சனி, 26 பிப்ரவரி, 2011

கனவுகள்


எம். ஜி. ஆரின் சந்திப்பு.......
சனிக்கிழமை, பெப்ரவரி 26, 2011 அன்று காலை 9:16 மணிக்கு இதனை எழுதிகின்றேன். இன்று காலை நான் ஒரு கனவினைக் கண்டேன் அக்கனவினில் நான், மற்றும் யாரோ கயானக்காரரின் குழந்தையுடனும் அவர்கள் குடும்பத்துடனும் கடைகளிற்கெல்லாம் ஏறி விளையாட்டுச் சாமான்களினை வாங்கிக் கொண்டிருந்தேன். திடீரென நான் மற்றும் தம்பிநாதன் அண்ணை அவர்களின் தோழர்கள் போன்ற யாரோ ஒருவர்களின் உணவகத்திற்குச் சென்றேன். அவ்வுணவகம் கிருத்துவ உணவகம் போன்றிருந்தது. நிரூபனும் எனக்கருகாமையில் அமர்ந்திருந்தான். அவ்வுணவகத்தில் பெரிய திரை பொருத்திய தொலைக்காட்சிப் பெட்டியும் இருந்தது, உணவகம் சற்றுப் பழமையானதானதொரு தோற்றத்தினை எனக்குக் கொடுத்தது. நான் உணவினை உட்கொள்ளும்போது எனதருகில் ஒரு வயது போன அம்மையார் வந்து அமர்ந்துகொண்டு நிரூபனின் சாப்பாட்டினில் இருந்து கொஞ்சம் எடுத்து சாப்பிட்டார். நானும் வேடிக்கையுடனும், பயத்துடனும் அக்கிழவியினைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர் எனது கனவினில் எம். ஜி. ஆர் தோன்றி ஈழத்துத் தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமான நிலையில் படுகொலை செய்யப் பட்டிருந்ததனை எனக்குக் காட்டினார், மேலும் அசரீதி ஒன்று என்னிடம் ஜனநாயகம் தான் இவ்வன்முறைகளிற்கெல்லாம் ஒரே தீர்வு எனக் கூறியது.

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

கனவுகள்

உலக அழிவு……
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 25, 2011 காலை 6:40 மணிபோலே இதனை எழுதிகின்றேன், இன்று காலை நான் ஒரு கனவு கண்டேன், இக்கனவினில் பெரும்பகுதியும் உலக அழிவினைப் பற்றியே இருந்தது. முதலாவதாக மக்கள் கூட்டம் கூட்டமாக மலை உச்சியின் மீது அமைந்திருந்த ஒரு அரண்மனைக் கட்டடங்களில் இருந்து விழுகின்றார்கள் போன்றும், இருந்த இடத்திலிலிருந்தே அழிகின்றார்கள் போன்றும் இருந்தது. நான் மட்டும் ஒரு கைதிகள் அடைபட்டிருந்த பள்ளத்தாக்கிற்குச் சென்றேன் அப்பள்ளத்தாக்கு மண்ணிற்கு அடியில் கட்டப்பட்டிருந்த அரண்மனையிற்கு என்னை அழைத்துச் சென்றது, அவ்வரண்மனை வேலைக்காரி என்னைப் பார்த்துவிட்டுத் துரத்த ஆரம்பித்தார் என நினைக்கின்றேன். நான் இக்கனவினைக் கண்டதன் காரணம் dragon age origins , red dead redemption ஆகிய நிகழ்பட ஆட்டங்கள் என நினைக்கின்றேன்.

புதன், 23 பிப்ரவரி, 2011

கனவுகள்


மதன் கொல்லப்படுதல்…….
புதன்கிழமை, பெப்ரவரி 23, 2011 அன்று மாலை 6:27 அன்று இதனை எழுதுகின்றேன். இன்று காலை நான் ஒரு கனவு கண்டேன், அக்கனவினில் மதனை யாரோ அடித்துக் கொல்லுவது போன்று இருந்தது. அக்கனவினில் மேலும் யாரோ குள்ள மனிதர்களோ, பேய் மனிதர்களோ போன்ற தோற்றத்தினை உடையவர்கள் மதனி இழுத்துச் சென்றனர், நானும் அவனைக் காப்பாற்றத் துடித்துக் கொண்டிருந்தேன் இக்கனவினில் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.


செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

அனுபவம் புதிது


 பெண்களுக்காக கெஞ்சும் அண்ணன்.......
இதனை எழுதும்போது நேரம் காலை 6:14 மணி, பெப்ரவரி 22, செவ்வாய்க்கிழமை, 2011 ஆகும். எமது வீட்டிற்கு நேற்று பபா அக்காக்கள் வந்து சென்றனர், அவர்கள் சென்றபிறகு நிரூபன் யாரோ ஒரு பொம்பளையுடன் தொலைபேசியில் உரையாடுவதனை அவதானிக்கக்கூடியதாகவிருந்தது. யாருடன் என நான் சந்தேகிக்கின்றேனென்றால் சஜிதா என்ற ஸ்கைப் முகவரியுடன் இவருடன் ஒரே கதைக்கும் பெண்தான் என நினைக்கின்றேன். அவளிடம் நிரூபன் "ஏன்க என்னை லவ் பண்ணல, ஏன்க இப்படியிருக்கீங்க ?" எனக் கெஞ்சிக் கூத்தாட எனக்கு அருவருப்பாக இருந்தது. நான் அவனிடம் எவ்வளவோ முறைகள் சொல்லியிருந்தேன் கனடாவில் பெண்களை நம்பாத, கடைசியில் உன்னையே உன்னை சூப்ப வைச்சுவிட்டுத்தான் போய்விடுவாள்கள் என்று, கேட்காமல் ஒரு பெண்ணிற்காக இப்படிக் கெஞ்சிக் கூத்தாடுகின்றான், இவனுக்குத் தம்பியாக இருப்பது வெட்கக்கேடாகவிருக்கின்றது. எனது வாழ்நாளில் எனது அண்ணன் ஒரு பெண்ணிடம் கெஞ்சிக் கூத்தாடுவது எனக்கு ஏற்பட்ட புதிய அனுபவம் ஆகையினால் இவ்வனுபவம் புதிது.

புதன், 16 பிப்ரவரி, 2011

கனவுகள்

 பிணக்குவியல்கள்........

புதன்கிழமை, பெப்ரவரி 16, 2011, 6:48 காலை நேரப்படி இதனை எழுதுகின்றேன். நான் இன்று காலை ஒரு கோரக் கனவினைக் கண்டேன், அதாவது நானும் எனது நண்பர்களும் மருத்துவமனைக்குச் சென்று ஒரு தமிழ் வைத்தியரைச் சந்திக்கின்றோம், அவரைச் சந்தித்தபின்பு வீடு வரும்பொழுது ஒரு பெரிய மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்தேன், உள்ளே நடந்து போகும் பாதையெங்கும் பிணங்கள் உடல் சிதறி காயங்கள் பட்டு கிடந்தன, நான் பயந்து பயந்து சத்தி எடுக்கும் கட்டத்திற்குச் சென்றும் உள்ளே நடந்து சென்று கொண்டிருக்கின்றேன். உள்ளே பல உடல்களின் பாகங்கள் தனித்தனியே கிடப்பதனை அவதானிக்க முடிந்தது. பிறகு யாரோ வந்து பிணங்களைக் குப்பைகளில் போட்டு எம்மை அவற்றைத் தூக்குமாறு கேட்பதனை யூகிக்கமுடிந்தது. பிணங்களில் கண்கள், முக்கிய பாகங்களினை எடுத்து பாதுகாக்கும் மருத்துவமனைதான் அந்த மருத்துவமனை என்பதனை இறுதியாக தெரிந்துகொண்டேன். இக்கனவு என் மனதினைப் பெரிதும் பாதித்தது.

புதன், 9 பிப்ரவரி, 2011

கனவுகள்

கோவிலும் நிர்வாண நடன மன்றமும்......

புதன்கிழமை, பெப்ரவரி 09, 2011, காலை 6:31 மணிபோலே இதனை எழுதத் தொடங்குகின்றேன். நான் இன்று காலை ஒரு கனவினைக் கண்டேன் அதாவது நான் ஒரு இணையம் இருக்கும் அழகிய கணணி அறைக்குள் சென்றேன், அங்கு பலரும் இருந்த காரணத்தினால் சற்று நேரத்திற்குப் பிறகே அங்கு சென்று உபயோகிக்க முடிந்தது. இதற்கு முன்னர் யாரோ சொந்தக்காரருடனான சந்திப்பு ஏற்பட்டது. பெரும்பாலும் ஜீவாக்காவாகத்தான் இருக்கவேண்டும் என நினைக்கின்றேன். பின்னர் நான் ஒரு தமிழ் உணவுக்கடைக்கு சென்று பார்த்த பொழுது செக்ஸ் படங்களிந் விளம்பரம் போட்ட திரைப்படங்கள் விற்கப்பட்டுக்கொண்டிருந்தன. நான் அப்படியே நடந்து சென்று அக்கடைக்கு மறு முனையில் அமிந்திருந்த நிர்வாண நடன மன்றத்திற்கும் செலின்றேந், அங்கு பல பெண்கள் குடித்துவிட்டு ஆட்டம்போட்டுக்கொண்டி நிர்வாணமாக இல்லாது சற்று சிறிய ஆடைகளுடன் ஆடிக்கொண்டிருந்தனர். என்னை அத்தமிழ்க் கடைக்காரரே அங்கு அழைத்தும் செல்வதனை உணர்ந்தேன். பின்னர் பெரிய நீண்ட பாலத்திற்கு மேலே வெள்ளை நிறத்தாலான பெரிய கோவில் ஒன்றினை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். அக்கோவிலிந் கீழே அருகாமையில் ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்ததனைக் காணமுடிந்தது. ஆற்றினில் ஏதோ மக்கள் அங்குமிங்கும் சுற்றித்திரிவதற்கு தண்ணீரில் ஓடும் படகு மாதிரியான ஏதோ ஒன்றும் ஓடுக்கொண்டிருந்தது.




பதிலளியுங்களேன் !