மேற்கத்தேயமும் யூதர்களின் கறுத்த ஆடையும்…………
பெரும்பாலான மேற்கத்தேய உலகத்தினர் கறுப்பு நிற ஆடையினை அணிந்துகொள்வது தெரிந்ததே. இவர்கள் இவ்வாடையினை பாரசீகத்தினரிடமிருந்து பெற்றுக்கொண்டனர் என்பது வரலாறு கூறும் செய்தி. பாரசீகத்தேயப் பண்பாடுகளானது யூதர்களின் ஏப்ரகாமியப் பண்பாடுகளுடன் ஒத்தே இருப்பதும் பாரசீக மக்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியராகவிருப்பினும் அச்சமயப் பண்பாடுகளும் ஏப்ரகாமிய வழிப் பண்பாடுகளே என்பதுவும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.ஏப்ரகாம், மோசஸ், ஜேசு போன்ற யூதர்களின் பரம்பரையினரான பாரசீகத்தினர் மேல் அங்கியினை அணியும் பழக்கத்தினை மேற்கத்தேயரான ஜரோப்பியர்களுக்கும் விளக்கியிருப்பர் அல்லது யூதர்களின் கட்டுப்பாட்டுக்குள் மேற்கத்தேயம் இன்று வந்தது போலே யூதர்கள் கறுப்பு நிற மேலாடை அணியும் பழக்கமும் மேற்கத்தேயரால் கடைபிடிக்கப்பட்டிருக்கலாம். இவ்வாறான கறுப்பு நிற மேலாடையினை அணிவது வேலைத்தளங்களில் மட்டுமல்லாது ஹாலிவுட் திரைப்படங்களிலும் பார்க்கமுடியும். எடுத்துக்காட்டாக பேட்மேன் (Batman), மென் இன் பிளாக் (Men in Black) போன்ற பல திரைப்படங்களிலும் யூதர்களுடைய கறுத்த மேல் அங்கியும் கறுத்தத் தொப்பியுமே சிறந்த ஆடைகளென வெளிப்படையாக அல்லாது மறைமுகமாகக் காணப்படுவது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. பாரசீகத்திலிருந்து மேலாடை அணியும் பழக்கம் வந்ததென்றால் நிச்சயம் அது யூதர்களின் பண்பாடான ஏப்ரகாமியப் பண்பாடுகளே தான் காரணம் என நான் இங்கு கூறும் தினக்கருத்தாகும்.