கண்ட கனவுகள் பலிக்கின்றனவோ............
ஏர். ஆர் ரஹ்மான் ஆஸ்கார் வென்றதனையும் நான் அதற்கு முந்தைய காலத்தில் தமிழரான நான் ஆஸ்கார் வென்று தமிழ் பேசியதனையும் நினைந்து பார்க்கின்றேன். இதில் 2008 ஆம் ஆண்டில் ஏ. ஆர். ரஹ்மான் ஆஸ்கார் விருதினை வென்றதனை நான் முன்கூட்டியே என்னூடாக கண்டுகொண்டேன் என்பதற்கு வேறன்ன வேண்டும். இதே போன்றதொரு நிகழ்வினை நான் Word pad இல் எழுதியிருந்ததனை நினைந்து வியக்கின்றேன்.இது ஒரு தற்செயல் நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியாது, காரணம் இக்கனவினைக் கண்ட வேளை நான் பாடசாலைக்குச் செல்லாது உறங்கியிருந்தேன். அனைத்தினையும் வெறுத்து கவலை நிலையில் இருந்தேன்.இச்சம்பவம் மட்டுமல்லாமல் பின்வரும் சம்பவமும் என் கனவுகள் பின்னாட்களில் பலித்ததற்கான எடுத்துக்காட்டுச் சம்பவமாக 3d வடிவில் நீல நிற கிருஷ்ணரின் படத்தினை எடுக்க எத்தனித்த என் கனவுகள் அவதார் திரைப்படம் மூலம் 2009 ஆம் ஆண்டு பலிப்பதனை உணர்ந்தேன். இக்கனவினை நான் Sir john A macdonald பாடசாலையில் படித்து Summer Holiday யில் திரைப்படங்களினை எனது கணணியில் தரையில் போட்ட கட்டிலில் இருந்தவாறு பார்த்த சமயம் நினைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.இதேபோன்று அம்மாஜி கோவிலிற்கு செல்லும் கொஞ்ச நாட்களிற்கு முன்னர் அக்கோவிலினைப் போன்றதொரு கனவும்,நான் இந்தியாவில் இருந்த வேளை கனடாவில் குளிருக்கு நடுவே உள்ள பாடசாலையில் படித்ததனைப் போன்ற நினைவுகளையும் இன்று கனடாவில் நினைத்துப் பார்க்கின்றேன் அதே போன்ற சூழலை கனடாவில் அவதானிக்க முடிகின்றதனை நினைந்து இன்று வியக்கின்றேன்.பனிக்குள்ளே City Adult Learning Centre இல் படிப்பது நான் இந்தியாவில் கனவில் கண்டது போன்றதொரு புதுவிதமான அனுபவம்.இக்கனவுகள் பலித்தது போலவே பல கனவுகளினை என் வாழ்நாளில் நான் கண்டதும், காண்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக