செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

தினக்கருத்து


தமிழ்த் திரைப்படத்துறையினை எவ்வாறு உலகமயப்படுத்துதல்....

இன்று உலகின் பல பாகங்களிலும் இருந்து தமிழில் திரைப்படங்கள் வந்தவண்ணம் உள்ளது அனைவரும் அறிந்த உண்மையே, மலேசியா, தமிழ்நாடு, இலங்கை, கனடா, எனப் பல இடங்களிலும் வாழும் தமிழ் மக்களாலும் தமிழ்த் தெரிந்த மக்களாலும் இவ்வாறு வெளிவருகின்றது. வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் தமிழகத்திலிருந்து வெளிவரும் திரைப்படப்பாணிகளுடன் ஒத்து 4, 5 பாடல்களும் ஒரு காதல் கதையினை வைத்து வருவதும் பெரிது. இவ்வாறு

- இந்தியத்திரைப்படங்கள் பெரிதும் வரும் பாடல்களுடன் நான்கைந்து சண்டை பிறகு காதலன் காதலியினைக் கைப்பிடித்தல் போன்ற அரைத்த மாவினை அரைக்காமல்
திரைப்படங்கள் வந்தால் நன்று.

- ஒவ்வொரு வருடமும் மிகப்பிரமாண்ட செலவில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கே சவால் விடும் அளவிற்கு 4,5 திரைப்படங்கள் வெளிவ்ந்தால் அது தமிழ்மக்கள் தவிர உலக மக்கள் அனைவரது இரசனையினைத் தமிழ்த் திரைப்படத்துறைக்குக் கொண்டுவரும். இதனால் அதிகளவில் இரசிகர்கள் கூடி தமிழ்த் திரைப்பட வியாபாரம் பெருகும்.

- ஒரே காதல் காதல் என அரைக்காது வித்தியாசமான வகைகளில் திரைப்படங்கள் வெளிவருவது நன்று, விஞ்ஞானம் சம்பந்தமாக, வரலாறு சம்பந்தமாக, சங்கத் தமிழ் வரலாறுகள் எனப் பல ஆராய்ச்சியின் பின் எடுக்கப்படும் திரைப்படங்கள் வரவேண்டும் மேலும் பிற பிற விடயங்களினையும் ஆராய்ந்து வெளிவந்தால் இன்னும் பல இரசிகர்களினை தமிழ்த் திரைப்படத்துறை தன் வசம் பெறும்.

- தமிழரல்லாத பிறரும் தமிழ்த் திரைப்படத்தினை விரும்பிப்பார்க்கும்வைகையில் உலகமுழுதும் விளம்பரப்படுத்துதல் வேண்டும் , உலகத் தொலைக்காட்சிகள் அனைத்திலும் விளம்பரப்படுத்தல் வேண்டும். பிற பிற இந்திய மாநிலங்கள் பிற உலக நாட்டு மக்களின் பண்பாட்டு விழுமியங்களினையும் உள்ளடக்கி வெளிவருவதும் பலரது மத்தியிலும் ஒவ்வொரு திரைப்படங்களினையும் சந்தைப்படுத்த முடியும். இக்காலகட்டத்தில் யூடியூப் இவ்வேலையினைச் செய்கின்றது உலக மக்கள் ப்லருக்கும் தமிழ் மொழியென்றால் என்ன தமிழ்த்திரைப்படங்களென்றால் என்ன என்பதனையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொண்டிருக்கின்றனர்.

- ஒவ்வொரு திரைப்படங்களிலும் புது வைகை டெக்னோலோஜியினை அறிமுகப்படுத்தி உலகில் எவரும் எடுக்காத யுக்திகளினைக் கையாளுதல் மிகவும் நன்று. ஆங்கிலத்திரைப்பட இயக்குனருக்கே சவால்விடும் அளவிற்கு திரைக்கதை இருப்பது மென்மேலும் நன்று.

- மிகப்பெரும் இயக்குனர்கள் பலர் ஒன்றிணைந்து பல சூப்பர்ஸ்டார்ஸ்களைச் சேர்த்து ஒரு மாபெரும் படைப்பினை அளித்தால் அது ஒரு மிகப்பெரும் வெற்றியினை ஈட்டித்தரும்.

- உலகின் பல பாகங்களிலும் பிரசித்த பெற்ற பெரிய சூப்பர் ஸ்டார்களினையும் அறிமுகப்படுத்தினால் மென்மேலும் தமிழ்த் திரைப்படங்கள் உலகமயமாகும் இதனால் வியாபாரம் பெருகும்.

- உலகத் தமிழ்த்  திரைப்பட விருது என ஒரு விருதினை அறிமுகம் செய்து ஆஸ்கார் விருது வழங்கும் விருது போன்று விருதுகளினை வழங்கிச்  சிறப்பித்தால் நன்றாகவிருக்கும். 


கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !