கிருஷ்ண பரமாத்மா ஹாரிபாட்டர் ஆன கதை………..
இந்தியத் திரைப்படத் துறையினர் பலரும் பெரும்பான்மையான தமது திரைப்படங்களின் கதைக் கருக்களை பிற நாட்டுத் திரைப்படங்களிலிருந்து காப்பி அடிப்பது அனைவரும் தெரிந்த உண்மை, ஆனாலும் லண்டனைத் தளமாகக் கொண்ட எழுத்தாளரான ஜே. கே ரௌலிங்க்ஸின் நாவலான ஹாரி போட்டர் கிருஷ்ணரின் கதையே என்பது நான் அடித்துக் கொள்ளும் வாதம். சரி, சரி, சரி உடனேயே என்னை முட்டாள் எனவோ, மண்டைப்பிழை எனவோ (இதனையே என்னைப் பார்க்கும் பெரும்பாலானோர் கூறுவது) கூற வேண்டாம்., இவை எனது கருத்துக்கள் மட்டுமே. அதற்குச் சான்றுகளாக ஹாரி போட்டர் கையில் வைத்திருக்கும் மந்திரக் கோலும் கிருஷ்ணர் தந்து கையில் வைத்திருக்கும் புல்லாங்குழலும் ஒன்றாகப் படுகின்றது. அதுமட்டுமல்லாது இவ்வெழுத்தாளர் இலண்டன் வாழ் வெள்ளையர் இவர் வாழும் இலண்டனில் பல தரப்பட்ட இந்தியர்கள் வாழ்கின்றனர் அவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கடவுளான கிருஷ்ணரை வழிபடுவது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. அதுமட்டுமல்லாது இங்கிலாந்தின் பணக்காரவரிசையில் முதலிடத்திலிருப்பது இந்திய வம்சாவளியினைச் சேர்ந்த லக்ஸ்மி மிட்டால் என்பவர் ஆவார்.