செவ்வாய், 21 டிசம்பர், 2010

கேட்ட கடிகள்

ஓமைய்யா ஓமைய்யா...........

தமிழின் மாமாவுடன் நாம் காசினோவிற்குச் சென்று கொண்டிருக்கும் பொழுது தமிழின் மாமா தெரிவித்தார் "சிலோன்காரங்க ஓமைய்யா எனக் கூறும் போது எனக்கு அது ஓமைய்யா, ஊம்பையா" என இருப்பதாகச் சொல்ல காரில் இருந்த அனைவரும் சிரிப்பொலியில் மிதந்தோம். அவர் இவ்வாறு சொல்ல பதிலுக்கு நானும் கவுண்டமணி "ராமைய்யா வஸ்தாவையா" எனச் சொல்லிப் பிலத்துக் கத்திய காமெடியினைச் செய்துகாட்டி அவரது இந்தியப் பாஷைகளினைப் பழித்துக் காட்ட காரில் திரும்பவும் சிரிப்பொலி.

அனுபவம் புதிது

 முதன்முறை காசு பார்த்தது.......

நேற்று இரவு நான், நிரூபன், தமிழ், தமிழின் மாமா ஆகியோர் காசினோ Great blue heron Charity Casino ற்குச் சென்றோம், எனது வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக இன்றே நேற்று இரவு எனக் கொள்ளலாம் காரணம் நானும் நிரூபனும் பல டாலர்களை அள்ளினோம், நான் விளையாடாது நிரூபனுக்குப் பலமுறை உதவி செய்து அவன் பல தடவைகள் நூறு, இருநூறு என அள்ளிக் குவித்தான் நிரூபன், எனக்கு அவனது பங்கில் நூறு டாலர்கள் கிடைத்தன. அவனும் 20 கனேடிய டாலர்கள் போட்டு 100 டாலர்களினை வரும்போது எடுத்துக்கொண்டு வந்தான். பலமுறை நானும் விளையாடியும் எனக்கேதும் பரிசுகள் கிடைக்கப் பெறவில்லை. ஆனால் ஜந்து டாலர்கள் மட்டுமே போகும்போது எடுத்துக்கொண்டு போய் 100 டாலர்கள்வரைக்கும் கொண்டு வந்தது மிகவும் ஆச்சரியம். இதனால் நான் மிகவும் பெருமிதமும், உற்சாகமும் அடைந்தேன்.

திங்கள், 29 நவம்பர், 2010

கனவுகள்

லூகாஸின் சந்திப்பு....
இன்று காலை நான் ஒரு கனவினைக் கண்டேன் அக்கனவினில் எனது 11 ஆம் வகுப்பு ஆங்கில ஆசிரியராகவிருந்த ஜோனாதன் லூகாஸ் பைத்தியங்களை வைத்தியம் பார்க்கும் ஒரு இடம் போன்ற தோற்றத்தினைக் கொண்ட பூங்காவில் யாருடனோ உரையாடிக்கொண்டிருந்தார். அவரை நான் குறிக்கிட்டு இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டேன். அவரால் பதில் கூற இயலவில்லை. ஏதோ இப்பொழுது இல்லை எனப் பதிலளித்தாற்போல எனக்குத் தோன்றியது நானும் உடனேயே அங்கிருந்து நகர்ந்து வருவது போன்றிருந்ததே உண்மை, ஆனாலும் உண்மையில் அதன்பிறகு என்ன நடந்தேறியது என்பது பற்றி எனக்குத் தெரியாது. இக்கனவுதனை நான் கண்டதன் காரணத்தினை அறியேன் ஆனாலும் இக்கனவு நான் லூகாஸுடன் கொண்டிருந்த பகையுணர்வுதான் இவ்வாறு கனவில் அவரைக் காணத்தோன்றியதோ என்னவோ !.

ஞாயிறு, 7 நவம்பர், 2010

கேள்விப்பட்ட செய்திகள்

தீயோர் தப்பிப்பதுவும், நல்லோர் துன்பப்படுவதுவும்...........

போன வெள்ளிக்கிழமையோ அல்லது அதற்கு முந்தைய நாளிலோ என நினைக்கின்றேன் ஒரு தொலைபேசி வந்தது, அதில் வந்த குரல் என்னுடன் biology வகுப்பினில் CALC இனில் கல்விகற்ற பாகிஸ்தானிய இஸ்லாமியப் பெடியனின் குரல் போன்றதொரு குரல் வந்தது, நானும் அவன் தான் என சுதந்திரமாகச் சற்று நேரம் கதைத்தேன் பின்புதான் தெரிந்தது அந்தக்குரல் கென் என்ற கிருஸ்துவ சமயத் தமிழ் நபர் என்று. அவர் நான் விக்டோரியா பார்க் மற்றும் செப்பர்ட் அவெனியூவில் இருந்த காலத்தில் என்னிடம் கிருத்துவ சமயப் போதகம் செய்ய வந்தவர், இவர் மோர்மன் Mormon பிரிவினைச் சேர்ந்தவர். இவர் தான் அன்று தொலைபேசியில் என்னுடன் ஆங்கிலத்தில் உரையாடினார். அவர் என்னை நலம் விசாரித்து எனது தாயார் வேலை செய்கின்றாரா எனக் கேட்டு அவருடன் உரையாடினார். எனது தாயாருடன் உரையாடும் போது அவர் தான் அறிந்த சம்பவம் ஒன்றினை எனது தாயாருக்குத் தெரிவித்தார், அதாவது இரு பணக்காரத் தமிழ் இளைஞர்களின் தீய நண்பர்கள் அப்பெடியன்களின் வாகனத்தினுள் கஞ்சாவினை மறைத்து வைத்தநர் எனவும் பின்னர் காவல்துறையினர் அப்பாவி இளைஞர்களை கைது செய்து பின் உடனடியாக Deport பண்ணிவிட்டனர். இச்சம்பவம் உண்மையாக நிகழ்ந்ததாக கென் கூறினார் என எனது தாயார் என்னிடம் கூறினார். இச்சம்பவம் போல பல இலங்கைத் தமிழ் இளைஞர்கள் கனடா நாட்டினில் வீண் பழி சுமத்தப்படுவதும் தாம் செய்யாத குற்றங்களிற்காக கைது செய்யப்படுவதும் கூடிக்கொண்டே வருவதும் தவறுகள் செய்பவர்கள் தப்பிப்பதுவும் கனடா போன்ற இனத்துவேசம் பிடித்த நாட்டில் அதிகரிப்பது ஒன்றும் பெரிதல்ல....

வியாழன், 28 அக்டோபர், 2010

கனவுகள்

இந்தியாவில் தீவிரவாதிகள்……….
எழுதுவது வியாழக்கிழமை, அக்டோபர் 28, காலை 6:25 மணியளவு, இன்று காலை நான் ஒரு கனவு கண்டேன் அதாவது தீவிரவாதிகள் எனக்கு முன்னால் கட்டிடம் ஒன்றினில் ஏறி நின்று தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள், அப்பொழுது ஒரு தீவிரவாதி சூடு வாங்கி என் அருகில் விழுகின்றான் இன்னொருமுறையும் அவன் சூடு வாங்குகின்றான். இம்முறை என் பக்கத்திலிருந்து குண்டுகள் அவனைத் துளைக்கின்றன. நான் வீடியோ எடுப்பவனோ அல்லது காவல்துறையினைச் சேர்ந்தவனென்பவனோ தெரியவில்லை. நான் இவற்றையெல்லாம் மிக அருகிலிருந்து அவதானித்துக் கொண்டிருந்தது மட்டும் புலம்புகின்றது. இச்சம்பவம் நடைபெறும் இடம் இந்தியாவாகப் புலப்படுகின்றது ஆனாலும் சரியாகக் கூற முடியாத நேரம்.

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

கனவுகள்

சைகம் திரும்பி வந்தாள்............
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 24, 2010 இன்று எனது கனவினில் சைகம் வந்தாள். நான் ஒரு பாழடைந்த வீட்டினில் எனது அம்மம்மாவுடன் தங்கியிருந்தேன், அப்பொழுது மொட்டை மாடி மேலே சைகம் எட்டிப்பார்த்தாள். அவள் என்னைக் கண்டதும் சிரித்தாள், நானும் மேலே ஓடோடிச் சென்று அவளைச் சந்தித்து உரையாடினேன். அவளுடன் "இவ்வளவு காலமும் எங்கிருந்தாய், நான் உன்னை நினைத்துக் கொண்டிருந்தேன் ! என்றெல்லாம் சொல்லி கதைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது திடீரென அங்கு வலர்ந்து தோற்றத்தினை உடைய சிவலையான சைகத்தின் அண்ணன் காரனோ யாரோ வந்து என்னை அடித்துத் தள்ளி மொட்டைமாடியிலிருந்து கீழே விழுத்தினான். அவன் என்னை மட்டும் தாக்காமல் சைகத்தின் பாட்டியினையும் கத்தியாலோ ஏதோ கூறான ஆயுதத்தாலோ கீறிவிட்டான். இவையனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த நான் திடீரென கனவினிலிருந்து திடுக்கிட்டு எழுந்துவிட்டேன்.

திங்கள், 18 அக்டோபர், 2010

கனவுகள்

பாடசாலையினை விட்டு வெளியேறும் கனவு.........
அக்டோபர் 18, 2010 திங்கட்கிழமை காலை 6:16 மணியளவில் இதனை எழுதுகின்றேன். இன்று காலை நான் ஒரு பள்ளியிலிருந்து வெளியேற்றப்படுவது போன்ற கனவினைக் கண்டேன். வெளியேறும்பொழுது இரகசிய இலக்கத்தினைக் கொடுத்து வெளியேறுகின்றேன். வெளியேறும் பள்ளியானது கிட்டத்தட்ட 'கால்க்' போலவே இருந்தது. இதற்கு முன்னர் நான் ஏதோ பொருட்களி வெளியேறும் வழியில் இருந்த காவலரணில் வாங்கியதாகத் தோன்றுகின்றது.

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

தினக்கருத்து

கறுத்தக் கிருஷ்ணர் நீலநிறமாக்கப்பட்ட கதை……..
அவதார் திரைப்படமானது இந்து சமயத்தில் வந்த கிருஷ்ணரை மையமாக வைத்து ஜேம்ஸ் கேமரூன் எடுத்தது உலகறிந்த உண்மை. இத்திரைப்படத்தில் நீல நிற உயிரினம் ஒன்று கிருஷ்ணரிற்குப் பதிலாக போடப்பட்டுள்ளது மேலும் அந்நீல நிறத்திலான கிருஷ்ணரின் வடிவத்தினையுடைய வேற்றுக்கிரக இனத்தினை இந்து சமயத்திலிருந்து எடுத்ததாக ஜேம்ஸ் கேமரூனே சொன்னது உண்மை. இவரது பாத்திரமான நீல நிற இனமும்  இந்து சமயத்தினர் வழிபடும் கிருஷ்ணரும் ஒன்றாகும் ஆனாலும் நீல நிறத்தினை உடைய கிருஷ்ணர் உண்மையிலேயே கறுப்பு நிறத்தோலையுடைய மனிதரே என்பது தான் உண்மை. அதற்குச் சான்றாக சமஸ்கிருத்அ மொழியில் 'கிருஷ்ணா' என்றால் கறுப்பு அல்லது நீல நிறமென்பதன் அர்த்தம். நான் ஏன் இதில் வரும் நீல நிறக் கிருஷ்ணரை ஏற்கவில்லையென்றால் நீல நிறத்தையுடைய மனிதர்கள் இவ்வுலகில் பிறக்கவில்லை அவ்வாறு பிறந்து வாழ்ந்த கிருஷ்ணர் என்ற கதாபாத்திரம் கறுப்புத் தோலையுடைய திராவிட இன மனிதரையோ அல்லது ஆரிய திராவிடக் கலப்பினால் வந்த மனிதரையோ குறித்திருக்கலாம். இவை மாறி கிருஷ்ணர் நீல நிற வடிவத்தினையுடைய மனிதராக மாற்றப்பட்டிருக்கலாம். இவை எனது தனிப்பட்டக்கருத்துக்களாலும்.

சனி, 16 அக்டோபர், 2010

தினக்கருத்து

மேற்கத்தேயமும் யூதர்களின் கறுத்த ஆடையும்…………
பெரும்பாலான மேற்கத்தேய உலகத்தினர் கறுப்பு நிற ஆடையினை அணிந்துகொள்வது தெரிந்ததே. இவர்கள் இவ்வாடையினை பாரசீகத்தினரிடமிருந்து பெற்றுக்கொண்டனர் என்பது வரலாறு கூறும் செய்தி. பாரசீகத்தேயப் பண்பாடுகளானது யூதர்களின்  ஏப்ரகாமியப் பண்பாடுகளுடன் ஒத்தே இருப்பதும் பாரசீக மக்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியராகவிருப்பினும் அச்சமயப் பண்பாடுகளும் ஏப்ரகாமிய வழிப் பண்பாடுகளே என்பதுவும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.ஏப்ரகாம், மோசஸ், ஜேசு போன்ற யூதர்களின் பரம்பரையினரான பாரசீகத்தினர் மேல் அங்கியினை அணியும் பழக்கத்தினை மேற்கத்தேயரான ஜரோப்பியர்களுக்கும் விளக்கியிருப்பர் அல்லது யூதர்களின் கட்டுப்பாட்டுக்குள் மேற்கத்தேயம் இன்று வந்தது போலே யூதர்கள் கறுப்பு நிற மேலாடை அணியும் பழக்கமும் மேற்கத்தேயரால் கடைபிடிக்கப்பட்டிருக்கலாம். இவ்வாறான கறுப்பு நிற மேலாடையினை அணிவது வேலைத்தளங்களில் மட்டுமல்லாது ஹாலிவுட் திரைப்படங்களிலும் பார்க்கமுடியும். எடுத்துக்காட்டாக பேட்மேன் (Batman), மென் இன் பிளாக் (Men in Black) போன்ற பல திரைப்படங்களிலும் யூதர்களுடைய கறுத்த மேல் அங்கியும் கறுத்தத் தொப்பியுமே சிறந்த ஆடைகளென வெளிப்படையாக அல்லாது மறைமுகமாகக் காணப்படுவது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. பாரசீகத்திலிருந்து மேலாடை அணியும் பழக்கம் வந்ததென்றால் நிச்சயம் அது யூதர்களின் பண்பாடான  ஏப்ரகாமியப் பண்பாடுகளே தான் காரணம் என நான் இங்கு கூறும் தினக்கருத்தாகும்.

பதிலளியுங்களேன் !