ஞாயிறு, 17 மே, 2009

அனுபவம் புதிது

கனடாவில் புகையிரத வண்டியில் கூட இந்தோ - ஜரோப்பியர்களின் இனத்துவேசம்...........

நான் Global Wood Custom வேலைத்தளத்திலிருந்து டான்ஃபோர்த் புகையிரதப் பாதையினூடாக வந்துகொண்டிருக்கும் வேளை ஒரு இனத்துவேசப் பிரச்சனையினைப்பார்த்தேன். அதாவது ஒரு வெள்ளை நிற இனத்தினைச் சேர்ந்த அம்மையார் தான் அமர்ந்திருந்த இருக்கையின் அருகாமையில் இருந்த இருக்கையில்தனது பொருட்களையும் சேர்த்து வைத்திருந்தார். புகையிரதம் அடுத்த தரிப்பிடத்தில் நின்ற வேளை அப்புகையிரதப் பெட்டியினுள் ஒரு கறுப்பினத்தினைச் சேர்ந்த பெண்மணி அமர முயற்சி செய்து கொண்டிருந்தார். அச்சமயம் அப்புகையிரதப் பெட்டி அதிக சனக்கூட்டத்துடன் காணப்பட்ட காரணத்தினால்அவரால் உட்கார இயலவில்லை. இதனால் வெள்ளைக்கார அம்மணி தனது பொருட்கள் வைத்திருந்த இருக்கையில் அமர எத்தனித்துச் சென்றார்.அவ்வெள்ளைக்கார அம்மையார் தனது பொருட்களை எடுக்க மறுத்தார் அதனால் பிரச்சனை ஆரம்பித்தது. கறுப்பின அம்மையாருடன் அவர் தகாத வார்த்தையான "Nigger" அதாவது "கறுப்பர்" என்னும் பொருள்படும் வார்த்தையினை உபயோகித்தார். இவ்வார்த்தையினைக் கேட்டு கறுப்பினப் பெண்மணி "Yeah I am a Mother fucking Nigger" எனக் கோபத்துடன் பதிலடி கொடுத்தார். பின்னர் வெள்ளை இன சற்று வயது போன இனத்துவேசப் பெண்மணிகூறினார் "You are a Thief" "I have the Education that is twice as you" என வதை சொற்களால் கூறினார். இதனைக் கேட்ட நான் எள்ளி நகைத்தேன்காரணம் படித்தும் இப்பெண்மணி முட்டாளாக உள்ளாரே என்று. பிறரது இருக்கையினை அதுவும் பொதுமக்கள் சொத்தினை தன்னகத்தே வைத்துக்கொண்டுஅவர் அவ்வாறான வார்த்தைகளை உபயோகித்து பேசியது பிழையென ஒரு வெள்ளைக்காரர் கூறினார் அவர் மேலும் இருக்கையினை அக்கறுப்பினப்பெண்மணிக்குக் கொடுத்து விட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமே எனவும் கூறினார். அச்சமயம் எனது இருக்கைக்கு அருகாமமயில் ஒரு கறுப்பின இளம் வயது மிக்க பெண்மணியும் ஒரு இள வயது வெள்ளை இனப்பெண்மணியும் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்பெண்மணிகள் இச்சம்பவத்தினைப் பார்த்துச் சிரித்தே விட்டனர், இந்த 21ம் நூற்றாண்டிலும் இனத்துவேசமாக அவ்வெள்ளை இனப் பெண்மணி இருப்பதை எண்ணியே அவர்கள் எள்ளி நகைத்தனர்.பின்னர் அப்பெண்மணிகளில் கறுப்பினப் பெண்மணி இருக்கை இல்லாத கறுப்பினப் பெண்மணியிடம் கூறினார் அருகாமையில் ஒரு இருக்கை இருக்கின்றது அங்கு சென்று அமருங்கள் இங்கு சண்டை செய்யாமல் என்று. அக்கறுப்பினப்பெண்மணியும் அங்கு சென்று அமர்ந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் எனது வாழ்நாளில் புககயிரத்தத்தில் ஏற்பட்ட புதிய அனுபவம்.

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !