புதன், 26 மே, 2010

தினக்கருத்து

திராவிடர்களுக்கென ஒரு மொழி வேண்டும்..........

தமிழ் மொழியின் தோற்றத்திற்கு வித்தாக விளங்குவது அகத்திய மாமுனிவர் எழுதியதாகக் கருதப்படும் அகத்தியம் என்னும் நூல். அகத்திய முனிவரின் சீடரான தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எனும் நூல் தமிழ் மொழியின் தோற்றத்திற்கு சான்றாக இன்று அனைவரால் கூறமுடியும் நூலாக உள்ளது, அகத்தியம் என்னும் நூல் இன்றளவும் கிடைக்கவில்லை என்பது உண்மை. தொல்காப்பிய நூலானது ஆரிய முனிவராக இருக்கக்கூடிய தொல்காப்பியர் இயற்றப் பட்டிருக்கக்கூடும். இக்காரணத்தினால் தமிழ் மொழி ஒரு ஆரிய மொழியே அன்று திராவிட மொழி அல்ல. ஆரிய மொழியான தமிழ் மொழியினை கறுப்புத் திராவிடர்கள் அதாவது உண்மையான இந்தியர்கள் உபயோகிப்பதற்குக் காரணம் ஆரியர்களின் கட்டாயச் சமயத் திரிப்பு, பண்பாட்டுத் திரிப்பு எனவும் பதிலளிக்கலாம். எனது இத்தனிப்பட்டக் கருத்திற்கு நூறுசதவீதம் உண்மையென ஒத்துக்கொள்ள முடியாது. கி. மு. 500 முதலே தோற்றம் பெற்றிருக்கக்கூடிய தமிழ் மொழி பல மாற்றங்களினையும், பலவித சேர்க்கைகளினாலேயும் இன்று அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆகவே இத்தமிழ் மொழி ஆரிய மொழியானாலும் திராவிட மொழியாய் இருப்பினும் பரவாயில்லை அதனை வளர்த்தெடுத்தால் நன்று. திராவிடர்களின் பண்பாட்டழிப்புக்களில் முதன்மை வகித்தவர்களாகக் கருதப்படும் ஆரியர்களின் மொழியாக இத்தமிழ் மொழியினை முழுமையாக ஏற்க முடியாவிடினும் சிறிதளவேயினும் ஏற்றுக்கொள்வது சிறந்தது. இத்தகைய காரணங்களினால் திராவிடர்களின் சிறப்பான பண்பாடுகளிற்கேற்ப புதியதொரு பகுத்தறியும் மொழியொன்று உருவாக்கம் பெற்றால் நன்று என நான் கருதுகின்றேன்.

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !