கணவனின் இறப்பின் துயரால் உயிர் துறந்த பெண்மணி...............
நான் இரவு நேர வேலையில் குளோபல் வூட் தொழிற்சாலையில் ஈடுபட்டிருக்கும்வேளை எனது மேற்பார்வையாளரான முகமது என்னிடம் கூறினார் குளோபல் வூட்டின் இன்னொரு கிளைத் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தாராம் ஒரு தமிழர், அவர் போர்க்லிஃப்ட் ஓட்டுனராக பணிபுரிந்த வேளை தவறி வீழ்ந்து பின் இறந்தாரெனவும் முகமது கூறினார். மேலும் கணவன் இறந்த செய்தியினை அறிந்த அவரது மிகவும் அழகிய மனைவி அவர்தம் இரு குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார் என்றும் முகமது கூறினார். இச்சம்பவம் நடைபெற்றது இரண்டாயிரத்து ஜந்தாம் ஆண்டு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது மேலும் நான் காலை நேர வேலைப் பணியில் சந்தித்த சற்று உடல் பருமனான தமிழ்ப் பெண்மணியான விஜயாவின் சொந்தக்காரரே தற்கொலை செய்துகொண்ட பெண்மணி என்பதனையும் முகமது கூறினார். குளோபல் வூட் நிறுவனத்தினரால் அப்பெண்மணிக்கு வழங்கப்பட்ட காப்புறிப்பணத்தினை அவர் ஏற்க மறுத்து தற்கொலை செய்துகொண்டார் என்பது முகமது வாயால் நான் கேட்ட செய்தியாகும், இச்செய்தியை குபேந்திரனிடமும் கேட்டபொழுது அதனை அவரும் உறுதி செய்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்கள் கணவன் இறந்த பின் தம்மை மாய்த்துக் கொள்ளும் பண்டைய இந்துக் பண்பாட்டினால் அழிகின்றனரோ அல்லது கனடாவில் தனிமையினால் ஏற்படும் மற்றும் வீட்டிற்குள்ளேயே அடைபட்டுக்கிடக்கும் தன்மை காரணமாக வரும் மன அழுத்தம் காரணமாக இவ்வாறு உயிரை முட்டாள்தனமாக மாய்த்துக் கொள்கின்றனரோ தெரியாது, ஆனாலும் வாழப் பிறந்த குழந்தைகளையுமா ஈழத்தை பிறப்பிடமாகக் கொண்ட இப்பெண்மணி கொல்ல வேண்டும். இவை அனைத்தும் சிலப்பதிகாரம் என்ற தமிழ்க் காப்பியத்தினால் வந்த மூட நம்பிக்கைத்தனமான பழக்கமோ!.