ஞாயிறு, 17 மே, 2009

அனுபவம் புதிது

கனடாவில் ஒரு தமிழ்ப் பிச்சைக்காரர்..............


நான் விக்டோரியா பார்க் (Victoria Park) மற்றும் பின்ச் (Finch) தெருக்களினூடாக நடந்துவந்துகொண்டிருந்த சமயம் ஒரு தமிழர் என்னையே பின்பற்றிவந்தார். நான் புலோக் ஃபஸ்டர் (Blockbuster Video) கடைக்குள் நுழைந்ததும் என்னிடம் வந்து "நீங்கள் தமிழே" என வினவினார். நானும் கூறினேன் ஆமாம் என்று.பின்னர் கேட்டார் நீங்கள் பக்கத்தில் உள்ள விடுதிக்கட்டடத்திலா குடியிருக்கின்றீர் என்று. நான் "இல்லை" என்றேன். அவர் சற்று வயது போனவர், அவரது மீசை நரைத்து இருந்தது. அன்று என்னை விட்டுச் சென்றார் அவர், ஆனால் ஒருநாள் அதே நபரை நான் எனது தாயுடன் டாலர்ஸ்டோரில் (Dollar Store) பொருட்கள் வாங்கச் செல்லும் வேளை சந்தித்தேன். அங்கு வந்த அவர் எம்மிடம் "நீங்கள் தமிழே" என வினவினார். பின்னர் "என்னட்ட பஸ் டோக்கன் (Token) இல்லை"எனவும் "சில்லறை இருக்கே" எனவும் கேட்டார். அதற்கு நான் "நீங்கள் homeless ஆ" என வினவினேன். அவர் இல்லை எனப் பதிலளித்தார். பின்னர் எனது (Purse) இலிருந்து சில்லறையை நான் கொடுக்க எத்தனித்த வேளை எனது தாயார் கொடுக்க வேண்டாம் எனத் தடுத்துவிட்டார். பின்னர் Mall ற்குள் உள்ள வால்மார்ட் (Walmart)ற்குள் நாம் சென்ற போதும் அவர் தொப்பி அணிந்து புத்தகப் பையொன்றினைச் சுமந்தவாறு எம்வழியே சென்றார். நாம் Shopping செய்ததற்குப் பின்னர் வெளியேறிய சமயம்புகை பிடித்துக் கொண்டு வெளியில் நடந்து சென்றார். பிறகு வீட்டில் வந்து யோசித்தேன் "ஆமா இவர் புகை பிடிப்பதற்குக் கையில் காசு வைத்திருக்கின்றாரே ! அக்காசினைபேருந்தில் பயணம் செய்வதற்கு வாங்கும் சீட்டினை வாங்க ஏன் உபயோகிக்கவில்லை" என்று. இவ்வாறான Welfare கொடுக்கும் கனடா நாட்டில் வாழ்ந்துகொண்டுபணத்தை வீணே செலவு செய்து பின்னர் மற்றவர்களிடம் கையேந்தும் இவர்களைப் போன்றவர்களின் குணத்தினையும் நான் அன்றிலிருந்து அறிந்து கொண்டேன். இச்சம்பவம்எனது வாழ்நாளில் ஒரு பாடமும் கனடாவில் தமிழர் பிச்சை ஏந்தி என்னிடம் வந்த புதியதொரு அனுபவமும் ஆகும்.

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !