வெள்ளி, 7 அக்டோபர், 2011

அனுபவம் புதிது


பிச்சை எடுத்தவரின் கதை..
இன்று நான் பாடசாலையினை விட்டு புகையிரதத்தில் வந்துகொண்டிருந்தேன். அப்பொழுது திடீரென ஒரு வெள்ளைக்கார நபர் எனதருகில் வந்து இரண்டு டாலர்கள் இல்லாவிடில் ஏதேனும் பணம் இருந்தால் உதவி புரியுமாறு கூறினார். அதனை அவர் ஒரு சிறிய அட்டைதனில் எழுதியிருந்தார். நானும் முதல் இல்லை என்று கூறிப் பின்னர் எனது பேர்ஸினில் இருந்து பேருந்து டோக்கன் ஒன்றினை எடுத்துக் கொடுத்தேன். பின்னர் அவர் எனதருகில் வந்து நிற்க நானும் ஏன் இவ்வாறு பிச்சை எடுக்கின்றீர் என ஆங்கிலத்தில் வினவினேன். அவரும் தான் 40 ஆயிரம் டாலர்கள்வரை வருடத்திற்கு சம்பாதித்து இப்பொழுது நோயாளிகளிற்கான அரசாங்கம் வழங்கும் தொகையினைப் பெற்றுக்கொண்டு 14 ஆயிரம் அளவில்தான் சீவியம் நடப்பதாகக் கூறினார். நானும் நீங்கள் தனியாகவோ இருக்கின்றீர்கள் எனக் கேட்டதற்கு இல்லை தான் குடும்பமாக இருந்தேன், மகள் இருந்தாள், எனக்கூறி தான் தனியாக இருப்பதாகவும் விடுதி ஒன்றில் தங்கி இருப்பதாகவும் தெரிவித்தார். அவர் தனக்கு யாரோ கதைப்பது போன்ற குரலொலிகள் கேட்பதாகவும் எனக்குக் கூறியது மிகவும் பரிதாபமாக இருந்தது. நானும் அவரை கஞ்சா அடிக்கும் நபர் எனக் கூறினேன், இருப்பினும் எது உண்மை, எது பொய் எனத் தெரியாது உடனேயே இறுதியில் அவர் ஒரு கஞ்சா அடிமை என எவ்வாறு சொல்லமுடியும். இவ்வாறு கனடாவில் பிச்சை எடுக்கும் நபரி ஒருவரிடம் அவரது கதையினைக் கேட்ட இந்த அனுபவம் ஒரு புதிய அனுபவமே.

தினம் ஒரு பாடல்

உனக்கென்ன - அட்டகாசம்

அஜித்குமாரின் ஆட்டம் இதில் நன்றாக உள்ளது.

பதிலளியுங்களேன் !