வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

பிரியாவிடைகொண்ட சூரியன் !

இவன் ஈழவேந்தன் ஆண்ட கரனாவான்,
அவன் சோழவேந்தன் எனத் தனைக் கூறிக் கரிகாலனென்றான்,
எவன் எதிர்த்தனன் இத்தனியோன் தான்கொண்ட ஆட்ச்சியினைதான்,
கோன் பிழைத்ததன் காரணம்தான் போர் செய்தனன்,
மீன் பிடித்தவன் சாதியின் புதல்வனிவன்
நான் காமானபோரின் இறுதியில் விடை பெற்றவன்...


யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}

இவனைப்பற்றி முற்றிலும் தெரிந்துகொள்ளேன் !



ஈராயிரவர் பட்டம்தரித்தும் எழுத்தாளன் இவன்!
ஆயிரமேல் படத்துண்டும் ஏற்றும் கூகிளன் இவன்!
பிரதமரைக் கடிந்தும் வாழும் கள்ளன் இவன்!
பூனையெனப் பெயரும் கொண்ட நீ பைப்பினன் இவன்!
பாட்டிமீது பெரும் அக்கறை  கொண்டவன் இவன்!
எக்காலத்தும் பிடித்த எனக்கொண்ட உலகினவன் இவன்!


யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}

தினக்கருத்து


இலங்கைத்தமிழர் திரைத்துறையும் அதன் வருங்காலமும்........

இலங்கையில் இருந்து தமிழில் வரும் திரைப்படங்கள் மிகக்குறைவே இவற்றிற்கு ஈழப்போர் ஓர் முக்கியகாரணம் மற்றது இலங்கைத் தமிழர்களிடையே தொலைத்தொடர்பாடல் மிககுறைவாகவிருப்பதுவும் ஒரு காரணம்.இவை இவ்வாறிருக்க வெளிநாடுவாழ் இலங்கைத் தமிழர்களினால் சில திரைப்படங்கள் வெளிவருவதுவும் அனைவரும் அறிந்ததே இஃது இவ்வாறிருக்க மிகவும் பெரும்பொருட்செலவில் இந்தியத்திரைப்படத்துறையினரைப்போன்றோ ஹாலிவுட் திரைப்படத்தினரைப் போன்றோ உலக சந்தையில் பிரபலமாக எந்தவொரு திரைப்படமும் இல்லை. இவ்வாறு உலக மக்களைக் கவரும் வகையில் உலகித்தினிற்கு இலங்கைத்தமிழர் பிரச்சனைகளினை எடுத்துச் சொல்லும் அளவிற்கு எந்தவொரு திரைப்படங்களும் இல்லை, ஆக வெளிநாடுவாழ் இலங்கைத் தமிழ்ச் சிறார்கள் தமது நாட்டுப்பிரச்சனைதனை உலகளவிலும் எடுத்துச் சொல்வதற்கு தத்தம் வரலாறுகளினையோ தாம் வாழும் நாடுகளின் நடப்புவிடுப்புகளைத் திரைப்படங்களாகவோ எடுத்தால் நன்று. இதன் மூலம் எங்கெங்கு எவ்வாறு இலங்கைத் தமிழர் பண்பாடு மாறுகின்றது, அது வாழுகின்றதா அல்லது அழிகின்றதா என்பதனையும் தெரிந்துகொள்ளலாம். இன்றைய வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழ் இளையோரில் பெரும்பான்மையினர் தமிழ் தெரியாதே வளர்வது மிகவும் துக்கமாகவுள்ளது இருப்பினும்  இவர்களது சந்ததியினர் அவர்களுக்குப் பிறக்கும் சந்ததியினர் வந்து தெரிந்து கொள்வதற்குத் திரைப்படத்துறையில் வளர்ச்சி வேண்டும் இலங்கைத்தமிழ்மொழியில் பல திரைப்படங்கள் வெளிவரவேண்டும். வருங்கால கட்டங்களில் அதாவது 50, 60 ஆண்டுகளில் தமிழகத்திலும் தமிழ் வேறொரு தமிழ் வடிவத்தினை எடுக்க வாய்ப்புண்டு அதுபோலவே இலங்கைத் தமிழும் வேறொரு தமிழ் வடிவம் பெற வாய்ப்புண்டு. இவ்வாறு இன்று எவ்வாறு இலங்கைத்தமிழ் மொழி இருக்கின்றதோ என்பதனை வருங்காலங்களில் உள்ள தமிழ்க்குடி அறிய திரைப்படத்துறை முக்கியம். இன்று எடுக்கப்போகும் திரைப்படங்கள் நாளை ஒரு வரலாற்றுச் சான்று ஆகவே இலங்கைத்தமிழர்கள் இந்தியாவில் இருந்து வரும் திரைப்படங்களிற்கே முக்கியத்துவம் கொடுக்காது தமது கலாச்சாரம் , பாரம்பரியங்களினைக்கட்டிக்காக்கும் விதமாக புதிய இலங்கைத்தமிழ்த் திரைப்படத்துறையினை ஆரம்பித்தால் மிக நன்று இவை எனது தனிப்பட்டக்கருத்துக்களே !.

பதிலளியுங்களேன் !