சனி, 2 மே, 2009

அனுபவம் புதிது

வல்வெட்டித்துறையினைச் சேர்ந்த பக்கத்து விடுதிக்காரர்கள்.............

நான் மற்றும் எனது குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் விக்டோரியா பார்க் (Victoria Park) மற்றும் செப்பெர்ட்டில் (Shepperd) உள்ள வீட்டிலிருந்து ஓர்ட்டன் பார்க் (Orton Park) மற்றும் லாரன்ஸ் அவெனியூ ஈஸ்ட் (Lawrence Avenue East) பகுதிக்கு அரசாங்கம் வழங்கிய விடுதிக்குத் தங்க எம்முடைய பொருட்களை எல்லாம் இடம் மாற்றம் செய்தோம். அன்று லாரன்ஸ் அவெனியூ ஈஸ்ட் பகுதியில் உள்ள அரசாங்கம் எமக்கு வழங்கிய விடுதிக்கு அருகாமையிலேயே இரு தமிழ்க் குடும்பங்கள் ஒன்று வல்வெட்டித்துறையினைச் சேர்ந்த ஒரு ஜயா மற்றும் அவரது மனைவி, மற்றொரு குடும்பம் எனது தாயார் வேலை செய்யும் இடத்தில் Supervisor ஆக உள்ள பவானி என்பவரின் தாயாரும் தகப்பனாரும் ஆகும். இவ்விரு குடும்பத்தில் வல்வெட்டித்துறையினைச் சேர்ந்த குடும்பத்தினைச் சேர்ந்த இரு மகன்களும் பலகலைக் கழகத்தில் வைத்து சக தமிழ் மாணவர்களால் காரால் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட செய்தியினை நாங்கள் இடம் மாற்றம் செய்ய வந்த நாளன்று அவ்விரு மகன்களின் தந்தை சொல்லக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவர் கூறினார் " பகவத் கீதையில் உள்ளது போன்று எதை நீ கொண்டு வந்தாய் அதை எடுத்துச் செல்வதற்கு". என அவ்வரிகளைத் தனது மகன்களின் மரணத்தின் வலிகளை மறப்பதற்காக எம்மிடம் கூறினார். அவரது இரு மகன்களும் சாதிப் பிரச்சனையாலோ அல்லது புலிக்கொடிகளை பல்கலைக் கழகத்தில் ஒரு விழாவில் ஏற்றி வைத்த காரணத்தினாலோ கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்பது இங்கு எனக்கு விளங்கியது. அவ்விரு மகன்களின் தந்தையினைச் சந்தித்தது எனக்கு புதியதொரு அனுபவமாகவிருந்தது குறிப்பிடத்தக்கது.

கேட்ட கடிகள்

உடையார் பொல்லு........

ஒரு ஊரில் உடையார் என்பார் ஒருவர் இருந்து வந்தார். தனது சொந்தக்காரர்களின் மரணச் செய்திகள் வரும்வேளைகளில் அவர்தம் பொல்லொன்றை தான் வந்திருப்பதற்கு அறிகுறியாக கொடுத்து அனுப்புவார். தான் தனது சொந்தங்களின் மரணத்திற்குச் செல்ல மாட்டார். இப்படியே பல நாட்கள் தொடர்ந்து செய்து வந்தவர் இறுதியில் மரணமடையவே இறுதியில் ஊரில் சொந்தங்கள் எல்லோரும் தங்கள் வீட்டில் இருந்த பொல்லை மட்டும் அனுப்பி துக்கம் விசாரித்ததே இதில் வேடிக்கையான விடயம். இக்கடியினை தம்பிநாதன் அண்ணை எனக்குக் கூறியது கேட்டேன்.

திங்கள், 12 ஜனவரி, 2009

நிகழ்வுகள்

Bowling on December 31st 2008

7:14:26 pm

7:16:26 pm

டிசம்பர் 31 2008 அன்று நான் மதன், நிருபன், தர்சிகா, சுதா ஆகியோர் Bowling விளையாடியதன் நிகழ்படத்துண்டுகள்.

திங்கள், 22 டிசம்பர், 2008

கனவுகள்

நடனமாடும் பெண்கள்...........

நான் ஒரு வீட்டின் கூரையினால் சென்று பார்த்த பொழுது அங்கு உள்ளே தமிழ்ப் பெண்கள் இருப்பதனை அவதானித்தேன். பின்னர் அங்கு சென்று பல பொருட்களை எடுத்தேன் பின்னர் ஒரு கறுப்பின இளைஞனிடம் வினவினேன் இங்கு தமிழ்ப் பெண்கள் மற்றும் பிற இளைஞர்கள் என்ன செய்கின்றனர் என்று அவர் கூறினார் இங்கு அவர்கள் தங்குகின்றவர்கள் என்று. மேலும் நான் அக்கூரையின் வழியே நடந்து செல்ல நடன வகுப்புக்கள் நடைபெறும் சத்தம் கேட்கின்றன. ஆனாலும் கூரையில் உச்சியில் இருந்து செல்லப் பயந்து பின்னே வருகின்றேன். இதன்பின்னர் ஒரு மடம் போல் ஓலைக் கூரையினால் வேயப்பட்ட குடிசைப் பகுதிக்குச் சென்று தங்குகின்றேன். அங்கு தங்குவது மிகவும் விருப்பமாக எனக்குப் பட்டது.

வியாழன், 4 டிசம்பர், 2008

கேள்விப்பட்ட செய்திகள்

வெள்ளைக்காரியினைக் காதலித்த கனேடியத் தமிழ் இளைஞர்..........

உணவகம் ஒன்றில் தமிழர் துப்பரவு செய்யும் பணியில் ஈடிபட்டிருந்தார் அவர் இரசிய நாட்டினைச் சேர்ந்த வெள்ளைக்காரி  ஒருவருடன் சேர்ந்துதான் வேலை செய்வது வழக்கம். ஒரு சமயம் அவர் அப்பெண் தன்னிடம் தாராளமாகப் பழகுவதைப் பார்த்துப் பின் தன்னைக் காதல் செய்வதாக எண்ணி அவளைக் கட்டியணைத்திருக்கின்றார். கோபம் கொண்ட அவள் அவரைத் தள்ளிவிட்டு காவல்துறை அதிகாரிகளை அழைக்க எத்தனிப்பதாகக் கூறினார். பின்னர் இவ்வாறு நட்பைக் காதலாகத் தவறாக எண்ண வேண்டாம் எனவும் கூறினார். இச்செய்தியினை குலோபல் வூட் நண்பரான குபேந்திரன் எனக்குக் கூறினார்.

புதன், 3 டிசம்பர், 2008

அனுபவம் புதிது

குருவி ஒன்று என் கையில் இறந்தது.........



நான் குலோபல் வூட் கஸ்டம் தொழிற்சாலையில் நேற்று வேலைக்குச் சென்றதும் ஒரு குருவி அத்தொழிற்சாலையின் உள்ளே பறக்கத் தெரியாது தத்தளித்துக் கொண்டிருந்தது. அதனைப் பார்த்த அங்கு வழமையாக என்னுடன் இரவு நேரங்களில் வேலை செய்து பின் காலையில் வேலை செய்யத் தொடங்கிய இளைஞன் பயந்தான். யூத மதத் தந்தை மற்றும் இஸ்லாமியத் தாயினால் உருவான பத்தொன்பது வயது இளைஞனான அவன் எனது சூப்பர்வைசர் ஆன முகமதுவிடம் சென்று சொன்னான் குருவி ஒன்று அங்கு உள்ளது என. அக்குருவியினைக் கையினால் நெரித்தும் உணவினை வாயினுள் ஓட்டியும் முகமது தீத்தினார். சிறிது வேளையின் பின்னர் கரப்பான் பூச்சியினைக் கொல்வதற்காக வைத்திருந்த மருந்தின் அருகில் அது சென்றதாகக் கூறினான். அவன் சென்ற சிறிது நேரத்தில் பின்னர் குருவியினைப் பார்க்க நான் சென்றேன். குருவி துடித்தது, பின் என் கையில் இறந்தது. என் கையில் வந்து இறப்பதற்கு அக்குருவி என்ன பாவம் செய்ததோ ஒருவேளை என் கை பட்டதனால் அக்குருவி இறந்ததோ. இது என் வாழ் நாளில் ஏற்பட்ட புதிய அனுபவம்.

ஞாயிறு, 30 நவம்பர், 2008

அனுபவம் புதிது

கணவனை விடுத்து தர்சனுடன் ஓடிய கனேடியத் தமிழ்ப் பெண்.........................

நான் Smurfit - Image pac நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்த வேளை அங்கு ஒவ்வொரு Line ற்கும் ஒரு Leader இருப்பார் அவ்வாறு இருந்த தர்சனுடன் இலங்கையில் இருந்து அண்மையில் வந்த பெண்மணி தன் கணவனை விடுத்து ஓடினார் இவை எனது வாழ்க்கையில் உண்மையில் முதன்முறையில் ஏற்பட்ட அனுபவம். ஏனெனில் இவ்வாறு தமிழ்ப் பெண்கள் கணவனை விடுத்து வேறொருவருடன் ஓடிய செய்திகள் திரைப்படங்களில் பார்த்ததுண்டு ஆனால் நேரடியாகக் காணவில்லை ஆகையால் இச்சம்பவம் எனது வாழ்க்கையில் ஏற்பட்ட புதிய அனுபவம் என நான் நினைக்கின்றேன்.

சனி, 29 நவம்பர், 2008

கேள்விப்பட்ட செய்திகள்

சுவிட்சர்லாந்தில் பாலியல் திரைப்படத்தில் நடிக்கவிருந்த தமிழீழத்தினைச் சேர்ந்த பெண்..................................

என்னுடைய குலோபல் வூட் நண்பர் கூறினார் "சுவிட்சர்லாந்தில் தமிழீழத்தினை அதாவது இலங்கையினைச் சேர்ந்த இளம் தமிழ்ப்பெண் ஒருவர் இணையத்தளம் மூலம் ஒரு வயது போன வெள்ளை இனத்தவருடன் அன்றாடம் உரையாடியுள்ளார் என்று. அது மட்டுமல்லாமல் அவ்வெள்ளையன் பெண்களை வைத்துப் பாலியற் திரைப்படங்கள் எடுப்பவன் என்றும் தமிழ்ப்பெண் இணையம் மூலம் அவனைப் பற்றித் தெரிந்துகொண்டு திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு சென்றுவிட்டார் என்றும் எனது நண்பர் கூறினார். மேலும் அவர் தெரிவித்ததாவது அப்பெண்ணின் வீட்டார் எவ்வளவு தேடியும் அவளைக் காணவில்லை என்று காவல்துறை அதிகாரிகளிடம் முறையிடவே அவர்கள் அவள் உபயோகம் செய்த கணணியில் அவர் Chat பண்ணியதை வைத்து எங்கு சென்றிருக்க முடியும் என்று யூகித்து அவ்வெள்ளைக்கார வயோதிபனிடமிருந்து அவளை அழைத்து வந்தனர். பின்னர் அவர் சீர்திருத்தப்பள்ளியில் அனுப்பப்பட்டு கல்வி கற்றார் என்பது அனைத்தும் எனது Global Wood Custom நிறுவன நண்பரால் சொல்லக் கேள்விப்பட்ட செய்திகளே! உண்மையா என்பது எனக்குத் தெரியாது.

செவ்வாய், 25 நவம்பர், 2008

அனுபவம் புதிது

யேசுநாதர் காப்பாற்றிய தகவல்..........
இன்று அதிகாலை நான் வேலைத்தளத்திலிருந்து பேருந்தில் செப்பர்ட் அவெனியூவால் (Sheppard Avenue) வரும் வேளை பேருந்தில் இருந்த கறுப்பின இளைஞன் ஒருவன் என்னிடம் வந்து கை காட்டி தான் நான்கு வருடங்களுக்கு முன்னரோ பின்ச் (Finch) மற்றும் நெல்சன் (Neilson)சாலையோரத்தில் சுடப்பட்டதாகவும் யேசு நாதர் தன்னைக் காப்பாற்றியதாகவும் கூறிச் சென்றார்.

தினம் ஒரு பாடல்

கட்டிக்கொள்ளவா - வாழ்க்கை

கவர்ச்சிகரமான உல்லாசப் பாடல்.

பதிலளியுங்களேன் !