திங்கள், 31 மே, 2010

தினக்கருத்து

தமிழகத் திரைப்பட இயக்குநர்களுக்கோர் வேண்டுகோள்.................
தமிழகத் திரைப்பட இயக்குநர்கள் அனைவரும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தம்மை அர்ப்பணித்து பல சுவையானவும், கசப்பானவுமான திரைப்படங்களினையும் எடுத்து வருவது பாராட்டுக்குரியது. மேலும் தமிழ் மொழி உலக அளவில் பிரசித்திபெறவும் அம்மொழியினை உலகில் உள்ள அனைவரும் உரையாட உபயோகிக்கும் மொழியாகவும் பரப்புதல் செய்ய உலகத்தரம் வாய்ந்த தமிழ்த் திரைப்படங்களினை இயக்குதல் அவசியம். தமிழ் மொழி ஒரு செம்மொழி, அம்மொழி பல புதிய மொழிகளைக் காட்டிலும் உயர் நிலையில் இருக்க வேண்டிய ஒரு மந்திர மொழி, ஆயினும் இத்தமிழ்மொழி உலக அளவில் இன்றும் பலராலும் அறியப்படாத மொழியாகவே உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழரின் பண்டைக்காலச் சிறப்புக்கள், Hollywood திரைப்படங்களில் வரும் வரலாறுகளிலும் சிறப்பானவை. இச்சிறப்புக்களின் தரம் குறையாமல் தமிழ்த் திரைப்படங்கள் கட்டிக் காத்தல் வேண்டும். இவ்வாறு தமிழ் மொழியினை உலகளவில் பரப்பும்வகை செய்யும் ஊடகங்களில் இலகுவாக உலக மக்களினைச் சென்றடையும் ஊடகம் திரைப்படங்கள், ஆகவே தமிழ்த் திரைப்படங்கள் ஜந்து பாடல்கள், ஒரு குத்துச்சண்டை, நகைச்சுவைக் காட்சிகள் என மசாலாவாகவே இல்லாது உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்குச் சிறப்புற எடுக்கப்படல் வேண்டும். உலகத் திரைப்படங்களுடன் போட்டி போடவேண்டும் அதுவே தமிழருக்கும், தமிழ்மொழியின் உலகளவிலான வளர்ச்சிக்கும் பெரும் உதவியாகவிருக்கும். தமிழ்த் திரைப்படங்களில் வித்தியாசமான வகைகள் வேண்டும் விஞ்ஞானத் திரைப்படங்கள், கலைத் திரைப்படங்கள், வரலாற்றுத் திரைப்படங்கள் எனப் பல பிரிவுகள், வகைகள் அவசியம். மலையாளக் கலைத் திரைப்படங்களைப் போலவும், சத்யஜித் ரே போன்றவர்களின் உன்னத படைப்புக்களைப் போலவும் பல கலைநயமுள்ள திரைப்படங்கள் எடுக்கப்படவேண்டும். சும்மாக ஒரு அழகிய ஆரியக் காதலனின் திராவிடப்பெண்ணின் மீது கொள்ளும் காதல்கதை போலவும், இல்லை ஒரு திராவிடக் காதலன் அழகிய ஆரியப் பெண்ணுடன் காதல் கொள்வதும் போலான காதல் கதைகளினை  திரும்பத் திரும்ப அரைத்துக் கொண்டிருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை. இதற்காகத் தமிழ்த் திரைப்பட உலகம் முயற்சிகளினை எடுக்கவில்லை என ஒட்டுமொத்தமாகக் கூறிவிட இயலாது. பல புதிய நோக்குகள் தமிழ்த் திரைபபடங்களில் வருவது குறிப்பிடத்தக்கது. அவை இன்னும் பிற மொழி இனத்தாரும் பிற திரைப்படக் கலைஞர்களும் பாராட்டும் வகையில் இருத்தல் மிக மிக அவசியம்.

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !