சவுதி அரேபியப் பெண்ணுடனான காதல்...........
2010 ஆம் ஆண்டு, பெப்ரவரி 25 ஆம் திகதியன்று வியாழக்கிழமை நான் எனது Biology வகுப்பினை City Adult Learning Centre இல் எடுத்துக்கொண்டிருந்த வேளை எனதருகில் சைகாம் (Siham) என்னும் இஸ்லாமியப் பெண் முகத்தினை மறைத்து ஆடை அணிந்து வந்து உட்கார்ந்திருந்தாள், அப்பொழுது நான் சைகாமினைப் பார்த்துக் கேட்டேன் " என்ன பெயர், எங்கிருந்து வருகிறாய், என்னைக் கல்யாணம் செய்கின்றாய என ஆங்கிலத்தில் கேட்டேன். அதற்கு அவள் தன் பெயரை 'சும்மா ஹபிப்' எனவும் தான் 'Eriteria' என்னும் பகுதியிலிருந்து வருவதாகவும் தன்னுடைய அப்பெயரால் அமைந்த Facebook முகவரியினையும் கொடுத்தாள். நானும் அவள் கொடுத்த Facebook முகவரியினைக் கொண்டு சென்று பார்த்த பொழுது George Bush இனை Shoe வினால் எறிந்த நபரப்பற்றிய Link குடனான Facebook முகவரியினைக் கொடுத்திருந்தாள் சைகாம். இவளுடன் பின்னர் பெப்ரவரி 29 முதல் உரையாட விரும்பி பலமுறை அவளருகில் சென்று உரையாட முடியாதவாறு ஏமாந்துபோனேன். இறுதியில் கொஞ்ச நாட்கள் அவளுடன் உரையாட முடிந்தது. அவள் தனக்கு கல்யாணம் பேசியிருப்பதாகவும் தனக்கு என் மீது எந்தவொரு Feeling கும் இல்லை எனவும் கூறியதும் குறிப்பிடத்தக்கது. இவள் இவ்வாறு பலமுறை கூறியும் நான் அவளை வம்புக்கு இழுத்தேன் என்பதே பொருந்தும். ஒருநாள் அவளை எனக்கு முத்தம் கொடு எனக் கேட்டு பீனர் அவளது முகத்தினை எனது கண்ணாடியினால் பார்த்து அவள் அகத்தின் அழகினை என் கைகளினால் வரைந்து காட்டி அவளிடமே தந்தேன். பல நாட்கள் கழித்து அப்படத்தினைதிரும்பத் தருமாறும் அவளது Boyfriend உடன் கதைக்குமாறும் நான் அவளைக் கேட்டு ஒரு கடிதத்தினை ஆசிரியர் பாடம் நடத்தும் பொழுது கொடுத்தேன். ஆனால் எவ்வளவு கேட்டும் கடிதத்தினை கொடுக்க மறுத்துவிட்டாள். இறுதியில் என் பெயரை அவள் அக்கடிதத்தில் பார்த்துத் தெரிந்துகொண்டிருப்பாள் என நினைக்கின்றேன். இவ்வாறு நான் வரைந்த அவளது ஓவியத்தினை அவள் கொண்டாளோ என்னவோ நான் அறியேன் ஆயினும் அவள் என்னை வாழ்நாளில் மறக்கமாட்டாள் எனவும் நம்ம்புகின்றேன். அவளைச் சந்தித்த ஒவ்வொரு நிமிடங்களினையும் அடியேனும் மறக்க மாட்டேன் என்பது உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக