புதன், 1 மார்ச், 2017

வரலாற்றிக்கு அப்பாற்படடவன் !

இவன் ஒரு மனிதனல்ல, மிருகமுமல்ல
தான் பெரு முனிவரல்ல, அப்பெருமையுமல்ல
தெருவின் மோரு ருசிக்கவல்ல, திருடமெல்ல
பெண்களின் ஜோரு இவனாளல்ல, இவனது குழலூதுவதனால்மெல்ல
வானத்தின் பேரு உனக்கல்ல, உன்னுள் ஒருத்தனுக்கென்று சொல்ல
பாரதத்தின் உட்கரு நீயல்ல, உன்னாலே பாரதம் என்றுசொல்ல

யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}

தினக்கருத்து

உலகில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் யாருமில்லை...
இன்று நாம் வாழ்கின்ற பூமியில் சமுதாயம் மனிதர்களினைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்துள்ளது, தாழ்ந்த சாதி , உயர்ந்த சாதி என இந்தியாவில் இன்றும் பழக்கத்திலுள்ளது. பெரும்பாலான பெற்றோர் இவர் டாக்டர், இவர் எஞ்ஞீனியர் என தமது பிள்ளைகளை விடுத்துப் பிற பிள்ளைகளைப் புகழ்வதுவும் நீயும் ஏன் ஒரு டாக்டராக உயர்ந்த பதவியில் இல்லை எனவும் அலட்டுவதனையும் பார்த்துள்ளோம். இவ்வாறு பலரும் பல பிரிவுகளினைப் பிரித்து மனித சமுதாயத்தினைப் பிரித்துக் குட்டிச் சுவராக ஆக்கியுள்ளது நடைமுறையிலுள்ள ஒன்றே, இதற்குக் காரணம் மனிதர்கள் தமக்கென்று அமைக்கப்பெற்ற பாதையினை (Nirojan's Assigned path theory(N.A.P (t))) அறியாததன் காரணமே ஆகும். அமைக்கப்பெற்றபாதையின் படி சிலர் ஓரினச்சேர்க்கையாளர்களாகவும், சிலர் பிச்சைக்காரர்களாகவும், சில பெண்கள் விபச்சாரிகளாகவும், சிலர் பெரிய செல்வந்தர்களாகவும், சிலர் சண்டைபிடித்து மடிபவர்களாகவும் பிறக்கும்போதே தலையில் எழுதப்பட்டு விடப்படுகின்றனர்.  ஒவ்வொரு பாதையிலும் அமைக்கப்பெற்று விடப்படுவதன் காரணமே இத்தகு பிரச்சனைக்கு விடை. இவையனைத்தும் எனது கருத்தே!.

பதிலளியுங்களேன் !