ரெசிடண்ட் ஈவில் 5 (Resident Evil 5) ஆம் பாகக் கனவு……..
திங்கட்கிழமை காலை ஒரு கனவினைக் கண்டேன் அதில் ஒரு பேருந்து நின்று ஓட்டுனர் இறங்கி ஜந்து நிமிட இடைவேளை எடுத்தார். அவர் ஒரு தமிழ்க் கடையில் இறங்கி நானும் இறங்கி மலசலகூடத்திகுச் செல்ல எத்தனித்தேன். என்றும் இல்லாதவாறு இவ்வோட்டுனர் பின் பக்கம் அமர்ந்து பேருந்தினை ஓட்டினார். இக்கனவினைத் தொடர்ந்து ஒரு நிகழ்பட ஆட்டக் கனவில் ஒருவனை நான் பின் தொடர்ந்து துரத்திச் செல்கின்றேன் அவன் ஏணியில் ஏறி புகையிரதம் ஒன்றினை ஓட்டித் தப்பிக்க முயல்கின்றான், நான் அவனைப் பிடித்த அவனில் இருந்த சக்தியினை திருடினேன். என்னுடன் ஒரு பெண்ணோ அல்லது வேறொருவரோ கூட வந்திருந்தார். நான் நினைக்கின்றேன் ரெசிடண்ட் ஈவில் 5 ஆம் நிகழ்பட ஆட்டத்தினை தான் கனவாகக் கண்டிருக்கின்றேன் என்று. இதனைத் திங்கட்கிழமை, செப்டம்பர் 20 காலை பாடசாலைக்குச் செல்லும் முன்னர் எழுதினேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக