சனி, 13 ஆகஸ்ட், 2011

கனவுகள்

ஒரு பெண்ணைத் தேடி......

நான் இன்று காலை ஒரு வித்தியாசமான கனவினைக் கண்டேன், அதில் என்னைப் போன்ற ஒருவர் பெண்ணொருவரின் பின்னே செல்கின்றார். இது பெரும்பாலும் ஒரு திரைப்படத்தில் வருவது போன்றும், ஒரு நிகழ்பட ஆட்டத்தில் வருவது போன்றும் அந்த நபர் அப்பெண்ணிந் பின்னே செல்கின்றார். இறுதி வரையும் அப்பெண்ணினை அடைய முடியாது போய்விடுகின்றது. என்னால் அவரது மந வலி உணர முடிந்தது. நானும் இக்கனவினை விட்டு எழுந்ததும் எனக்கு அக்கனவினிற்குள்ளேயே செல்ல வேண்டுமெனத் தோன்றியது.

வியாழன், 9 ஜூன், 2011

தினக்கருத்து

கிருத்துவமதத்தவரும் கிணற்றுத் தவளைகளும்..........

 ரோன் என்னும் எனது நண்பன் (அவ்வாறு இலகுவாகக் கூறமுடியாது) இவர் இத்தாலிய அம்மம்மாவினைக் கொண்ட கனேடிய நபர் (ஒரே என்னைத் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் நபர்) அதாவது கதைக்கத் தொடங்கினான் என்றால் கதைத்துக்கொண்டே இருப்பான், அதுவும் பெரிய அரக்கத்தனமான குரலில். நன்றாகக் குடித்துவிட்டு வந்து அலட்டுகின்றபவனோ என்ற சந்தேகமும் எனது மனதில் வெகு நாட்களாகவே இருந்து வருவது இங்கு கூறத்தகும். இவனுடன் நான் ஒருமுறை நான் கணணி வகுப்பினில் அதாவது கிரைக் வகுப்பினில் பாடம் கற்க வேண்டிய சூழல். நாம் வழமை போல உரையாடிக்கொண்டிருக்கையில் எமது வகுப்பினில் கல்வி கற்கும் சக மாணவன் அதாவது ஒரு கறுப்பினத்தினைச் சேர்ந்த மானவர் தனது நண்பர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாகக் கூறினார், மேலும் அவர் தெரிவிக்கையில் தான் பிறந்த நாடான ஏதோ ஒரு ஆப்பிரிக்க நாட்டினில் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருப்பது தவறாகக் கருதப் படுவதாகவும் அவ்வாறு ஓரினச் சேர்கையாலர்களாக இருப்பவர்கள் தண்டனைக்குட்படுத்தப் படுவதும் வழக்கமெனவும் கூறினார், அப்பொழுது ரோன் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கெதிராகப் போவது போலச் சற்று பேச்சினை எடுத்தார், நானும் குறிக்கிட்டு கிருத்து சமயத்தவர்கள் கினற்றுத் தவளைகள் போன்றவர்கள், அதாவது கிணற்றுக்குள் இருக்கும் தவளை கிணறைத்தான் தனது உலகம் என எண்ணிக்கொண்டு வெளியே வராது உலகமே அக்கிணறுதான் என நினைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் உண்மையில் அக்கிணற்றுக்கு அப்பால் சென்று பார்க்கையில் பல கினறுகள் பல ஆறுகள், பெரும்பெரும் கடல்கள் என ஓரினச் சேர்க்கையாளர்கள், பிற மதங்கள், பிற பிற பண்பாடுகள் எனப் பல கிருத்துவ சமயத்தினை விடச் சிறந்த விடயங்கள் இருக்கின்றன எனத் தெரிவிக்கையில் ரோன் அதிர்ந்துவிட்டார். இத்தகைய கருத்தினால் நான் கிருத்துவ மதத்தினை புண்படுத்த எண்னுவதாக நினைக்கவேண்டாம், இது வேறு பல விடயங்களுக்கும் பொருந்தும்.

செவ்வாய், 24 மே, 2011

கேள்விப்பட்ட செய்திகள்


நிமலன் கொலை..

நான் அம்மம்மாவுடன் உரையாடிக்கொண்டிருக்கையில் அம்மம்மா லயந்தன் என்ற எமக்குச் சொந்தக்காரரான பெடியனின் குடும்பத்தினைப் பற்றிப் உரையாடத்தொடங்கினார். நானும் ஆவலுடன் கேட்டேன், இவ்வுரையாடல் மே, 24, 2011 செய்வ்வாய்க்கிழமை மதிய வேளை அளவில் இடம்பெற்றது. அம்மம்மா கூறினார் "லயந்தனின் தமயனான நிமலன் இயக்கத்தில் இருந்தவர், அவரை இயக்கத்திலிருந்து தெரியாமல் அவரது தாயார் கூட்டி வர, வீடு தேடி வந்த இயக்கம் நிமலன் மற்றும் அவரது தாயார் ஆகிய இருவரையும் துவக்கால் சுட்டது, சுடப்பட்ட இருவரும் மருத்துவமனைக்குச் சென்ற பின்னர் இறந்தனர் என அம்மம்மா தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் அம்மம்மா கூறிகையில் " தனது தமக்கையார் பிரபாகரனுக்கு உணவுப் பொருட்கள் பலவனவற்றினைக் கொடுத்தது. இருப்பினும் பிரபாகரன் இவ்வாறு தெரிந்தவர்களை ஏன் சுட்டது எனக் கேட்ட போது, பிரபாகரன் தனக்குத் தெரியாமல் போச்சு எனத் தெரிவித்தது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இச்சம்ப்பவம் என்று நடந்தது என நான் எனது அம்மம்மாவிடன் ஆராய்ந்துகேட்டபோது அவர் சரியாகத் தனக்குத் தெரியாது எனக் கூறினார், எவ்வாறு இயக்கம் தான் சுட்டது என உங்களுக்குத் தெரியும் எனக் கேட்டபோது அவர் சொன்னார், ஆமிக்காரர்களின் சீருடையினை அணிந்து கொண்டு வந்த இயக்கத்தினை நிமலன் அடையாளம் கண்டதாகவும் ஆனாலும் சுட்டவுடன் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்கையில் நிமலன் இறந்ததாகவும் தெரிவித்தார். இருப்பினும் நிமலன் சுட்டவுடன் இறந்தது உண்மை இது இவ்வாறிருக்க எவ்வாறு நிமலன் இயக்கம்தான் சுட்டது என பிறருக்குத் தெரிவித்தார் எனக் கேட்க அம்மம்மா சற்றுக் கோபித்துக் கொண்டார். நானும் பதில் தெரியாமலேயே இருந்துவிட்டேன். 

வெள்ளி, 20 மே, 2011

கனவுகள்

வால் நட்சத்திரங்களின் படையெடுப்பு.....
இன்று காலை அம்மா வேலைக்குச் செல்லும் போது எழுந்து பின்னர் சற்று சிறிய நித்திரை ஒன்றினை அடித்தேன், அப்போது நான் ஒரு பள்ளி வளாகத்தில் இருந்துகொண்டிருப்பது போன்ற தோற்றம் அங்கு நான் யாருடனோ உரையாடிக்கொண்டிருக்கையில் திடீரென ஒரு வால் நட்சத்திரம் வந்து எமக்கு அருகில் வீழ்ந்து வெடித்துச் சிதறியது, நாம் அனைவரும் ஓட்டம் எடுத்தோம். நானும் ஓடி ஓடிச் சென்று உடைந்த பாலம் ஒன்றினைத் தாண்டிச் சென்றேன், பாலத்தைத் தாண்டிச் சென்றவுடன் ஒரு சிறிய கிராமம் போன்ற தோற்றம் கொண்ட இடத்தினை அடைந்தேன். 

திங்கள், 2 மே, 2011

கனவுகள்

பவாக்காவுடனான சண்டை...
நானும் அம்மாவும் பவாக்காவால் பேசப்பட்டு ஒரு தனி அறையினில் விடப்படுகின்றோம், அங்கிருந்து நான் அருகில் அமைந்திருந்து லாட்ஜ் போன்ற அறைக்குள் சென்று பார்க்க ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. அங்கு ஒரு பாட்டியும் அமர்ந்திருந்தார். நானும் அங்கு சென்ற பின் எனது அறையினுள் வந்து வானொலிப்பெட்டியினைப் போட்டுப் பார்த்தேன்.

ஞாயிறு, 1 மே, 2011

கனவுகள்

கணணி அறையினுளும் இனத்துவேசம்....
நான் இன்று காலை ஒரு கனவு கண்டேன் அக்கனவினில் நான் ஒரு கணணி அறையினில் அமர்ந்து கொண்டு ஏதோ பாட சம்பந்தமான விடயங்களினைச் செய்துகொண்டிருந்தேன். எனக்கு அருகினில் ஒரு கறுப்பினத்தவன் போன்றவன் எந்னை வேலை செய்யவிடாது எனது கணணியினில் வந்து தான் அமர்ந்து சேட்டை செய்வது போல ஏதோ செய்துகொண்டிருந்தான். நானும் அவனைப் பார்த்துச் சற்றுப் பயந்து தள்ளி வந்துவிட்டேன்.

திங்கள், 21 மார்ச், 2011

கனவுகள்

அமாண்டாவின்   நினைவுகள்.....
 திங்கட்கிழமை மார்ச் 21, 2011 ஆன இன்று காலை நான் ஒரு கனவு கண்டேன் அக்கனவினில் நான் கணணியில் ஏதோ செய்துகொண்டிருக்கும் வேளை பள்ளிக்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருப்பது போலிருந்தது. நானும் புதிதாகவொரு quad இல் சேர ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். நான் அப்பொழுது இப்பொழுது நான் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் விஞ்ஞான ஆசிரியரான சற்று இளவயது மிக்க அமாண்டா ஜாரெல் எனது கனவினில் தோன்றினார். ஆனாலும் கனவினில் அவரிடம் நான் கல்வி கற்று முடிந்திருப்பதாகவும் அவரைத் திரும்பப் பார்க்க எத்தனிப்பதாகவும் நான் விளைகின்றேன் என்பதுவும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இதனை எழுதும் போது நேரம் காலை 6:38 மணியாகும்.

சனி, 26 பிப்ரவரி, 2011

கனவுகள்


எம். ஜி. ஆரின் சந்திப்பு.......
சனிக்கிழமை, பெப்ரவரி 26, 2011 அன்று காலை 9:16 மணிக்கு இதனை எழுதிகின்றேன். இன்று காலை நான் ஒரு கனவினைக் கண்டேன் அக்கனவினில் நான், மற்றும் யாரோ கயானக்காரரின் குழந்தையுடனும் அவர்கள் குடும்பத்துடனும் கடைகளிற்கெல்லாம் ஏறி விளையாட்டுச் சாமான்களினை வாங்கிக் கொண்டிருந்தேன். திடீரென நான் மற்றும் தம்பிநாதன் அண்ணை அவர்களின் தோழர்கள் போன்ற யாரோ ஒருவர்களின் உணவகத்திற்குச் சென்றேன். அவ்வுணவகம் கிருத்துவ உணவகம் போன்றிருந்தது. நிரூபனும் எனக்கருகாமையில் அமர்ந்திருந்தான். அவ்வுணவகத்தில் பெரிய திரை பொருத்திய தொலைக்காட்சிப் பெட்டியும் இருந்தது, உணவகம் சற்றுப் பழமையானதானதொரு தோற்றத்தினை எனக்குக் கொடுத்தது. நான் உணவினை உட்கொள்ளும்போது எனதருகில் ஒரு வயது போன அம்மையார் வந்து அமர்ந்துகொண்டு நிரூபனின் சாப்பாட்டினில் இருந்து கொஞ்சம் எடுத்து சாப்பிட்டார். நானும் வேடிக்கையுடனும், பயத்துடனும் அக்கிழவியினைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர் எனது கனவினில் எம். ஜி. ஆர் தோன்றி ஈழத்துத் தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமான நிலையில் படுகொலை செய்யப் பட்டிருந்ததனை எனக்குக் காட்டினார், மேலும் அசரீதி ஒன்று என்னிடம் ஜனநாயகம் தான் இவ்வன்முறைகளிற்கெல்லாம் ஒரே தீர்வு எனக் கூறியது.

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

கனவுகள்

உலக அழிவு……
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 25, 2011 காலை 6:40 மணிபோலே இதனை எழுதிகின்றேன், இன்று காலை நான் ஒரு கனவு கண்டேன், இக்கனவினில் பெரும்பகுதியும் உலக அழிவினைப் பற்றியே இருந்தது. முதலாவதாக மக்கள் கூட்டம் கூட்டமாக மலை உச்சியின் மீது அமைந்திருந்த ஒரு அரண்மனைக் கட்டடங்களில் இருந்து விழுகின்றார்கள் போன்றும், இருந்த இடத்திலிலிருந்தே அழிகின்றார்கள் போன்றும் இருந்தது. நான் மட்டும் ஒரு கைதிகள் அடைபட்டிருந்த பள்ளத்தாக்கிற்குச் சென்றேன் அப்பள்ளத்தாக்கு மண்ணிற்கு அடியில் கட்டப்பட்டிருந்த அரண்மனையிற்கு என்னை அழைத்துச் சென்றது, அவ்வரண்மனை வேலைக்காரி என்னைப் பார்த்துவிட்டுத் துரத்த ஆரம்பித்தார் என நினைக்கின்றேன். நான் இக்கனவினைக் கண்டதன் காரணம் dragon age origins , red dead redemption ஆகிய நிகழ்பட ஆட்டங்கள் என நினைக்கின்றேன்.

புதன், 23 பிப்ரவரி, 2011

கனவுகள்


மதன் கொல்லப்படுதல்…….
புதன்கிழமை, பெப்ரவரி 23, 2011 அன்று மாலை 6:27 அன்று இதனை எழுதுகின்றேன். இன்று காலை நான் ஒரு கனவு கண்டேன், அக்கனவினில் மதனை யாரோ அடித்துக் கொல்லுவது போன்று இருந்தது. அக்கனவினில் மேலும் யாரோ குள்ள மனிதர்களோ, பேய் மனிதர்களோ போன்ற தோற்றத்தினை உடையவர்கள் மதனி இழுத்துச் சென்றனர், நானும் அவனைக் காப்பாற்றத் துடித்துக் கொண்டிருந்தேன் இக்கனவினில் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.


பதிலளியுங்களேன் !