இந்தியாவும் அறிவாளியும்..................
ஒரு தகப்பனாருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள், அப்பிள்ளைகள் இருவரும் பிறந்ததிலிருந்தே முட்டாள்கள் ஆகையால் மனம்வருந்திய தந்தை அவர்கள் பெயர்களாவது புத்திசாலித்தனமாக இருக்கவேண்டும் என்று விரும்பி ஒரு மகனுக்கு 'அறிவாளி' என்றும் இன்னொரு மகனுக்கு ' இந்தியா' என்றும் வைத்தார். தனது மகன்கள் இருவரையும் பள்ளியில் சேர்த்துப் படிக்க அனுப்பினார். பள்ளியில் இவ்விரு பிள்ளைகளின் முட்டாள்தனங்களை நினைத்துப் பெரிதும் வருந்தினார் ஆசிரியர். ஒரு முறை அவர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் வேளை அவ்விரு முட்டாள் மாணவர்களையும் அழைத்து "டே பசங்களா இண்ணைக்கு இவ்வகுப்பினை பரிசோதிக்க ஒருவர்
வரப்போகின்றார் ஆகையினால நீங்கள் இருவரும் நான் தரும் இருபது ரூபா நோட்டினை வைத்துக்கொண்டு இன்று வகுப்பினுள் வராது வெளியில் சென்று விடுங்கள்" என்றார் ஆசிரியர். இதனைக்கேட்ட 'இந்தியா' பாடசாலையில் உள்ள கக்கூஸில் ஒழிந்துகொண்டான். 'அறிவாளி' தன்னால் எங்கும் போக இயலாது எனக்கூறி வகுப்பினுள்ளேயே இருந்துகொண்டான். வகுப்பினைப் பரிசோதனை செய்பவரும் அங்கு வந்து "மாணவர்களே இங்கு யார் அறிவாளி?" என வினவினார். அப்பொழுது 'அறிவாளி' என்ற பெயரைக்கொண்ட முட்டாள் சகோதரர்களில் ஒருவன் 'நான் தான் அறிவாளி" என்ற பதிலை அளித்தான். இதனைக் கேட்ட பரிசோதகரும் " நீ தான் அறிவாளியா! சரி இந்தியா எங்கே உள்ளது என்று கூறு பார்க்கலாம்" என்றார் அவர். அவனும் அவர் தனது சகோதரன் எங்குள்ளான் என்பதனை வினவுகின்றார் என எண்ணி "கக்கூஸில்" என்றானே பார்க்கலாம். வகுப்பே சிரிப்பில் உலுங்கியது. இக்கடியினை தற்சமயம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கும் டி. ராஜேந்தர் வழங்கும் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் கேட்டுக்கொண்டிருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.