சனி, 15 நவம்பர், 2008

தினக்கருத்து

காமத்தில் மூழ்கியவர் பிறர் அழகை நோக்குவர்...........

என்னுடன் குலோபன் வூட் கஸ்டம் (Global Wood Custom) நிறுவனத்தில் பணிபுரிவர்களில் பத்தொன்பது வயதுமிக்க ஒருவன் வேலி செய்கின்றான். அவனது தாயார் இஸ்லாம் மதத்தினைச் சேர்ந்தவர் என்பதும் தந்தையார் யூதர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தன்னுடன் ஏழு குழந்தைகள் தனது பெற்றோருக்கு என்பதும் அவர் வாயினால் நான் சொல்லக்கேட்டதாகும். மேலும் காமமா காதலா சிறந்தது என்றொரு வாதத்தினை அவருடன் உரையாடினேன் அவர் கூறினார் மக்கள் அழகுள்ளவராக இருப்பதே நன்று என்று நான் கூறினேன் காமத்தில் மூழ்கியவர்கள் தான் பிறர் உடலழகினையும் அகத்தின் அழகினையும் பார்ப்பர் என்று. அதற்கு அவர் தனது கருத்தான காமமும் காதலும் ஒன்று என்பதனை நிரூபிக்க முற்பட்டார் அவ்வேளை நான் கூறினேன் ''உமது தாய் சிறிதளவு உடற்பருமனாக இருந்தால் நீர் உமது தாயின் மீது வெறுப்புச் செலுத்தப்போகின்றீரா'' அவர் மேலும் தெரிவித்தார் தாயிடம் செலுத்துவது அன்பு என்றும், காதலும் காமமும் ஒன்று எனவும் தெரிவிக்க முற்பட்டார். அவரிடம் கேட்டேன் ''நீர் ஒரு மருத்துவரானால் நோயாளிகளிடம் அழகைப்பார்த்தா அல்லது அவர்களது நிறத்தைப் பார்த்தா மருந்து கொடுப்பீர் அல்லது அவர்களைப் பரிசோதிப்பீர் ?'' , அதற்கு அவர் பதில் எதுவும் கூறவில்லை. பின்னர் தமிழ் நண்பரின் சீருந்தில் பயணம் செய்த வேளை அவரிடம் கேட்டேன் ''உமக்கு ஒரு காதலி இருக்கின்றார் என்று வைப்போம் அவர் விபத்தில் சிக்கி அவர் முகம் கோணலாகினால் அவரது முகத்தின் அழகினை வைத்து வெறுப்பீரா இல்லை அன்பு செலுத்திக் காதல் செய்வீரா! '' , அவரிடம் இருந்து எந்தவொரு பதிலையும் நான் கேட்கவில்லை. இதனால் எனது தனிப்பட்டக்கருத்து என்னவென்றால் காமத்தில் மூழ்கியவரே பிறரிடத்தில் அழகை நோக்குவர். அழகை நோக்காமல் பிறர் மனத்தின் அழகினை நோக்குபவரே சிறந்த மனிதர். இவை அனைத்தும் எனது தனிப்பட்டக்கருத்துக்களே .

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !