ஞாயிறு, 28 செப்டம்பர், 2008

தினக்கருத்து

இந்தியத் திரைப்படத்துறையும் வெளிநாடுகளின் திரைப்படத்துறையும்.

இந்தியத் திரைப்பட இயக்குனர்கள் மிகப்பெரும் புத்திசாலிகள் ஏனெனில் வரலாற்றினை எவருக்கும் தெரியாதவாறு மசாலாக் கலவைகளுடன் அதாவது பாட்டு, நடனம், நகைச்சுவை எனக் கலந்து இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலே உள்ள திரைப்படத்தினுள் புகுத்துவது அவர்களின் சாமர்த்தியம். வெளிநாட்டு இயக்குநர்கள் பெரும்பாலும் தமது கற்பனைகளைப் பல கோடிகள் செலவு செய்து திரைப்படத்தினை ஆகக்குறைந்த மணிநேரங்களில் எடுப்பது சிறிது வேடிக்கை.

வெளிநாட்டினர் பெரும்பாலான திரைப்படங்கள் ஒரே இனத்தவரைக் கவராமல் சிறுவர்களுக்கெனத் தனியே திரைப்படங்களையும் பெரியவர்களுக்கெனத் தனியே திரைப்படங்களையும் எடுப்பது சிறந்த முறையே ஆனால் இவற்றால் ஒரு குடும்பமாக வெளிநாட்டினரின் அனைத்துத் திரைப்படங்களினையும் பார்க்க முடியாது. குறிப்பாக ஓரினைச்சேர்க்கைத் திரைப்படங்கள் இந்திய மசாலாக் கலவைத் திரைப்படங்களில் பார்க்க இயலாது அதாவது மசாலாக்கலவைகளான பாடல்கள், அதிரடிக்காட்சிகள் என நிறந்த திரைப்படங்களையே குடும்பமாக அமர்ந்து பார்க்கின்றனர் பெரும்பாலான இந்தியர்கள். இதனால் குடும்பத்தினுள் ஏற்படும் பிரிவினைகள் தடுக்கப்படுகின்றன.


இந்தியத் திரைப்படத்துறையில் பல நல்ல திரைப்படங்கள் உளன எடுத்துக்காட்டாக கலைத் திரைப்படங்களான பதேர் பாஞ்சாலி, அபுர் சன்சார், அபரஜிதோ ஆகிய திரைப்படங்கள் சிறப்பானவை மனிதருள் மாற்றத்தினை ஏற்படுத்தும் ஆனால் இன்றைய இந்தியத் திரைப்படங்கள் கலைநயமே இல்லாது மனிதர்களை மிருகமாக மாற்றும் நோக்கில் இந்தியப் பண்பாட்டினைச் சீரழிக்கும் வகையில் மேற்கத்தேயப் பண்பாடுகளினைப் பின்பற்றுகின்ற திரைப்படங்களாக வெளிவருவது மிக வேதனை அழிப்பதாகவுள்ளது வரலாறுகளே இவையாவின் இவற்றைப் பார்த்து அதன்படி வரலாற்றினுள் வாழ நினைப்பவர் பலர். அதனால் சமூகத்தில் ஏற்படும் இழப்பு பாரியது. பல கொலைகாரர்கள் உருவாக்கப்படுகின்றனர். இந்தியத் திரைப்படத்துறையினரும் பணம் புரட்டும் நோக்குடன் இங்கு வருவது மனதிற்கு மிகவும் வேதனை அளிப்பதாகவும் ஒரு குத்துப்பாட்டு ஒரு சண்டைக்காட்சி என்ற அரத்த மசாலாவையே அரைப்பதும் மேற்கத்தேயத் திரைப்படங்களினை நகல் எடுப்பதும் எமது பண்பாடுகள் பாரம்பரியங்கள் என்பனவற்றை சீரழிக்கும் நோக்குடனே என்பது பொருந்தும்.

இவைகள் அனைத்தும் எனது தனிப்பட்டக் கருத்தே.

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !