சனி, 22 நவம்பர், 2008

தினக்கருத்து

தமிழ்த் திரைப்படத்துறையும் தமிழ் இதழ்களும்..........

இன்று தமிழ் இதழ்களில் வரும் செய்திகளானது வெறுமனே செய்திகள் அன்று தமிழர்களது வரலாற்று விழுமியங்களையும் அவர்கள் பழக்க வழக்கங்கள் எனப்பல உண்மைகளினனயும் உள்ளடக்கியதாக வருகின்றது. இவ்வாறு தமிழ் மொழிப் பற்றாளர்களினால் வெளிவரும் இவ்விதழ்களினால் தமிழ் மொழி வளர்க்கப்படுகின்றது, பண்பாடுகள் பேணப்படுகின்றன. இத்தகு இதழ்களின் மூலம் வருங்கால சந்ததியினர் தமது மூதாதையர் எவ்வாறான வாழ்வியல் விழுமியங்களைக் கொண்டிருந்தனர் என்பதனை அறிய இயலும். தமிழ்த் திரைத்துறையினரால் தமிழர்களின் வரலாறுகள் பதியப்படும்போது அதாவது பண்டைக்காலத்தமிழகத்தில் கல்வெட்டுக்கள் எழுதப்பட்டவாறு திரையில் வரலாறுகள் எழுதப்படும்பொழுது தமிழ் இதழ்களிலிருந்தும் வரலாறுகள் பெறப்படும். எனவே இதழ்கள் நாளைய வரலாற்றுத் திரைப்படங்களிற்கு ஒரு சாட்சி. எனவே இன்றைய தமிழ் இதழ்களினைப் படிப்பது என்பது தமிழ்த் திரைப்பட இயக்குனர்களுக்கு ஒரு வரலாற்று உண்மையினை விளங்கிக்கொள்ள முடியுமான ஒரு சிறந்த முயற்சி. எனவே இன்றைய தமிழ் இதழ்களினை நடாத்துபவர்கள் தமிழர்களது பண்பாடுகளினைப் பேணிக்காக்க வேண்டுமே தவிர அழிப்பதற்கல்ல. இன்றைய இதழ்கள் பல மேற்கத்தேய மோகங்களினை கொண்டு உருவாகுவது பண்பாட்டுச் சீரழிப்பிற்கு இட்டுச் செல்கின்றது குறிப்பிடத்தக்கது. எனவே உலகின் பல பாகங்களிலும் இயங்கும் தமிழ் இதழ்கள் அனனத்தும் தமிழர்களது பண்பாடுகளினைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவவ எனது தனிப்பட்டக்கருத்தே!.

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !