சனி, 31 டிசம்பர், 2011

தினம் ஒரு பாடல்

அம்மா என்றால் - அடிமைப்பெண்
இப்பாடலினைக் கேட்க அம்மா ஜெயலலிதாவின் ஞாபகம்தான்.

திங்கள், 26 டிசம்பர், 2011

தினம் ஒரு பாடல்

தென்றல் காற்றே - ஈரமான ரோஜாவே
மிகவும் நல்ல மெட்டினை உடைய இப்பாடல் என்றும் இனிய பாடல்.

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

சனி, 24 டிசம்பர், 2011

வெள்ளி, 23 டிசம்பர், 2011

வியாழன், 22 டிசம்பர், 2011

புதன், 21 டிசம்பர், 2011

தினம் ஒரு பாடல்

யா அலி - காங்க்ஸ்டர்
அரேபியப் பாடல் ஒன்றில் தழுவல் என்றாலும் நன்றாக மெட்டமைத்துள்ளார்கள்.

செவ்வாய், 20 டிசம்பர், 2011

திங்கள், 19 டிசம்பர், 2011

நபரொருவர்





பெயர்: மசூத் கான்

பிறந்த இடம்: பாகிஸ்தான்

வாழ்ந்த இடங்கள்: பாகிஸ்தான், கனடா

வாழும் இடம்: கனடா (மிட்லாண்ட் மற்றும் லாரென்சு)

அடையாளம்: எப்பொழுதும் தாடியும் பலமுறை தொப்பியும் அணிந்திருப்பார் (இஸ்லாமியர் போன்றே இருப்பது….) / வெளியில் செக்ஸ் கதைகள் மற்றும் டவுண்டவுனில் பட்டப்பகலில் செக்ஸ் நடப்பதாகப் பச்சையாக என்னிடம் கூறுவது.

நற்பண்புகள்: என்னைத் தம்பி தம்பி என அன்பாக அழைப்பது, எனக்குப் பலமுறை உதவி செய்தது. கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 5 ஆம் பாகத்ததின் விளம்பரத்தினைப் பார்க்க தனது தொலைபேசியினைக் கொடுத்து உதவியது. (தனக்குப் பிறருக்குக் கொடுக்காது இருந்தால் பிடிக்காது எனக் கூறுவது)

தீயபண்புகள்: எப்பொழுதும் என்னை அதட்டி எதுக்கெடுத்தாலும் போர்னோகிராபியோ, நீ கஞ்சா அடிக்கின்றனியோ (ஶ்ரீலங்காக்காரர் கஞ்சா அடிப்பார்கள், நீயும் என்ன கஞ்சா அடிக்கிறனியோ என என்னையும் எம் இலங்கைத் தமிழ் இனத்தினையும் இழிவாகக் கருதுவது. கனடாவில் பாகிஸ்தான் நாட்டுப் பொம்பிளைங்கள் மற்றும் ஸ்ரீ லங்காப் பொம்பளைங்கள் எல்லோரும் சுண்ணி சூப்பிவிடுவார்கள் எனப் பச்சையாகச் சொலவது.

சாதி: அரவாசி யூதர், அரைவாசி இஸ்லாமியர் (கான் என்ற தனது இறுதிப்பெயரினை உடையவர்கள் யூதர்களின் வம்சாவளி எனக் கூறினார்....)
வயது: 30 முதல் 40 வரை இருக்கும் (இந்நிகழ்படத்தினை எடுக்கும் வேளை)



தினம் ஒரு பாடல்

ரோட் என்ற இந்திப்படத்தில் வரும் எனக்குப் பிடித்த மெட்டு.

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

தினம் ஒரு பாடல்

கறுத்த மச்சான் - புது நெல்லு புது நாத்து
மிகவும் அற்புதமான கிராமத்துப் பாடல்.

வெள்ளி, 16 டிசம்பர், 2011

வியாழன், 15 டிசம்பர், 2011

புதன், 14 டிசம்பர், 2011

தினம் ஒரு பாடல்

வசீகரா - மின்னலே
இப்பாடல் மிக மிக அற்புதமான மெட்டுடன் உடைய பாடல். எவராலும் மறக்க இயலாத பாடல்.

செவ்வாய், 13 டிசம்பர், 2011

திங்கள், 12 டிசம்பர், 2011

கனவுகள்

தர்சிகாவினைக் கனவினில் கண்டேன்....
இன்று காலை நான் ஒரு கனவினைக் கண்டேன், அதில் நான் கேரளச் சாயலினை உடைய வீட்டில் இருந்தேன், நல்ல அழகிய வேலைப்பாடுகளினை உடைத்த வீடாக இருந்தது. நான் மேலும் அவ்வீட்டினுள் இருந்து கொண்டிருந்த வேளை திடீரென தர்சிகா சிவபாலசுந்தரம் என்னை நோக்கி ஓடோடி வந்தார் அவரது முகத்தினை நான் பார்த்தபோது அது மெதுவாக நிலைகுலந்து அழுகிய நிலையிலான ஒரு முகமாகனதொரு தோற்றத்தினைக் கொண்டிருந்தது.

தினம் ஒரு பாடல்

கண்ணுக்கும் - நினைக்கத் தெரிந்த மனமே
நல்ல மெட்டுள்ள பாடல் இப்பாடல்.

சனி, 10 டிசம்பர், 2011

தினம் ஒரு பாடல்

காற்றில் - ஒரு நாள் ஒரு கனவு
இப்பாடலின் மென்மையான வரிகள் எம்மை சந்தோஷ உச்சத்திற்கு அழைத்துச் செல்கின்றது.

வெள்ளி, 9 டிசம்பர், 2011

வியாழன், 8 டிசம்பர், 2011

தினம் ஒரு பாடல்

யபு தில் மிலே - யாதேன்
இது இந்திக்காரர் அல்லாத பிறமொழியினராலும் விரும்பிக் கேட்கக் கூடியதானதொரு பாடல்.

செவ்வாய், 6 டிசம்பர், 2011

தினம் ஒரு பாடல்

பூங்காற்று - வெற்றி விழா
இடைக்காலத்துப் பாடல்தான் என்றாலும் இனிய பாடல் நான் என்றும் ருசிக்கும் பாடல்.

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

தினம் ஒரு பாடல்

வா வா அன்பே - அக்னி நட்சத்திரம்
இப்பாடல் மிக மென்மையான மெட்டுக்களை உடைய பாடல்.

சனி, 3 டிசம்பர், 2011

வெள்ளி, 2 டிசம்பர், 2011

வியாழன், 1 டிசம்பர், 2011

தினம் ஒரு பாடல்

ஏதோ - பட்டியல்
இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் மனதினில் காதல் வலி ஏற்படுகின்றது.

செவ்வாய், 29 நவம்பர், 2011

திங்கள், 28 நவம்பர், 2011

தினம் ஒரு பாடல்

குடிமகனே - வசந்த மாளிகை
இப்பாடல் வரிகள்தனைப் பார்க்கும் போது ஈழத்துத் தமிழ்ப் பெண்களும் இந்திய தமிழ்ப் பெண்களும் வெளிநாடுகளில் குடித்து விட்டு ஆட்டம் போடுவது தான் நினைவிற்கு வருகின்றது.

ஞாயிறு, 27 நவம்பர், 2011

தினம் ஒரு பாடல்

பூங்காத்து - முதல் மரியாதை
இப்பாடல் என்னை கிராமத்திற்கே அழைத்துச் செல்லுகின்றது.

சனி, 26 நவம்பர், 2011

வெள்ளி, 25 நவம்பர், 2011

வியாழன், 24 நவம்பர், 2011

கனவுகள்

காமக் கறுப்பி....
இன்று நான் கண்ட கனவினில் ஒரு கறுப்பியுடன் நல்ல கட்டுமஸ்தான் வடிவினை உடையவள் அவளுடன் வேலை செய்து கொண்டிருந்தேன். நான் வேலை செய்த இடம் ஒரு பங்களா மாதிரி இருந்தது. நான் அவலுடன் வேலை செய்து முடித்துப் பின்னர் எனது அறையினில் சென்று உறங்கிக் கொண்டேன். நானும் சற்று நேரம் கழித்து வெளியில் வந்து பார்த்த போது கறுப்பி அம்மணமாக நின்றிருந்தாள், நானும் அவளிடம் சென்று அவளது மேலுறுப்பினை தொட்டு சந்தோஷம் கொண்டேன். இக்கனவினை நான் ஏன் கண்டே என்பதன் அர்த்தத்தினை அறியேன் ஆனாலும் இது ஒரு காமக் கனவு எனவே நினைக்கின்றேன். நான் பின்னர் மேலிருந்து கீழே எனது முதலாளியில் சொல்லிற்கேற்ப இறங்கி அவரின் அருகில் சென்று பார்த்தேன் பின்னர் கனவினில் இருந்து விழித்துக்கொண்டேன். 

தினம் ஒரு பாடல்

ஏதோமா ஏதோமாதிரி - கண்களால் கைது செய்
இப்பாடல் திரும்பத் திரும்பக் கேட்டாலும் அற்புதமாக உள்ளது.

புதன், 23 நவம்பர், 2011

செவ்வாய், 22 நவம்பர், 2011

தினம் ஒரு பாடல்

கொஞ்சம் - வீட்ல விஷேசங்க
இப்பாடல்தனை நான் கேட்கும்போதெல்லாம் எனக்கு பழைய ஞாபகங்கள் தலை தூக்குகின்றன.

திங்கள், 21 நவம்பர், 2011

ஞாயிறு, 20 நவம்பர், 2011

தினம் ஒரு பாடல்

தீயில் விழுந்த - வரலாறு
இப்பாடலின் இசை மிக அற்புதம் வழமை போலே ஏ. ஆர். இரஹ்மான் தனது சாமர்த்தியத்தினைக் காட்டியுள்ளார்.

சனி, 19 நவம்பர், 2011

தினம் ஒரு பாடல்

ராத்திரி - அப்பு
இப்பாடலினை நான் ஒருமுறை திருச்சியில் இருந்தபோது கோயில்களிற்குச் சுற்றுலாச் சென்ற போது கார் ஓட்டுனர் போடக் கேட்டுப் பின்னர் அத்தகு காரணங்களினால் இப்பாடலினை எப்பொழுது கேட்டாலும் எனக்குப் பிடிக்கும். 

வெள்ளி, 18 நவம்பர், 2011

செவ்வாய், 15 நவம்பர், 2011

தினம் ஒரு பாடல்

ஏனோ - கிழக்குக்கடற்கரைச் சாலை
மிகவும் அற்புதமான பின்னணி இசையினை உடைத்த எனக்கு மிகவும் பிடித்த பாடல்களுள் ஒன்று.

திங்கள், 14 நவம்பர், 2011

தினம் ஒரு பாடல்


புது மாபிள்ளைக்கு - அபூர்வ சகோதரர்கள்
இப்பாடல் அனைத்து மனிதர்களுக்கும் காதல் வளரலாம் என்னும் ஒரு கருத்தினைக் கூறி நிற்கின்றது.

ஞாயிறு, 13 நவம்பர், 2011

அனுபவம் புதிது



சம்பள உயர்வினை வேண்டிய போராட்டம்..
நான் கால்கில் படிக்கச் சென்றதொரு காலம், பள்ளியினை விட்டு வந்தேனே அல்லது பள்ளியில் சேரச் சென்ற காலமோ சரியாகத் தெரியவில்லை, ஆனாலும் அது ஒரு கோடை காலமென்பதுமட்டும் எனக்குச் சரியாகத் தெரிந்த உண்மை, அப்பொழுது நான் புரோட்வியூ நிலையத்தில் ஏறாது நடந்து சென்று எனது பள்ளிக்கருகாமையில் அமைந்திருந்த பள்ளிவாசலினைத் தாண்டிய தெருக்களினூடே நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது கறுப்பினத்தினைச் சேர்ந்த பெண்ணொருவரும் மற்றும் சிலரும் சம்பள உயர்வினை வேண்டிப் போராட்டம் நடத்தினர். நானும் என்ன ஏது என விசாரித்தபின்னர் தெரிந்துகொண்டேன் அவர்கள் வேலை செய்வது சைள்ட்கேர் செண்டர்  என, மேலும் அவர்களுக்குச் சம்பள உயர்வு பல காலங்களாக இல்லாதது வேடிக்கை அளிக்கின்றது. சம்பளத்தினை வெள்ளையர் அதிகமாக எடுக்கின்றனர் என நான் எண்ணுகின்றேன். கனடாவில் வெள்ளையர் அதிகமாகச் சம்பளம் எடுப்பது மிகவும் சுட்டிக்காட்டத்தக்க விடயம். இதனைப் பலர் கூறியும் பல செய்திகளில் படித்தும் தெரிந்து கொண்ட உண்மை. நான் கண்ட போரட்டத்தில் போஸ்டர்கள் வைத்துக்கொண்டு நின்றவர்களில் பெரும்பான்மையினர் கறுப்பினத்தவரும், இந்தியப் பெண்மணிகள் போன்ற தோற்றத்தினைக் கொண்டவருமே என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இவ்வாறு பொதுமக்கள் அமைதியாகப் போஸ்டர் வைத்துப் போரட்டம் நடத்தியதினை முதன்முறையாக என் கண் முன்னே பார்த்தது இச்சம்பவத்தினையே.

தினம் ஒரு பாடல்

வாடி வாடி - சச்சின்
இப்பாடல் எவ்வயதினரையும் துள்ள வைக்கும் பாடல்.

வெள்ளி, 11 நவம்பர், 2011

வியாழன், 10 நவம்பர், 2011

தினம் ஒரு பாடல்

திப்பு - பாபா
இப்பாடல் மிகவும் அற்புதமான கருத்துக்களைக் கொண்டுள்ள பாடல்...

புதன், 9 நவம்பர், 2011

தினம் ஒரு பாடல்

தாலாட்டுதே - கடல்மீன்கள்
இப்பாடல் என்னை வேறொரு அற்புத உலகத்திற்குக் கொண்டு செல்கின்றது.

செவ்வாய், 8 நவம்பர், 2011

திங்கள், 7 நவம்பர், 2011

தினம் ஒரு பாடல்

செவ்வந்தி - 16 வயதினிலே
இப்பாடல் கிராமத்து வாசனத்தினைச் சற்று என் மீது தூவுகின்றது.

ஞாயிறு, 6 நவம்பர், 2011

தினம் ஒரு பாடல்

சூரஜ் - ஹிந்திப் பாடல்
இது இந்திப் பாடல்தான் என்றாலும்  மிகவும் நல்ல பாடல்.

சனி, 5 நவம்பர், 2011

தினம் ஒரு பாடல்

ஓ ஓ - முகவரி
இப்பாடல்தனை நான் திருச்சிராப்பள்ளியில் இருந்த சமயம் கேட்ட ஞாபகம் என்றும் என் மனதில் அழியாமல் இருக்கச் செய்துகொண்டிருக்கின்றது.

வியாழன், 3 நவம்பர், 2011

தினம் ஒரு பாடல்

ஏதோ ஏதோ - எனக்கு 20 உனக்கு 18
இப்பாடல் ஏ. ஆர் ரஹ்மானின் இசையினால் வடித்த காரணத்தினால் மிகவும் அற்புதமாக வந்துள்ளது.

புதன், 2 நவம்பர், 2011

தினம் ஒரு பாடல்

குத்தினா கும்மாங்குத்து - முருகன்
இப்பாடலின் ஆரம்பம் மிகவும் ருசிகரமான மேளத்துடன் உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 28 அக்டோபர், 2011

தினம் ஒரு பாடல்

ஓ பிரேமா - டெந்த் கிளாஸ்
தெலுங்குப் பாடல்தான் என்றாலும் மிகவும் நல்ல ஒரு பாடல்.

புதன், 26 அக்டோபர், 2011

தினம் ஒரு பாடல்

கை தட்டி - ஜோடி
இப்பாடல்தனை நான் முதன்முதலில்  கேட்டபோது மிகவும் ஆனந்தமாகவிருந்தது. மிகவும் பிரசித்திபெற்ற பாடலாகவும் அமைந்திருந்தது இப்பாடல்.

செவ்வாய், 25 அக்டோபர், 2011

தினம் ஒரு பாடல்

என் சுவாசக் காற்றே - என் சுவாசக் காற்று
என்றும் மனதில் சோகத்தில் ஆழ்த்தும் பாடல்.

சனி, 22 அக்டோபர், 2011

வெள்ளி, 21 அக்டோபர், 2011

தினம் ஒரு பாடல்

ஆராரோ - பொண்டாட்டி தேவை
இந்தப் பாடல் எப்பொழுது கேட்டாலும் பழைய நினைவுகள் என் மனதில் வந்தொலிக்கின்றது.

திங்கள், 10 அக்டோபர், 2011

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

தினம் ஒரு பாடல்

அஞ்சலி - அஞ்சலி
இப்பாடல் சிறு குழந்தைகளின் மனதினை உற்சாகப்படுத்தும் நல்ல பாடல்.

வெள்ளி, 7 அக்டோபர், 2011

அனுபவம் புதிது


பிச்சை எடுத்தவரின் கதை..
இன்று நான் பாடசாலையினை விட்டு புகையிரதத்தில் வந்துகொண்டிருந்தேன். அப்பொழுது திடீரென ஒரு வெள்ளைக்கார நபர் எனதருகில் வந்து இரண்டு டாலர்கள் இல்லாவிடில் ஏதேனும் பணம் இருந்தால் உதவி புரியுமாறு கூறினார். அதனை அவர் ஒரு சிறிய அட்டைதனில் எழுதியிருந்தார். நானும் முதல் இல்லை என்று கூறிப் பின்னர் எனது பேர்ஸினில் இருந்து பேருந்து டோக்கன் ஒன்றினை எடுத்துக் கொடுத்தேன். பின்னர் அவர் எனதருகில் வந்து நிற்க நானும் ஏன் இவ்வாறு பிச்சை எடுக்கின்றீர் என ஆங்கிலத்தில் வினவினேன். அவரும் தான் 40 ஆயிரம் டாலர்கள்வரை வருடத்திற்கு சம்பாதித்து இப்பொழுது நோயாளிகளிற்கான அரசாங்கம் வழங்கும் தொகையினைப் பெற்றுக்கொண்டு 14 ஆயிரம் அளவில்தான் சீவியம் நடப்பதாகக் கூறினார். நானும் நீங்கள் தனியாகவோ இருக்கின்றீர்கள் எனக் கேட்டதற்கு இல்லை தான் குடும்பமாக இருந்தேன், மகள் இருந்தாள், எனக்கூறி தான் தனியாக இருப்பதாகவும் விடுதி ஒன்றில் தங்கி இருப்பதாகவும் தெரிவித்தார். அவர் தனக்கு யாரோ கதைப்பது போன்ற குரலொலிகள் கேட்பதாகவும் எனக்குக் கூறியது மிகவும் பரிதாபமாக இருந்தது. நானும் அவரை கஞ்சா அடிக்கும் நபர் எனக் கூறினேன், இருப்பினும் எது உண்மை, எது பொய் எனத் தெரியாது உடனேயே இறுதியில் அவர் ஒரு கஞ்சா அடிமை என எவ்வாறு சொல்லமுடியும். இவ்வாறு கனடாவில் பிச்சை எடுக்கும் நபரி ஒருவரிடம் அவரது கதையினைக் கேட்ட இந்த அனுபவம் ஒரு புதிய அனுபவமே.

தினம் ஒரு பாடல்

உனக்கென்ன - அட்டகாசம்

அஜித்குமாரின் ஆட்டம் இதில் நன்றாக உள்ளது.

வியாழன், 6 அக்டோபர், 2011

புதன், 5 அக்டோபர், 2011

செவ்வாய், 4 அக்டோபர், 2011

தினம் ஒரு பாடல்

வெள்ளி மலரே - ஜோடி
இப்பாடலின் வரிகள் என்னைப் பலமுறை உற்சாகத்தில் ஆழ்த்தினது.

திங்கள், 3 அக்டோபர், 2011

தினம் ஒரு பாடல்

கண்ணன் வரும் - தீபாவளி
மிகவும் அற்புதமான பாடல்,  மனதை துள்ள வைக்கும் பாடல்.

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

சனி, 1 அக்டோபர், 2011

தினம் ஒரு பாடல்

அனார்க்களி - கண்களால் கைது செய்
இப்பாடல் என் மனதைப் பலமுறை சோகக் கணத்தில் ஆழ்த்தியது.

வியாழன், 29 செப்டம்பர், 2011

தினம் ஒரு பாடல்

நீ கவிதை - நான் அவன் இல்லை

இப்பாடல் வரிகளினால் என் மனம் கொந்தளிக்கின்றது, இப்பாடல் காட்சிகளினால் என் மனம் காம லீலைகளுள் வீழ்கின்றது.

புதன், 28 செப்டம்பர், 2011

தினம் ஒரு பாடல்

50 ரூபா தான் - அப்பு
இந்தப் பாடலினைக் கேட்கும்போது எனக்குத் திருச்சியில் இருந்த ஞாபகம் வரும். இப்பாடலினைக் கேட்டவாறே நான் திருச்சியில் தனிமையில் இருந்ததுண்டு.

திங்கள், 26 செப்டம்பர், 2011

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

சனி, 24 செப்டம்பர், 2011

தினம் ஒரு பாடல்

முதன் முதலாக - எதிரி

இப்பாடல் வரிகளினாலும் அதன் சோகத்திலும் பலமுறை என் மனம் அழுததுண்டு. எனக்குத் துக்கம் ஏற்படும்போதெல்லாம் இப்பாடல்வரிகள் என்னை ஆறுதல் செய்ததுண்டு, ஒருமுறை அல்ல பலமுறை.

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

கனவுகள்

இஸ்லாமியர் மீதான வெறுப்பு....
நான் இன்று காலை கண்ட கனவானது சற்று வித்தியாசமான கனவாகும். அதாவது எனக்கு முன்னால் ஒரு இஸ்லாமியப் பெண் தலையில் முட்டாக்குப் போட்டுக்கொண்டு வந்திருந்தார். எனக்கருகாமையில் நின்றிருந்த வெள்ளை இனத்தவர் போன்ற ஒருவர் இஸ்லாமியப் பென் வந்தவுடன் உருவந்தமாதிரி ஆகி அவரைத் துரத்த ஆரம்பிக்கின்றார். நானும் திடீரெனப் பயந்துபோனேன். என்னவோ ஏதோ என பயந்து நடுங்கி நான் எழுந்து கனவு கலைந்தது என நினைக்கின்றேன். இக்கனவானது இஸ்லாமியர் மீதான் வெள்ளையினத்தவரின் வெறுப்பினைக் காட்டுவது இங்கு நினைவூட்டியது. நல்ல சமயம் ஒன்று இவ்வாறான அநியாய முறையில் அமெரிக்கர்களாலும், பிர மேற்கத்தேயவர்களாலும் அழிக்கப்படுவது வெட்கக்கேடு. 

தினம் ஒரு பாடல்

ராகுல ராகுல - கஜினி
இப்பாடலின் மெட்டு எம்மைத் துள்ள வைக்கும்.

வியாழன், 22 செப்டம்பர், 2011

தினம் ஒரு பாடல்

ராத்திரி - அப்பு
இப்பாடல் என்னை பலமுறை வருத்தியதுண்டு, நான் தனிமையில் இந்தியாவில் இருந்த சமயம் இப்பாடலினைக் கேட்டு மனம் வருந்தியதுண்டு.

அனுபவம் புதிது

முதன்முறையாக கணணியில் பதிவிறக்கி விளையாடிய நிகழ்பட ஆட்டம்......
நான் செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 20, 2011 மஅன்று மினி நீஞ்சா 'mini ninja' என்ற நிகழ்பட ஆட்டத்தின் சிறு பகுதியினை விளையாடியிருந்தேன், பின்னர் பெரும்பகுதியினை புதன்கிழமை, செப்டம்பர் 21, 2011 அன்று விளையாடியிருந்தேன். நான் இந்நிகழ்பட ஆட்டங்கள்தனை திங்கட்கிழமையிலிருந்து பதிவிறக்கிக் கொண்டேன் என நினைக்கின்றேன், மினி நீஞ்சாவிற்கு முன்னர் டூம் 3 யினை பதிவிறக்கினேன் ஆனல் அதனை விளையாட ஆயத்தமானபோது உள்ளே செல்ல முடியவில்லை. மினி நீஞ்சா தாந் உருப்படியாக இருந்தது எனது மாக்கில். ஏற்கனவே மினி நீஞ்சாதனை நான் 'Demo' வில் விளையாடினேன். நான் இவ்வாறு ஏற்கனவே ஆடிய நிகழ்பட ஆட்டம் கணணியில் முதன்முறையாக ஆடியது புதிய உற்சாகத்தினைக் கொடுத்தது. இவ்வாட்டத்தினால் ஏற்பட்ட அனுபவம் என் வாழ்நாளில் ஏற்பட்ட புதிய அனுபவம் ஆகும்.

புதன், 21 செப்டம்பர், 2011

தினம் ஒரு பாடல்

லில்லி மலருக்கு - உலகம் சுற்றும் வாலிபன்

இப்பாடல் என்றும் மறக்க முடியாத கேட்டால் நினைவுகளினை நெஞ்சினிற்குள் அளிக்கும் பாடல்.

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

தினம் ஒரு பாடல்

தேன் - நான் அவன் இல்லை
இப்பாடல் மிகவும் அற்புதமான பின்னணி இசையினைக் கொண்டுள்ளது, இதனைக் கேட்கும்பொழுது நகைச்சுவை உணர்வும் ஏற்படுகின்றது.

கேள்விப்பட்ட செய்திகள்

பாப்பா ஜயரினைப் பிடித்த கிறீஸ் மனிதர்கள்.....
இன்று இப்பொழுது இதனை எழுதும் சற்று முன்னர் எனது தாயார், அம்மம்மாவிடம் பாப்பா ஜயரினைப் பற்றி ஊரில் நடந்த கதையினை எழுதிக்கொண்டிருந்தார். நானும் ஆவலுடன் கேட்ட போதுதான் தெரிந்தது என்ன நடந்தது என்று. பாப்பா ஜயர் என்ற ஜயர் கெருடாவிலிலிருந்து கல்லுவம் என்ற இடத்திற்குச் சென்றுகொண்டிருந்த வேளை அம்மணமாக கறுத்த உருவம் அவர் பக்கம் வந்த போது, அவர் கிட்டச் சென்று பார்த்திருக்கின்றார். அவர் அவ்வுருவத்திந் கிட்டே சென்று பார்த்தபோது அது கிறீஸ் மனிதர் எனத் தெரிந்துகொண்டார், அவர்கள் அவரை மறித்து கழுத்தைப் பிடித்தும் தலை முடிதனைப் பிடித்தும் சித்திரவதை செய்து பின்னர் அவருக்குப் பொம்பிளைப் பிள்ளை இருக்கின்றதோ எனக் கேட்டனர் என அம்மா கூறினார், மேலும் பாப்பா ஜயர் பயத்தில் ஓம் என்று பொய் சொன்ன காரணத்தினால் தப்பித்துக்கொண்டார் என்பதுவும் பின்னர் கெருடாவில் பகுதிக்குச் சென்று கிறீஸ் மனிதர்கள் பற்றிச் சொன்னார் என்பதனை அம்மா சொன்னார். மேலும் அம்மா தெரிவிக்கையில் கிறீஸ் மனிதர்கள் தமிழ் இராணுவக் குழுவினரே என்பதனையும் தெரிவித்தார். முந்தி வெள்ளை வான் இப்பொழுது கிறீஸ் மனிதன் என தமிழீழப் பிரதேச மக்கள் இவ்வாறு பல பேப்புண்டைகளால் சீரழிக்கப்படுவது வேடிக்கை.

திங்கள், 19 செப்டம்பர், 2011

தினம் ஒரு பாடல்

மாயா மாயா - பாபா
தத்துவமான நல்ல பாடல்.

கனவுகள்

பள்ளியின் ஞாபகம்.....
நான் இன்று கண்ட கனவு எனது பள்ளி நாட்களில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களினை மையமாக வைத்து வந்தது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. நான் ஒரு பள்ளிக்குப் படிக்கப் போறன் அங்கு ஆசிரியர்கள் நான் பிரதம மந்திரியைப் பற்றி ஏதோ கதைத்ததனைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள், என்னுடன் வந்த சக மாணவர்கள் எதையோ எடுக்கப்போக நானோ தனியே நின்று பின் வகுப்புக்குழ்ல் சென்றேன். உள்ளே அமாண்டா விஞ்ஞானப் பாடத்தினை எடுத்துக்கொண்டிருந்தா, எனக்கு அருகாமையில் இலங்கையைச் சேர்ந்த தலை முடி நரைத்த நபரும் அமர்ந்திருந்தார். இவ்வாறு கனவு வந்து போனது, பள்ளி ஒரு கொட்டிலில் அமைந்திருந்ததைப் போன்ற தோற்றத்தினைக் கொண்டிருந்தது. இக்கனவினை நான் ஏன் கண்டேன் என்பது எனக்குத் தெரியவில்லை ஆனாலும் இக்கனவினில் இருந்து விழித்துக் கொண்டதும் எந் மனம் சற்றுப் பயத்தில் ஆழ்ந்தது. 

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

தினம் ஒரு பாடல்

போகப் போக - பட்டியல்
இப்பாடலில் ஒரு குதூகலம், ஒரு மகிழ்ச்சி பிறக்கின்றது.

சனி, 17 செப்டம்பர், 2011

தினம் ஒரு பாடல்

ஏனோ - கிழக்குக் கடற்கரைச் சாலை
இப்பாடலின் அமைப்பானதும் அதன் மெல்லிசையும் என் மனதினை பல சோகங்கள் தனை உருவாக்கியது.

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

தினம் ஒரு பாடல்

நீ காற்று - நிலாவே வா
இப்பாடலினை எப்பொழுது கேட்டாலும் என் மனதிற்குள் புத்துணர்ச்சி பிறக்கும்.

வியாழன், 15 செப்டம்பர், 2011

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

கேள்விப்பட்ட செய்திகள்


வேலுப்பிள்ளை அண்ணையின் மரணம்..
அம்மம்மாவின் கடையினை நடத்தியவரும் எனக்கு சிறுவயதிலே பார்த்த முகமுமான வேலுப்பிள்ளை அண்ணை இறந்த செய்தியினை அம்மம்மா கூறக் கேட்டதும் மனதிற்குச் சற்று வருத்தமாக இருந்தது. அவர் எனக்குப் பலமுறை தொலைபேசியில் இங்கு கனடாவிற்கு எடுத்து என்னுடன் உரையாடினார் என்பது இங்கு சொல்லத்தகும். நானும் எவ்வாறு அவர் மரணமெய்தினார் என்பதனை அறிந்த போது மிகவும் வேதனைக்குரிய ஒரு வடுவாக எனக்கு ஏற்பட்டது உண்மைச்செய்தியினை அம்மம்மா வாயின்மூலமாகக் கேட்டபின்பு. அம்மம்மா கூறினார் வன்னியில் 2009 ஆம் ஆண்டு போர் நடைபெற்ற சமயம் அதாவது ஈழத்தின் இறுதிப்போரும் தமிழின அழிப்பின் உச்சகட்ட நிலையுமான போரின் போது சிங்கள இன வெறி இராணுவத்தினரால் வேலுப்பிள்ளை அண்ணையும் அவரின் மகனும் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு வேலுப்பிள்ளை அண்ணை படுகொலை செய்யப்பட்டதனைப் பார்த்ததாகச் சொல்லும் அம்மம்மா அதனைப்பார்த்த அவர் மனைவி பைத்தியம் போன்று ஆனார் என்பதனையும் தெரிவித்தது இங்கு படு வேதனை கொடுக்கும் செயலாக உள்ளது. அவர்தம் இன்னொரு பிள்ளையுடன் இருப்பதாக அம்மம்மா வேதனியுடன் தெரிவித்தார். 

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

கேள்விப்பட்ட செய்திகள்



இன்றைய ஈழத்தில் விபச்சாரம்…….

ஈழத்தில் இறுதிப் போர் முடிவடைந்த இக்காலகட்டத்தில் தமிழ்ப் பெண்கள் பலவந்தமாகவும்,  சில பெண்கள் தாமாகவே போயும் இலங்கை இரானுவத்தினருடன் விபச்சாரம் நடத்துவதாக டிலக்ஸன் என்பவர் எனக்குத் தெரிவித்தார். இவர் அண்மையில் இலங்கையிலிருந்து கனடாவிற்கு வந்தவரென்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. அவர் உண்மையைச் சொன்னாரா அல்லது  பொய்யினை உரைத்தாரா என்பது எனக்குத் தெரியாது ஆனால் அவரிடம் நான் மென்மேலும் துருவி விசாரித்த பொழுது கூறினார் "நாங்கள் ஒருக்கா சிநேகிதங்கள் எல்லாம் சேர்ந்து போகும்போது ஒரு தமிழ்ப்பொம்பிளையோடு வாக்குவாதம் ஏற்பட்டு பிறகு அவா பக்கத்திலிருந்த துணை இராணுவக் குழுவினருக்குச் சென்று காட்டிக்கொடுத்து எங்களுக்கு அடி விழுந்தது" என்று தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்தார். தலைவர் ஆண்ட காலத்தில் இவ்வாறு விபச்சாரம் நடக்கவில்லை இப்பொழுது இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் தமிழீழம் வந்தபின்னரே இவ்வாறு தமிழ்ப்பெண்களின் வாழ்க்கை சீரழக்கப்படுகின்றது என்று. அவர் கூறிய விடயங்களை வைத்து  ஆராய்ந்துபார்த்தால் தமிழீழ வரலாற்றில் கலங்கம் விளைவிக்கம் பொருட்டோடு இவ்வாறு சில பெண்களின் நடத்தைகள் உள்ளது என்பது இங்கு அறியலாம், ஆனாலும் எது உண்மை என தெரிந்துகொண்டபின்னர் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

திங்கள், 5 செப்டம்பர், 2011

தினக்கருத்து


கனடாவில் சம்பளம் குறைய வாங்கும் ஆசிரியர்கள்……
நான் கால்கில் படித்த சமயம் டிஸைன் யூவர் பியூச்சர் என்ற வகுப்பினை எடுத்திருந்தேன். அவ்வகுப்பில் எமது வருங்காலத்தில் எவ்வகை தொழிலை நாம் புரிவோம் என்பதனை தெரிந்து கொண்டேன், நானும் வரலாற்று ஆசிரியராக வரவிரும்பி அதற்காக ஒரு நேர்காணலை நடத்தவும் தயாரானேன். நான் நேர்காணலை நடத்திய ஆசிரியர் ரெனீ சேவியர் (இலங்கையர் என நினைக்கின்றேன்) ஆவார். அவரிடம் எவ்வாறு உங்கள் தொழில் போகின்றது என்ன சம்பளம் எனக் கேட்டபோது சம்பளம் குறையக் கிடைக்கின்றது சாதாரணமாக மேல்நிலைப்பள்ளிகளில் சம்பளம் அதிகமாகக் கிடைக்கும் ஆனால் இப்பொழுது நான் கல்வி கற்பிக்கும் முதியோர் கல்வி நிலையத்தில் சம்பளம் கொஞ்சமாகவே கிடைக்கின்றது எனத் தெரிவித்தார். நான் பின்னர் இதனை எனது வகுப்பினில் தெரிவித்தேன். அவ்வகுப்பினை நடத்திய ஆசிரியர்தான் ஆங்கில வகுப்புக்களினை தலைமை தாங்கும் ஆசிரியர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தகும் அவர் பெயர் மாரீகன் மோலனார் (டச்சுக்காரர்). நான் பன்னிரண்டாம் ஆண்டு பல்கலைக்கழக வகுப்பினை ரீதா பியாஸா என்னும் (இத்தாலிய நாட்டுக்காரர்) இட்ம் கற்றேன். அவரிடம் நான் கேட்டேன் "Rita how much money you are making, per an hour ?" அதற்கு அவர் சொன்னார் தான் முன்பெல்லாம் நிறைய எடுத்தனான் இப்பொழுது குறைவாகத் தான் சம்பளம் கிடைக்கின்றது என்று. இவர் சொன்னது மிகவும் வேதனைப்பட்டேன் நான் இவ்வாறு கல்வி கற்றவர்கள் ஏமாற்றப்படுவது கனேடிய அரசாங்கமோ அதன் சட்ட திட்டமோ எங்கோ பிழை செய்கின்றது என்பது மட்டும் புலப்படுகின்றது. இத்தகைய காரணங்கள் ஒரு வேளை வெள்ளை இனக் கனேடியர்கள் சம்பளத்தைக் கூட எடுத்துக்கொண்டு பிற இனங்களிற்கு குறைத்துச் சம்பளம் கொடுப்பதநை மென்மேலும் விளக்குகின்றது. கல்வி கற்றவர்களிடையே இனத்துவேசம் இவ்வளவு அதிகமாக இருக்குது என்றால் கனடா எவ்வளவு வெள்ளைக் கக்கூஸினால் மூழ்கடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பது வெட்டவெளிச்சமான உண்மை.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

தினக்கருத்து


கனேடியப் பள்ளிகளில் பால்வினைத் திரைப்படங்கள் மற்றும் விக்கிப்பீடியா மீதான கொள்கைகள்………..

நான் கல்வி கற்ற கால்கில் பால்வினைத் திரைப்படங்கள் பார்ப்பது தடைசெய்யப்பட்டிருப்பதுவும் அது பார்த்தால் சட்டப்படி குற்றம் என்பதுவும் அனைவரும் அறிந்ததே. அதே போல விக்கிபீடியாவினை நாம் உபயோகிப்பது எல்லா ஆசிரியர்களாலும் தடை செய்யப்படாவிடிலும் சில ஆசிரியர்கள் அதனை உபயோகிப்பதனை கூடாதெனத் தெரிவித்தனர். அதற்கு முக்கிய காரணமாக விக்கிபீடியாவினைப் பலரும் எழுதுவதனால் அதில் இருக்கும் கட்டுரைகளின் நம்பகத்தன்மை 100% உண்மையானதல்ல என்பதனையும் விளக்கினர். நானும் இவர்களின் இக்கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவித்து எனது கருத்தை உங்கள் முன்னிலையில் தெரிவிக்க முனைகின்றேன். பால்வினைத் திரைப்படங்களினைப் பார்க்கத் தடை இருக்கும் காரணம் ஒன்றுக்கும் உதவாத தடை காரணம் நான் உலகத்தின் உண்மை வரலாறுகளை அறிய விரும்பும் ஒரு நல்லவன், ஆகையினால் பால்வினைத் திரைப்படங்களில் பல உண்மைகள் உள்ளன அவற்றை பார்த்தால் தான் எங்கு எங்கு விபச்சாரம் நடைபெறுகின்றது ஏன் இவ்வாறு நடைபெறுகின்றது மேலும் அவற்றின் காரணம் என்ன என்பதனை அலசி ஆராய முடியும். நானும் ஹாலிவுட் திரைப்படங்களில் வெள்ளையர்கள் பெரியவர்களாகவும் வல்லவர்களாகவும் சித்தரிக்கப்படுவதனை அவதானித்து ஏமாந்து போனேன் பெரும்பாலும் இவ்வாறான பொய்யான கருத்துக்களை உடைத்தெறிந்து வெள்ளையர்கள் எவ்வளவு பேர் பால்வினைத் தொழிலில் ஈடுபடுகின்றார்கள் என்பதனையும் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்த பிற பல இனங்களும் எவ்வாறு பால்வினைத் தொழிலில் ஈடிபடுகின்றார்கள் என்பதனையும் அனைவராலும் அதாவது உண்மையைத் தெரியாதவர்களால் அறிய முடியாது. ஆனால் அவற்றை ஆராய்ந்து பார்க்கும் என் போன்ற புத்திஜீவிகளால் உணமையான உலகத்தினை அறிந்து கொள்ள முடியும். பள்ளிகளில் இவற்றைத் தடை செய்வதன் காரணம் கனேடியப் பள்ளிகள் முழுவதனியும் வெள்ளைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றது அவர்களில் பலரே பால்வினைத் திரைப்படங்களிலும் கதாநாயகர்களாக நடிப்பது நான் என் கண்களால் கண்ட உண்மை அவற்றின் உண்மைதனை வெளியில் தெரிந்தால் மானம் போய்விடும் என்ற காரணத்தினால்தானோ பள்ளிகளில் பால்வினைத் திரைப்படங்கள்தனைப் பார்ப்பதனைத் தடைசெய்துள்ளனர். இதேபோன்று விக்கிபீடியாவில் விக்கிலீக்ஸ் என்ற ஒரு பகுதியால் உலகமே அதாவது பெரும்பாலும் மேற்குலம் அதிர்ந்தது உண்மையின் வெற்றி, இத்தகு விக்கிபீடியாவில் அமெரிக்காவிற்கு எதிரான கொள்கைகளும் பல மேற்கத்தேயேப் பிரச்சாரங்களுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருப்பதன் காரணத்திற்காக விக்கிபீடியாவினைப் பல ஆசிரியர்கள் வெறுப்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. பெரும்பாலான கனேடிய ஆசிரியர்கள் அமெரிக்க ஆதரவாளர்களாகவும் வெள்லை இனத்தவர்களாகவும் இருப்பது இங்கு சுட்டிக்காட்டவும் தகும், இவையனைத்தும் எனது தனிப்பட்ட கருத்துக்களே.

வியாழன், 1 செப்டம்பர், 2011

கேள்விப்பட்ட செய்திகள்

மார்பகம் அறுக்கப்படும் பெண்கள்....
இன்று தற்பொழுது இதனை எழுதும் சற்று முன்னர் நான், எனது அம்மம்மா மற்றும் எனது தாயார் ஆகியோர் உரையாடிக்கொண்டிருக்கையில் எனது அம்மம்மா சொன்னார் தான் கேள்விப்பட்டதாக "இலங்கையில் அதுவும் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் பெண்கள் நடமாடும் பொழுது அவர்களைச் சூழும் குழுக்கள் மரத்தில் இருந்து தாவி இறங்கி அப்பெண்களின் மார்பகங்களை அறுப்பதாகக் கேள்விப்பட்டேன் என." நானும் யார் இவ்வாறான கேடுகெட்ட செயல்களில் ஈடுபடுவதெனக் கேட்க யாரோ கிரீஸ் மனிதனோ யாரோ ஒரு மனித இனக்குழுக்களோ என அம்மா பதில் தந்தார். போர் ஓய்ந்தும் தமிழ் மக்கள் இவ்வாறு அல்லல்படுவது எனக்கு மன வேதனையைத் தருகின்றது.

புதன், 31 ஆகஸ்ட், 2011

கனவுகள்


மூன்று கனவுகள் ஒரு வேளையிலே.......

இன்று காலை நான் ஒரு கனவு கண்டேன் அதில் நான் புகையிரத நிலையமொன்றினூடாகா நடந்து சென்றுகொண்டிருக்கையில் ஆங்காங்கே இரண்டு டாலர் நானயம் மற்றும் ஒரு டாலர் நாணயம் போன்றனவைகளைப் பார்த்துப் பார்த்துப் பொறுக்கினேன். நானும் அவ்வாறு பொறுக்கிக்கொன்டிருக்கையில் அருகாமையிலேயே ஒரு புகையிரத வண்டி சென்றது. நல்லவேலை அது என்னை இடிக்காமல் சென்றது. நானும் மெது மெதுவாக இங்கால்பல்லம் நடந்து வந்தேன், திடீரென ஒரு கணணிகள் சூழ்ந்த அறைக்குள் சென்று சேர்ந்தேன். அது வட்ட வடிவமான தோற்றத்தினைக் கொண்டிருந்தது. நானும் அவ்விடத்தில் உள்ள படியினில் ஏறி மேலே செல்ல எத்தனித்த போது ஒரு அறைக்குள் மட்டும் என்னால் செல்ல இயலவில்லை. நானும் ஏன் அவ்வாறு செல்ல முடியவில்லை என நினைத்துக்கொண்டிருக்கையில் நான் திடீரென ஒரு பேருந்தில் இருந்து வெளியில் பார்க்கின்றேன், அப்பொழுது அங்கே ஒரு அழகிய ஆரியப்பெண்னொருவர் நான் அவளைப் பார்த்துக்கொண்டிருக வெட்கத்தில் ஓடினாள். நானும் கனவினில் இருந்து விழித்துக்கொண்டேன். 

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

கனவுகள்


அழகின்மையால் ஏற்படும் இழிவு…….

இன்று காலை நான் ஒரு கனவினைக் கண்டேன் அதாவது என்னைப் பார்த்து தம்பிநாதன் அண்ணையின் மகளான பபிதா பழித்து நீ வடிவில்லை கறுப்பா இருக்கின்றாய் எனக் கூறுவதாகக் கண்டேன். எனது மனதில் சோகம் பெருக்கெடுத்துக்கொண்டது. நான் ஒரு விடுதியில் தங்கியிருக்கும்பொழுதே இவ்வாறு இச்சம்பவம் ஏற்பட்டது. இக்கனவினை நான் ஏன் கண்டேன் என எனக்குத் தெரியவில்லை ஏன் பபிதாவினை எனது கனவினில் கண்டேன் என்பதுவும் எனக்குப் புலப்படவில்லை. ஒரே புதிராகவுள்ளது ஒருவேளை அப்பெண் பபிதாவாக இல்லாது வேறு பெண்ணோ யாருக்குத் தெரியும், இக்கனவின் உண்மையினை அது என்னுள் தோன்றிய காரணத்தினை என்னால் உணர முடியவில்லை இறுதிவரை.

தினக்கருத்து


கனடாவில் மருத்துவம் பார்ப்பவர்களிடத்தேயும் இனத்துவேசம்……..

நான் எனது 11 ஆம் வகுப்பு பல்கலைக்கல்லூரி ஆங்கிலத்தினை எடுத்த சமயம் ஜோனாதன் லூகாஸ் ஆசிரியராக இருந்தார். அவர் கனேடிய மற்றும் அமரிக்க மற்றும் பிற நாடுகளது மருத்துவ வசதிகளைப் பற்றி விளக்கிக் கொண்டிருக்கையில் கூறினார், கனடாவில் சில இடங்களில் ஆட்களைப் பார்த்துத் தான் மருத்துவம் பார்ப்பார்கள். ரௌடிகள் கூட இருக்கும் பகுதிகளில் குறிப்பிட்ட சனங்களுக்குத்தான் வைத்தியம் பார்த்துவிடுவார்கள் என்றும் பிறரை உள்ளே சேர்க்க மாட்டார்கள் எனவும் லூகாஸ் கூறினார். நானும் அவருக்குப் பதில்கொடுக்கும் விதமாக "Mr. lucas (இவரது வகுப்பிற்குச் சென்ற போது அவரை லூகாஸ் என பிலமாக அழைக்க அவர் சொன்னார், Mr. lucas எனத் தன்னை அழைக்குமாறு) if the doctors in canada were behaving like this means, then that does proves that the education system in Canada was racist education system. Doctors should treat each and everyone as their patient and the education system should teach how to equally respect everyone" எனத் தெரிவிக்க அவர் சற்றுச் சிரித்து பின் கோபித்தும் கொண்டார், வகுப்பும் சற்று சிந்தித்து சிரித்துக் கொண்டது. லூகாஸ் எனக்குக் கூறிய சம்பவத்தினால் கனடாவில் கற்றுக்கொடுக்கப்பட்டுவரும் வெள்ளைக் கல்வி (Whitewash education) இனைப் பற்றி நன்கு கூர்ந்து எடுத்துக்காட்டுடன் அவதானிக்க முடிந்தது. கல்வியில் மட்டும்தான் வெள்ளைக் கல்வியென்றாலும் பரவாயில்லை ஹாலிவுட் திரைப்படங்களிலும் வெள்ளைகளை கதாநாயகர்களாகப் போட்ட குளிப்பாட்டம்தான்.

சனி, 13 ஆகஸ்ட், 2011

கனவுகள்

ஒரு பெண்ணைத் தேடி......

நான் இன்று காலை ஒரு வித்தியாசமான கனவினைக் கண்டேன், அதில் என்னைப் போன்ற ஒருவர் பெண்ணொருவரின் பின்னே செல்கின்றார். இது பெரும்பாலும் ஒரு திரைப்படத்தில் வருவது போன்றும், ஒரு நிகழ்பட ஆட்டத்தில் வருவது போன்றும் அந்த நபர் அப்பெண்ணிந் பின்னே செல்கின்றார். இறுதி வரையும் அப்பெண்ணினை அடைய முடியாது போய்விடுகின்றது. என்னால் அவரது மந வலி உணர முடிந்தது. நானும் இக்கனவினை விட்டு எழுந்ததும் எனக்கு அக்கனவினிற்குள்ளேயே செல்ல வேண்டுமெனத் தோன்றியது.

வியாழன், 9 ஜூன், 2011

தினக்கருத்து

கிருத்துவமதத்தவரும் கிணற்றுத் தவளைகளும்..........

 ரோன் என்னும் எனது நண்பன் (அவ்வாறு இலகுவாகக் கூறமுடியாது) இவர் இத்தாலிய அம்மம்மாவினைக் கொண்ட கனேடிய நபர் (ஒரே என்னைத் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் நபர்) அதாவது கதைக்கத் தொடங்கினான் என்றால் கதைத்துக்கொண்டே இருப்பான், அதுவும் பெரிய அரக்கத்தனமான குரலில். நன்றாகக் குடித்துவிட்டு வந்து அலட்டுகின்றபவனோ என்ற சந்தேகமும் எனது மனதில் வெகு நாட்களாகவே இருந்து வருவது இங்கு கூறத்தகும். இவனுடன் நான் ஒருமுறை நான் கணணி வகுப்பினில் அதாவது கிரைக் வகுப்பினில் பாடம் கற்க வேண்டிய சூழல். நாம் வழமை போல உரையாடிக்கொண்டிருக்கையில் எமது வகுப்பினில் கல்வி கற்கும் சக மாணவன் அதாவது ஒரு கறுப்பினத்தினைச் சேர்ந்த மானவர் தனது நண்பர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாகக் கூறினார், மேலும் அவர் தெரிவிக்கையில் தான் பிறந்த நாடான ஏதோ ஒரு ஆப்பிரிக்க நாட்டினில் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருப்பது தவறாகக் கருதப் படுவதாகவும் அவ்வாறு ஓரினச் சேர்கையாலர்களாக இருப்பவர்கள் தண்டனைக்குட்படுத்தப் படுவதும் வழக்கமெனவும் கூறினார், அப்பொழுது ரோன் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கெதிராகப் போவது போலச் சற்று பேச்சினை எடுத்தார், நானும் குறிக்கிட்டு கிருத்து சமயத்தவர்கள் கினற்றுத் தவளைகள் போன்றவர்கள், அதாவது கிணற்றுக்குள் இருக்கும் தவளை கிணறைத்தான் தனது உலகம் என எண்ணிக்கொண்டு வெளியே வராது உலகமே அக்கிணறுதான் என நினைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் உண்மையில் அக்கிணற்றுக்கு அப்பால் சென்று பார்க்கையில் பல கினறுகள் பல ஆறுகள், பெரும்பெரும் கடல்கள் என ஓரினச் சேர்க்கையாளர்கள், பிற மதங்கள், பிற பிற பண்பாடுகள் எனப் பல கிருத்துவ சமயத்தினை விடச் சிறந்த விடயங்கள் இருக்கின்றன எனத் தெரிவிக்கையில் ரோன் அதிர்ந்துவிட்டார். இத்தகைய கருத்தினால் நான் கிருத்துவ மதத்தினை புண்படுத்த எண்னுவதாக நினைக்கவேண்டாம், இது வேறு பல விடயங்களுக்கும் பொருந்தும்.

செவ்வாய், 24 மே, 2011

கேள்விப்பட்ட செய்திகள்


நிமலன் கொலை..

நான் அம்மம்மாவுடன் உரையாடிக்கொண்டிருக்கையில் அம்மம்மா லயந்தன் என்ற எமக்குச் சொந்தக்காரரான பெடியனின் குடும்பத்தினைப் பற்றிப் உரையாடத்தொடங்கினார். நானும் ஆவலுடன் கேட்டேன், இவ்வுரையாடல் மே, 24, 2011 செய்வ்வாய்க்கிழமை மதிய வேளை அளவில் இடம்பெற்றது. அம்மம்மா கூறினார் "லயந்தனின் தமயனான நிமலன் இயக்கத்தில் இருந்தவர், அவரை இயக்கத்திலிருந்து தெரியாமல் அவரது தாயார் கூட்டி வர, வீடு தேடி வந்த இயக்கம் நிமலன் மற்றும் அவரது தாயார் ஆகிய இருவரையும் துவக்கால் சுட்டது, சுடப்பட்ட இருவரும் மருத்துவமனைக்குச் சென்ற பின்னர் இறந்தனர் என அம்மம்மா தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் அம்மம்மா கூறிகையில் " தனது தமக்கையார் பிரபாகரனுக்கு உணவுப் பொருட்கள் பலவனவற்றினைக் கொடுத்தது. இருப்பினும் பிரபாகரன் இவ்வாறு தெரிந்தவர்களை ஏன் சுட்டது எனக் கேட்ட போது, பிரபாகரன் தனக்குத் தெரியாமல் போச்சு எனத் தெரிவித்தது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இச்சம்ப்பவம் என்று நடந்தது என நான் எனது அம்மம்மாவிடன் ஆராய்ந்துகேட்டபோது அவர் சரியாகத் தனக்குத் தெரியாது எனக் கூறினார், எவ்வாறு இயக்கம் தான் சுட்டது என உங்களுக்குத் தெரியும் எனக் கேட்டபோது அவர் சொன்னார், ஆமிக்காரர்களின் சீருடையினை அணிந்து கொண்டு வந்த இயக்கத்தினை நிமலன் அடையாளம் கண்டதாகவும் ஆனாலும் சுட்டவுடன் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்கையில் நிமலன் இறந்ததாகவும் தெரிவித்தார். இருப்பினும் நிமலன் சுட்டவுடன் இறந்தது உண்மை இது இவ்வாறிருக்க எவ்வாறு நிமலன் இயக்கம்தான் சுட்டது என பிறருக்குத் தெரிவித்தார் எனக் கேட்க அம்மம்மா சற்றுக் கோபித்துக் கொண்டார். நானும் பதில் தெரியாமலேயே இருந்துவிட்டேன். 

வெள்ளி, 20 மே, 2011

கனவுகள்

வால் நட்சத்திரங்களின் படையெடுப்பு.....
இன்று காலை அம்மா வேலைக்குச் செல்லும் போது எழுந்து பின்னர் சற்று சிறிய நித்திரை ஒன்றினை அடித்தேன், அப்போது நான் ஒரு பள்ளி வளாகத்தில் இருந்துகொண்டிருப்பது போன்ற தோற்றம் அங்கு நான் யாருடனோ உரையாடிக்கொண்டிருக்கையில் திடீரென ஒரு வால் நட்சத்திரம் வந்து எமக்கு அருகில் வீழ்ந்து வெடித்துச் சிதறியது, நாம் அனைவரும் ஓட்டம் எடுத்தோம். நானும் ஓடி ஓடிச் சென்று உடைந்த பாலம் ஒன்றினைத் தாண்டிச் சென்றேன், பாலத்தைத் தாண்டிச் சென்றவுடன் ஒரு சிறிய கிராமம் போன்ற தோற்றம் கொண்ட இடத்தினை அடைந்தேன். 

திங்கள், 2 மே, 2011

கனவுகள்

பவாக்காவுடனான சண்டை...
நானும் அம்மாவும் பவாக்காவால் பேசப்பட்டு ஒரு தனி அறையினில் விடப்படுகின்றோம், அங்கிருந்து நான் அருகில் அமைந்திருந்து லாட்ஜ் போன்ற அறைக்குள் சென்று பார்க்க ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. அங்கு ஒரு பாட்டியும் அமர்ந்திருந்தார். நானும் அங்கு சென்ற பின் எனது அறையினுள் வந்து வானொலிப்பெட்டியினைப் போட்டுப் பார்த்தேன்.

ஞாயிறு, 1 மே, 2011

கனவுகள்

கணணி அறையினுளும் இனத்துவேசம்....
நான் இன்று காலை ஒரு கனவு கண்டேன் அக்கனவினில் நான் ஒரு கணணி அறையினில் அமர்ந்து கொண்டு ஏதோ பாட சம்பந்தமான விடயங்களினைச் செய்துகொண்டிருந்தேன். எனக்கு அருகினில் ஒரு கறுப்பினத்தவன் போன்றவன் எந்னை வேலை செய்யவிடாது எனது கணணியினில் வந்து தான் அமர்ந்து சேட்டை செய்வது போல ஏதோ செய்துகொண்டிருந்தான். நானும் அவனைப் பார்த்துச் சற்றுப் பயந்து தள்ளி வந்துவிட்டேன்.

திங்கள், 21 மார்ச், 2011

கனவுகள்

அமாண்டாவின்   நினைவுகள்.....
 திங்கட்கிழமை மார்ச் 21, 2011 ஆன இன்று காலை நான் ஒரு கனவு கண்டேன் அக்கனவினில் நான் கணணியில் ஏதோ செய்துகொண்டிருக்கும் வேளை பள்ளிக்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருப்பது போலிருந்தது. நானும் புதிதாகவொரு quad இல் சேர ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். நான் அப்பொழுது இப்பொழுது நான் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் விஞ்ஞான ஆசிரியரான சற்று இளவயது மிக்க அமாண்டா ஜாரெல் எனது கனவினில் தோன்றினார். ஆனாலும் கனவினில் அவரிடம் நான் கல்வி கற்று முடிந்திருப்பதாகவும் அவரைத் திரும்பப் பார்க்க எத்தனிப்பதாகவும் நான் விளைகின்றேன் என்பதுவும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இதனை எழுதும் போது நேரம் காலை 6:38 மணியாகும்.

சனி, 26 பிப்ரவரி, 2011

கனவுகள்


எம். ஜி. ஆரின் சந்திப்பு.......
சனிக்கிழமை, பெப்ரவரி 26, 2011 அன்று காலை 9:16 மணிக்கு இதனை எழுதிகின்றேன். இன்று காலை நான் ஒரு கனவினைக் கண்டேன் அக்கனவினில் நான், மற்றும் யாரோ கயானக்காரரின் குழந்தையுடனும் அவர்கள் குடும்பத்துடனும் கடைகளிற்கெல்லாம் ஏறி விளையாட்டுச் சாமான்களினை வாங்கிக் கொண்டிருந்தேன். திடீரென நான் மற்றும் தம்பிநாதன் அண்ணை அவர்களின் தோழர்கள் போன்ற யாரோ ஒருவர்களின் உணவகத்திற்குச் சென்றேன். அவ்வுணவகம் கிருத்துவ உணவகம் போன்றிருந்தது. நிரூபனும் எனக்கருகாமையில் அமர்ந்திருந்தான். அவ்வுணவகத்தில் பெரிய திரை பொருத்திய தொலைக்காட்சிப் பெட்டியும் இருந்தது, உணவகம் சற்றுப் பழமையானதானதொரு தோற்றத்தினை எனக்குக் கொடுத்தது. நான் உணவினை உட்கொள்ளும்போது எனதருகில் ஒரு வயது போன அம்மையார் வந்து அமர்ந்துகொண்டு நிரூபனின் சாப்பாட்டினில் இருந்து கொஞ்சம் எடுத்து சாப்பிட்டார். நானும் வேடிக்கையுடனும், பயத்துடனும் அக்கிழவியினைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர் எனது கனவினில் எம். ஜி. ஆர் தோன்றி ஈழத்துத் தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமான நிலையில் படுகொலை செய்யப் பட்டிருந்ததனை எனக்குக் காட்டினார், மேலும் அசரீதி ஒன்று என்னிடம் ஜனநாயகம் தான் இவ்வன்முறைகளிற்கெல்லாம் ஒரே தீர்வு எனக் கூறியது.

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

கனவுகள்

உலக அழிவு……
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 25, 2011 காலை 6:40 மணிபோலே இதனை எழுதிகின்றேன், இன்று காலை நான் ஒரு கனவு கண்டேன், இக்கனவினில் பெரும்பகுதியும் உலக அழிவினைப் பற்றியே இருந்தது. முதலாவதாக மக்கள் கூட்டம் கூட்டமாக மலை உச்சியின் மீது அமைந்திருந்த ஒரு அரண்மனைக் கட்டடங்களில் இருந்து விழுகின்றார்கள் போன்றும், இருந்த இடத்திலிலிருந்தே அழிகின்றார்கள் போன்றும் இருந்தது. நான் மட்டும் ஒரு கைதிகள் அடைபட்டிருந்த பள்ளத்தாக்கிற்குச் சென்றேன் அப்பள்ளத்தாக்கு மண்ணிற்கு அடியில் கட்டப்பட்டிருந்த அரண்மனையிற்கு என்னை அழைத்துச் சென்றது, அவ்வரண்மனை வேலைக்காரி என்னைப் பார்த்துவிட்டுத் துரத்த ஆரம்பித்தார் என நினைக்கின்றேன். நான் இக்கனவினைக் கண்டதன் காரணம் dragon age origins , red dead redemption ஆகிய நிகழ்பட ஆட்டங்கள் என நினைக்கின்றேன்.

புதன், 23 பிப்ரவரி, 2011

கனவுகள்


மதன் கொல்லப்படுதல்…….
புதன்கிழமை, பெப்ரவரி 23, 2011 அன்று மாலை 6:27 அன்று இதனை எழுதுகின்றேன். இன்று காலை நான் ஒரு கனவு கண்டேன், அக்கனவினில் மதனை யாரோ அடித்துக் கொல்லுவது போன்று இருந்தது. அக்கனவினில் மேலும் யாரோ குள்ள மனிதர்களோ, பேய் மனிதர்களோ போன்ற தோற்றத்தினை உடையவர்கள் மதனி இழுத்துச் சென்றனர், நானும் அவனைக் காப்பாற்றத் துடித்துக் கொண்டிருந்தேன் இக்கனவினில் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.


செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

அனுபவம் புதிது


 பெண்களுக்காக கெஞ்சும் அண்ணன்.......
இதனை எழுதும்போது நேரம் காலை 6:14 மணி, பெப்ரவரி 22, செவ்வாய்க்கிழமை, 2011 ஆகும். எமது வீட்டிற்கு நேற்று பபா அக்காக்கள் வந்து சென்றனர், அவர்கள் சென்றபிறகு நிரூபன் யாரோ ஒரு பொம்பளையுடன் தொலைபேசியில் உரையாடுவதனை அவதானிக்கக்கூடியதாகவிருந்தது. யாருடன் என நான் சந்தேகிக்கின்றேனென்றால் சஜிதா என்ற ஸ்கைப் முகவரியுடன் இவருடன் ஒரே கதைக்கும் பெண்தான் என நினைக்கின்றேன். அவளிடம் நிரூபன் "ஏன்க என்னை லவ் பண்ணல, ஏன்க இப்படியிருக்கீங்க ?" எனக் கெஞ்சிக் கூத்தாட எனக்கு அருவருப்பாக இருந்தது. நான் அவனிடம் எவ்வளவோ முறைகள் சொல்லியிருந்தேன் கனடாவில் பெண்களை நம்பாத, கடைசியில் உன்னையே உன்னை சூப்ப வைச்சுவிட்டுத்தான் போய்விடுவாள்கள் என்று, கேட்காமல் ஒரு பெண்ணிற்காக இப்படிக் கெஞ்சிக் கூத்தாடுகின்றான், இவனுக்குத் தம்பியாக இருப்பது வெட்கக்கேடாகவிருக்கின்றது. எனது வாழ்நாளில் எனது அண்ணன் ஒரு பெண்ணிடம் கெஞ்சிக் கூத்தாடுவது எனக்கு ஏற்பட்ட புதிய அனுபவம் ஆகையினால் இவ்வனுபவம் புதிது.

புதன், 16 பிப்ரவரி, 2011

கனவுகள்

 பிணக்குவியல்கள்........

புதன்கிழமை, பெப்ரவரி 16, 2011, 6:48 காலை நேரப்படி இதனை எழுதுகின்றேன். நான் இன்று காலை ஒரு கோரக் கனவினைக் கண்டேன், அதாவது நானும் எனது நண்பர்களும் மருத்துவமனைக்குச் சென்று ஒரு தமிழ் வைத்தியரைச் சந்திக்கின்றோம், அவரைச் சந்தித்தபின்பு வீடு வரும்பொழுது ஒரு பெரிய மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்தேன், உள்ளே நடந்து போகும் பாதையெங்கும் பிணங்கள் உடல் சிதறி காயங்கள் பட்டு கிடந்தன, நான் பயந்து பயந்து சத்தி எடுக்கும் கட்டத்திற்குச் சென்றும் உள்ளே நடந்து சென்று கொண்டிருக்கின்றேன். உள்ளே பல உடல்களின் பாகங்கள் தனித்தனியே கிடப்பதனை அவதானிக்க முடிந்தது. பிறகு யாரோ வந்து பிணங்களைக் குப்பைகளில் போட்டு எம்மை அவற்றைத் தூக்குமாறு கேட்பதனை யூகிக்கமுடிந்தது. பிணங்களில் கண்கள், முக்கிய பாகங்களினை எடுத்து பாதுகாக்கும் மருத்துவமனைதான் அந்த மருத்துவமனை என்பதனை இறுதியாக தெரிந்துகொண்டேன். இக்கனவு என் மனதினைப் பெரிதும் பாதித்தது.

புதன், 9 பிப்ரவரி, 2011

கனவுகள்

கோவிலும் நிர்வாண நடன மன்றமும்......

புதன்கிழமை, பெப்ரவரி 09, 2011, காலை 6:31 மணிபோலே இதனை எழுதத் தொடங்குகின்றேன். நான் இன்று காலை ஒரு கனவினைக் கண்டேன் அதாவது நான் ஒரு இணையம் இருக்கும் அழகிய கணணி அறைக்குள் சென்றேன், அங்கு பலரும் இருந்த காரணத்தினால் சற்று நேரத்திற்குப் பிறகே அங்கு சென்று உபயோகிக்க முடிந்தது. இதற்கு முன்னர் யாரோ சொந்தக்காரருடனான சந்திப்பு ஏற்பட்டது. பெரும்பாலும் ஜீவாக்காவாகத்தான் இருக்கவேண்டும் என நினைக்கின்றேன். பின்னர் நான் ஒரு தமிழ் உணவுக்கடைக்கு சென்று பார்த்த பொழுது செக்ஸ் படங்களிந் விளம்பரம் போட்ட திரைப்படங்கள் விற்கப்பட்டுக்கொண்டிருந்தன. நான் அப்படியே நடந்து சென்று அக்கடைக்கு மறு முனையில் அமிந்திருந்த நிர்வாண நடன மன்றத்திற்கும் செலின்றேந், அங்கு பல பெண்கள் குடித்துவிட்டு ஆட்டம்போட்டுக்கொண்டி நிர்வாணமாக இல்லாது சற்று சிறிய ஆடைகளுடன் ஆடிக்கொண்டிருந்தனர். என்னை அத்தமிழ்க் கடைக்காரரே அங்கு அழைத்தும் செல்வதனை உணர்ந்தேன். பின்னர் பெரிய நீண்ட பாலத்திற்கு மேலே வெள்ளை நிறத்தாலான பெரிய கோவில் ஒன்றினை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். அக்கோவிலிந் கீழே அருகாமையில் ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்ததனைக் காணமுடிந்தது. ஆற்றினில் ஏதோ மக்கள் அங்குமிங்கும் சுற்றித்திரிவதற்கு தண்ணீரில் ஓடும் படகு மாதிரியான ஏதோ ஒன்றும் ஓடுக்கொண்டிருந்தது.




ஞாயிறு, 30 ஜனவரி, 2011

கேள்விப்பட்ட செய்திகள்

தமிழின் மாமாவினை ஏமாற்றிய இலங்கைத் தமிழர்……
நான் காசினோவிற்குப் பலமுறை செல்லும் பொழுது தமிழின் மாமாவும் வருவதுண்டு அவர் குடித்துவிட்டு வெறித்தனத்துடந்தஅன் கதைக்கின்றார் என நான் அவரிடமே கூறுவதுமுண்டு !. ஒரு முறை அவர் கூறினார் தனக்கு கனடாவில் தெரிந்த ஒரு இலங்கைத் தமிழர் இருந்தார், அவர் தான் கனடாவிற்குப் புதிதாக வந்ததில் கஷ்டப்பட்ட பொழுது அந்த இலங்கைத் தமிழர் தான் தனக்கு வேலை எடுத்துத் தந்ததாகவும் ஆனாலும் வேலையின் பழுவிற்கு ஏற்றாற்போல சம்பளம் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் ஒரு முறை அந்த இலங்கைத் தமிழர் இந்தியாவில் சென்று மாட்டுப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுப் பின்னர் தான் தான் வட இந்தியாவிற்குச் சென்று அவரை விடுவித்து, அவரது மனைவிக்கு தங்கும் வசதிகள் செய்து கொடுத்து உதவியதாகத் தெரிவித்தார். மேலும் இலங்கைத் தமிழர் கனடாவிற்கு வந்த பிறகு தான் செய்த உதவிக்கு ஏற்றாற்போல பணம் கொடுக்கவில்லை எனவும் அவன் உண்மையிலேயே தன்னை ஏமாற்றியுள்ளான் எனவும் எம்மிடம் தமிழின் மாமா தெரிவித்தார். தன்னுடன் electrical engineering வேலையினைச் சேர்ந்து செய்தவர் அந்த இலங்கைத் தமிழரெனவும் மேலும் அவருடன் தான் இப்பொழுது எந்தத் தொடர்புகளும் அற்று இருப்பதாகத் தமிழின் மாமா வருத்தத்துடன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சனி, 29 ஜனவரி, 2011

தினக்கருத்து

நான் ஏன் எழுதுகின்றேன் !

இவ்வுலகில் பலரும் பலவிதமான முறையில் தமது எழுத்துக்களை வெளிப்படுத்துவர், அவர்கள் தாம் எழுதுவதற்கான காரணங்களினை வித்தியாசமான முறையில் கூறுவர். அத்தகு காரணங்களில் சிலவனவற்றினை கீழே கொடுக்கின்றேன்:

  •  சிலர் தாம் வயிற்றுப்பிழைப்புக்காக எழுதுவதாகக் கூறுவர்.
  • சிலர் தமக்கு எழுதிக்கொண்டிருக்க ஆசை, அதனால் எழுதுகின்றேன் என்பர்.
  • சிலர் தமது கருத்துக்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ள தாம் எழுதுவதாகப் பதிலளிப்பர்.

நான் ஏன் எழுதுகின்றேன் என்றால், கனடாவில் எனது கருத்துக்களினைப் பகிர்ந்துகொள்ள யாரும் இலர், பலரும் அவர்தம் வேலைகளினைச் செய்ய விரும்பும் இந்நாட்டில் அனைவரும் தத்தம் வேலைகளிலேயே கவனத்தினைச் செலுத்துவர். இத்தகைய நாட்டினில் சற்று இனத்துவேசம், போட்டி ஆகியனவைகள் காணப்படும் ஒரு நாட்டில் எமது கருத்துக்கள், ஆராய்ச்சிகள் எம்மைப் போன்ற குணம் கொண்ட பிற நெஞ்சங்களும் படித்து மகிழவே நான் எழுதுகின்றேன். எனக்கு கவலை வரும்போதும், சந்தோஷம் வரும்போதும் எழுத ஆசை, எழுத்தில் எமது கவலைகளினையும், சந்தோஷங்களினையும் பிறரிடம் கொட்டித்தீர்க்க பெரிய சந்தர்ப்பம் உண்டு. அதுமட்டுமல்லாது என்னுடைய இவ்வாழ்க்கையின் அர்த்தம், நான் பிறந்த காரணம் போன்ற பலவனவற்றினால் சந்தேகக் கண்களுடன் வாழ்கின்றேன், நான் எனது எழுத்துக்களின் மூலம் எனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாட்களும் ஏன் இவ்வாறு இருக்கின்றது, நான் காணும் கனவுகள் ஏன் இவ்வாறு இருக்கின்றது போன்றவற்றினை ஆராய்ந்தோமேயானால் உண்மை புலப்படும். எவ்வாறான உண்மையெனில் ஏன் கடவுள் என்ற ஏதோ ஒரு சக்தி எமை ஆட்டிப்படைக்கின்றது என்று. இவற்றின் உண்மை விளக்கங்களினை எடுத்துக்காட்டுகளுடன் உலகினிற்கு விளக்கிக் கூறுவதற்காகவே நான் ஒரு எழுத்தாளனாக உருவாகினேன்.

Introducing

Introducing to the world the two entertaining Professional DJ's of Toronto                  DJ NIRUBAN  DJ SOUND CRASHER

திங்கள், 24 ஜனவரி, 2011

கனவுகள்

5000 டாலர் வீடு……….
திங்கட்கிழமை, ஜனவரி 24 6:54 ,2011 நேரம் இதனை எழுதுகின்றேன், இன்று காலை நான் ஒரு கனவினைக் கண்டேன், அதில் எனது தாயார் ஒரு வீட்டு புரோக்கரிடம் பெரிய ஒரு வீட்டினை எமக்காக வாங்குவதாக. அதில் என்ன ஆச்சரியம் என்றால் அவர் வாங்கிய பெரிய வீட்டிற்கு வெறும் 5000 டாலர்கள் மட்டுமே கொடுத்ததனை என்னால் அவதானிக்க முடிந்தது. நான் வீடு வாங்கியதும் உள்ளே சென்று பார்த்தேன் மிகவும் அழகிய பெரிய வீடாகவிருந்தது, இப்பொழுதுதான் வீடு கட்டப்பட்டுக்கொண்டிருந்தது என்பதனையும் சரியாக அவதானிக்க முடிந்தது.

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

கனவுகள்

சைகத்துடனான விளையாட்டு……….
ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 23 இன்று காலை நான் நித்திரையினைவிடுத்து எழுந்து கொள்ளும் பொழுது ஒரு கனவினைக் கண்டேன், அக்கனவினில் ஒரு விடுதி அறையொன்று சுற்றவர வெளிச்சத்துடன் இருந்த அறை திறக்கப் பட்டு  அவ்விடுதிக்குள் சைகம் மற்றும் அவள்தம் தகப்பனார் மற்று பிற உறவினர்கள் பலர் அமர்ந்திருந்தனர். பின்னர் நானும் சைகமும் சேர்ந்து மைதானத்தில் பாலிவோல் விளையாட்டு ஆடினோம், சைகத்தினை நான் பார்க்கும்போது ஏதோ சொர்க்கத்தில் இருந்த அனுபவம், அவளது கனவுகள் எனது மனதினைக் கொள்ளை கொண்டு ஒரு சொர்க்க வாசல்தனிற்கு அழைத்துச் சென்றது. மிகவும் ஆனந்த களைப்பினில் சற்று நேரம் நான் ஆழ்ந்திருந்தேன். ஏனோ தெரியவில்லை. இக்கனவினை வியந்தெழுத வார்த்தைகள் இல்லை என்பேன்.

கனவுகள்

777………..
வியாழக்கிழமை, ஜனவரி 13, 2011 காலை நான் ஒரு கனவு கண்டேன் அதில் இஸ்லாமிய ஆசிரியரொருவர் என்னைக் கட்டிப்பிடிப்பதாகவும், மலசல கூடத்தில் நேரத்தினைப் பார்க்கும்போது 7:77 அதாவது 777 என இருந்தது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இக்கனவினைக் கண்ட வேளை பள்ளியில் நான் 68, 68, 68 என மார்க்குகளை வாங்கியிருந்ததும் அதனை நினைந்து வருந்தியதையும் ஒற்று நோக்கிப் பார்க்கலாம், இருப்பினும் நான் காசினோவில் விளையாடும் போது மூன்று 777 அப்படி விழுந்தால் ஜாக்பாட் அதுவே தான் கனவினில் வந்து என்னைப் பயமுறித்தியதோ என்னவோ எனவும் ஒற்று நோக்கிப் பார்க்க இடமுண்டு !. நான் இக்கனவினைக் கண்டதும் ஏதோ பேய்க்கனவினைத் தான் கண்டுவிட்டேன் எனப் பயந்து கணணியில் 777 இலக்கங்கள்இனைப் பரிசோதித்தபோது அது கிருத்துவ சமய முறைப்படி trinity சங்கமிக்கும் நாளோ என்னவோ எனப் போட்டிருந்தது. இதனை எழுதுவது வியாழக்கிழமை, ஜனவரி 13, 2011 காலை 6:50 மணி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 23 மாலை 6:56 மணியிலும் ஆகும்.

புதன், 19 ஜனவரி, 2011

அனுபவம் புதிது

 முதல் வாகன விபத்து.......

நேற்று செவ்வாய்க்கிழமை, ஜனவரி 18, மாலை 6 மணியளவில் தமிழ் என்னை 'ஆடுகளம்' படம் பார்க்கப் போறோம் வாறியா ? எனக் கேட்டான். நானும் "சரி, வாறேன்" என்றேன். நானும் குளித்து வெளிக்கிட்டு 6 மணிக்கெல்லாம் கீழே இறங்கிப் போய்ப் பார்க்க தமிழைக் காணவில்லை, பின்னர் மேலே வந்து நிரூபனைத் தொலைபேசியில் அழைத்து "ஏண்டா தமிழ் இன்னும் வரேல்ல ?" எனக் கேட்டேன். அதற்கு அவன் " நீ கீழ இறங்கிப் போ, அவன் வந்து கொண்டிருக்கின்றான் !" என்றான். நானும் திரும்பக் கேழே இறங்கிப் போக தமிழும் தமிழின் மாமாவும் நிரூபனின் சிவத்தக் காரில் வந்திருந்தனர், நிரூபன் வந்திருக்கவில்லை. சரி எனக் கூறி நான் காரினில் பின் பக்கம் அமர்ந்துகொண்டேன், தமிழ் வாகனத்திநை எடுக்கும்போதே ஏதோ சத்தம் கேட்டது. நான் ஆரம்பித்திலேயே பயந்துவிட்டேன். ஆனாலும் தமிழ் வாகனத்தினை ஓட்டிக்கொண்டு லாரென்சு அவனியூ மற்றும் ஓர்ட்டன் பார்க் வீதியினூடே காரினைத் திருப்பி ஓர்ட்டன் பார்க் வீதியில் சென்று கொண்டிருந்த வேளை இரண்டு பெண்கள் சில்வர் நிற ஃபோர்ட் காரில் வந்து நாம் செல்லும் வழியின் குறுக்கே நின்றார்கள், அமது காரும் அவர்களது காரில் மோதி எமது காரிற்குப் பலத்த அடி. சற்று நேரம் தமிழ் மற்றும் தமிழின் மாமாவிடமிருந்து மூச்சைக் கூடக் கேட்கமுடியவில்லை, நானும் பயந்து போய் கார் புகைக்கின்றது எல்லாரும் வெளியில் வாங்கோ! எனக் கூறி வெளியில் இருந்தோம். காவல்துறையினருக்கு தொலைபேசியில் இரண்டு பெண்களும் அடித்துவிட்டநர், காவல்துறை அதிகாரி ஒருவர் வந்து பார்த்து report எழுதிப் பின்னர் சற்று நேரம் கேள்விகள் கேட்டு, தமிழ் கண்ணாடி போடாது வாகனத்திநை ஓட்டியதற்கு 110 டாலர்களிற்கு டிக்கட் கொடுத்த இரண்டு பெண்களுக்கு மூன்று டிக்கட்டுக்களினைக் கொடுத்தும் மாமா எம்மை அனுப்பி வைத்தார். இதுவே எனது வாழ்நாளில் நான் பார்த்த அனுபவித்த முதல் விபத்து ஆகும்.

பதிலளியுங்களேன் !