அம்மாஜி கோவில்.....................
நான் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரம் அம்மாஜி கோயில் என்னும் இக்கோவிலுக்குச் செல்வதுண்ட்டு. கிருஷ்ணரை வழிபடும் இக்கோவிலினுள் சாத்திரம் பார்க்கும் ஒரு அம்மா இருப்பார். அவர் இலங்கையினைப் பிறப்பிடமாகக்கொண்ட ஒரு பிராமணச் சாதியினைச் சேர்ந்தவராவார். பின்ச் மற்றும் டாப்ஸ்கோட் வழியினூடாகச் செல்லும் வழியில் அமைந்துள்ள இச்சிறிய கோவிலை அம்மாஜியின் தங்கையும் இணைந்து நடத்துவது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலிற்கு அருகாமையிலேயே Smurfit Image Pac தொழிற்சாலையும் Welfare Assistance அலுவலகமும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலிற்கு முதன் முதலில் நான் எனது தாயார் மற்றும் எனது அம்மம்மா ஆகியோருடன் சென்றேன். பெரும்பனி கொட்டிய அன்று Taxi ஒன்றினைப் பிடித்துச் சென்றோம் வரும் போது அம்மாஜியின் தங்கையார் எம்மை எம் வீடு வரை அழைத்து வந்தார். இக்கோவிலின் சிறப்பம்சம் யாதெனில் எனது சாதகக்குறிப்பினை எடுத்துப் பார்த்த அம்மாஜி எனது பிறப்பினால் என் தந்தைக்கு தோஷம் உள்ளதாக என் தந்தை இறந்ததை செய்தியைத் தெரியாது முன் கூட்டியே தெரிவித்தது எனக்கு வியப்பு அதுவே அம்மாஜி கோவிலின் சிறப்பம்சம் என்பதனை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. மேலும் அம்மாஜி கூறுகையில் "பலர் பல ஏமாற்றுவித்தை தெரிந்தவர்களிடம் சாதகம் பார்க்கின்றனர், ஆனால் நான் அப்படியல்ல சாதகம்தான் பார்க்கின்றேன் பணத்தைக் கூட சாதகம் பார்க்கவந்தவர்களின் விருப்பத்திற்கேற்றவாறே வாங்குகின்றேன்" என்றும் கூறினார். நான் பிற ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கு தொடர்ந்து செல்வதனை வழக்கமாகக்கொண்டேன். இவ்வாறு செல்லும் நான் தினம் பல விடயங்களை அங்கு கற்றுக்கொண்டேன். பகவத் கீதை வகுப்பு மற்றும் தியான வகுப்பு போன்றனவைகள் அங்கு நடைபெறுவது என் மனதிற்கு ஆறுதலைத் தந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு செல்லும் நான் அம்மாஜி கூறிய பின்வரும் தகவல்களை இங்கு பகிர்ந்து அம்மாஜி கூறினார் "என்னை ஒருமுறை ஒரு உணவகத்தில் வேலை செய்துவரும் தமிழ் இளைஞர் என்னை வந்து சந்தித்தார், தான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தில் 2000ற்கும் அதிகமான பணத்தினை அவர் ஒரு சாத்திரக்ககரரிடம் பறிகொடுத்துவிட்டார். தன்னை யாரோ செய்வினை செய்ததாகக்கருதி பின்னர் அச்சாத்திரக்காரரின் பொய்யினை நம்பி ஏமாந்ததாக என்னிடம் கூறி, எனது சாத்திரக்கணிப்பினால் பயன் பெற்றார்" என அம்மாஜி பக்தர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
ஜனவரி் 18, 2009, 2 : 28 : 24 PM அன்று எடுக்கப்பட்ட அம்மாஜி கோவிலின் உள்தோற்றம்.
ஜனவரி 18, 2009, 2 : 34 : 28 PM அன்று எடுக்கப்பெற்ற அம்மாஜி கோவிலின் உள்தோற்றம்.
ஜனவரி 18, 2009, 2 : 14 : 46 PM அன்று அம்மாஜி கோவிலுக்கு Tapscott வழியினூடாகச் செல்லும்போது எடுத்த நிகழ்படம்.
அம்மாஜி கோவில் எனது வாழ்நாளில் ஒரு திடீர்த் திருப்பமாக ஏற்பட்ட அனுபவம் என்றால் மிகையாகாது. முக்கியமான ஒரு விடயம் என்னவென்றால் நான் இச்சாத்திரம் பார்க்கும் இடம் போன்ற ஒரு கனவினை இக்கோவிலுக்குச் செல்லும் முன்னரே கண்டிருந்தேன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.