சனி, 6 செப்டம்பர், 2008

தினக்கருத்து

சாதி ஒழிப்பின் நன்மைகளும் தீமைகளும்

ஒழிப்பின் நன்மைகள்
இந்தியாவின் பெரும்பாலான பிரச்சனைகள் சாதி அமைப்பினால் ஏற்படுகின்றன. தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கருதப்படுபவர்கள் பெரும்பாலானோர் திராவிடர்களாகவும், தலித்துக்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறானவர்களிற்குப் பெரும்பாலான தொல்லைகள் வந்து போவதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் ஆரியர்கள் தங்கள் இந்து சமயக் கோட்பாட்டினை விட்டுக் கொடுப்பதாகத் தெரியவில்லை வெளிநாடுவாழ் தமிழர்கள் முதல் பல இந்தியர்கள் வரை சாதி இன்றளவும் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தோ ஈரானியர்கள் மிகவும் சுத்தமாக இருப்பதை விரும்புவர்களாவர். அவர்களுக்கு எப்பொழுதும் தெய்வ நம்பிக்கை உண்டு. தமது தவறுகளை மறைப்பதற்கு தெய்வம் என்ற சாந்தமான கோட்பாடுகளை உருவாக்கி அதனை பிற கல்வியறிவு அற்ற மனிதர்களிடத்தே பரப்பவிட்டு பணம் சம்பாதித்து பணக்காரர்கள் ஆகிவிடுகின்றனர். பின்னர் தாம் தெய்வம் என்ற பெயரில் பிச்சை எடுத்த மக்களையே பிச்சைக்காரர்கள் என்று கூறி அவ்வினைத்தையே அழிக்கப்பெரிதும் முயல்வர். இதுவே இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களெனக் கருதப்படும் உண்மையான இந்தியர்கள் அடக்கி ஒடுக்கப்படுவதும் இலங்கையில் ஆரியர் வம்சாவளியில் வந்த சிங்களவர்களும் , தமிழ் மொழி பேசும் உயர்ந்த சாதியினர் எனத் தம்மை வெளிக்காட்டும் ஆரியத் தமிழ்க் கலப்பினர்களால் உண்மையான கருமை நிறத் தோல் கொண்ட தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டதும் வரலாறு. இச்சாதிகள் ஒழிப்பினால் பல நன்மைகள்
அனைவருக்கும் சம உரிமைகள் கிட்டும் வாய்ப்பு, பிரச்சனைகள், சண்டைகள் உருவாகாமல் தடுக்கலாம்.

ஒழிப்பின் தீமைகள்
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தமது பண்பாட்டு விழுமியங்களை கட்டிக்காக்க முயல்வது குறிப்பிடத்தக்கது. அத்தகு பிரிவினரால் சாதி என்பது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்வகைக் சாதிக் கடைப்பிடிப்பினால் தமது மொழி, பண்பாடு போன்றனவைகளைப் பாதுகாக்கின்றனர். இது சிறந்த முறையே ஆனாலும் இதனால் காதலர்களைப் பிரிப்பது தமது சாதியினரையே கட்டாயத் திருமணம் செய்து வைப்பது போன்றனவைகள் சற்றுத் தவிர்க்கப்படலாம். சாதி ஒழிப்பினால் மொழி, மதம் , பண்பாடு ஆகியனவைகள் அழிக்கப்படுகின்றது என்பது சற்று கூர்ந்து கவனிக்கத்தக்கது. இவை அனைத்தும் எனது தனிப்பட்டக்கருத்தே!

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !