர்க்க பெரிய சந்தர்ப்பம் உண்டு. அதுமட்டுமல்லாது என்னுடைய இவ்வாழ்க்கையின் அர்த்தம், நான் பிறந்த காரணம் போன்ற பலவனவற்றினால் சந்தேகக் கண்களுடன் வாழ்கின்றேன், நான் எனது எழுத்துக்களின் மூலம் எனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாட்களும் ஏன் இவ்வாறு இருக்கின்றது, நான் காணும் கனவுகள் ஏன் இவ்வாறு இருக்கின்றது போன்றவற்றினை ஆராய்ந்தோமேயானால் உண்மை புலப்படும். எவ்வாறான உண்மையெனில் ஏன் கடவுள் என்ற ஏதோ ஒரு சக்தி எமை ஆட்டிப்படைக்கின்றது என்று. இவற்றின் உண்மை விளக்கங்களினை எடுத்துக்காட்டுகளுடன் உலகினிற்கு விளக்கிக் கூறுவதற்காகவே நான் ஒரு எழுத்தாளனாக உருவாகினேன்.

Introducing

Introducing to the world the two entertaining Professional DJ's of Toronto                  DJ NIRUBAN  DJ SOUND CRASHER

திங்கள், 24 ஜனவரி, 2011

கனவுகள்

5000 டாலர் வீடு……….
திங்கட்கிழமை, ஜனவரி 24 6:54 ,2011 நேரம் இதனை எழுதுகின்றேன், இன்று காலை நான் ஒரு கனவினைக் கண்டேன், அதில் எனது தாயார் ஒரு வீட்டு புரோக்கரிடம் பெரிய ஒரு வீட்டினை எமக்காக வாங்குவதாக. அதில் என்ன ஆச்சரியம் என்றால் அவர் வாங்கிய பெரிய வீட்டிற்கு வெறும் 5000 டாலர்கள் மட்டுமே கொடுத்ததனை என்னால் அவதானிக்க முடிந்தது. நான் வீடு வாங்கியதும் உள்ளே சென்று பார்த்தேன் மிகவும் அழகிய பெரிய வீடாகவிருந்தது, இப்பொழுதுதான் வீடு கட்டப்பட்டுக்கொண்டிருந்தது என்பதனையும் சரியாக அவதானிக்க முடிந்தது.

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

கனவுகள்

சைகத்துடனான விளையாட்டு……….
ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 23 இன்று காலை நான் நித்திரையினைவிடுத்து எழுந்து கொள்ளும் பொழுது ஒரு கனவினைக் கண்டேன், அக்கனவினில் ஒரு விடுதி அறையொன்று சுற்றவர வெளிச்சத்துடன் இருந்த அறை திறக்கப் பட்டு  அவ்விடுதிக்குள் சைகம் மற்றும் அவள்தம் தகப்பனார் மற்று பிற உறவினர்கள் பலர் அமர்ந்திருந்தனர். பின்னர் நானும் சைகமும் சேர்ந்து மைதானத்தில் பாலிவோல் விளையாட்டு ஆடினோம், சைகத்தினை நான் பார்க்கும்போது ஏதோ சொர்க்கத்தில் இருந்த அனுபவம், அவளது கனவுகள் எனது மனதினைக் கொள்ளை கொண்டு ஒரு சொர்க்க வாசல்தனிற்கு அழைத்துச் சென்றது. மிகவும் ஆனந்த களைப்பினில் சற்று நேரம் நான் ஆழ்ந்திருந்தேன். ஏனோ தெரியவில்லை. இக்கனவினை வியந்தெழுத வார்த்தைகள் இல்லை என்பேன்.

கனவுகள்

777………..
வியாழக்கிழமை, ஜனவரி 13, 2011 காலை நான் ஒரு கனவு கண்டேன் அதில் இஸ்லாமிய ஆசிரியரொருவர் என்னைக் கட்டிப்பிடிப்பதாகவும், மலசல கூடத்தில் நேரத்தினைப் பார்க்கும்போது 7:77 அதாவது 777 என இருந்தது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இக்கனவினைக் கண்ட வேளை பள்ளியில் நான் 68, 68, 68 என மார்க்குகளை வாங்கியிருந்ததும் அதனை நினைந்து வருந்தியதையும் ஒற்று நோக்கிப் பார்க்கலாம், இருப்பினும் நான் காசினோவில் விளையாடும் போது மூன்று 777 அப்படி விழுந்தால் ஜாக்பாட் அதுவே தான் கனவினில் வந்து என்னைப் பயமுறித்தியதோ என்னவோ எனவும் ஒற்று நோக்கிப் பார்க்க இடமுண்டு !. நான் இக்கனவினைக் கண்டதும் ஏதோ பேய்க்கனவினைத் தான் கண்டுவிட்டேன் எனப் பயந்து கணணியில் 777 இலக்கங்கள்இனைப் பரிசோதித்தபோது அது கிருத்துவ சமய முறைப்படி trinity சங்கமிக்கும் நாளோ என்னவோ எனப் போட்டிருந்தது. இதனை எழுதுவது வியாழக்கிழமை, ஜனவரி 13, 2011 காலை 6:50 மணி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 23 மாலை 6:56 மணியிலும் ஆகும்.

பதிலளியுங்களேன் !