ஞாயிறு, 23 ஜனவரி, 2011

கனவுகள்

சைகத்துடனான விளையாட்டு……….
ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 23 இன்று காலை நான் நித்திரையினைவிடுத்து எழுந்து கொள்ளும் பொழுது ஒரு கனவினைக் கண்டேன், அக்கனவினில் ஒரு விடுதி அறையொன்று சுற்றவர வெளிச்சத்துடன் இருந்த அறை திறக்கப் பட்டு  அவ்விடுதிக்குள் சைகம் மற்றும் அவள்தம் தகப்பனார் மற்று பிற உறவினர்கள் பலர் அமர்ந்திருந்தனர். பின்னர் நானும் சைகமும் சேர்ந்து மைதானத்தில் பாலிவோல் விளையாட்டு ஆடினோம், சைகத்தினை நான் பார்க்கும்போது ஏதோ சொர்க்கத்தில் இருந்த அனுபவம், அவளது கனவுகள் எனது மனதினைக் கொள்ளை கொண்டு ஒரு சொர்க்க வாசல்தனிற்கு அழைத்துச் சென்றது. மிகவும் ஆனந்த களைப்பினில் சற்று நேரம் நான் ஆழ்ந்திருந்தேன். ஏனோ தெரியவில்லை. இக்கனவினை வியந்தெழுத வார்த்தைகள் இல்லை என்பேன்.

கனவுகள்

777………..
வியாழக்கிழமை, ஜனவரி 13, 2011 காலை நான் ஒரு கனவு கண்டேன் அதில் இஸ்லாமிய ஆசிரியரொருவர் என்னைக் கட்டிப்பிடிப்பதாகவும், மலசல கூடத்தில் நேரத்தினைப் பார்க்கும்போது 7:77 அதாவது 777 என இருந்தது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இக்கனவினைக் கண்ட வேளை பள்ளியில் நான் 68, 68, 68 என மார்க்குகளை வாங்கியிருந்ததும் அதனை நினைந்து வருந்தியதையும் ஒற்று நோக்கிப் பார்க்கலாம், இருப்பினும் நான் காசினோவில் விளையாடும் போது மூன்று 777 அப்படி விழுந்தால் ஜாக்பாட் அதுவே தான் கனவினில் வந்து என்னைப் பயமுறித்தியதோ என்னவோ எனவும் ஒற்று நோக்கிப் பார்க்க இடமுண்டு !. நான் இக்கனவினைக் கண்டதும் ஏதோ பேய்க்கனவினைத் தான் கண்டுவிட்டேன் எனப் பயந்து கணணியில் 777 இலக்கங்கள்இனைப் பரிசோதித்தபோது அது கிருத்துவ சமய முறைப்படி trinity சங்கமிக்கும் நாளோ என்னவோ எனப் போட்டிருந்தது. இதனை எழுதுவது வியாழக்கிழமை, ஜனவரி 13, 2011 காலை 6:50 மணி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 23 மாலை 6:56 மணியிலும் ஆகும்.

புதன், 19 ஜனவரி, 2011

அனுபவம் புதிது

 முதல் வாகன விபத்து.......

நேற்று செவ்வாய்க்கிழமை, ஜனவரி 18, மாலை 6 மணியளவில் தமிழ் என்னை 'ஆடுகளம்' படம் பார்க்கப் போறோம் வாறியா ? எனக் கேட்டான். நானும் "சரி, வாறேன்" என்றேன். நானும் குளித்து வெளிக்கிட்டு 6 மணிக்கெல்லாம் கீழே இறங்கிப் போய்ப் பார்க்க தமிழைக் காணவில்லை, பின்னர் மேலே வந்து நிரூபனைத் தொலைபேசியில் அழைத்து "ஏண்டா தமிழ் இன்னும் வரேல்ல ?" எனக் கேட்டேன். அதற்கு அவன் " நீ கீழ இறங்கிப் போ, அவன் வந்து கொண்டிருக்கின்றான் !" என்றான். நானும் திரும்பக் கேழே இறங்கிப் போக தமிழும் தமிழின் மாமாவும் நிரூபனின் சிவத்தக் காரில் வந்திருந்தனர், நிரூபன் வந்திருக்கவில்லை. சரி எனக் கூறி நான் காரினில் பின் பக்கம் அமர்ந்துகொண்டேன், தமிழ் வாகனத்திநை எடுக்கும்போதே ஏதோ சத்தம் கேட்டது. நான் ஆரம்பித்திலேயே பயந்துவிட்டேன். ஆனாலும் தமிழ் வாகனத்தினை ஓட்டிக்கொண்டு லாரென்சு அவனியூ மற்றும் ஓர்ட்டன் பார்க் வீதியினூடே காரினைத் திருப்பி ஓர்ட்டன் பார்க் வீதியில் சென்று கொண்டிருந்த வேளை இரண்டு பெண்கள் சில்வர் நிற ஃபோர்ட் காரில் வந்து நாம் செல்லும் வழியின் குறுக்கே நின்றார்கள், அமது காரும் அவர்களது காரில் மோதி எமது காரிற்குப் பலத்த அடி. சற்று நேரம் தமிழ் மற்றும் தமிழின் மாமாவிடமிருந்து மூச்சைக் கூடக் கேட்கமுடியவில்லை, நானும் பயந்து போய் கார் புகைக்கின்றது எல்லாரும் வெளியில் வாங்கோ! எனக் கூறி வெளியில் இருந்தோம். காவல்துறையினருக்கு தொலைபேசியில் இரண்டு பெண்களும் அடித்துவிட்டநர், காவல்துறை அதிகாரி ஒருவர் வந்து பார்த்து report எழுதிப் பின்னர் சற்று நேரம் கேள்விகள் கேட்டு, தமிழ் கண்ணாடி போடாது வாகனத்திநை ஓட்டியதற்கு 110 டாலர்களிற்கு டிக்கட் கொடுத்த இரண்டு பெண்களுக்கு மூன்று டிக்கட்டுக்களினைக் கொடுத்தும் மாமா எம்மை அனுப்பி வைத்தார். இதுவே எனது வாழ்நாளில் நான் பார்த்த அனுபவித்த முதல் விபத்து ஆகும்.

செவ்வாய், 21 டிசம்பர், 2010

கேட்ட கடிகள்

ஓமைய்யா ஓமைய்யா...........

தமிழின் மாமாவுடன் நாம் காசினோவிற்குச் சென்று கொண்டிருக்கும் பொழுது தமிழின் மாமா தெரிவித்தார் "சிலோன்காரங்க ஓமைய்யா எனக் கூறும் போது எனக்கு அது ஓமைய்யா, ஊம்பையா" என இருப்பதாகச் சொல்ல காரில் இருந்த அனைவரும் சிரிப்பொலியில் மிதந்தோம். அவர் இவ்வாறு சொல்ல பதிலுக்கு நானும் கவுண்டமணி "ராமைய்யா வஸ்தாவையா" எனச் சொல்லிப் பிலத்துக் கத்திய காமெடியினைச் செய்துகாட்டி அவரது இந்தியப் பாஷைகளினைப் பழித்துக் காட்ட காரில் திரும்பவும் சிரிப்பொலி.

அனுபவம் புதிது

 முதன்முறை காசு பார்த்தது.......

நேற்று இரவு நான், நிரூபன், தமிழ், தமிழின் மாமா ஆகியோர் காசினோ Great blue heron Charity Casino ற்குச் சென்றோம், எனது வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக இன்றே நேற்று இரவு எனக் கொள்ளலாம் காரணம் நானும் நிரூபனும் பல டாலர்களை அள்ளினோம், நான் விளையாடாது நிரூபனுக்குப் பலமுறை உதவி செய்து அவன் பல தடவைகள் நூறு, இருநூறு என அள்ளிக் குவித்தான் நிரூபன், எனக்கு அவனது பங்கில் நூறு டாலர்கள் கிடைத்தன. அவனும் 20 கனேடிய டாலர்கள் போட்டு 100 டாலர்களினை வரும்போது எடுத்துக்கொண்டு வந்தான். பலமுறை நானும் விளையாடியும் எனக்கேதும் பரிசுகள் கிடைக்கப் பெறவில்லை. ஆனால் ஜந்து டாலர்கள் மட்டுமே போகும்போது எடுத்துக்கொண்டு போய் 100 டாலர்கள்வரைக்கும் கொண்டு வந்தது மிகவும் ஆச்சரியம். இதனால் நான் மிகவும் பெருமிதமும், உற்சாகமும் அடைந்தேன்.

திங்கள், 29 நவம்பர், 2010

கனவுகள்

லூகாஸின் சந்திப்பு....
இன்று காலை நான் ஒரு கனவினைக் கண்டேன் அக்கனவினில் எனது 11 ஆம் வகுப்பு ஆங்கில ஆசிரியராகவிருந்த ஜோனாதன் லூகாஸ் பைத்தியங்களை வைத்தியம் பார்க்கும் ஒரு இடம் போன்ற தோற்றத்தினைக் கொண்ட பூங்காவில் யாருடனோ உரையாடிக்கொண்டிருந்தார். அவரை நான் குறிக்கிட்டு இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டேன். அவரால் பதில் கூற இயலவில்லை. ஏதோ இப்பொழுது இல்லை எனப் பதிலளித்தாற்போல எனக்குத் தோன்றியது நானும் உடனேயே அங்கிருந்து நகர்ந்து வருவது போன்றிருந்ததே உண்மை, ஆனாலும் உண்மையில் அதன்பிறகு என்ன நடந்தேறியது என்பது பற்றி எனக்குத் தெரியாது. இக்கனவுதனை நான் கண்டதன் காரணத்தினை அறியேன் ஆனாலும் இக்கனவு நான் லூகாஸுடன் கொண்டிருந்த பகையுணர்வுதான் இவ்வாறு கனவில் அவரைக் காணத்தோன்றியதோ என்னவோ !.

ஞாயிறு, 7 நவம்பர், 2010

கேள்விப்பட்ட செய்திகள்

தீயோர் தப்பிப்பதுவும், நல்லோர் துன்பப்படுவதுவும்...........

போன வெள்ளிக்கிழமையோ அல்லது அதற்கு முந்தைய நாளிலோ என நினைக்கின்றேன் ஒரு தொலைபேசி வந்தது, அதில் வந்த குரல் என்னுடன் biology வகுப்பினில் CALC இனில் கல்விகற்ற பாகிஸ்தானிய இஸ்லாமியப் பெடியனின் குரல் போன்றதொரு குரல் வந்தது, நானும் அவன் தான் என சுதந்திரமாகச் சற்று நேரம் கதைத்தேன் பின்புதான் தெரிந்தது அந்தக்குரல் கென் என்ற கிருஸ்துவ சமயத் தமிழ் நபர் என்று. அவர் நான் விக்டோரியா பார்க் மற்றும் செப்பர்ட் அவெனியூவில் இருந்த காலத்தில் என்னிடம் கிருத்துவ சமயப் போதகம் செய்ய வந்தவர், இவர் மோர்மன் Mormon பிரிவினைச் சேர்ந்தவர். இவர் தான் அன்று தொலைபேசியில் என்னுடன் ஆங்கிலத்தில் உரையாடினார். அவர் என்னை நலம் விசாரித்து எனது தாயார் வேலை செய்கின்றாரா எனக் கேட்டு அவருடன் உரையாடினார். எனது தாயாருடன் உரையாடும் போது அவர் தான் அறிந்த சம்பவம் ஒன்றினை எனது தாயாருக்குத் தெரிவித்தார், அதாவது இரு பணக்காரத் தமிழ் இளைஞர்களின் தீய நண்பர்கள் அப்பெடியன்களின் வாகனத்தினுள் கஞ்சாவினை மறைத்து வைத்தநர் எனவும் பின்னர் காவல்துறையினர் அப்பாவி இளைஞர்களை கைது செய்து பின் உடனடியாக Deport பண்ணிவிட்டனர். இச்சம்பவம் உண்மையாக நிகழ்ந்ததாக கென் கூறினார் என எனது தாயார் என்னிடம் கூறினார். இச்சம்பவம் போல பல இலங்கைத் தமிழ் இளைஞர்கள் கனடா நாட்டினில் வீண் பழி சுமத்தப்படுவதும் தாம் செய்யாத குற்றங்களிற்காக கைது செய்யப்படுவதும் கூடிக்கொண்டே வருவதும் தவறுகள் செய்பவர்கள் தப்பிப்பதுவும் கனடா போன்ற இனத்துவேசம் பிடித்த நாட்டில் அதிகரிப்பது ஒன்றும் பெரிதல்ல....

வியாழன், 28 அக்டோபர், 2010

கனவுகள்

இந்தியாவில் தீவிரவாதிகள்……….
எழுதுவது வியாழக்கிழமை, அக்டோபர் 28, காலை 6:25 மணியளவு, இன்று காலை நான் ஒரு கனவு கண்டேன் அதாவது தீவிரவாதிகள் எனக்கு முன்னால் கட்டிடம் ஒன்றினில் ஏறி நின்று தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள், அப்பொழுது ஒரு தீவிரவாதி சூடு வாங்கி என் அருகில் விழுகின்றான் இன்னொருமுறையும் அவன் சூடு வாங்குகின்றான். இம்முறை என் பக்கத்திலிருந்து குண்டுகள் அவனைத் துளைக்கின்றன. நான் வீடியோ எடுப்பவனோ அல்லது காவல்துறையினைச் சேர்ந்தவனென்பவனோ தெரியவில்லை. நான் இவற்றையெல்லாம் மிக அருகிலிருந்து அவதானித்துக் கொண்டிருந்தது மட்டும் புலம்புகின்றது. இச்சம்பவம் நடைபெறும் இடம் இந்தியாவாகப் புலப்படுகின்றது ஆனாலும் சரியாகக் கூற முடியாத நேரம்.

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

கனவுகள்

சைகம் திரும்பி வந்தாள்............
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 24, 2010 இன்று எனது கனவினில் சைகம் வந்தாள். நான் ஒரு பாழடைந்த வீட்டினில் எனது அம்மம்மாவுடன் தங்கியிருந்தேன், அப்பொழுது மொட்டை மாடி மேலே சைகம் எட்டிப்பார்த்தாள். அவள் என்னைக் கண்டதும் சிரித்தாள், நானும் மேலே ஓடோடிச் சென்று அவளைச் சந்தித்து உரையாடினேன். அவளுடன் "இவ்வளவு காலமும் எங்கிருந்தாய், நான் உன்னை நினைத்துக் கொண்டிருந்தேன் ! என்றெல்லாம் சொல்லி கதைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது திடீரென அங்கு வலர்ந்து தோற்றத்தினை உடைய சிவலையான சைகத்தின் அண்ணன் காரனோ யாரோ வந்து என்னை அடித்துத் தள்ளி மொட்டைமாடியிலிருந்து கீழே விழுத்தினான். அவன் என்னை மட்டும் தாக்காமல் சைகத்தின் பாட்டியினையும் கத்தியாலோ ஏதோ கூறான ஆயுதத்தாலோ கீறிவிட்டான். இவையனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த நான் திடீரென கனவினிலிருந்து திடுக்கிட்டு எழுந்துவிட்டேன்.

பதிலளியுங்களேன் !