ஞாயிறு, 5 அக்டோபர், 2008

தினக்கருத்து

இலங்கை இனப் பிரச்சனையும் வெளிநாடுவாழ் ஈழத்துத் தமிழர்களும்..................


இலங்கையின் இனப்பிரச்சனை என்பது முட்டாள்தனமான வகையில் தோற்றுவிக்கப்பட்டதொன்று அதாவது ஆரியர் மற்றும் திராவிடக் கலப்புக்களான சிங்களவர்கள் மீது அதே ஆரியர் மற்றும் திராவிடர் கலப்புக்களான தமிழர்கள் போரிடுவதென்பது இரு இனத்தவர்களிடையே சற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பாண்மை இல்லாத காரணத்தினால் ஏற்பட்டதொன்றாகும். பெரும்பாலான ஈழத்துத் தமிழர்களே தமிழ் மீது அளப்பரிய பற்றுக்கொண்டுள்ளவர் என்பது நான் அறிந்த உண்மை நானும் ஒரு ஈழத்துத் தமிழன் தான் என்பதும் உண்மையே இதனை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் நான் ஈழத்தின் தமிழ் பேச்சு வழக்கு எழுத்து வழக்கு தமிழகத் தமிழின் பேச்சு வழக்குகளினையும் அதனை எழுதும் முறைகளினையும் நன்கு அறிவேன் இவ்விரு பிரதேசங்களிலும் ஈழத்துத் தமிழர்கள் சிறப்பான உச்சரிப்பை உடைய தமிழில் உரையாடுவது மிகவும் சிறந்தது. மேலும் தமிழகப் பிள்ளைகளும் வெளிநாடுவாழ் ஈழத்துத் தமிழ்ப்பிள்ளைகளில் பலரும் தாய் மொழியினைக் கல்லாத காரணங்களினால் சீரழிந்து போவது கண்களால் காணும் உண்மைகள்.
பெரும்பாலான கனேடியத் தமிழர்கள் ஈழத்தினை தமது பூர்வீகப் பிரதேசம் எனவும் அது தமக்குக் கிடைக்கும் எனவும் நம்புகின்றனர். சிலர் இதனைப் பற்றி அவ்வளவாக அலட்டிக்கொள்வதில்லை காரணம் கனடாவில் வசதி உண்டு , சுதந்திரம் உண்டு இவ்வாறு பலதரப்பட்ட காரணங்களினால் சிலர் ஈழத்தினைப் பற்றியும் தமிழ் மொழியினைப் பற்றியும் பண்பாடுகளினைப் பற்றியும் மறந்து தமது விருப்பங்களிற்கேற்றாற் போல் வாழ்க்கையினை வாழ்கின்றனர் ஆனாலும் இன்றளவும் பல தமிழர்கள் ஈழத்திற்கு ஆதரவளித்து வருவதும் இதழ்களில் வரும் செய்திகள் பொங்கு தமிழ் உலகமெங்கும் பலத்த மக்கள் சக்திகளுடன் நடைபெற்றது உண்மை கனடாவில் டொறொன்ரோவில் பல ஆயிரம் பொது மக்கள் வரையில் பங்கேற்ற்னர் என்பதனை அறிகின்றேன் இம்மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனை தம் தலைவராகவும் அவருடைய வழியில் நடந்து உயிரைக் கூடக் கொடுக்கத் தயங்கமாட்டோம் என்று ஈழத்தில் இருக்கும் அப்பாவி ஏழ்மை நிலைத் தமிழர்களை போராட்டத்திற்கு வலுக்கட்டாயமாகச் சேர்க்க உரிமை கேட்பது வேடிக்கை.
எனது வேலைத் தளமான குலோபல் வூட் தொழிற்சாலையில் என்னுடன் பணிபுரியும் தமிழ் நண்பர் கூறினார் தமிழீழப் பிரதேசமான விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வலுக்கட்டாயமாக ஆட்களைச் சேர்ப்பது என்று சேர்ப்பவர்களில் புதியவர்கள் போராட்ட முன்னரங்குகளிற்கு அனுப்பப்படுகின்றனர் என்று. அவ்வாறே தனது மனைவின் சொந்தக்காரர் ஒருவர் அனுப்பப்பட்டு இறந்தவர் என்பதும் வரலாறு இவ்வாறு தெய்வமாகப் போற்றப்படும் தேசியத் தலைவர் தனது கொள்கை ஒன்றிற்காக அப்பாவித் தமிழ் இனத்தினையே அழிப்பதற்கு முயற்சி செய்வது படு முட்டாள்தனம். அவரை வெளிநாடுவாழ் தமிழர்கள் பாராட்டித் தலையில் வைத்து ஆடுவது படு வேடிக்கை. எண்பத்து மூன்றாம் ஆண்டு தலைவர் என இலங்கைத் தமிழர்களால் அதாவது ஈழத்துத் தமிழர்களால் கருதப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரனால் நடத்தப்பட்ட தாக்குதல் நடைபெறாவிட்டால் தமிழர்களின் பாரிய இன அழிப்பு தென்னிலங்கையில் ஏற்படாமல் இருந்திருக்க வாய்ப்புண்டு. சிறு துளியினைப் பெரு வெள்ளமாக மாற்றி ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தினையே சிங்கள சமுதாயம் எதிரிகளாகவும் அவர்களை அழிப்பதற்காகவும் எத்தனிப்பது வேலுப்பிள்ளை பிரபாகரன் என்னும் தெய்வத் தலைவரால் என்பதும் இங்கு சுட்டிக் காட்டத் தக்கது. ஈழம் என்ற ஒரே கொள்கைக்காக பல தமிழர்களை இவர் தன் பின்னே அழைப்பது வேடிக்கை. உலகில் குற்றங்கள் பல இல்லாத பிரதேசமாகவும், தூய தமிழ் மொழி உள்ள பிரதேசமாகவும் , நற்குணங்கள் கொண்ட பல மனிதர்கள் வாழும் பிரதேசமாகவும் தமிழீழப் பகுதி உள்ளதும் வரவேற்கத்தக்கது ஆனால் அப்பிரதேசத்தை அடைவது என்ற குறிக்கோளுடன் பலர் வீணே மடிவதென்பது வியப்பை அளிக்கின்றது. பிரபாகரன் என்பவர் தமிழர் என்ற தனது தனிமதினக் கொள்கையினை விட்டெறிவது குறிப்பிடத்தக்கது காரணம் அவரது கொள்கைகளின் காரணமாக பல இலட்சம் பொது மக்கள் மற்றும் போராளிகள் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுவாழ் மக்கள் பலர் போராட்டம் தீர்ந்து அனைத்து மக்களும் சமாதானமாக இருக்க ஒரு தீர்வை எட்ட வழி சமைக்க வேண்டும் என்பதும் அதை விடுத்து விடுதலைப் புலிகளின் போராட்ட வழியினை ஆதரிப்பதென்பதும் சற்றுக் கேள்விக்குறியாகவே உள்ளது. போரினால் ஈழத்தினை இன்று பெற்றால் நாளை வேறொருவன் வந்து கைப்பற்றமாட்டான் என்பதில் எவ்வளவு உண்மை உள்ளதோ அதேபோல் உலகில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் போராட்டத்திற்கும் பொது மக்களின் மரணத்திற்கும் ஆதரவளிக்காமல் அமைதியான முறையில் செல்வதே நன்று. இவை அனைத்தும் எனது தனிப்பட்டக் கருத்தே!

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !